Aggregator

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
அது தான் மத நல்லிணக்க தமிழ் அரசியல். இனி போகின்ற போக்கில் மார்க்கத்தின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த யூதர்களையும் தாக்கி பேசுவார்கள்

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறையின் சாதக, பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்

2 months ago

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறை

பட மூலாதாரம்,INSTA/R.C.C.LPS.EAST.MANGAD

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • சாரதா வி

    பிபிசி தமிழ்

  • 15 ஜூலை 2025, 02:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் 'ப' வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது.

ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் - மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கூறுகிறது.

ஆனால் இருக்கைகள் 'ப' வடிவில் இருந்தால் மட்டும் போதுமா? என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன. ஆரோக்கியமான வகுப்பறை சூழலுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போதுமான கட்டுமானங்கள் இருப்பது ஆகியவற்றை செய்யாமல் இருக்கைகளை மாற்றியமைப்பது எப்படி உதவும் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

'ப' வடிவ இருக்கை முறை அறிமுகம்

சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற மலையாள திரைப்படத்தில் ப வடிவ இருக்கை முறையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, கேரளாவில் சில பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இந்த முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அமரும் பாரம்பரிய இருக்கை முறையில், மாணவர்- ஆசிரியர் உரையாடல் குறைவாக இருக்கலாம். ப வடிவ இருக்கை முறையில், மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது சோதனை முயற்சியே என்றும், ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று அவர்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசின் இந்த உத்தரவை பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ப வடிவ இருக்கை முறையில் மாணவர்களின் மனநிலை மேம்படும் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருப்பது போலவே குறைகளும் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்தத் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, குடி நீர் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலகில் ப வடிவம், வட்ட வடிவம், குழுக்களாக அமர்வது என பல்வேறு வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன.

'ப' வடிவ இருக்கை முறை : சாதகம் vs பாதகம்

ப வடிவ இருக்கை முறை வகுப்பறையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

  • ப வடிவ முறையில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையும், கரும்பலகையையும் பிற மாணவர்களையும் பார்க்க முடியும்.

  • எல்லா மாணவர்களையும் பார்த்து ஆசிரியரால் பேச முடியும்.

  • பிற மாணவர்கள் பேசுவதை கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த இருக்கை முறை உதவும்.

  • ப வடிவில் மாணவர்கள் அமரும் போது, ஆசிரியர் வகுப்பறைக்குள் நடமாட முடியும், அனைத்து மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும்.

  • மாணவர்கள் வகுப்புகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவும்.

  • பேச தயங்கும் மாணவர்கள் இந்த இருக்கை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உண்டு

ப வடிவ முறையின் இந்த சாதகமான அம்சங்களை யாரும் மறுக்காத நிலையில், இதற்கான பாதகங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

கல்வியாளர் பாலாஜி சம்பத், " மாணவர்கள் ப வடிவ முறையில் அமரும் போது, அனைத்து மாணவர்களாலும் கரும்பலகையை நேராக பார்க்க முடியாது. சில மாணவர்கள் இடது அல்லது வலது புறம் தங்கள் கழுத்தை திருப்பியே பார்க்க வேண்டியிருக்கும். பல மணி நேரம் இப்படி அமர்வதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்." என்கிறார்.

அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், வகுப்பறையில் அனைவரையும் ப வடிவ முறையில் அமர வைப்பது சிரமமாக இருக்கலாம்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ப வடிவ இருக்கை முறை 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்தை நீக்கிட உதவும் என்று அரசு கூறுகிறது.

சர்வதேச அளவில் என்னென்ன இருக்கை முறைகள் உள்ளன?

உலகில் பல்வேறு விதமான வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. அவை அந்தந்த கற்றல் முறையின் வெளிப்பாடாக உள்ளன.

  • ப வடிவம்/ யூ என்ற ஆங்கில எழுத்து (U) வடிவ இருக்கை முறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடல் நிகழ்த்தவும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தவும் உதவும்.

  • சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் ஒரு மேசைக்கு அருகில் அமரும் முறையில் மாணவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள உதவும்.

  • வட்ட வடிவிலான இருக்கை முறை குழு விவாதங்கள் நடத்தவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் உதவும்.

  • இரு மாணவர் அமரும் முறை ஆசிரியர் மேசைகளுக்கு இடையே சென்று அனைத்து மாணவர்களையும் கவனிக்க உதவும்.

தரமான கல்வி முறையை கொண்டதாக கூறப்படும் பின்லாந்து நாட்டில், நவீன பள்ளிகள் சிலவற்றில் வகுப்பறைகளில் பாரம்பரிய மேசை, நாற்காலிகளுக்கு பதிலாக நகர்த்துவதற்கு எளிதான மென்மையான நாற்காலிகள், சோஃபாக்கள், நவீன மேசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது இருக்கை முறையை தேவைப்படும் போது மாற்றியமைத்துக் கொண்டே இருக்கலாம். அங்கே மாணவர்கள் குழுக்களாக அமரும் முறையும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் நிரந்தரமான இடம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த வகுப்பறை வழங்கும்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் 'யாருடைய வகுப்பறை' என்ற தனது நூலில், பின்லாந்து வகுப்பறைகளில் வட்ட வடிவ இருக்கை முறை எப்படி கற்றலை மேம்படுத்தவும், வகுப்பறையை ஆசிரியர் மையப்படுத்தியதாக இல்லாமல் மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர் இந்த உத்தரவை வரவேற்காமல் இருக்க முடியாது என்றார். " கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மாணவர்களிடம் 'என்னை கவனி' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஏன் கடைசியில் அமர வைத்துள்ளீர்கள், முதல் வரிசையில் அமர வையுங்கள் என்று ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று கூறினார்.

எனினும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருந்தால் மட்டுமே வகுப்பறையில் இந்த இருக்கை முறை சாத்தியம் என்றும் அவர், "அனைத்து வகுப்பறைகளிலும் இந்த விகிதம் இல்லை, பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது போன்ற வகுப்பறைகளில் இருக்கை முறையை எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியரின் சுதந்திரத்துக்கே விட்டுவிட வேண்டும்." என்கிறார்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம்,ஆயிஷா இரா. நடராசன்

படக்குறிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன், சில வரம்புகள் இருந்தாலும் அரசின் இந்த உத்தரவு வகுப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார்.

வகுப்பறைகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகம்

பட மூலாதாரம், பாலாஜி சம்பத்

படக்குறிப்பு,கல்வியாளர் பாலாஜி சம்பத்

வருடாந்திர கல்வி நிலை (ASER) 2024 -ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பில் 37% பேருக்கே வாசிக்க தெரிந்திருந்தது. (தனியார் பள்ளிகளில் 32.3% மாணவர்களுக்கு வாசிக்க தெரிந்திருந்தது). அதே போன்று அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20.2% பேருக்கே வகுத்தல் கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது.

இதுபோன்ற அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாலாஜி சம்பத் கூறுகிறார். "அதை செய்வது சிரமமான காரியம் அல்ல. கழித்தலோ, வகுத்தலோ தெரியாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி தர வேண்டும். இது போன்ற சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தான் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரே ஒரு விசயம் மொத்தமாக கல்வி முறையை மாற்றியமைத்து விடும் என்று நம்புவது தவறு" என்கிறார் அவர்.

கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை ஷண்முகப்பிரியா ப வடிவ வகுப்பறையை அரசு வலியுறுத்தும் முன்பே தங்களது பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார்.

"மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் என்பதால் ப வடிவ இருக்கை முறையை ஏற்கெனவே வகுப்பறைகளில் அமல்படுத்தியுள்ளோம். இந்த வடிவில் அமரும் போது, ஆசிரியரால் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும். மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் முழு கவனம் கிடைக்கும். மாணவர்கள் வகுப்பை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வது குறைந்தது" என்கிறார். எனினும் வகுப்பறையின் அளவை பொருத்தே இதை அமல்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஒரு வகுப்பறையில் 23 மாணவர்கள் இருந்தபோது எளிதாக ப வடிவ முறையை அமல்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டு 38 மாணவர்கள் இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படலாம் என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, மாணவர்களின் அமரும் இடங்களை ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றியமைக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராசன். "ஒவ்வொரு வகுப்பின் போதும் மாணவர்கள் இடம் மாறி அமர்வது அவர்களுக்கு புத்துணர்வு தரும். இதனை நேர விரயமாக ஆசிரியர்கள் கருத கூடாது" என்பது அவரது கருத்து.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj4epnzdqk5o

வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறையின் சாதக, பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்

2 months ago
பட மூலாதாரம்,INSTA/R.C.C.LPS.EAST.MANGAD படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 15 ஜூலை 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் 'ப' வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது. ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் - மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கூறுகிறது. ஆனால் இருக்கைகள் 'ப' வடிவில் இருந்தால் மட்டும் போதுமா? என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன. ஆரோக்கியமான வகுப்பறை சூழலுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போதுமான கட்டுமானங்கள் இருப்பது ஆகியவற்றை செய்யாமல் இருக்கைகளை மாற்றியமைப்பது எப்படி உதவும் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 'ப' வடிவ இருக்கை முறை அறிமுகம் சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற மலையாள திரைப்படத்தில் ப வடிவ இருக்கை முறையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, கேரளாவில் சில பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இந்த முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அமரும் பாரம்பரிய இருக்கை முறையில், மாணவர்- ஆசிரியர் உரையாடல் குறைவாக இருக்கலாம். ப வடிவ இருக்கை முறையில், மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது சோதனை முயற்சியே என்றும், ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று அவர்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார். அரசின் இந்த உத்தரவை பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ப வடிவ இருக்கை முறையில் மாணவர்களின் மனநிலை மேம்படும் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருப்பது போலவே குறைகளும் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்தத் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, குடி நீர் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் ப வடிவம், வட்ட வடிவம், குழுக்களாக அமர்வது என பல்வேறு வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. 'ப' வடிவ இருக்கை முறை : சாதகம் vs பாதகம் ப வடிவ இருக்கை முறை வகுப்பறையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ப வடிவ முறையில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையும், கரும்பலகையையும் பிற மாணவர்களையும் பார்க்க முடியும். எல்லா மாணவர்களையும் பார்த்து ஆசிரியரால் பேச முடியும். பிற மாணவர்கள் பேசுவதை கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த இருக்கை முறை உதவும். ப வடிவில் மாணவர்கள் அமரும் போது, ஆசிரியர் வகுப்பறைக்குள் நடமாட முடியும், அனைத்து மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும். மாணவர்கள் வகுப்புகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவும். பேச தயங்கும் மாணவர்கள் இந்த இருக்கை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உண்டு ப வடிவ முறையின் இந்த சாதகமான அம்சங்களை யாரும் மறுக்காத நிலையில், இதற்கான பாதகங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. கல்வியாளர் பாலாஜி சம்பத், " மாணவர்கள் ப வடிவ முறையில் அமரும் போது, அனைத்து மாணவர்களாலும் கரும்பலகையை நேராக பார்க்க முடியாது. சில மாணவர்கள் இடது அல்லது வலது புறம் தங்கள் கழுத்தை திருப்பியே பார்க்க வேண்டியிருக்கும். பல மணி நேரம் இப்படி அமர்வதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்." என்கிறார். அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், வகுப்பறையில் அனைவரையும் ப வடிவ முறையில் அமர வைப்பது சிரமமாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப வடிவ இருக்கை முறை 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்தை நீக்கிட உதவும் என்று அரசு கூறுகிறது. சர்வதேச அளவில் என்னென்ன இருக்கை முறைகள் உள்ளன? உலகில் பல்வேறு விதமான வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. அவை அந்தந்த கற்றல் முறையின் வெளிப்பாடாக உள்ளன. ப வடிவம்/ யூ என்ற ஆங்கில எழுத்து (U) வடிவ இருக்கை முறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடல் நிகழ்த்தவும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தவும் உதவும். சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் ஒரு மேசைக்கு அருகில் அமரும் முறையில் மாணவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள உதவும். வட்ட வடிவிலான இருக்கை முறை குழு விவாதங்கள் நடத்தவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் உதவும். இரு மாணவர் அமரும் முறை ஆசிரியர் மேசைகளுக்கு இடையே சென்று அனைத்து மாணவர்களையும் கவனிக்க உதவும். தரமான கல்வி முறையை கொண்டதாக கூறப்படும் பின்லாந்து நாட்டில், நவீன பள்ளிகள் சிலவற்றில் வகுப்பறைகளில் பாரம்பரிய மேசை, நாற்காலிகளுக்கு பதிலாக நகர்த்துவதற்கு எளிதான மென்மையான நாற்காலிகள், சோஃபாக்கள், நவீன மேசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது இருக்கை முறையை தேவைப்படும் போது மாற்றியமைத்துக் கொண்டே இருக்கலாம். அங்கே மாணவர்கள் குழுக்களாக அமரும் முறையும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் நிரந்தரமான இடம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த வகுப்பறை வழங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் 'யாருடைய வகுப்பறை' என்ற தனது நூலில், பின்லாந்து வகுப்பறைகளில் வட்ட வடிவ இருக்கை முறை எப்படி கற்றலை மேம்படுத்தவும், வகுப்பறையை ஆசிரியர் மையப்படுத்தியதாக இல்லாமல் மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர் இந்த உத்தரவை வரவேற்காமல் இருக்க முடியாது என்றார். " கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மாணவர்களிடம் 'என்னை கவனி' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஏன் கடைசியில் அமர வைத்துள்ளீர்கள், முதல் வரிசையில் அமர வையுங்கள் என்று ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று கூறினார். எனினும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருந்தால் மட்டுமே வகுப்பறையில் இந்த இருக்கை முறை சாத்தியம் என்றும் அவர், "அனைத்து வகுப்பறைகளிலும் இந்த விகிதம் இல்லை, பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது போன்ற வகுப்பறைகளில் இருக்கை முறையை எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியரின் சுதந்திரத்துக்கே விட்டுவிட வேண்டும்." என்கிறார். பட மூலாதாரம்,ஆயிஷா இரா. நடராசன் படக்குறிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன், சில வரம்புகள் இருந்தாலும் அரசின் இந்த உத்தரவு வகுப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார். பட மூலாதாரம், பாலாஜி சம்பத் படக்குறிப்பு,கல்வியாளர் பாலாஜி சம்பத் வருடாந்திர கல்வி நிலை (ASER) 2024 -ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பில் 37% பேருக்கே வாசிக்க தெரிந்திருந்தது. (தனியார் பள்ளிகளில் 32.3% மாணவர்களுக்கு வாசிக்க தெரிந்திருந்தது). அதே போன்று அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20.2% பேருக்கே வகுத்தல் கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது. இதுபோன்ற அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாலாஜி சம்பத் கூறுகிறார். "அதை செய்வது சிரமமான காரியம் அல்ல. கழித்தலோ, வகுத்தலோ தெரியாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி தர வேண்டும். இது போன்ற சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தான் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரே ஒரு விசயம் மொத்தமாக கல்வி முறையை மாற்றியமைத்து விடும் என்று நம்புவது தவறு" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் வாட்டர் 'பெல் திட்டம்' துவக்கம் - மாணவர்கள் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர்? 'தமிழில் கல்வி, ஆங்கிலம் மலையாளத்தில் தேர்வு' - கேரளாவில் தமிழ் மாணவர்களுக்கு அநீதியா? 'கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி', தவிக்கும் பெற்றோர் - கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்? குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை ஷண்முகப்பிரியா ப வடிவ வகுப்பறையை அரசு வலியுறுத்தும் முன்பே தங்களது பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார். "மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் என்பதால் ப வடிவ இருக்கை முறையை ஏற்கெனவே வகுப்பறைகளில் அமல்படுத்தியுள்ளோம். இந்த வடிவில் அமரும் போது, ஆசிரியரால் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும். மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் முழு கவனம் கிடைக்கும். மாணவர்கள் வகுப்பை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வது குறைந்தது" என்கிறார். எனினும் வகுப்பறையின் அளவை பொருத்தே இதை அமல்படுத்த முடியும்" என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு ஒரு வகுப்பறையில் 23 மாணவர்கள் இருந்தபோது எளிதாக ப வடிவ முறையை அமல்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டு 38 மாணவர்கள் இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படலாம் என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, மாணவர்களின் அமரும் இடங்களை ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றியமைக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராசன். "ஒவ்வொரு வகுப்பின் போதும் மாணவர்கள் இடம் மாறி அமர்வது அவர்களுக்கு புத்துணர்வு தரும். இதனை நேர விரயமாக ஆசிரியர்கள் கருத கூடாது" என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4epnzdqk5o

பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நீடித்தார்; யுத்த நிறுத்த திட்டங்களை நிராகரித்தார் - நியுயோர்க் டைம்ஸ்

2 months ago
Published By: RAJEEBAN 15 JUL, 2025 | 12:16 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது. பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலேல் ஸ்மோட்ரிச் அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என எச்சரித்ததால் பெஞ்சமின் நெட்டன்யாகு 30 பணயக்கைதிகளை காப்பாற்றியிருக்ககூடிய காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டார், என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் தீவிரவலதுசாரி பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் கைவிட்டார் என குறிப்பிட்டுள்ளது. காசா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் நிபந்தனையுடன் சவுதிஅரேபியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த தயாராகயிருந்தது. பெருமளவு அரச ஆவணங்கள் இராணுவ ஆவணங்கள் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த 110 அதிகாரிகளுடனான உரையாடல்களை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெஞ்சமின் நெட்டன்யாகு குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரை தொடர்பில் பேட்டிக்காகவும் ஏனைய விடயங்களிற்காகவும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்ட போதிலும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் பெஞ்சமின் நெட்டன்யாகு குழப்பிய காசா யுத்த நிறுத்த திட்டம் யுத்தத்தை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரக்கூடியதாகவும் மீதமுள்ள பணயக்கைதிகளை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய வாய்ப்பினை உருவாக்ககூடியதாகவும் காணப்பட்டது நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த யுத்த நிறுத்த திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கலாம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. காசா யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை துரிதப்படுத்த தயார் என்ற சமிக்ஞைகளை சவுதி அரேபியா வெளியிட்டுவந்தது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நெட்டன்யாகுவிற்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் இடையிலான உறவில் கசப்புணர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் போரின் போது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அவநம்பிக்கை அதிகரித்தது. இராணுவ அதிகாரிகளை தான் சந்திக்கும் போது அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகு ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்த செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நியுயோர்க் டைம்ஸ் செய்திகள் இஸ்ரேல், அதன் துணிச்சலான மக்கள் மற்றும் வீரர்கள் மற்றும் அதன் பிரதமரை இழிவுபடுத்துகிறது" என்றுஎன தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/220039

பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நீடித்தார்; யுத்த நிறுத்த திட்டங்களை நிராகரித்தார் - நியுயோர்க் டைம்ஸ்

2 months ago

Published By: RAJEEBAN

15 JUL, 2025 | 12:16 PM

image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது.

newyork_times.jpg

பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலேல் ஸ்மோட்ரிச் அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என எச்சரித்ததால் பெஞ்சமின் நெட்டன்யாகு 30 பணயக்கைதிகளை காப்பாற்றியிருக்ககூடிய காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டார், என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் தீவிரவலதுசாரி பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவுகளை  மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் கைவிட்டார் என குறிப்பிட்டுள்ளது.

காசா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் நிபந்தனையுடன் சவுதிஅரேபியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த தயாராகயிருந்தது.

பெருமளவு அரச ஆவணங்கள் இராணுவ ஆவணங்கள் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த 110 அதிகாரிகளுடனான உரையாடல்களை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெஞ்சமின் நெட்டன்யாகு குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரை தொடர்பில் பேட்டிக்காகவும் ஏனைய விடயங்களிற்காகவும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்ட போதிலும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் பெஞ்சமின் நெட்டன்யாகு குழப்பிய காசா யுத்த நிறுத்த திட்டம் யுத்தத்தை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரக்கூடியதாகவும் மீதமுள்ள பணயக்கைதிகளை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய வாய்ப்பினை உருவாக்ககூடியதாகவும் காணப்பட்டது நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

benjamin1.jpg

இந்த யுத்த நிறுத்த திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கலாம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

காசா யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை துரிதப்படுத்த தயார் என்ற சமிக்ஞைகளை சவுதி அரேபியா வெளியிட்டுவந்தது என  நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நெட்டன்யாகுவிற்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் இடையிலான உறவில் கசப்புணர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் போரின் போது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அவநம்பிக்கை அதிகரித்தது. இராணுவ அதிகாரிகளை தான் சந்திக்கும் போது அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகு ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம்

Gvr5sjfXQAAcJsK.png

நியுயோர்க் டைம்ஸ் செய்திகள்  இஸ்ரேல், அதன் துணிச்சலான மக்கள் மற்றும் வீரர்கள் மற்றும் அதன் பிரதமரை இழிவுபடுத்துகிறது" என்றுஎன தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/220039

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்.... அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும். அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months ago
திருப்புவனம் கோவில் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு ஆதாரமா? புதிய வீடியோவால் சர்ச்சை கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அஜித்குமார் உயிரிழந்த பிறகு, அவரது தம்பியை அதிகாலையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜூன் 28-ம் தேதி அதிகாலை 5.38 மணி அளவில் பதிவானதாக கூறப்படும் அந்த சிசிடிவி காட்சியில், வெள்ளை நிற போலீஸ் வேன் ஒன்று வந்து நிற்கிறது. அந்த வாகனத்தில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஏறும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், லுங்கி அணிந்தபடி நவீன் குமாரை அழைத்துச் சென்ற நபர் சீருடை அணியாமல் வந்த காவலர் என்று கூறப்படுகிறது. நகை திருட்டுப் புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி நீதிபதியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனை கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியிருந்தது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், ஜூலை 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வந்தார். நீதிபதி விசாரணை: யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார். முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது? படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்." 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா? படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்." "எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார். இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார். சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா? பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது." "முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்." "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார் நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி பட மூலாதாரம்,NIKITHA படக்குறிப்பு, நிகிதா திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென் அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்". தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது." "அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார். "காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?" ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார். உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார். "2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months ago
அங்க அப்படி எந்த பிரச்சினையும் இல்லை அண்ணை கொஞ்ச மதவாதிகள் இருக்கானுகள் அதாவது முஸ்லிம்கள் முஸ்லீமாக வாழ் வேண்டும் வெள்ளைகள் அரைக்காற்சட்டை மேலே ஒரு துண்டு அதைக் கண்டால் அவனுகளுக்கு உள்ள குளிரும் வெளிய கடுப்பாகும் அவ்வளவுதான் மற்றும் படி வியாபாரம் அமோகம் ஒரு வெளிய விற்கிற ரீ சேட் 3000 வெள்ளைகளுக்காக கடையில் கடை வாங்க முடியாது வெள்ளைகாரனுக்கு ஏற்ற விலையில் வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள் மூவினம் அங்கு கலப்பு என்பதால் கப் சிப் அவர்கள் அது போக அங்கு புலனாய்வு துறை அதிககம் யாரும் கம்பி கட்ட நினைத்தால் கம்பி எண்ண வரும் தற்போது அதிக சுற்றுலா பயணிகள் அறுகம் குடா நிரம்பி வளிகிறது

ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!

