Aggregator

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி July 15, 2025 11:27 am ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன் போது காயமடைந்த ஐந்து மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/ragging-peak-nine-southeastern-university-students-admitted-to-hospital/

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months ago

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

July 15, 2025 11:27 am

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் இருவேறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் போது காயமடைந்த ஐந்து மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனைய நான்கு மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதே வேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/ragging-peak-nine-southeastern-university-students-admitted-to-hospital/

புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்

2 months ago
புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக அவர் செயற்பட்டார். நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கின்ற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராகவும் அவர் செயற்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 50 ஆவது பிறந்தநாளையொட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராகவும் அவர் புகழ் பெற்றிருந்தார். இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரால் அவர் மதிப்பளிப்பளிக்கப்பட்டார். புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து, மறைந்த கலைஞர் சங்கநாதனுடன் இணைந்து சத்தியா குரல் வழங்கியிருந்தார். விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் அவர் குரல் வழங்கியும் இருந்தார். மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியைப் புலிகளின் குரல் வானொலியில் அவர் தயாரித்திருந்தார். 2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் பகுதி நேர ஆங்கில ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்திருந்தார். அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் நேற்று அவர் காலமானார். அவரின் இறுதிக்கிரியை நிகழ்வு கிளிநொச்சி, வட்டக்கச்சியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. https://oruvan.com/voice-of-the-tigers-radio-announcer-dies/

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

2 months ago
காசாவில் மேலும் மூன்று இஸ்ரேலிய படையினர் பலி 15 JUL, 2025 | 11:27 AM காசாவில் இஸ்ரேலிய படையினரின் டாங்கி குண்டுவெடிப்பொன்றில் சிக்கியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 19 முதல் 20 வயதுடையவர்களே கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசாவின் வடபகுதி நகரனா ஜபாலியாவில் குண்டுவெடிப்பில் சிக்கிய டாங்கியில் இருந்த படையினரே கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதல் காரணமாகவே டாங்கி வெடித்து சிதறியது என முதலில் கருதியதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் எனினும் டாங்கியின் சுழலும் பீரங்கிமேடைக்குள் தவறுதலாக எறிகணை வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது. 401வது கவசவாகனப்பிரிவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/220035

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது!

2 months ago
வைத்திய நிபுணர் மகேஷி விஜேரத்னவுக்கான பிணை! நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் ஊழல் செய்ததான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் சிறப்பு வைத்தியர் மகேஷி விஜேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. சந்தேக நபருக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு ரூ.50,000 பெறுதியான மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளிகளுக்கு ரூ.300 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம், வைத்தியர் அதிகாரப்பூர்வ வைத்தியசாலை நடைமுறைகள் மூலம் அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறியதாகக் கூறியது. அதற்கு பதிலாக அந்தப் பொருட்கள் அவரது தனியார் நிறுவனம் மூலம் சுமார் 300 நோயாளிகளுக்கு விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மருத்துவ மோசடிக்கு உதவிய அவரது இரண்டு சகாக்களும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439225

