6 days 12 hours ago
      ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கை மகளிர் அணிக்கு மொத்த பணப்பரிசு 31.5 கோடி ரூபா Published By: Digital Desk 3 28 Oct, 2025 | 03:45 PM  (நெவில் அன்தனி) ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற இலங்கை மகளிர் அணி 31 கோடியே 51 இலட்சத்து 63,066 ரூபாவை மொத்த பணப்பரிசாக சம்பாதித்துள்ளது. இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் போட்டிகள் நிறைவில் 7 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா, 4 தடவைகள் சம்பியனான இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, வரவேற்பு நாடான இந்தியா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அணிகள் நிலையில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது. நியூஸிலாந்தில் கடைசியாக நடைபெற்ற 12ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைக்கூட பெறாமல் இருந்த இலங்கை, மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த வருடம் அதிசிறந்த நிலையை அடைந்தது. போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றமைக்காக 700,000 டொலர்களை  வென்றெடுத்த இலங்கை, ஒரு வெற்றிக்காக 34,314 டொலர்களையும் 3 முடிவுகிட்டாத போட்டிகளுக்கு தலா 17,157 டொலர்களையும் பெறவுள்ளது. அத்தடன் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றியமைக்காக 250,000 டொலர்கள் கிடைக்கவுள்ளது. இதற்கு அமைய இலங்கைக்கு கிடைக்கவுள்ள மொத்த பணப்பரிசு 10 இலட்சத்து 35,785 அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கை நாணயப்படி 31 கோடியே 51 இலட்சத்து 63,066 ரூபாவாகும்.  ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியாவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றது. கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றிபெறுவதற்கு கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதம் இருந்தன. கடைசி ஓவரை துணிச்சலுடன் சமரி அத்தபத்து வீசினார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. கடைசி 2 பந்துகளில் இரண்டு ஒற்றைகள் மாத்திரமே பங்களாதேஷ் பெற, இலங்கையின் ஒரே ஒரு வெற்றியை சமரி அத்தபத்து உறுதிப்படுத்தினார். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான இலங்கையின் போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை தோல்விகளைத் தழுவியிருந்தது. https://www.virakesari.lk/article/228899
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      Oct 28, 2025 - 04:46 PM   தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.   ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.   மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். https://adaderanatamil.lk/news/cmhah1vfo0198o29nqvhg69fd
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      Oct 28, 2025 - 04:46 PM 

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். 
மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று (27) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
https://adaderanatamil.lk/news/cmhah1vfo0198o29nqvhg69fd
 
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      சின்மயி வைரமுத்து பற்றி பேசினாலும் அதற்குள் தனிநாட்டை கொண்டுவந்து சொருவுறது உங்கள் தவறணைக்காலம்.
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      Oct 28, 2025 - 01:51 PM   கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.   நேற்று (27) அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். தென் மாகாணத்தைப் பற்றிப் பேசினால், இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். அதில் அதிகமானவர்கள் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படுகின்றனர்.   தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர். வழக்குகளை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகள் வரை தாயும், குழந்தையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கிறோம். 5 வயது பூர்த்தியாகும் நாளில் குழந்தையையும் தாயையும் பிரித்து வைக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சோகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். குழந்தை அம்மாவை வேண்டி அழுகிறது. அம்மாவும் குழந்தையை வேண்டி அழுகிறாள். 5 வருடங்களாக அவர்களுக்கு இருந்த ஒரே உறவு அதுதான். அதில் சட்டம் குறுக்கிடுகிறது. அதனால் ஒருபோதும் ஒரு பெண்ணாக நீங்கள் தவறு செய்யாதீர்கள். போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க இந்த அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என தெரிவித்தார்.   இதனிடையே நேற்று களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.   நாங்கள் இப்போது நிறைய அதிகாரிகளை சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். நீங்கள் பாடசாலை முடிந்த பிறகு எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு குழுவாக நிற்கிறீர்கள் என்று பார்க்க. உங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால், பாடசாலை விட்டுச் செல்லும்போது பஸ் நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் இதுபோன்ற விடயங்களைக் கண்டால் எங்களிடம் கூறுங்கள். எனது தொலைபேசி இலக்கம் 071 859 2683 இதுவாகும் என குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmhaarysg0191o29n81mh815f
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      Oct 28, 2025 - 01:51 PM 

