1 month 3 weeks ago
முற்றிலும் உண்மை. நீதிக்கட்சி (Justice party) மூலமாகப் புகைய ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு அண்ணாவின் திமுகவினால் கொழுந்து விட்டு எரிந்தது என்பதே வரலாறு. தமிழக அரசியலில் அதுவே திருப்பு முனையானது. தமிழ்நாட்டில் மக்களின் தன்னெழுச்சியான பெரிய போராட்டம் என்பது சமீபத்தில் நான் அறிந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம். அடுத்து, சில இடதுசாரிகளின் (CPI, CPI(M) அல்ல) வழிகாட்டுதலில் மக்கள் போராடியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு. இவை இப்போது என் நினைவில் வருபவை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திராவிட இயக்கங்களின் முதன்மையை எடுத்துக் காட்ட பராசக்தி படக்குழுவினருக்கு மனமுண்டா என்பது தெரியாது. அப்படிச் செய்திருந்தால் பிரச்சாரப் படம் என்று சொல்லி, படம் தணிக்கைக் குழுவைத் தாண்டாமல் நின்றிருக்க வாய்ப்பு அதிகம். இன்றைக்கு இந்திய ஜனநாயகம் அவ்வளவுதான். ஆனாலும் அண்ணாவை அவர்களால் முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. எது எப்படியாயினும் தெரிந்தோ தெரியாமலோ, பராசக்தி பெரும்பான்மையான இளையோரிடத்தில் மொழியுணர்வைப் பற்ற வைத்துள்ளது வரவேற்கத் தகுந்த ஒன்று.
1 month 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 91 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை தமிழ் காவியமான மணிமேகலையில் துசிதா சொர்க்கத்துக்கு இணையான ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. ‘அறவணர்த் தொழுத காதை’, அத்தியாயம் 12 இல் 71 முதல் 81 வரையிலான வசனங்கள் பார்க்கவும். "சக்கர வாளத்துத் தேவர் எல்லாம் தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில் பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம் உளம்மலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்" [சக்கரவாளக் கோட்டம் என்பது தேவர்கள் அனைவரும் கூடும் இடம். துடிதல் உலகம் என்பது உயிர்கள் வாழும் உலகம். சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உயிர் உலகில் மேம்பட்டு விளங்குபவன் திருவடிகளை வணங்கி வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கதிரவன் தோன்றினான் என்னும்படி, ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டளவில் பேரறிவாளன் (புத்தன்) தோன்றுவான். அதன் பிறகு, பெரிய குளமாகிய ஏரியிலிருந்து சிறு மதகின் வழியே நீர் பாய்வது போல அறநெறி உயிர்களின் உள்ளத்தில் பாயும் - உயிர்த்தலைவன் கூறினான் என்கிறது.] பௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். இதை அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல் / இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. இங்கு காமதாது [Kāmadhātu ] என்ற காம உலகம் ஒன்றையும் காண்கிறோம். இங்கு காமதாதுவின் உலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அப்படியான உணர்ச்சி ஆசைகளின் உலகம் என்று கூறப்படும் ஆறு சொர்க்கங்களில் ஒன்றாக, புத்த மத அண்டவியலில் ஒரு உயர்ந்த தேவலோகமாக துசிதா சொர்க்கம் (Tusita Heaven) இருக்கிறது. எனவே இது காமதாதுவில் உள்ள ஆறு சொர்க்கலோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாவம்சம் போன்ற புத்த மத வரலாற்று நூல்களில், துசிதா சொர்க்கம் மிக முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அடுத்த புத்தராக வரப்போகும் ஒருவர் இந்த சொர்க்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாவம்சத்தில், பல பௌத்த பிரமுகர்கள் மற்றும் போதிசத்துவர்களின் இறப்புக்குப் பிறகு துசிதா சொர்க்கத்தில் பிறந்து, பின்னர் சரியான காலம் வரும் பொழுது அவர்கள் தங்கள் இறுதிப் பிறவிக்காக ஞானோதயம் பெற்றவர்களாக மனித உலகிற்கு இறங்குகிறார்கள் அல்லது மனிதர்களுக்குள் வந்து புத்தராகும் கதைகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தின் ஐந்து பெரிய காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புத்த மதம் சார்ந்தது. இதை எழுதியவர் சிதலைச்சாத்தனார். இந்த காப்பியத்தில் பௌத்த தத்துவங்கள், மறுபிறவி கொள்கைகள், கர்ம வாதம் போன்றவை விளக்கப்படுகின்றன. மணிமேகலையில் நேரடியாக துசிதா சொர்க்கம் பற்றிய குறிப்பிடுதல் இல்லையென்றாலும், பௌத்த மத அண்டவியல் தொடர்பான பல கருதுகளுக்கும் மறுபிறவிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மணிமேகலை கதாபாத்திரம் புத்த மத ஆசாரியர்களின் போதனைகளைப் பெறுவதும், முக்தி (நிர்வாணம்) அடைவதற்கான வழிகளை அறிதலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுருக்கமாக மகாவம்சம் வருங் கால புத்தரின் [Maitreya (Sanskrit) or Metteyya (Pali) is the future Buddha,] பிறப்பை துசிதா சொர்க்கத்துடன் இணைக்கிறது. அதேவேளை மணிமேகலை புத்த மதம் சார்ந்த மறுபிறவிக் கொள்கையை விவரிக்கிறது, ஆனால் துசிதா சொர்க்கத்தை நேரடியாக குறிப்பிடவில்லை. Part: 91 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 It was surprising to see reference to Tusita Heaven in the Tamil epic Mannimeghalai. Refer ‘ARAVANAR WORSHIPPED KAATHAI’, Chapter 12, verses 71 to 75, of the Epic Mannimeghalai. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 92 தொடரும் / Will follow துளி/DROP: 1998 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 91 https://www.facebook.com/groups/978753388866632/posts/33320521544263064/?
1 month 3 weeks ago
அந்த நாட்டின் தலைவர்கள் உயிர் தப்பலாம் ...அல்லது அமெரிக்காவுக்கு விருந்தினராக பாம்பரையாக வாழலாம் ... சதாம் ஹுசைன்,கடாபி,பின்லாடன்,மதுரா ,இடிஅமீன் போன்றவர்களின் நிலை ஏற்படாது .... அசாத் (சிரியா) தனது சொந்த முயற்சினால் தப்பி பிழைத்தார்