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

2 months ago
செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன் July 15, 2025 செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இரண் டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் நாள் அகழ்வுப் பணியின் போது ஒரு குழந்தையின் அல்லது சிறுவரின் மண்டையோடு உள்ளிட்ட சிதைவடைந்த எலும்பு கூட்டுத் தொகுதியோடு இன்னும் இருவரது எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பமாகி முதல் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவருடையது என சந்தேகிக்கப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ஏனைய இரண்டும் அடுத்து நாட்க ளில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இதேவேளை இவ்வாறு இரண்டாம் கட்ட அகழ்வின்போது முதல் நாளில் கண்டு பிடிக்கப்பட்ட சிறுவரின் எலும்புத் தொகுதி தொடர்பிலும் இங்கு தொடர்ந்தும் வெளிவரும் உறவுகளின் எலும்புக்கூடுகள் தொடர்பிலும், ஆடைகள்,பாடசாலைப் புத்தகப் பை. காலணி,வளையல்கள்,பொம்மைகள் என்பன தொடர்பிலும் தமிழர்கள் மத்தியில் பெரும் கவலையும்,சோகமும் ஏற்பட்டிருந்தது. இந்நிலை யில் இவ்விடயம் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் மனிதாபிமானம் கொண்டவர்களினதும் பார்வையினை யும் அங்கு திருப்பியதோடு, தொடர்ந்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கவனத்தைத் திருப்பி இவ்விவகாரம் பெருமளவில் பேசுபொருளாக மாறியது. இந்த அகழ்வுப் பணிகளானது யாழ் நீதி மன்றத்தின் BR 433 PC 2025 எனும் வழக்கிற்கு அமைவாக கௌரவ.நீதிபதி திரு.ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கட்டளைக்கு அமைவாக அவரது மேற்பார்வையுடன் தொல்லியல் துறை பேராசிரி யர் திரு.ராஜ் சோமதேவா அவர்களுடைய தலைமையில் அவர்களின் குழுவினர், தொல்லியல்துறை மாணவர்கள், மற்றும் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகள், சட்டத்தரணிகள் போலீசார், யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் சோகோ (Sogo) போலீசார் (seen of crime officers ) யாழ் குற்றத் தடுப்பு பொலீஸ் பிரிவினர் என பலரது பிரசன்னத்துடனும் கண்காணிப்புடனும் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன. இந்த அகழ்வுப் பணிகள் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர்கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இரு பிரிவுகளாக Site 01 Site 02 என வகைப்படுத்தப்பட்டு இந்த அகழ்வு பணிகள் நடந்திருந்தது. மனிதப் பேரவலத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற செம்மணி சிந்துபாத்தி மயான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது தொடர்ந்தும் பல உறவுகளுடைய எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன, அவற்றில் பல குழந்தைகள், சிறுவர்களுடையதும், தாயும் பிள்ளையுமாகவும், குடும்பமாகவும் ஈவு இரக்கமற்றுக் கொன்று கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் பலத்த சந்தேகத்தின் வெளிப்பாடாகவே பலரது எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அங்கே கண் டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்த இடத்தில் இடம்பெறுகின்ற அகழ்வு பணிகளின் அடிப்படையில் பார்க்கிறபோது இங்கு மீட்கப்படுகின்ற இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உரிய முறைப்படி அடக்கம் செய் யப்படாதது போன்றும் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டது போன்றுமே காணப்படுகிறது, இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி அளவு ஆழத்திலே இருந்து தான் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இவைகளைப் பார்க்கின்றபோது இங்கு நிச்சயமாக ஒரு மனிதப் பேரவலம் இடம்பெற்றிருக்கிறது எனும் சந்தேகத்தை வலுக் கச் செய்கிறது.தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கின்ற எமது உறவுகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழ்ந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டு அவைகள் நீதிமன்றக் கட்டு காவ லில் வைக்கப்படுவதோடு அங்கு கிடைக்கப் பெறுகின்ற ஏனைய சான்றுப் பொருட்களும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்படுகி றது. இதேவேளை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த அகழ்வுப் பணிகளின் போது காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் நாளில் மழை குறுக்கிட்டது போன்று ஏற்பட்டு விடலாம் எனும் கணிப்பின் அடிப்படையில் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்காமல் வழிந்து ஓடும் வகையிலே JCB இயந்திரம் மூலம் கான் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது, அவ்வாறு JCB இயந்திரம் மூலமாக கான் வெட்டுகின்ற போது அகழப்பட்ட பகுதிகளிலும் கூட சில மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதனால் அந்த கான் வெட்டும் பணி நிறுத்தப்பட்டதோடு அந்த இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகளுக்காகக் காத்திருக்கிறது. 