Aggregator
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!
மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!
மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!
09 Sep, 2025 | 04:50 PM
மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார்
மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார்
நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk
போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்
போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்
9 Sep, 2025 | 05:25 PM
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது.
அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.
இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.
மேலும்.....
Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital
Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha
A Hamas official says its negotiating team was targeted during a meeting
Explosions are heard and smoke is rising above Doha
Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேபாளத்தில் அரசு கவிழ்ந்தது: இளைஞர் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை
யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை
Published By: Digital Desk 1
09 Sep, 2025 | 12:32 PM
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை(நேற்று) நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் .
குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.