Aggregator
அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகி திலீபனைப் பயன்படுத்தும் முன்னணி - இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!
அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகி திலீபனைப் பயன்படுத்தும் முன்னணி - இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!
Published By: Vishnu
18 Sep, 2025 | 02:56 AM
![]()
நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும்.
யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு?
ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார்.
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையம்; தேசிய கட்டமைப்பில் இணைப்பு
கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையம்; தேசிய கட்டமைப்பில் இணைப்பு
Published By: Vishnu
18 Sep, 2025 | 02:52 AM
![]()
மின்சக்தி சுயாதீனத்துவம் நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசியமானது. மின்கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் அதற்குரிய நிலையான மற்றும் சாத்தியமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மெகாவோட் 350 கொள்ளவுடன் கூடிய கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையமானது பிரதமர் தலைமையில் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.
இலங்கைப் பொறியியல் அறிவு, கட்டமைப்பு மற்றும் திறன்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய தேவையின் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் பூர்த்தி செய்வதற்கான இலக்கிற்கு நேரடி பங்களிப்பு செய்யும்.
நாட்டின் ஆற்றல் துறையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான நோக்கில் கட்டியெழுப்பப்பட்ட 350 மெகாவாட் திறன் கொண்ட கெரவலப்பிட்டிய திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மின் நிலையத்தின் இரண்டாம் கட்டம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தில் பிரதானமானதாக விளங்கும் சோபாதனவி மின்நிலையம், தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீத பங்கைக் பூர்த்தி செய்யக் கூடியதாகும்.
இதேபோன்று, இது இலங்கையின் மிகப்பெரியதும் மிகச் செயல்திறனும் கொண்ட கூட்டு சுழற்சி மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.
முதல் கட்டமானது, 220 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி செயல்பாடு. இரண்டாம் கட்டமானது, நீராவி டர்பைன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் 130 மெகாவாட் திறனைச் சேர்த்து. மொத்த திறன் 350 மெகாவாட்டாக காணப்படுகிறது.
இங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சோபாதனவி மின்நிலையம் மூலம் தேசிய மின் அமைப்பிற்கு மேலும் 350 மெகாவாட் இணைக்கப்படுகிறது.
மின்சக்தித் துறையில் இடையறாத முறையில் மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோர் தேவைகள் மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுடன் ஒத்திசைவாக, நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்திய மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை உலகம் தற்போது கடந்து வருகிறது.
அதன்படி, உலகளாவிய போக்குகள் இவ்வாறு அமையும்போது, எங்கள் பிராந்தியத்தின் மின் கட்டணம் அதிகரித்த நாடுகளுக்குள் இலங்கை உயர் இடத்தில் இருப்பதைச் சொல்ல வேண்டும்.
நமது நாட்டில் பல தசாப்தங்களாக செயல்பட்ட தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக இப்போது நாடு பின்தங்கிய பொருளாதார பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்துக்குள் செல்வதற்கான முக்கிய தடையாக தாங்க முடியாத மின்சாரச் செலவினை குறிப்பிடலாம்.இதனை கருத்தில் கொண்டு, நாங்கள் மீள்சுழற்சி ஆற்றலுக்கு எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம்.
இலங்கையை பிராந்தியத்தில் குறைந்த மின் விலை கொண்ட நாடாக மாற்றுவதற்காக, விலைமனு மற்றும் விலை அழைப்புச் செயல்முறைகளை செயற்படுத்தி, பாரம்பரிய எரிபொருள் அடிப்படையிலான மின்சாரத்தை மீள்சுழற்சி ஆற்றல் கொண்ட மூலங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதே எங்கள் இலக்காகும்.அதற்காக எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
களைத்த மனசு களிப்புற ......!
கனடாவிலுள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பின் முற்றுகை மிரட்டல்
கனடாவிலுள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் அமைப்பின் முற்றுகை மிரட்டல்
Published By: Digital Desk 1
18 Sep, 2025 | 08:01 AM
![]()
கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான "Sikhs for Justice" (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
SFJ அமைப்பின் அறிவிப்பின்படி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரைஇ 12 மணி நேரத்திற்கு இந்தியத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள்இ காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து ஒரு உளவு வலையமைப்பை நடத்தி வருவதாக SJF குற்றம் சாட்டியுள்ளது.
2023-ல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு கனடா அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் இந்த மிரட்டல், கனடா மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.