26.06.2025 முதல் 10.07.2025 வரையான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான 15 நாட்கள் முடிவில் இதுவரை 65 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப் பட்டிருக்கின்றன, இவைகளில் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர் கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இருந்து 63 முழுமையான மண்டையோடுகள் சகிதமான எலும்பு கூட்டுத் தொகுதிகளும், பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினால் சற்றலைட் மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு முழுமையான மண்டையோடு சகிதமான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாகவே இந்த 65 எலும்புக்க்கூட்டுத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகள் மூலமாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. அத்து டன் அங்கு பெறப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்களும் நீதிமன்றக் கட்டுக்காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பேராசிரியர் திரு.ராஜ் சோமதேவா அவர்களினால் யாழ் நீதிமன்றில் இந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கௌரவ நீதிமன்றினால் பணிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று மனித என்பு எச்சம் 25 மற்றும் பாடசாலைப் புத்தகப் பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட வேறு பல சான்றுப் பொருட்களுடனும் எடுக்கப்பட்ட என்புகள் தொடர்பான மனித என்பு ஆய்வு தொடர்பிலான அறிக்கைகளையும் சட்ட வைத்தியர் திரு. பிரணவன் செல்லையா அவர்களினால் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யுமா றும் கட்டளை ஒன்று உள்ளது. இதேவேளை அகழ்வுப் பிரதேசம் இலக்கம் இரண்டில் ஒரு இடத்தில் ஒரு பொலித்தின் பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சில என்புக் குவியல்களும் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது. அதில் சிறிய மற்றும் பெரிய எலும்புகளும் காணப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றும் சட்டத்தரணிகளால் நீதவா னின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த என்புகளும் ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கைகளும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கௌரவ நீதவான் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரி திரு செ.பிரணவன் தலைமையில் ஒரு குழு அமைத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூறப் பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான இரண்டாம் கட்டத்திற்கு மொத் தமாக 45 நாட்கள் தீர்மானிக்கப்பட்டு அந்த தீர் மானத்திற்கு அமைவாக நீதி அமைச்சினால் நிதி தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நீதி அமைச்சால் கூறப்பட்ட நிதி முழுவதும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கணக்காய்வுப் பகுதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45 நாளில் முதல் கட்டமாக 15 நாட்கள் அகழ்வுப் பணிகள் காலை 07.30 முதல் இரவு சுமார் பத்து மணி வரையும் நீடிக்கும் வகையிலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. இறுதி நாளில் (10.07.2025) பேராசிரியர் ராஜ் சோ மதேவா மற்றும் அவரது குழுவினர் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகளும் தென்னிலங்கையைச் சேர்ந்த மேலும் ஆறு சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்லியல் துறை மாணவர்கள் 14 பேர் யாழ் வைத்திய பீட மாணவர்கள் மற்றும் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பணியாளர்களும்,நீதிபதி, சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், காவல் துறையினர் பணியாளர்கள் அதிகாரிகள் தொல்லியல் துறையினர் பல்கலைக் கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெற்றிருந்தது. இப்பணியில் ஈடுபட்ட இவர்களுக்கான ஓய்வும் தேவை என்ற அடிப்படையில் பத்தாம் திகதி (10.07.2025) முதல் 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டு எதிர் வருகின்ற 21 ஆம் திகதி (21.07.2025) முதல் மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகும் என்பதோடு அதுவரையும் இந்த இடம் வழமை போன்று பாதுகாக்கப்பட்ட இடமாகப் பாதுகாக்கப்படுவதோடு ஏற்கனவே அங்கே பொருத்தப்பட்டிருக்கின்ற இரண்டு சிசிடிவி கேமராக்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதோடு மீண்டும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது. https://www.ilakku.org/செம்மணியின்-இரண்டாம்-கட்/

திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

2 months ago
சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு! 2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான கனேசலிங்கம் சிந்துஜன் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட குறித்த நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439218

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2 months ago
பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்காக கல்வி உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறிய அவர், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகர்ப்புறங்களில் உத்தியோகபூர்வ இல்லங்களில் பல ஆண்டுகளாக ஒரே அதிகாரிகள் வசிப்பதால், புதிய அதிகாரிகள் வீடுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகின்றது எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ‘குழந்தைகளை பிரபலமான பாடசாலைகளில் சேர்க்கும் நோக்கில் சில அதிகாரிகள் 30–37 ஆண்டுகள் ஒரே இல்லத்தில் வசிக்கிறார்கள் எனவும் இதனால் பிறர் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையை தவிர்க்க, ஐந்து ஆண்டுகளுக்குப் பிந்தும் ஒரே இல்லத்தில் தொடர்ச்சியாக தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும், இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ‘எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போல, பிறருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், கல்வி அம்சத்தில் சமத்துவம் உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் கொள்கைகளை, குறிப்பாக முப்படைகளுக்காக செயல்படுத்தப்படும் கொள்கைகளை காவல்துறை நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை திறம்பட மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதற்கும், அவர்களின் முக்கிய தேவைகளை தீர்க்கும் நோக்கத்துடன் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பதில் மா அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் அனுருத்த பண்டாரநாயக்க, ஜானகி செனவிரத்ன, தயாள் இளங்ககோன் மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவர் வழக்கறிஞர் நீதா சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439209

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2 months ago

police-sri-lanka.jpg?resize=640%2C375&ss

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்காக கல்வி உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கூறிய அவர், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகர்ப்புறங்களில் உத்தியோகபூர்வ இல்லங்களில் பல ஆண்டுகளாக ஒரே அதிகாரிகள் வசிப்பதால், புதிய அதிகாரிகள் வீடுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ‘குழந்தைகளை பிரபலமான பாடசாலைகளில்  சேர்க்கும் நோக்கில் சில அதிகாரிகள் 30–37 ஆண்டுகள் ஒரே இல்லத்தில் வசிக்கிறார்கள் எனவும் இதனால் பிறர் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலையை தவிர்க்க, ஐந்து ஆண்டுகளுக்குப் பிந்தும் ஒரே இல்லத்தில் தொடர்ச்சியாக தங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும், இது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ‘எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போல, பிறருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனவும்  அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கல்வி அம்சத்தில் சமத்துவம் உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் கொள்கைகளை, குறிப்பாக முப்படைகளுக்காக செயல்படுத்தப்படும் கொள்கைகளை காவல்துறை நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை திறம்பட மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதற்கும், அவர்களின் முக்கிய தேவைகளை தீர்க்கும் நோக்கத்துடன் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பதில் மா அதிபர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மூத்த பொலிஸ்  கண்காணிப்பாளர்கள் அனுருத்த பண்டாரநாயக்க, ஜானகி செனவிரத்ன, தயாள் இளங்ககோன் மற்றும் பொலிஸ் சேவா வனிதா பிரிவின் தலைவர் வழக்கறிஞர் நீதா சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439209

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

2 months ago
தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மேலதிக நேர வேலையிலிருந்து விலக நேரிடும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 2016 முதல் தபால் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் தபால் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்ததுடன், நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1439213

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

2 months ago

New-Project-176.jpg?resize=750%2C375&ssl

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மேலதிக நேர வேலையிலிருந்து விலக நேரிடும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

2016 முதல் தபால் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் தபால் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்ததுடன், நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது.

https://athavannews.com/2025/1439213

விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது!

2 months ago

New-Project-169.jpg?resize=750%2C375&ssl

விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது!

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்திருந்தனர்.

அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நேரத்தில் தங்கள் விசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களில் ஆறு தாய்லாந்து நாட்டினர், மூன்று வியட்நாமிய நாட்டினர் மற்றும் ஒரு சீன நாட்டவர் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட குழுவினர் தற்போது மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களை உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

https://athavannews.com/2025/1439186

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

2 months ago

iss073e0249461large.jpg?resize=750%2C375

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்துக்குள் சுபான்ஷு சுக்லா உடன் ஏனைய 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர்.

இன்று மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்குகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, அக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் திகதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார்.

இந்நிலையில் இன்று ( ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர்.

இன்று மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.

டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பின்னர், நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும்.

வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவை வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

https://athavannews.com/2025/1439126

திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

2 months ago

திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

Published By: VISHNU

15 JUL, 2025 | 02:33 AM

image

திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு எதிர்வரும் 15.07.2025 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை திங்கட்கிழமை (14.07.2025) வழங்கப்பட்டுள்ளது. 