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 
நேற்று (27) அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். தென் மாகாணத்தைப் பற்றிப் பேசினால், இதைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதாள உலக நடவடிக்கைகளில் தென் மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் ஆவர். அதில் அதிகமானவர்கள் குறைவான எழுத்தறிவு மட்டத்தில் காணப்படுகின்றனர். 
தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர். வழக்குகளை விசாரித்து 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகள் வரை தாயும், குழந்தையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கிறோம். 5 வயது பூர்த்தியாகும் நாளில் குழந்தையையும் தாயையும் பிரித்து வைக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சோகமான சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். குழந்தை அம்மாவை வேண்டி அழுகிறது. அம்மாவும் குழந்தையை வேண்டி அழுகிறாள். 5 வருடங்களாக அவர்களுக்கு இருந்த ஒரே உறவு அதுதான். அதில் சட்டம் குறுக்கிடுகிறது. அதனால் ஒருபோதும் ஒரு பெண்ணாக நீங்கள் தவறு செய்யாதீர்கள். போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க இந்த அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது என தெரிவித்தார். 
இதனிடையே நேற்று களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய, பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 
நாங்கள் இப்போது நிறைய அதிகாரிகளை சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். நீங்கள் பாடசாலை முடிந்த பிறகு எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு குழுவாக நிற்கிறீர்கள் என்று பார்க்க. உங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால், பாடசாலை விட்டுச் செல்லும்போது பஸ் நிலையங்கள், கடைகள் போன்ற இடங்களில் இதுபோன்ற விடயங்களைக் கண்டால் எங்களிடம் கூறுங்கள். எனது தொலைபேசி இலக்கம் 071 859 2683 இதுவாகும் என குறிப்பிட்டார்.
https://adaderanatamil.lk/news/cmhaarysg0191o29n81mh815f
 
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      அவரு 2 கோடியென்ன ...50 கோடியும் முதலிடுவார்... அவருக்கு..பின் புலம் மத்திய கிழக்கு ...இலங்கைக்கு வால் காட்ட ..முசுலிம்தரப்பு மாதாமாதம் அரசுதரப்பு அமைச்சர்களை சந்தித்து ..தங்கடை குறைகளை சொல்லுகினமாம்...அப்ப அமைச்சர்மாரும் .. வாக்கு வேட்டைக்காக  ஓகே சொல்லுகினமாம் ...இதிலை கிசிபுல்லா சொன்னால் தங்கமென்ன வைரமே கடத்தலாம் ...பறித்த பல்கலை கழகத்தையே திருப்பியெடுத்த...புல்லாவுக்கு ..இது ஒரு  தூசி
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார்.  குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார்.  இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர்.  இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.  உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார்.    மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில் | Virakesari.lk
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். 
குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது 
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். அந்த விளையாட்டில் பணம் கட்டுவதற்காக மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி , அதனை செலுத்தி விளையாடி வந்துள்ளார். 
இந்நிலையில் கடன் தொகை அதிகரித்த போது , கடன் கொடுத்தவர்கள், இளைஞனின் வீட்டாருக்கு பணம் கேட்டு நெருக்கடியை கொடுத்த வேளை வீட்டார் தமக்கு சொந்தமான காணி ஒன்றினை விற்று கடனை அடைத்துள்ளனர். 
இந்நிலையில், தற்போதும் இளைஞன் பப்ஜி விளையாட்டுக்காக பெருந்தொகை பணத்தினை மீட்டர் வட்டிக்கு வாங்கி செலவழித்துள்ள நிலையில் , கடன் கொடுத்தவர்கள் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்த போதிலும் , வீட்டார் இம்முறை கடனை செலுத்த மறுத்ததால் , இளைஞன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 
உயிர்மாய்க்க முயன்ற இளைஞனை வீட்டார் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன் சிகிச்சை பெற்று வருகின்றார். 
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில் | Virakesari.lk
 