2 months ago
புலம் பெயர் தேசத்தில் இருந்து செல்பவர்கள்.... ஒரு பக்கம் வெறியில் சண்டித்தனம் செய்வது, அல்லது சிறுமிகளுடன் பாலியல் சேட்டை விட்டு விலாசம் காட்டுவது. இதுகள்... இப்படியான சேட்டைகளை தாம் இருக்கும் நாட்டில் விட்டால், சட்டம் பயங்கரமாக தண்டித்து ஆளை ஒரு வழி பண்ணிவிடும் என்று தெரிந்து... தாம் வசிக்கும் நாட்டில் அமுசடக்கமாக இருந்து விட்டு, ஊருக்குப் போனவுடன் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தும் கபோதிகளை... ஊரில் வைத்தே சமாதி கட்டி விடுவதுதான் சிறந்த மருந்து.

சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் — கருணாகரன் —

2 months ago
சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் July 12, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்பாட்டுத்தன்மை போன்ற சூழமைவுகளோ தென்படவில்லை. குறைந்தபட்சம், தமிழர்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய ஒரு ஆளுமையைக் கூடத் தமிழர்கள் கண்டடைவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை. நேர்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட தலைமைத்துவத்துக்குரியவர்கள்இருந்தாலும் அவர்களை ஏற்று முன்கொண்டு செல்வதற்குத் தமிழ்ச் சூழல் தயாராக இல்லை. அதற்காக சம்பந்தன் தனிப்பெருந்தலைவராக இருந்த 2009 – 2024 வரையான 15 ஆண்டுகளில் ஏதோ பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்று இங்கே கூறவரவில்லை. அந்தப் பதினைந்து ஆண்டுகளிலும் சம்பந்தன் மீது கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் அவர் பொறுப்புச் சொல்ல வேண்டியவராகவும் இருந்தார். ஆனால், அவர் எதற்கும் பொறுப்புச் சொன்னதுமில்லை. பொறுப்பை ஏற்றதுமில்லை. தன்னுடைய முதற் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களைப் போலவே அவரும் எந்தப் பொறுப்பையும் ஏற்காத மிக மோசமான தலைவராகவே மறைந்தார். அதனால்தான் அவருடைய மரணத்தை மக்கள் தங்களுடைய இழப்பாகக் கருத மறுத்தனர். அவர் மறைந்த பின்னான கடந்த ஓராண்டிலும் சம்பந்தனை மக்களும் ஊடகங்களும் அரசியற்கட்சிகளும் நினைவுகூரவேண்டும் என்று கருதவில்லை. தமிழரசுக் கட்சி உட்பட. இதில் தமிழரசுக் கட்சி பெருந்தவறை இழைத்துள்ளது. 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த பிறகு, இயங்கு நிலையையும் மக்களிடம் புழங்கு நிலையையும் இழந்திருந்த தமிழரசுக் கட்சியை மீள்நிலைப்படுத்தியவர் சம்பந்தன். அதற்காக அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த ஏனையோருடன் ஒரு நிழற்போரைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஜனநாயக விரோதப்போக்கைக் கையில் எடுத்து, சர்வாதிகாரத் தனத்தோடு செயற்பட்டார். இதனால் ஏற்பட்ட கண்டனங்கள் அனைத்தையும் ஏற்றவர் சம்பந்தன். இப்படித் தன்னைப் பலியிட்டு (அதனால் அவர் பெற்றவையும் அதிகம்) தமிழரசுக் கட்சியைத் தலைமைக்கும் முதன்மை அரங்குக்கும் கொண்டு வந்தவர். சம்பந்தனை தமிழரசுக் கட்சி எளிதில் மறந்து விட்டது. இவ்வளவுக்கும் அதற்கு இப்பொழுதும் 10 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்துமென்ன, தங்களுடைய நேற்றைய தலைவரை நினைவு கூர முடியாதவர்களாகவே ஆகி விட்டனர். ஆனால், இந்தப் பத்தியாளர் உட்பட ஒரு சிலர் (யதீந்திரா, வி.தனபாலசிங்கம்) மட்டுமே சம்பந்தனைக் குறித்தும் அவருக்குப் பிந்திய அரசியலைக் குறித்தும் சிந்திப்பவர்களாக உள்ளனர். இவ்வளவுக்கும் இவர்கள் அப்போதும் சம்பந்தனுடைய தலைமையையும் அரசியலையும் விமர்சன பூர்வமாக அணுகி வந்தவர்கள். அவர்களால்தான் இப்போதும் சம்பந்தனையும் சம்பந்தனுக்குப் பின்னான சூழலையும் அப்படி நிதானமாகப் பார்க்க முடிகிறது. சம்பந்தன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்த்தேசியவாத அரசியலுக்குள்ளும் அதற்கு வெளியிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் கண்டனங்களும் இப்போது சில கேள்விகளை எழுப்புகின்றன. சில விடயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. 1. “சம்பந்தன், ஜனநாயக விரோதமாகத் தன்னுடைய தலைமைத்துவத்தை நடத்துகிறார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்கும் தமிழரசுக் கட்சி ஏகபோகமாக நடப்பதற்கும் சம்பந்தனுடைய ஜனநாயக விரோதப்போக்குத்தான் காரணம்” என்று கூறப்பட்டது. அப்படியென்றால், சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு, கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்துவதற்கான ஜனநாயக அடிப்படையிலான முயற்சிகள் நடந்திருக்கவேண்டுமே! அப்படி நடக்கவேயில்லை. பதிலாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணி எனப் புதிய அணி ஒன்றே உருவாகியது. அதுவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி – தமிழ்த்தேசியப் பேரவை என்ற அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸோடு போய்க் கரைந்துள்ளது. மறுவளமாகத் தமிழரசுக்கட்சியோ, சம்பந்தனுக்குப் பிறகுதான் தனித்துப்போய் மேலும் சிதையத் தொடங்கியிருக்கிறது. இங்கே சம்பந்தனுக்குப் பிந்திய நிலை மேலும் மோசமடைந்துள்ளதே தவிர, நிலைபெறவில்லை. 2. சம்மந்தன், தன்னுடைய தலைமைத்துவக் காலத்தில் மென்னிலையிலான தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுத்திருந்தார். அதுதீவிர நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ்த்தேசியவாதிகளை எரிச்சலடைய வைத்தது. பதிலாக வெளியுலகமும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் யதார்த்தவாதிகளும் சம்பந்தனுடைய அந்த நிலைப்பாட்டை வரவேற்றனர். தன் மீதான தன்னுடைய சமூகத்தின் கண்டனத்தை ஏற்றுக்கொண்டே சம்பந்தன் மென்னிலைத் தேசியவாதத்தை முன்னிறுத்தித் தீர்வைக் கோரினார். அதனால் நியாயமான – யதார்த்தமான ஒரு தலைவராக வெளியுலகத்தினால் பார்க்கப்பட்டார். அதற்கேற்ப சம்பந்தனால் தீர்வைப் பெறமுடியாத போதும் அவருடைய நியாயமான கோரிக்கைகளும் நிலைப்பாடும் மதிக்கப்பட்டன. இப்பொழுது மென்னிலைத் தமிழ்த்தேசியவாதம் என்பதே இல்லை என்றாகி விட்டது. பதிலாகத் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதமே எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இது தீர்வுக்கான சாத்தியங்களைக் குறைத்திருக்கிறது. இதற்கான மாற்று வழியாக எதை – யாரை முன்னிறுத்துவது? 3. சம்பந்தனுடைய மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டியது சிங்களத்தரப்பும் வெளியுலகமுமாகும். அதை அவை செய்யத்தவறின. சம்பந்தனுடைய காலத்தில் அவருடைய நிலைப்பாட்டை ஏற்றுத் தீர்வைக் கண்டிருந்தால் இன்றைய தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதம் மீள் எழுச்சியடைந்திருக்காது. இப்போதுள்ள நிலையில் சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றோர் கூட தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆக, சம்பந்தனைப் பலப்படுத்தத்தவறியதன் விளைவை சிங்களத் தரப்பும் வெளியுலகமும் சந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாகச் சிங்களத் தரப்பு, மிகவாய்ப்பான சூழலை இழந்து மிக நெருக்கடியான சூழலுக்குள் புகுந்துள்ளது. 4. சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலம் போருக்குப் பிந்தியது. 