IMG-20250714-WA0120.jpg

2023 ஆம் ஆண்டு தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்த பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளராகவும் குறித்த நபர் களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தியாகி திலீபனது ஊர்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் குறித்த வழக்கு முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருந்தமையும், தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமையும் பல்வேறுபட்ட தரப்புகளாக கண்டிக்கப்பட்ட நிலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் துன்புறுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள அரசாங்கம் தங்களுடைய முன்னாள் போராளிகளை நினைவேந்தும் உரிமையினை நிலை நிறுத்தி உள்ள நிலையில், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மாத்திரம் மறுக்கப்பட்டு வருவது சமூக செயற்பாட்டாளர்களால் கண்டிக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/220015

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

2 months ago

New-Project-171.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

உக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது அமெரிக்கா “மிகக் கடுமையான” வரிகளை விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (14) தெரிவித்தார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.

“ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். 50 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாங்கள் 100% வரிகளை விதிப்போம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடச் சேவையான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை “இரண்டாம் நிலை வரிகள்” என்றும் ட்ரம்ப் விவரித்தார்.

அதாவது உலகப் பொருளாதாரத்தில் மொஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ரஷ்யாவுடன் தொடர்புகளை பேணும் வர்த்தக பங்காளிகளையும் குறிவைப்பது ஆகும்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து வொஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான நேரடி வர்த்தகம் சரிந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான இந்த இரண்டாம் நிலை வரிகள் செயல்படுத்தப்பட்டால், அது மேற்கத்திய தடைகள் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போர் முழுவதும், மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவுடனான தங்கள் சொந்த நிதி உறவுகளில் பெரும்பாலானவற்றைத் துண்டித்துவிட்டன.

ஆனால் ரஷ்யா தனது எண்ணெயை வேறு இடங்களில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இது சீனா மற்றும் இந்தியா போன்ற வாங்குபவர்களுக்கு எண்ணெய் அனுப்புவதன் மூலம் மொஸ்கோ நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தொடர்ந்து சம்பாதிக்க அனுமதித்துள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் என்ன செய்யும்?

நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட இந்த ஆயுதங்கள் பின்னர் உக்ரேனுக்கு அனுப்பப்படும்.

இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்.

நேட்டோவின் விரைவான நடவடிக்கை முக்கியமானது என்று கூறி மார்க் ரூட் இந்த திட்டத்தை ஆதரித்தார்.

ஜெர்மனி, பின்லாந்து, கனடா, நோர்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பங்கேற்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

1110412183_0%3A163%3A3065%3A1887_1920x0_

உக்ரேன் என்ன சொல்கிறது?

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெல்லாக், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கியேவில் சந்தித்தார்.

உக்ரேனின் வான் பாதுகாப்பு, கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் மேலும் அமெரிக்க ஆதரவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் “பயனுள்ள உரையாடலை” நடத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

ukraine-crisis-kellogg.JPG?resize=1063%2

அடுத்து என்ன நடக்கும்?

பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உக்ரேனுக்கு வழங்குவது குறித்து விவாதிக்க ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சில நாட்களுக்குள் நடக்கலாம் என்று ட்ரம்பும் ரூட்டும் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர் அறிவித்த 30% வரிகள் உட்பட ட்ரம்பின் பரந்த கட்டணத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஐரோப்பாவின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பதாகவும் AP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று கூறினார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எப்போதும் விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று அவர் பிரஸ்ஸல்ஸில் கூறினார்.

https://athavannews.com/2025/1439192

செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு

2 months ago

செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு

லக்ஸ்மன்

செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு வந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது எதிர்கொள்ளல்.

அந்தவகையில்தான் இந்த அமர்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விஜயம். 

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி  வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களிலும் தங்களது முயற்சிகளை 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்ட உரிமைகளை அடைவதற்கான முயற்சிகளை நகர்த்தி வருகின்றனர்.

இருந்தாலும், 16 வருடங்களை எட்டிவிட்டபோதிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முடியாததாக சர்வதேச சமூகம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு அமர்விலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கம் நகர்ந்து வருகிறது. இது தமிழர்கள் தங்களது எந்த முயற்சியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளமுடியாத நிலையையே ஏற்படுத்துகிறது.  

