“விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST]

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியிருந்தது தொடர்பாக விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி எதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கேட்க போனாருனு செய்தி வருது. விருது கேட்க போனவர் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் தி.மு.க இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.கவோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்." எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது.
தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாளாகும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது?
அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்ததற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம்.
நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன். 2007, 2008- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்." எனக் கூறியுள்ளார் சீமான்.
https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticizes-eps-over-meeting-with-amit-shah-says-no-need-to-come-with-covered-face-736601.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
டிஸ்கி
எடப்பாடி ஆட்சியில் தாதுமணல் கொள்ளை, கொலைகள் என பலதில் கள்ள மெளனம் சாதித்து எடப்பாடியை சித்தப்பா என வாஞ்சையாக அழைத்த சீமான்…
இப்போ எடப்பாடி மீது சீறி பாய்கிறார்.
சபரீசன் கொடுத்த 100 கோடி பேசுகிறது.
#பெட்டிக்கு முன், பெட்டிக்கு பின்