2009 – 2024 வரையான 15 ஆண்டுகள். இந்தக்காலத்தில் அவர் போரினால் மிகச் சிதைவடைந்திருந்த தமிழ்ச்சமூகத்தையும் தமிழ்ப்பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்திப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குத்தலைமை வகித்திருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், அவர் அதைச்செய்யவே இல்லை. மட்டுமல்ல, பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று சந்திக்கவுமில்லை. வயது முதிர்வு காரணமாக அவரால் களத்துக்கு – மக்களிடம் – செல்லமுடியவில்லை என்று யாரும் சொல்லக் கூடும். அவர் தலைமை வகித்த கூட்டமைப்பையோ, அவர் தலைமையிலான மாகாணசபை நிர்வாகத்தையோ, தமிழரசுக்கட்சியையோ கூட அதற்காக அவர் வழிப்படுத்தவில்லை. பதிலாகத் தன்னுடைய தலைமையைச் சர்வாதிகாரத் தன்மையோடு வைத்துக்கொண்டு, எத்தகைய கூச்சமுமின்றித் தனக்கான வசதிகளைக் கொழும்பில் பெருக்கினார். இதுபாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகச்செயலாகும். அதாவது இவர்கள் தலைமையேற்ற அரசியலினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிர்க்கத்தியாக இருக்கும்போது, அந்த மக்களின் பிரதிநிதி – தலைவர் – வசதி, வாய்ப்புகளைப் பெருக்கி வாழ்ந்தார் என்பது நேரெதிரான செயற்பாடாகும். போதாக்குறைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தனைச் சந்தித்தபோதெல்லாம் அவர்களை எடுத்தெறிந்தே நடந்து கொண்டார். கூடவே, போராளிகளையும்அவமதித்தார். 5. “சம்பந்தன் கிழக்கைச் சேர்ந்தவர். கிழக்கின் யதார்த்தத்தையும் உள்ளக்கிடக்கையையும் புரியக்கூடியவர். ஆனால், வடக்குச்சிந்தனையையே (தமிழ்த்தேசியவாதத்தையே) பிரதிபலித்தார். அதற்குத்தலைமை தாங்கினார். அதற்கே விசுவாசமாக இருந்தார்” என்ற குற்றச்சாட்டு, கிழக்கில் உள்ள கணிசமான தரப்பினரிடத்தில் உண்டு. கிழக்கையும் வடக்கையும் சமனிலைப்படுத்தக் கூடிய – கிழக்கின் நியாயங்களையும் நிலைப்பாட்டையும் யதார்த்த நிலையையும் வடக்கு புரிந்து கொண்டு செயற்படவேண்டும் என்ற கடப்பாட்டைஏற்கக் கூடிய நிலையைச் சம்பந்தன் உருவாக்கினாரா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். இது கிழக்கிற்கு சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் தவறாக அமைகிறது. இதைச்சம்பந்தனுக்குப் பின்னர் உள்ள – அல்லது வரக்கூடிய தலைவர்கள் புரிந்துகொண்டு செயற்படுவார்களா? 6. போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, சாத்தியப்படுத்தக் கூடியதாக இருந்த 13 ஆவது திருத்தத்தையும் அதனோடிணைந்த மாகாணசபையையும் கூட நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் சம்பந்தன் ஈடுபடவில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் அவருக்குத் தயக்கங்களிருந்தன. அந்தத் தயக்கங்களுக்குக் காரணம், ஒரு ‘கிழக்கான்’ (திருகோணமலையான்), தமிழர்களின் கனவை, அந்தக் கனவுக்காக அளிக்கப்பட்ட உச்ச தியாகங்களை எல்லாம் சில்லறையாக்கி விட்டான்’என்ற பழி தன்னைச் சேரும் என்று அஞ்சினார். அதனால்தான் அவர் கிடைக்காத தீர்வைப் பற்றி, அடைய முடியாத இலக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சம்பந்தன் தமிழர்களுக்குத் துரோகமிழைத்ததாக வரலாறு தன்னைப் பழிக்கக் கூடாது என்று முட்டாள்தனமாக நம்பினார். மக்களுக்கு வெற்றியை அளிக்கும்போதே ஒரு தலைவராக வரலாற்றில் பரிமளிக்க முடியும் என்பதை உணரத் தவறினார். உணர்ந்தாலும் துணியத் தவறினார். இந்தக் குறைபாடு ஏனைய தமிழ்த்தேசியவாதிகளிடத்திலும் உண்டு. இவ்வளவுக்கும் யதார்த்தத்தையும் உண்மையான நிலவரத்தையும் அறிந்திருந்தார் சம்பந்தன். ஆனாலும் அதை ஏற்று, தன்னுடைய தலைமைத்துவத்தில் சரியான– பொருத்தமான அரசியலை முன்னெடுக்க அவர் துணியவில்லை. அப்படித் துணிந்திருந்தால் அவர் வெற்றிகரமான ஒரு தலைவராக வரலாற்றில் நிலைபெற்றிருக்கக் கூடும். சம்பந்தனைப்போலவே யதார்த்தம் என்னவென்றும் உண்மை என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை மறுதலித்து, கற்பனையில் குதிரையை ஓட்டவே விரும்புகிறார்கள். சம்பந்தனுக்கிருந்த தயக்கங்களும் அச்சமும் துணிவின்மையுமே ஏனையோரிடத்திலும் உள்ளது. அதிகம் ஏன், சம்பந்தன் இருந்த காலத்தில் சம்பந்தனுடைய நிலைப்பாட்டுடன் ஒத்ததாக – மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேசிய சுமந்திரன் கூட இப்பொழுது தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேச விளைகிறார். முன்சொன்னதைப்போல சந்திரகுமார் போன்றவர்கள் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் சாயத் தொடங்கி விட்டனர். யதார்த்தம், நடைமுறைச் சாத்தியம் என்பதையெல்லாம் விட்டு, தமிழ் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. மக்களுடைய தேவைகளுக்கான கேள்வி, அவர்களுடைய கொள்திறன் போன்றவற்றுக்கு அப்பாலான திசையில் தமிழ் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே போருக்குப் பிந்திய தமிழரின் அரசியல் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியல் (Post-war Tamil politics or Post-war Tamil nationalist politics) என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய நல்விளைவுகள் எதையும் உருவாக்க முடியாத பலவீனத்தை– வீழ்ச்சியையே கொண்டுள்ளது. ஆனால், எப்போதும் சில வாய்ப்புகள் இருந்தன. அவற்றின் தன்மையும் அளவு வேறுபாடுகளும் மாறுபடலாமே தவிர, சாதகமான நிலைமைகளும் சாத்தியப்பாடுகளும் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. இங்கே அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால், தனிநாடோ(தமிழீழமோ) பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஸ்டியோ இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியமுமில்லை என்பதைப் பற்றி பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அதைத் துணிந்து சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை. அப்படிச்சொன்னால் தாம் வரலாற்றுத் துரோகியாகி விடுவோம் என்று அச்சமடைகிறார்கள். இதனால் பொய்யாகப் போலியாக நடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். இதை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம். அப்படியாராவது மறுத்தால், தாம்வலியுறுத்துகின்ற – நம்புகின்ற அந்தத் தீர்வு வடிவத்தை எட்டுவதற்கான வழிமுறை – பொறிமுறை – கால நிர்ணயம் அல்லது கால எல்லை என்னவென்று அவர்கள் விளக்கவேண்டும். இங்கே அடிப்படையான தவறு, தாம் நம்பும் உண்மையை மக்களுக்கு முன்வைக்கக் கூடியதிறனும் துணிவும் இல்லாமையே ஆகும். அதற்கிணையானது, சர்வதேச சமூகத்தையும்(இந்தியா – சீனா உட்பட) சிங்கள, முஸ்லிம் சமூகங்களையும் அரசியலையும் கையாள முடியாத – கையாளும் திறனற்ற – அரசியல் தலைமையாகும். இந்தப் பலவீனங்கள்தான் தமிழ் மக்களுடைய அரசியல் தோல்வியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது. எனவே சம்பந்தனுடைய காலம், அதற்குப் பின்னான காலம் என்ற ஒன்றைப் பகுத்துப் பார்க்கமுடியாது. போருக்குப் பிந்திய தமிழ்ச் சூழல் என்பது போரினால் ஏற்பட்ட வீழ்ச்சியை விட மேலும் பலவீனமானது, தோல்விகரமானதாகவே உள்ளது. உலகெங்கும் போருக்குப் பிந்தியசூழலும் அரசியலும் மாற்றத்தைக்கண்டதாக – கொண்டதாகவே – இருந்துள்ளது. படிப்பினைகளும் மீள்நிலையும் அதனுடைய ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால், இலங்கைத்தமிழருக்கோ எதையும் கற்றுக்கொள்ளாத – கற்றுக் கொள்ளமுடியாத, எதையும் பெற இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது. இதுதான் தமிழ்ப் புத்திஜீவித்தனமும் அதிதீவிரவாத மோகத்தின் கதியுமாகும். https://arangamnews.com/?p=12154

சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் — கருணாகரன் —

2 months ago

சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல்

July 12, 2025

சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்..                       தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல்

— கருணாகரன் —

தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. 

மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்பாட்டுத்தன்மை போன்ற சூழமைவுகளோ தென்படவில்லை. குறைந்தபட்சம், தமிழர்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய ஒரு ஆளுமையைக் கூடத் தமிழர்கள் கண்டடைவார்கள் என்பதற்கும் உத்தரவாதமில்லை. நேர்மையும் சிந்தனைத் திறனும் கொண்ட தலைமைத்துவத்துக்குரியவர்கள்இருந்தாலும் அவர்களை ஏற்று முன்கொண்டு செல்வதற்குத் தமிழ்ச் சூழல் தயாராக இல்லை.  

அதற்காக சம்பந்தன் தனிப்பெருந்தலைவராக இருந்த 2009 – 2024 வரையான 15 ஆண்டுகளில் ஏதோ பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்று இங்கே கூறவரவில்லை. அந்தப் பதினைந்து ஆண்டுகளிலும் சம்பந்தன் மீது கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. அதற்கெல்லாம் அவர் பொறுப்புச் சொல்ல வேண்டியவராகவும் இருந்தார். ஆனால், அவர் எதற்கும் பொறுப்புச் சொன்னதுமில்லை. பொறுப்பை ஏற்றதுமில்லை. தன்னுடைய முதற் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களைப் போலவே அவரும் எந்தப் பொறுப்பையும் ஏற்காத மிக மோசமான தலைவராகவே மறைந்தார். 

அதனால்தான் அவருடைய மரணத்தை மக்கள் தங்களுடைய இழப்பாகக் கருத மறுத்தனர். அவர் மறைந்த பின்னான கடந்த ஓராண்டிலும் சம்பந்தனை மக்களும் ஊடகங்களும் அரசியற்கட்சிகளும் நினைவுகூரவேண்டும் என்று கருதவில்லை. தமிழரசுக் கட்சி உட்பட. இதில் தமிழரசுக் கட்சி பெருந்தவறை இழைத்துள்ளது. 

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்த பிறகு,  இயங்கு நிலையையும் மக்களிடம் புழங்கு நிலையையும் இழந்திருந்த தமிழரசுக் கட்சியை மீள்நிலைப்படுத்தியவர் சம்பந்தன். அதற்காக அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த  ஏனையோருடன் ஒரு நிழற்போரைச் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஜனநாயக விரோதப்போக்கைக் கையில் எடுத்து, சர்வாதிகாரத் தனத்தோடு செயற்பட்டார். இதனால் ஏற்பட்ட கண்டனங்கள் அனைத்தையும் ஏற்றவர் சம்பந்தன். இப்படித் தன்னைப் பலியிட்டு (அதனால் அவர் பெற்றவையும் அதிகம்)  தமிழரசுக் கட்சியைத் தலைமைக்கும் முதன்மை அரங்குக்கும் கொண்டு வந்தவர்.  சம்பந்தனை தமிழரசுக் கட்சி எளிதில் மறந்து விட்டது. இவ்வளவுக்கும் அதற்கு இப்பொழுதும் 10 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்துமென்ன, தங்களுடைய நேற்றைய தலைவரை நினைவு கூர முடியாதவர்களாகவே ஆகி விட்டனர்.  

ஆனால், இந்தப் பத்தியாளர் உட்பட ஒரு சிலர் (யதீந்திரா, வி.தனபாலசிங்கம்) மட்டுமே சம்பந்தனைக் குறித்தும் அவருக்குப் பிந்திய அரசியலைக் குறித்தும் சிந்திப்பவர்களாக உள்ளனர். இவ்வளவுக்கும் இவர்கள் அப்போதும் சம்பந்தனுடைய தலைமையையும் அரசியலையும் விமர்சன பூர்வமாக அணுகி  வந்தவர்கள். அவர்களால்தான் இப்போதும் சம்பந்தனையும் சம்பந்தனுக்குப் பின்னான சூழலையும் அப்படி நிதானமாகப் பார்க்க முடிகிறது. 

சம்பந்தன் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்த்தேசியவாத அரசியலுக்குள்ளும் அதற்கு வெளியிலும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் கண்டனங்களும் இப்போது சில கேள்விகளை எழுப்புகின்றன. சில விடயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

1.   “சம்பந்தன், ஜனநாயக விரோதமாகத் தன்னுடைய தலைமைத்துவத்தை நடத்துகிறார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்கும் தமிழரசுக் கட்சி ஏகபோகமாக நடப்பதற்கும் சம்பந்தனுடைய ஜனநாயக விரோதப்போக்குத்தான் காரணம்” என்று கூறப்பட்டது. அப்படியென்றால், சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு, கூட்டமைப்பை மீள் நிலைப்படுத்துவதற்கான ஜனநாயக அடிப்படையிலான முயற்சிகள் நடந்திருக்கவேண்டுமே! அப்படி நடக்கவேயில்லை. பதிலாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணி எனப் புதிய அணி ஒன்றே உருவாகியது. அதுவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி – தமிழ்த்தேசியப் பேரவை என்ற அகில இலங்கைத்தமிழ்க் காங்கிரஸோடு போய்க் கரைந்துள்ளது. மறுவளமாகத் தமிழரசுக்கட்சியோ, சம்பந்தனுக்குப் பிறகுதான் தனித்துப்போய் மேலும் சிதையத் தொடங்கியிருக்கிறது. இங்கே சம்பந்தனுக்குப் பிந்திய நிலை மேலும் மோசமடைந்துள்ளதே தவிர, நிலைபெறவில்லை. 

2.   சம்மந்தன், தன்னுடைய தலைமைத்துவக் காலத்தில் மென்னிலையிலான தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுத்திருந்தார். அதுதீவிர நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ்த்தேசியவாதிகளை எரிச்சலடைய வைத்தது. பதிலாக வெளியுலகமும் சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் யதார்த்தவாதிகளும் சம்பந்தனுடைய அந்த நிலைப்பாட்டை வரவேற்றனர். தன் மீதான தன்னுடைய சமூகத்தின் கண்டனத்தை ஏற்றுக்கொண்டே சம்பந்தன் மென்னிலைத் தேசியவாதத்தை முன்னிறுத்தித் தீர்வைக் கோரினார். அதனால் நியாயமான – யதார்த்தமான ஒரு தலைவராக வெளியுலகத்தினால் பார்க்கப்பட்டார். அதற்கேற்ப சம்பந்தனால் தீர்வைப் பெறமுடியாத போதும் அவருடைய நியாயமான கோரிக்கைகளும் நிலைப்பாடும் மதிக்கப்பட்டன. இப்பொழுது மென்னிலைத் தமிழ்த்தேசியவாதம் என்பதே இல்லை என்றாகி விட்டது. பதிலாகத் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதமே எழுச்சியடையத் தொடங்கியுள்ளது. இது தீர்வுக்கான சாத்தியங்களைக் குறைத்திருக்கிறது. இதற்கான மாற்று வழியாக எதை – யாரை முன்னிறுத்துவது?