ஒவ்வொரு வருடத்திலும் இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள்  தொடர்பாக ஐ.நா. மனித உரிமை
பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும், ஏற்கெனவே இலங்கை  தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் வலுப்பெறும் என்றெல்லாம் நம்பியிருப்பது மாத்திரமே தமிழர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. 

2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் போராட்டத்தைப் புதைத்ததுடன் ராஜபக்‌ஷ கூட்டணி இலங்கையின் ஏகாதிபத்தியவாதிகளாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள்ளிருந்த மைத்திரிபால சிறிசேனவை வெளியே எடுத்து அவரை ஜனாதிபதியாக்கி ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, சந்திரிகா பண்காரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெரும் கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியது. இது மகிந்த ராஜபக்‌ஷ கூட்டணிக்கு பெரும் அடியாகவே அமைந்தது.

இந்தச் சூழ்நிலையையும் தமக்குச் சாதகமானதாக்க முடிந்த மகிந்த அணி மைத்திரியை தமது வலைக்குள் கொண்டுவந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க வெளிநாடு சென்றிருந்த வேளையில், மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கிக் கொண்டது.

இந்த பதவி மாற்றத்தினை தவறு என்று நீதிமன்றம் சென்று நிரூபித்துக் கொண்ட ரணில் தரப்பு மகிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியை இல்லாமல் செய்தது, 
அதன்பின்னர் உருவாக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சித் தேர்தலில் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அதன்படி, கோட்டாபய  ராஜபக்‌ஷ பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதியானார்.

பாராளுமன்றம் பெரும்பான்மைபலத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால், கோட்டாபய  ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆட்சி நடவடிக்கைக் காலம் கொவிட் பெருந்தொற்றுக் காலமாக இருந்தது. அக்காலத்தில் அவர் மேற்கொண்ட முடிவுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவந்தது. 

அதன் காரணமாக ‘அரகலய’ போராட்டம் வெடித்து கோட்டாபய - ராஜபக்‌ஷ அரசாங்கம் இல்லாமல் செய்யப்பட்டது. நாட்டுக்குள் இருக்கும் போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவித்தார்.

கோட்டாபய  ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி தனது பதவி 
விலகலை நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டே அறிவித்தார். 

நாட்டுக்கு வெளியே சென்று பதவி விலகலை அறிவித்த பின்னர், பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர்கள், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை ரணில் ஆட்சிக்கு வந்ததும் கைது செய்தார், நடவடிக்கை எடுத்தார்.

அவ்வாறான செயற்பாடுகள் தவறு என்ற விமர்சனங்களை நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் உருவாக்கிக் கொண்டார். இருந்தாலும் அவற்றினை அவர் சமாளித்தும் கொண்டார்.  ஆட்சியை நடத்துதல், சட்டங்களை உருவாக்குதல், தேர்தல்களை நடத்தாது காலம் கடத்துதல் என நகர்ந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர்தான் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான 
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது.
இந்த ஒழுங்கில் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு யுத்தத்தினை முள்ளிவாய்க்காலில் புதைத்து மௌனிக்கச் செய்ததன்.

பின்னர் தமிழ்த் தரப்பு போர்க்குற்ற, இன அழிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளை, நல்லாட்சி என்ற பெயரில் ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இணை அனுசரணை வழங்கியது, ஆனால், 

கோட்டாபய ஜனாதிபதியானதும் அதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் மீண்டும் காலத்தைத் தாமதப்படுத்த இராஜதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில்தான் கால இழுத்தடிப்பு நடைபெறுகிறது. அரசாங்கம் என்று பொதுவில் பார்த்தாலும் அரசாங்கங்களின் மாற்றத்தினை தமக்குச் சாதகமாக இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்திக் கொண்டு 
வருகிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களுக்கான காலத்தை மனித உரிமைப் பேரவையில் கோரும் என்பதே நிச்சயமானது. 