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      நாட்டில் நிலவும் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய இலங்கை திருச்சபையின் யாழ். குரு முதல்வர் செல்வன், செம்மணி படுகொலைக்கான நீதி கிடைக்க மக்களாகிய நாமே முழுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (28) மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டது.   இதன்போது ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்த குரு முதல்வர் செல்வன் மேலும் கூறுகையில், செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும். இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதையும் அதற்கான நீதி வேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்கிறது. எனவே அதற்கான வலுப்படுத்தலை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பது அவசியமாகும். அதற்காகவே மெதடிஸ்த திருச்சபை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதேநேரம் கொல்லப்பட்டவர்களின் குருதிகள், தமக்கான நீதியை பெற்றுத்தாருங்கள் என எங்கள் ஒவ்வொருவரிடமும் ஓலமிட்டவண்ணம் இருக்கின்றன. அந்த ஓலங்களுக்கு நாம் நீதியை இலங்கையில், இந்த அரசிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. எனவே சர்வதேசத்திடம் இதற்கான நீதியை கோரி நிற்கின்றோம் என்றும் தெரிவித்தார். இப்போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ், அருள்பணி அருளானந்தம் சமுவேல் சுபேந்திரன், வேலன்சுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.  இனப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத அரசிடம் தீர்வினை எதிர்பார்க்க முடியாது - அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்!  | Virakesari.lk
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      நாட்டில் நிலவும் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய இலங்கை திருச்சபையின் யாழ். குரு முதல்வர் செல்வன், செம்மணி படுகொலைக்கான நீதி கிடைக்க மக்களாகிய நாமே முழுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று (28) மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டது. 

இதன்போது ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்த குரு முதல்வர் செல்வன் மேலும் கூறுகையில்,
செம்மணி என்பது இனப்படுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும். இந்த சாட்சியமே இன்று இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதையும் அதற்கான நீதி வேண்டும் என்பதையும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்கிறது.
எனவே அதற்கான வலுப்படுத்தலை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பது அவசியமாகும். அதற்காகவே மெதடிஸ்த திருச்சபை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதேநேரம் கொல்லப்பட்டவர்களின் குருதிகள், தமக்கான நீதியை பெற்றுத்தாருங்கள் என எங்கள் ஒவ்வொருவரிடமும் ஓலமிட்டவண்ணம் இருக்கின்றன. அந்த ஓலங்களுக்கு நாம் நீதியை இலங்கையில், இந்த அரசிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.
எனவே சர்வதேசத்திடம் இதற்கான நீதியை கோரி நிற்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா ஜெகதாஸ், அருள்பணி அருளானந்தம் சமுவேல் சுபேந்திரன், வேலன்சுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 
இனப் பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத அரசிடம் தீர்வினை எதிர்பார்க்க முடியாது - அணையா தீபம் முற்றத்தில் குரு முதல்வர் குமுறல்!  | Virakesari.lk
 
  
      
    
  
            
      
            6 days 12 hours ago
      வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம். 28 Oct, 2025 | 05:26 PM  அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று (28)  கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்  ஆனந்த விஜேபால கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.   இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னி பிரிவுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக்க ஹப்புகொட, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜே.ஏ. சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜி.எச்.மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ.சோமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.   நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “டிஜிட்டல்மயமாக்கலை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணங்கள் மட்டுமின்றி, அபராதத்தையும் GovPay மூலம் செலுத்துவதன் ஊடாக கால வீணடிப்பு குறைக்கப்படுகின்றது. பொலிஸாரின் சேவையையும் இது இலகுபடுத்தும். மக்களுக்கும் நேர வீணடிப்பு ஏற்படாது.   GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் நடைமுறை மேல் மற்றும் தென்மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவதாக தற்போது வடக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கையால் ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் களங்கம் ஏற்படும் நிலை காணப்பட்டது. நவீன முறைமை என்பது வெளிப்படைத்தன்மையானது. எனவே, பொலிஸார் மீதான விமர்சனங்களுக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.   இன்றைய நவீன உலகில், நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நாமும் நகரவேண்டும். அப்போதுதான் உலகை வென்று முன்நோக்கிச் செல்ல முடியும். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொறுப்பை எமது ஊடக தோழர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்" என்றார். வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம் | Virakesari.lk
  
      
    
  
            
      
            6 days 13 hours ago
      மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  
      
    
  
            
      
            6 days 14 hours ago
      சாதியச் செருக்கு… ஊர்ப்பெருமை… ஆசாரவாதம்… ஆண்-இன வாதம்… பிரதேசவாத பித்து… சுயநலனே கெத்து… என்று களவை போற்றும் கபடம்… இத்தனையும் குரோமசோமில் குடிகொண்ட இனத்தின் பழைய ஏற்பாடுகளை பஸ்பமாக்குவதால்… நன்றே…நன்றே… நையாண்டி நன்றே. -புதிய ஏற்பாடு-
  
      
    
  
            
      
            6 days 14 hours ago
      மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂   இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி. நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன். உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம். எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.
  
      
    
  
            
      
            6 days 14 hours ago
      'மனசுக்குள் மத்தாப்பூ'   அதிகாலை தென்றலிலே மனசுக்குள் மத்தாப்பூ அழகுப் பதுமை இதயத்துக்குள்ளே புகுந்ததே! அணங்குப் பார்வை தீண்டிய நொடியிலே அன்பு மலர்ந்து காதல் பூத்ததே!   உன்னை நினைத்தால் இருதயம் துள்ளுதே தீப்பொறி போலே எண்ணங்கள் ஒளிருதே! மௌனமாய் வெடிக்கும் காதல் இதுவோ!   குறும்புப் புன்னகையால் என்னை மயக்கியவளே குறையில்லா அழகை வீசும் வனிதையே குதூகலம் பொழியும் வண்ண மையிலே குதர்க்கம் வேண்டாம் அருகில் வாராயோ?   கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்   'மனசுக்குள் மத்தாப்பூ' https://www.facebook.com/groups/978753388866632/posts/32072218642426700/?
  
      
    
  
            
      
            6 days 14 hours ago
      'மனசுக்குள் மத்தாப்பூ'
அதிகாலை தென்றலிலே மனசுக்குள் மத்தாப்பூ
அழகுப் பதுமை இதயத்துக்குள்ளே புகுந்ததே!
அணங்குப் பார்வை தீண்டிய நொடியிலே
அன்பு மலர்ந்து காதல் பூத்ததே!
உன்னை நினைத்தால் இருதயம் துள்ளுதே
தீப்பொறி போலே எண்ணங்கள் ஒளிருதே!
மௌனமாய் வெடிக்கும் காதல் இதுவோ!
குறும்புப் புன்னகையால் என்னை மயக்கியவளே
குறையில்லா அழகை வீசும் வனிதையே
குதூகலம் பொழியும் வண்ண மையிலே
குதர்க்கம் வேண்டாம் அருகில் வாராயோ?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
'மனசுக்குள் மத்தாப்பூ'
https://www.facebook.com/groups/978753388866632/posts/32072218642426700/?
 
  
      
    
  
            
      
            6 days 14 hours ago
      விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள். பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம். எல்லாமுமே அஜெண்டாவுடன் இயங்கும் ஊடகம்தான். ஆனால் பட்டவர்தனமாக பிரச்சாராம் செய்யும் ஊடகங்கள் ஒரு தனி ரகம். அதில் நக்கீரன் முதல் இடம். கோவாலு ஜெ ஆளை தூக்கி உள்ளே வைத்தது முதல் எப்படி ஊடகம் நடத்துகிறார் என்பதை வாச்கர் அறிவார்கள். விஜை கோவாலு மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை. ஏன் எனில் இதை ஒரு குற்றவியல் வழக்ககாக சிபிஐ விசாரிக்கிறது. அப்படி திரைப்படத்துக்காகத்தான் வீடியோ எடுக்கப்பட்டது என தன்னிடம் உள்ள ஆதாரத்தை சிபிஐ அல்லது த நா அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் கோவாலு கொடுத்தாலே போதும். விடயம் உண்மை எனில் விஜையை களி திங்க வைக்கலாம்.
  
      
    
  
            
      
            6 days 14 hours ago
      பாராட்டுக்கள், சூரன்போர் நடக்கும் நேரத்தில் யாழில் சூரனின் விஜயம் பொருத்தமாய் அமைந்திருக்கு . .....!  😂
  
      
    
  
            
      
            6 days 15 hours ago
      வணக்கம் வாத்தியார் ........! தமிழ் பாடகி : சின்மயி பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்  ஆண் : சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு ஆண் : பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா  ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ குழு : அடடா ஆண் : அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ.......!  --- சஹாரா சாரல் தூவுதோ ---