3.   சம்பந்தனுடைய மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டியது சிங்களத்தரப்பும் வெளியுலகமுமாகும். அதை அவை செய்யத்தவறின. சம்பந்தனுடைய காலத்தில் அவருடைய நிலைப்பாட்டை ஏற்றுத் தீர்வைக் கண்டிருந்தால் இன்றைய தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதம் மீள் எழுச்சியடைந்திருக்காது. இப்போதுள்ள நிலையில் சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றோர் கூட தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆக, சம்பந்தனைப் பலப்படுத்தத்தவறியதன் விளைவை சிங்களத் தரப்பும் வெளியுலகமும் சந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாகச் சிங்களத் தரப்பு, மிகவாய்ப்பான சூழலை இழந்து மிக நெருக்கடியான சூழலுக்குள் புகுந்துள்ளது. 

4.   சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலம் போருக்குப் பிந்தியது.  2009 – 2024 வரையான 15 ஆண்டுகள். இந்தக்காலத்தில் அவர் போரினால் மிகச் சிதைவடைந்திருந்த தமிழ்ச்சமூகத்தையும் தமிழ்ப்பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்திப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குத்தலைமை வகித்திருக்கவேண்டும். அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், அவர் அதைச்செய்யவே இல்லை. மட்டுமல்ல, பாதிக்கப்பட்டோரைத் தேடிச்சென்று சந்திக்கவுமில்லை. வயது முதிர்வு காரணமாக அவரால் களத்துக்கு – மக்களிடம் – செல்லமுடியவில்லை என்று யாரும் சொல்லக் கூடும். அவர் தலைமை வகித்த கூட்டமைப்பையோ, அவர் தலைமையிலான மாகாணசபை நிர்வாகத்தையோ, தமிழரசுக்கட்சியையோ கூட அதற்காக அவர் வழிப்படுத்தவில்லை. பதிலாகத் தன்னுடைய தலைமையைச் சர்வாதிகாரத் தன்மையோடு வைத்துக்கொண்டு, எத்தகைய கூச்சமுமின்றித் தனக்கான வசதிகளைக் கொழும்பில் பெருக்கினார். இதுபாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகச்செயலாகும். அதாவது இவர்கள் தலைமையேற்ற அரசியலினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிர்க்கத்தியாக இருக்கும்போது, அந்த மக்களின் பிரதிநிதி – தலைவர் – வசதி, வாய்ப்புகளைப் பெருக்கி வாழ்ந்தார் என்பது நேரெதிரான செயற்பாடாகும். போதாக்குறைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தனைச் சந்தித்தபோதெல்லாம் அவர்களை எடுத்தெறிந்தே நடந்து கொண்டார். கூடவே, போராளிகளையும்அவமதித்தார். 

5.   “சம்பந்தன் கிழக்கைச் சேர்ந்தவர். கிழக்கின் யதார்த்தத்தையும் உள்ளக்கிடக்கையையும் புரியக்கூடியவர். ஆனால், வடக்குச்சிந்தனையையே (தமிழ்த்தேசியவாதத்தையே) பிரதிபலித்தார். அதற்குத்தலைமை தாங்கினார். அதற்கே விசுவாசமாக இருந்தார்” என்ற குற்றச்சாட்டு, கிழக்கில் உள்ள கணிசமான தரப்பினரிடத்தில் உண்டு. கிழக்கையும் வடக்கையும் சமனிலைப்படுத்தக் கூடிய – கிழக்கின் நியாயங்களையும் நிலைப்பாட்டையும் யதார்த்த நிலையையும் வடக்கு புரிந்து கொண்டு  செயற்படவேண்டும் என்ற கடப்பாட்டைஏற்கக் கூடிய நிலையைச் சம்பந்தன் உருவாக்கினாரா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். இது கிழக்கிற்கு சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் தவறாக அமைகிறது. இதைச்சம்பந்தனுக்குப் பின்னர் உள்ள – அல்லது வரக்கூடிய தலைவர்கள் புரிந்துகொண்டு செயற்படுவார்களா?

6.   போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவது மட்டுமல்ல, சாத்தியப்படுத்தக் கூடியதாக இருந்த 13 ஆவது திருத்தத்தையும் அதனோடிணைந்த மாகாணசபையையும் கூட நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் சம்பந்தன் ஈடுபடவில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் அவருக்குத் தயக்கங்களிருந்தன. அந்தத் தயக்கங்களுக்குக் காரணம், ஒரு ‘கிழக்கான்’ (திருகோணமலையான்), தமிழர்களின் கனவை, அந்தக் கனவுக்காக அளிக்கப்பட்ட உச்ச தியாகங்களை எல்லாம் சில்லறையாக்கி விட்டான்’என்ற பழி தன்னைச் சேரும் என்று அஞ்சினார். அதனால்தான் அவர் கிடைக்காத தீர்வைப் பற்றி, அடைய முடியாத இலக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். சம்பந்தன் தமிழர்களுக்குத் துரோகமிழைத்ததாக வரலாறு தன்னைப் பழிக்கக் கூடாது என்று முட்டாள்தனமாக நம்பினார். மக்களுக்கு வெற்றியை அளிக்கும்போதே ஒரு தலைவராக வரலாற்றில் பரிமளிக்க முடியும் என்பதை உணரத் தவறினார். உணர்ந்தாலும் துணியத் தவறினார். இந்தக் குறைபாடு ஏனைய தமிழ்த்தேசியவாதிகளிடத்திலும் உண்டு. இவ்வளவுக்கும் யதார்த்தத்தையும் உண்மையான நிலவரத்தையும் அறிந்திருந்தார் சம்பந்தன். ஆனாலும் அதை ஏற்று, தன்னுடைய தலைமைத்துவத்தில் சரியான– பொருத்தமான  அரசியலை முன்னெடுக்க அவர் துணியவில்லை. அப்படித் துணிந்திருந்தால் அவர் வெற்றிகரமான ஒரு தலைவராக வரலாற்றில் நிலைபெற்றிருக்கக் கூடும். 

சம்பந்தனைப்போலவே யதார்த்தம் என்னவென்றும் உண்மை என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை மறுதலித்து, கற்பனையில் குதிரையை ஓட்டவே விரும்புகிறார்கள். சம்பந்தனுக்கிருந்த தயக்கங்களும் அச்சமும் துணிவின்மையுமே ஏனையோரிடத்திலும் உள்ளது. அதிகம் ஏன், சம்பந்தன் இருந்த காலத்தில் சம்பந்தனுடைய நிலைப்பாட்டுடன் ஒத்ததாக – மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேசிய சுமந்திரன் கூட இப்பொழுது தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேச விளைகிறார். முன்சொன்னதைப்போல சந்திரகுமார் போன்றவர்கள் தீவிரநிலைத் தமிழ்த்தேசியவாதத்தின் பக்கமாகச் சாயத் தொடங்கி விட்டனர். யதார்த்தம், நடைமுறைச் சாத்தியம் என்பதையெல்லாம் விட்டு, தமிழ் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. மக்களுடைய தேவைகளுக்கான கேள்வி, அவர்களுடைய கொள்திறன் போன்றவற்றுக்கு அப்பாலான திசையில் தமிழ் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. 

ஆகவே போருக்குப் பிந்திய தமிழரின் அரசியல் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியல் (Post-war Tamil politics or Post-war Tamil nationalist politics) என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய நல்விளைவுகள் எதையும் உருவாக்க முடியாத பலவீனத்தை– வீழ்ச்சியையே கொண்டுள்ளது. 

ஆனால், எப்போதும் சில வாய்ப்புகள் இருந்தன. அவற்றின் தன்மையும் அளவு வேறுபாடுகளும் மாறுபடலாமே தவிர, சாதகமான நிலைமைகளும் சாத்தியப்பாடுகளும் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. 

இங்கே அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால், தனிநாடோ(தமிழீழமோ) பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஸ்டியோ இப்போதைக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியமுமில்லை என்பதைப் பற்றி பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அதைத் துணிந்து சொல்வதற்கு அவர்கள்  தயாரில்லை. அப்படிச்சொன்னால் தாம் வரலாற்றுத் துரோகியாகி விடுவோம் என்று அச்சமடைகிறார்கள். இதனால் பொய்யாகப் போலியாக நடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். இதை யாராவது மறுக்கட்டும் பார்ப்போம். அப்படியாராவது மறுத்தால், தாம்வலியுறுத்துகின்ற – நம்புகின்ற அந்தத் தீர்வு வடிவத்தை எட்டுவதற்கான வழிமுறை – பொறிமுறை – கால நிர்ணயம் அல்லது கால எல்லை என்னவென்று அவர்கள் விளக்கவேண்டும். 

இங்கே அடிப்படையான தவறு, தாம் நம்பும் உண்மையை மக்களுக்கு முன்வைக்கக் கூடியதிறனும் துணிவும் இல்லாமையே ஆகும். அதற்கிணையானது, சர்வதேச சமூகத்தையும்(இந்தியா – சீனா உட்பட) சிங்கள, முஸ்லிம் சமூகங்களையும் அரசியலையும் கையாள முடியாத – கையாளும் திறனற்ற – அரசியல் தலைமையாகும். இந்தப் பலவீனங்கள்தான் தமிழ் மக்களுடைய அரசியல் தோல்வியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது. 

எனவே சம்பந்தனுடைய காலம், அதற்குப் பின்னான காலம் என்ற ஒன்றைப் பகுத்துப் பார்க்கமுடியாது. போருக்குப் பிந்திய தமிழ்ச் சூழல் என்பது போரினால் ஏற்பட்ட வீழ்ச்சியை விட மேலும் பலவீனமானது, தோல்விகரமானதாகவே உள்ளது.  

உலகெங்கும் போருக்குப் பிந்தியசூழலும் அரசியலும் மாற்றத்தைக்கண்டதாக – கொண்டதாகவே – இருந்துள்ளது. படிப்பினைகளும் மீள்நிலையும் அதனுடைய ஆதாரமாக இருந்திருக்கிறது. ஆனால், இலங்கைத்தமிழருக்கோ எதையும் கற்றுக்கொள்ளாத – கற்றுக் கொள்ளமுடியாத, எதையும் பெற இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது. இதுதான் தமிழ்ப் புத்திஜீவித்தனமும் அதிதீவிரவாத மோகத்தின் கதியுமாகும்.

https://arangamnews.com/?p=12154

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
அதே போல கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் குழு , ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ‌ர்களுக்கு பாராளுமன்றத்தில் எந்த தமிழ் அரசியல் வாதிகளும் வாய் திறப்பதில்லை. வீரமுனை, திராய்க்கேணி ,கொக்கட்டிச்சோலை ,சம்மாந்துறை, போன்ற பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் டயர் எரிப்பு மற்றும் வெட்டப்பட்ட தமிழ்ர்கள்

பிரித்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு

2 months ago
பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு July 13, 2025 மக்கள் சந்திப்பு – பிரித்தானியா கரோ பகுதி தமிழீழத் தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று விற்சர்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன் கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பமாகியது. தொடர்ந்து அகவத்தின் நிர்வாகிகளினால், தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வின் தேவையும், அதன் முக்கியத்துவமும் தெளிவுபடுத்தப்பட்டு, நிகழ்வு ஏற்பாடுகள் பற்றியும் அதில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த உறவுகளின் பல்வேறு கரிசனை மிக்க ஆக்கபூர்வமான கேள்விகளுக்கும் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது. இந்த மக்கள் கலந்துரையாடலில் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர் ,தேசிய செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த மக்கள் சந்திப்பில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து தேசியத்தலைவரின் வீரவணக்க நிகழ்வு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தனர் . ஆகவே, எதிர்வரும் 02/08/2025 அன்று தமிழர்களின் அடையாளமாகவும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும், தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களது வீரவணக்க நிகழ்வு விற்சர்லாந்து நாட்டில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . இந்த வரலாற்று கடமை நிறைந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றுகூடுமாறு, உரிமையோடு அழைக்கிறார்கள் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர். குறிப்பு:- வீரவணக்க நிகழ்வு ஐரோப்பா தழுவிய நிகழ்வாக சுவிற்சர்லாந்திலும், அவுஸ்திரேலியாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் அந் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருப்பதால், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா வாழ் தமிழ்மக்கள் இவ் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் கடமையுணர்வை வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள். https://www.uyirpu.com/?p=19637

பிரித்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு

2 months ago

பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு

July 13, 2025

பிருத்தானியாவில் தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக் நிகழ்வு குறித்த மக்கள் சந்திப்பு

 மக்கள் சந்திப்பு – பிரித்தானியா கரோ பகுதி

தமிழீழத் தேசிய தலைவரின் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாக, சர்வதேச ரீதியாக மக்கள் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 02.08.2025 அன்று விற்சர்லாந்து மண்ணில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவிற்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வுக்கு பலம் சேர்க்கும் வகையில் 13-07-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் லண்டன்  கரோ பகுதியில் பிரித்தானியாவிற்கான மேதகு  வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஏற்பாட்டில்  மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடி ஏற்றல், மற்றும் ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.

தொடர்ந்து அகவத்தின் நிர்வாகிகளினால், தமிழீழத் தேசியத் தலைவருடைய வீரவணக்க நிகழ்வின் தேவையும், அதன் முக்கியத்துவமும் தெளிவுபடுத்தப்பட்டு, நிகழ்வு ஏற்பாடுகள் பற்றியும் அதில் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த உறவுகளின் பல்வேறு கரிசனை மிக்க ஆக்கபூர்வமான கேள்விகளுக்கும் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டது.

இந்த மக்கள் கலந்துரையாடலில் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர் ,தேசிய செயற்பாட்டாளர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த மக்கள் சந்திப்பில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து தேசியத்தலைவரின் வீரவணக்க நிகழ்வு  செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியிருந்தனர் .

ஆகவே,  எதிர்வரும் 02/08/2025 அன்று தமிழர்களின் அடையாளமாகவும்,  தமிழினத்தின் ஒப்பற்ற  தலைவரும், தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிளை பிரபாகரன் அவர்களது வீரவணக்க நிகழ்வு விற்சர்லாந்து நாட்டில் நடைபெற  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இந்த வரலாற்று கடமை நிறைந்த நிகழ்வில் கலந்துகொண்டு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த,  உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ்மக்களையும் ஒன்றுகூடுமாறு,

உரிமையோடு அழைக்கிறார்கள் மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினர்.

குறிப்பு:-

வீரவணக்க நிகழ்வு ஐரோப்பா தழுவிய நிகழ்வாக சுவிற்சர்லாந்திலும், அவுஸ்திரேலியாவில் இரண்டு இடங்களிலும் நடைபெறுகிறது. உலகத் தமிழர்கள் அந் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருப்பதால், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா வாழ் தமிழ்மக்கள் இவ் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் கடமையுணர்வை வெளிப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.

q-7-185x300.jpg

q-3-300x151.jpg

q-5-300x140.jpg

q-2-300x140.jpg

https://www.uyirpu.com/?p=19637

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months ago
ஹொலிடே சீசன் தொடங்கி விட்டது. புலம் பெயர் அங்கிள்மார் அரிப்பு எடுத்து ஊரில் உள்ளவர்களை கெடுக்க ஆரம்பிக்கப் போகிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே... கடுமையான தண்டனையை (ஊர் மக்கள்) கொடுத்து... இப்படியான செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் இது தொற்று வியாதி மாதிரி... மற்ற அங்கிள்மாரும் தொடங்கி விடுவார்கள்.