இந்த நிச்சயத்தின் அடிப்படையைக் கொண்டுதான் செப்டெம்பருக்காக தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 
இலங்கை தொடர்பான விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப்புது தீர்மானங்கள் ஏற்படுத்தப்படுவதும்.

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்குவதும் காலங்கடத்துவதும் நடைபெறுகிறதே தவிர இற்றைவரை இத்தீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தலுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தது. அதேபோன்று, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத் தன்மையைக் காரணம் காட்ட முயற்சிக்கிறது.

மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசின் கோரிக்கை சாதகமாகவே பரிசீலிக்கப்படும் என்பதற்கு அண்மையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கை இதற்கு ஒரு சாட்சியாகும்.

இதில் முக்கியம் என்னவென்றால், தமிழ் மக்களின்  தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக் கூடிய ஆரோக்கியமான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதுதான். 

நீண்டகாலமாக நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற 
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையை 
முன்வைக்காத அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறை என்ற கண்துடைப்பில்தான் சர்வதேசம் நம்பிக்கை கொண்டிருக்கிறதா? என்றும் இந்த இடத்தில் சந்தேகிக்கத் தோன்றுகிறது. 

அந்த வகையில்தான், கண்துடைப்புகளாலேயே காலத்தை நகர்த்தும் அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கொள்ளப்பட வேண்டும் என்பதும் நினைவூட்டப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது.

உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை என வெளிப்பேச்சுக்கு நகரும் இலங்கை அரசின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இந்த 2025 செப்டெம்பர் அமர்வினை தமிழர் தரப்பு பயன்படுத்துவது கட்டாயமானது. 

இலங்கை அரசாங்கம் கூறிவருகின்ற உள்ளகப் பொறிமுறையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையப் போவதில்லை. மாறாக, சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அது கவனிக்கப்படாததாக இருந்து வருகிறது. 

அதேநேரம், இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற சர்வதேச பொறிமுறையை விடுத்து, இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக நெறிமுறைகள் ஊடாகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துப்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்ரர் ரார்க் கருத்து வெளியிட்டமையானது, வெறுமனே ஒதுக்கி விடக்கூடியதொன்றல்ல. 

அத்துடன், இதுவே செப்டெம்பர் அமர்விலும் பிரதிபலிக்கும் என்பது தமிழர் தரப்புக்கு நினைவில் இருத்தல் வேண்டும். இதனை அடியொட்டியே வருகிற செப்டெம்பர்  மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான நகர்வுகள் அமைதல் வேண்டும்.  பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் வழங்கப்பட்டமை முதல் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிவருகின்ற பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படாது என்பதுவே உறுதியானது.

அதனைக் கடந்து, சர்வதேச நீதிப்பொறி முறையே பொருத்தப்பாடானது என்பதாக 
அந்த நிலைப்பாடு இருக்க வேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செப்டெம்பர்-அமர்வில்-தமிழர்-நிலைப்பாடு/91-361055

அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்

2 months ago

அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் கொண்டதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக 22 வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனுரா மீட்டரைப் புதுப்பிப்பதற்கான தகவல்கள் மூன்று மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன:

1) வெளியிடப்பட்ட ஆதாரங்களில் காணப்படுவது,

2) தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு பெறப்பட்ட பதில்கள், மற்றும்

3) பயனர்களால் வழங்கப்படும் நம்பகமான தகவல்கள்.

Manthri.lk பக்கத்தில் உள்ள Anura Meter ஐப் பார்வையிடுவதன் மூலம் பயனர்கள், யோசனைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அநுரவைக்-கண்காணிக்க-அனுர-மீட்டர்-அறிமுகம்/150-360993

"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு!

2 months ago

"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு!

1355444606.jpg

"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது.

மருத்துவ கலாநிதி சண்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக மருத்துவ நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நிறுவப்பெற்ற இந்த அரங்கம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், மருத்துவ நிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

https://newuthayan.com/article/%22சிவபூமி_திருவாசக_அரங்கம்_மண்டபம்%22_திறப்பு!

வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்!

2 months ago

வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்!

adminJuly 15, 2025

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று, நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை, சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம், தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக காவற்துறையினர்  குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/217873/