Aggregator
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி!
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி!
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி!
adminOctober 28, 2025

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்.”ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி – 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம்,
கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது,
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இதன்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் ஊடக கற்கைகள், நாடகம் அரங்கியல் கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் தேர்தல் செயல்பாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தேர்தல் ஆணையம் “ஒரு வாக்கின் சக்தியின் பௌரா கதைகள்” எனும் குறும்படப் போட்டியை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது.
திறந்த பிரிவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவு என இக்குறும்பட போட்டியானது இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புக்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி நவம்பர் 14 ஆகும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்!
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்!
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்!
adminOctober 28, 2025

வடமாகாண ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ரயில் தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும், வடக்கின் ரயில் மார்க்கத்தைத் தரமுயர்த்தும் செயற்பாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன .
இதையடுத்தே ரயில் சேவைகள் பகுதியளவில் இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
காணி மோசடிகள்⚠️: மக்களே அவதானம்❗| வெளிப்படுத்தல் உறுதி சட்டரீதியானதா? 🤔🤷♂| Thananchayan LL.B LL.M
In this video I explain,
Kinds of Deeds,
Legality of Deed of Declaration,
Procedure of Deed of Declaration,
Problems in the North and East Sri Lanka,
Land Scams through Deed of Declaration,
Duty of Notary Public,
Procedure of Deed Attestation,
Registration of Land,
Prevention of Fraud,
Land Sale Scams,
And Etc.
இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
காணி மோசடிகள்⚠️: மக்களே அவதானம்❗| வெளிப்படுத்தல் உறுதி சட்டரீதியானதா? 🤔🤷♂| Thananchayan LL.B LL.M
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்
கருத்து படங்கள்
கட்டடங்களை நிர்மாணிக்கும் பிரதேச சபையின் அனுமதி அவசியம்!
கட்டடங்களை நிர்மாணிக்கும் பிரதேச சபையின் அனுமதி அவசியம்!
Oct 28, 2025 - 09:03 AM -
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதில் பல முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என தகவல்களூடாக உறுதிசெய்ய முடிகின்றது.
இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள் சட்டமுறையற்ற கட்டுமாணங்கள் என்றே கருத்தில் கொள்ளப்படும்.
அத்துடன் அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் கட்டுமாணங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் நிலையும் உருவாகும்.
எனவே 1987 ஆம் ஆண்டு 15 இலக்க பிரதேச சபைகள் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியாற்றின் அடிப்படையில்,
01. பிரதேச சபையில்.கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளல்.
02. அமைவுச் சான்றிதழ் அல்லது கால நீடிப்பு அனுமதியை பெறுதல்.
03. காணி உப பிரிவிடல் மற்றும் காணி ஒருங்கிணைத்தல் அனுமதியினை பெற்றுக்கொள்ளல்.
04. நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்குமான அனைத்து ஆவணங்களையும் சமைப்பித்தல் போன்ற நடைமுறையை பின்பற்றி கட்டடங்களுக்கான நிர்மாண அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இதே நேரம் அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டுமாணங்களால் அண்மைக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றி பல முரண்பாடுகளை எது உருவாக்கி வருவதால் இந்த நடைமுறையை வேலணை பிரதேச ஆளுகைக்குள் கட்டுமாணங்களை மேற்கொள்வோர் பின்பற்றுவது அவசியமாகும் எனதுடன் அவ்வாறு பின்பற்ற தவறும்.பட்சத்தில் சட்ச நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் என தெரிவித்தார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்
பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்
27 Oct, 2025 | 06:48 PM
![]()
(இராஜதுரை ஹஷான்)
மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள்.
தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கியது. பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தமது தவறான அரசியல் தீர்மானத்தை உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் விளங்கிக்கொண்டார்கள்.
பொதுத்தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் 23 இலட்ச வாக்குகளை இழந்து 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதை நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டார்கள்.
நாட்டுமக்களினதும், அரசியல்வாதிகளினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.பாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் நிலையற்றது. ஆட்சி மாற்றம் ஏற்படலாம். சட்டவிரோதமான முறையில் செயற்பட்டால் அதற்கு சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் என்றார்.
'குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?

பட மூலாதாரம், olympics.com
கட்டுரை தகவல்
சாரதா வி
பிபிசி தமிழ்
28 அக்டோபர் 2025, 02:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த செய்தி வெளியானது முதலே, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியதுடன் ஒப்பிட்டு, கபடியில் சாதித்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை மிகவும் குறைவு என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு

பட மூலாதாரம், olympics.com
கார்த்திகா, அபினேஷ் இருவருமே தத்தமது அணிகள் தங்கம் வெல்வதில் முக்கிய பங்கை ஆற்றியிருந்தாலும், கூடுதலான கவனம் கார்த்திகாவின் பக்கம் திரும்பியுள்ளது.
கார்த்திகா சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக குடியிருப்புகளில் வசிப்பவர். நகரின் பல்வேறு இடங்களில் குடிசை வீடுகளில் இருப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அரசு சார்பில் வழங்கப்படும் மாற்று குடியிருப்புகள் இவை. இந்த குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்று பல முறை புகார்கள் எழுந்துள்ளன.
விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில் அங்குள்ள பூங்காவிலேயே கார்த்திகா கபடி விளையாட்டை கற்றுள்ளார். அவரின் தாய் துப்புரவு ஊழியராக இருந்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார், அவரது தந்தை கட்டுமானத் தொழிலாளி ஆவார்.
வெற்றிப்பெற்று கண்ணகி நகருக்கு திரும்பிய கார்த்திகாவுக்கு அப்பகுதியினராலும், காவல்துறை சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
"வேலைக்கு செல்லும் போது 'கண்ணகி நகரில்' இருந்து வருகிறேன் என்று கூறுவதே தாழ்வாக பார்க்கப்படும். இப்போது நான் 'கண்ணகி நகர் ஆளு' என்று பெருமையுடன் கூறுவேன், இப்பகுதியினரும் அதில் பெருமை கொள்ள முடியும்" என்று கார்த்திகா ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். கண்ணகி நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் அதை செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், olympics.com
படக்குறிப்பு, கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ்
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களை தவிர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரும் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
வீடியோ அழைப்பின் (வீடியோ கால்) மூலம் கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ஒரு கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் .
சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், சதுரங்க ஆட்டத்தில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி, பனிச்சறுக்கு விளையாட்டில் வென்ற ஆனந்த் குமாருக்கு ரூ.1.8 கோடி கொடுத்த பெருந்தன்மையான தமிழக அரசு கபடி வீரர்கள் இருவருக்கும் தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
"குகேஷுக்கு ரூ.5 கோடி, கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்தானா?" என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் செயலை ஆதரித்தும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
கார்த்திகாவைப் போலவே, தங்கம் வென்ற ஆண்கள் அணியில் இடம்பெற்ற அபினேஷ் மோகன்தாசும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர் தான். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தந்தையை இழந்தவர். தேனியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயின்றவர் ஆவார்.

பட மூலாதாரம், TNDIPR
ஊக்கத்தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
கார்த்திகாவுக்கும் அபினேஷுக்கும் வழங்கப்பட்ட தலா ரூ.25 லட்சம் இரண்டு அலகுகளாக பிரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் /உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறினார்.
பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் உயரிய ரொக்க ஊக்கத்தொகையாக (High Cash Incentive) ரூ.15 லட்சமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக ரூ.10 லட்சமும் என ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. உயரிய ரொக்க ஊக்கத்தொகை அரசு வெளியிட்டுள்ள ஆணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். அது தவிர, இருவரின் விளையாட்டை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தாமாக முன் வந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக வழங்க முடிவு செய்துள்ளது." என்று விளக்கம் அளித்தார்.
எந்த விளையாட்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை?
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2019-ம் ஆண்டு அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெண்கலம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம் உயரிய ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அந்த அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதே போன்று, ஆசிய இளைஞர் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.10 லட்சம், மற்றும் வெண்கலம் வெல்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.60 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும்.
அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இருந்தால், அதில் தங்கம் வெல்பவருக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்பவருக்கு ரூ. 50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும்.
இவை தவிர பல்வேறு போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்த விவரங்களை அரசாணை குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் விளக்கம்
இது வரை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மேற்குறிப்பிட்ட அரசாணைக்கு உட்பட்டே வழங்கப்பட்டது என்று மேகநாத ரெட்டி கூறினார்.
'குகேஷுக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சமா?' என்று குறிப்பிட்டு எழுந்துள்ள விமர்சனம் குறித்து கேட்ட போது, "இரண்டு விளையாட்டுகளை, இரண்டு போட்டிகளை ஒப்பிடுவதே தவறு. ஆசிய போட்டிகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் வெவ்வேறானவை. ஐந்து ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் ஒப்பிடக் கூடாது.
கார்த்திகாவின் திறமையை, பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது வெற்றியின் காரணமாக தமிழ்நாடு பெருமை கொள்கிறது, அதே போன்று தான் அபினேஷின் வெற்றியும். அவர் அரசு விடுதியில் பயின்றவர். அரசாணைப்படி அவர்களுக்கு ரூ.15 லட்சம் தான் ஊக்கத்தொகை. ஆனால் அவர்களின் அபாரமான விளையாட்டை அங்கீகரிக்கும் வகையிலேயே கூடுதலாக பத்து லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று தான் குகேஷுக்கும். தமிழ்நாட்டில் ஊக்கத்தொகை வழங்க மிக நேர்த்தியான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடுகள் சரியல்ல" என்று கூறினார்.

பட மூலாதாரம், கவிதா செல்வராஜ்
படக்குறிப்பு, இந்திய கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்
கபடி அணி பயிற்சியாளர் கூறியது என்ன?
இந்திய கபடி அணியின் தற்போதைய பயிற்சியாளரும் கபடியில் சர்வதேச அளவில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் (40), "இப்போது ஊடக கவனம் அதிகம் இருப்பதால் இந்த வெற்றிகள் வெளியில் தெரிகின்றன. அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைப்பது மகிழ்ச்சி. கபடிக்கு, அதுவும் ஆசிய இளைஞர் போட்டிக்கு ரூ.25 லட்சம் கொடுத்திருப்பது குறைவானது அல்ல. நான் 2010-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. 2009 தெற்கு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது" என்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் அவர், "2005-ம் ஆண்டு விளையாட்டு கோட்டாவில் அல்லாமல் எனது சொந்த முயற்சி மற்றும் தகுதியில் காவல்துறையில் சேர்ந்தேன். காவல்துறையில் இருக்கும் போது தான் நான்கு சர்வதேச பதக்கங்களை வென்றேன். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன்" என்கிறார்.
மேலும் பேசிய அவர், "உடல் ரீதியாக அதிக உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு