Aggregator

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 3 weeks ago
ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி Published By: Vishnu 19 Sep, 2025 | 12:08 AM 2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ரி20 போட்டியின் பி குழுவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 14 ஓட்டங்கள், செடிகுல்லா அடல் 18 ஓட்டங்கள், இப்ராஹிம் ஜத்ரான் 24 ஓட்டங்கள், கரீம் ஜனத் ஒரு ஓட்டம், டார்விஷ் ரசூலி 09 ஓட்டங்கள், அஸ்மதுல்லா உமர்சாய் 06 ஓட்டங்கள், ஆப்கானிஸ்தான் அணிக்காக கெப்டன் ரஷித் கான் 24 ஓட்டங்கள் எடுத்தனர். பந்துவீச்சில், இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய நுவான் துஷாரா 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர, துனித் வெல்லாலகே மற்றும் தாசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 171 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இலங்கை அணி துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்கள், அதே நேரத்தில் போட்டி முழுவதும் மிகவும் வெற்றிகரமான இன்னிங்ஸை விளையாடிய பாதும் நிஸ்ஸங்க இந்த போட்டியில் 06 ரன்கள் மட்டுமே எடுத்தார். குசால் பெரேரா 28 ஓட்டங்கள் எடுத்தார், கமில் மிஷாரா 4 ஓட்டங்கள் எடுத்தார், கெப்டன் சரித் அசலங்கா 17 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணி இடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/225462

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானா‌ர்!

1 month 3 weeks ago
ரோபோ சங்கரின் ஆரம்ப கால பயணத்தை நினைவு கூரும் நண்பர்கள் பட மூலாதாரம், roboshankar 19 செப்டெம்பர் 2025, 09:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரை வரை உயர்ந்தவர் ரோபோ சங்கர். சின்ன கதாபாத்திரங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவருடனான தங்கள் நட்பைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். விஜய் டிவி பிரபலமான மதுரை முத்துவும் ரோபோ சங்கரும் 27 ஆண்டுகள் நண்பர்களாக இருந்துள்ளனர். "மதுரையில் பெருங்குடி என்ற இடத்தில் உள்ள எஸ்.என். கல்லூரியில் வரலாறு படித்தார். அவரது வரலாறு தற்போது சென்னை பெருங்குடியில் முடிந்துவிட்டது. இன்று எனது பிறந்த நாள். 'தம்பி, பிறந்த நாள் வாழ்த்துகள், எங்க இருக்க' என்று அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் நான் அவருக்கு இரங்கல் செய்தி சொல்லும் நிலைமையாகிவிட்டது" என்று பிபிசி தமிழிடம் பேசிய போது தனது வேதனையை வெளிப்படுத்தினார் மதுரை முத்து. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ரோபோ சங்கருடன் பயணித்த மதுரை முத்து, அவரது ஆரம்ப கால நாட்களை நினைவு கூர்ந்தார். "அவர் படித்த கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரியில் நான் படித்தேன். அவர் எனக்கு ஒரு ஆண்டு சீனியர். எங்கள் கல்லூரிக்கு பல முறை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது முதலே அவரை தெரியும். உடலில் சாயம் பூசிக் கொண்டு மேடையில் நடிப்பார். பல மணி நேரங்கள் உடலில் சாயத்துடன் காத்திருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். கல்லூரிகள் மட்டுமல்லாமல் எத்தனையோ கிராமங்களில் மேடை ஏறி மக்களை சிரிக்க வைத்துள்ளார். அவரை போன்ற கடுமையான உழைப்பாளியை பார்க்க முடியாது" என்று ரோபோ சங்கர் குறித்து வியந்து பேசுகிறார். 2005-ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கிய 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் ரோபோ சங்கரும், மதுரை முத்துவும். "அந்த நிகழ்ச்சியின் மூலம் சற்று ஊடக வெளிச்சம் கிடைத்த பிறகு, பல்வேறு இடங்களில் மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்தன. நானும் அவரும் ஒன்றாக அரசுப் பேருந்தில் பயணித்த நாட்கள் உண்டு. சிறிய மேடை, பெரிய மேடை என்ற பாகுபாடே அவரிடம் கிடையாது. 100 பேர் மட்டுமே இருந்தாலும், அவர்களையும் சிரிக்க வைப்பார்." என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார் மதுரை முத்து. பட மூலாதாரம், MaduraiMuthu படக்குறிப்பு, மதுரை முத்து "கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்" மேலும் பேசிய மதுரை முத்து, ரோபோ சங்கர் பன்முகத்திறமைக் கொண்டவர் என்று கூறினார். " உடல் மொழியைக் கொண்டு மக்களை சிரிக்க வைத்தவர் அவர். நல்ல மிமிக்ரி கலைஞராவார். யாருடைய குரலையும் அவர் பேசுவார். உடல் மொழி ஒருவரை மாதிரியும், குரல் மற்றொருவரை மாதிரியும் செய்து, மிமிக்ரியில் புதுமையை கொண்டு வந்தார். கேப்டன் விஜயகாந்த் போன்று பேச அவரால் மட்டுமே முடியும், அவரது உடல் மொழியும் அப்படியே செய்து காட்டுவார். அதனாலேயே நாங்கள் அவரை 'மினி கேப்டன்' என்று விளையாட்டாக அழைப்பதுண்டு." என்கிறார். உடல் குறித்து அதிக கவனம் செலுத்தியவர் 46 வயதில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். "மதுரையில் மதுரா கோட்ஸ்-ல் தினம் ரூ.20 சம்பளத்துக்கு வேலை பார்த்தார். அப்போது அதில் பத்து ரூபாயை ஜிம் மற்றும் தனது உடற்பயிற்சிக்கான செலவுக்காக எடுத்து வைப்பார். மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் மதுரை ஆகிய பட்டங்களை பெற்றவர்" என்கிறார். "அவர் தீவிர கமல் ரசிகர். கமலஹாசனுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை என்பது வருத்தமாக உள்ளது" என்றும் மதுரை முத்து கூறினார். பட மூலாதாரம், roboshankar படக்குறிப்பு, ''கமலஹாசனுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது.'' "மீண்டு வருவார் என்று நினைத்தேன்" தொலைக்காட்சி நட்சத்திரம் தங்கதுரை ரோபோ சங்கருடன் தனது 12 ஆண்டு கால உறவு குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். "அவர் மேடையில் நடித்த போது, அந்த நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன். அபாரமான கலைஞராக இருந்தார். எந்தவொரு குரலாக இருந்தாலும் அவர் பேசிக் காட்டுவார். புதிதாக வரும் குரல்களையும் பழகிக் கொண்டு, தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார். நான் பார்த்து வியந்த நபருடன், சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய கற்றுக் கொடுப்பார், எந்த குரலை எப்படி பேசலாம் என்று ஆலோசனை கொடுப்பார். எந்த வித அலட்டலும் இல்லாத மிகவும் எளிமையான நபர்" என்றார் தங்கதுரை. பட மூலாதாரம், Thangadurai படக்குறிப்பு, ரோபோ சங்கருடன் தொலைக்காட்சி பிரபலம் தங்கதுரை ரோபோ சங்கருடனான பணி அனுபவம் குறித்து பேசுகையில், "சில சமயம் 'பிரியாணியும் சிக்கனும் வாங்கியிருக்கிறேன், வா' என்று கேரவனிலிருந்துக் கொண்டு அழைப்பார். 'பார்ட்னர்' என்ற திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன். எனது கதாபாத்திரத்தின் பெயர் அன்னதானம், அவரது கதாபாத்திரத்தின் பெயர் சமாதானம். இப்படி காம்போவாக நடித்தோம். யூனிட்டில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். ஒரு முறை கேரளாவுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தோம். அதிகாலையில் அனைவருக்கும் முன்பாக எழுந்து, "ரெடி ரெடி, எழுந்திரு வா" என்று உற்சாகமாக நாளை தொடக்கி வைப்பார்." என்றார். கடந்த சில காலம் முன்பு ரோபோ சங்கர் உடல்நலம் குன்றி பின்பு சீராகி வந்தார். "அதே போன்று மீண்டும் வந்துவிடுவார் என்று தான் நினைத்தோம். இன்னும் இரண்டு நாட்களில் பேரனுக்கு காது குத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் இப்படியாகும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை" என்கிறார் தங்கதுரை. பட மூலாதாரம், roboshankar படக்குறிப்பு, நடிகர் தனுஷ் உடன் ரோபோ சங்கர் "என் ஆயுளில் பாதி நீ எடுத்துக் கொள்" " என்னுடைய ஆயுளில் பாதி உனக்கு தருகிறேன் என்று கூறியிருந்தேன்" என்று தனது இரங்கலை தெரிவிக்கும் போது பேசியிருந்தார் நடிகர் தாடி பாலாஜி. ரோபோ சங்கர் தனக்கு செய்த உதவிகளை நினைவு கூர்ந்த தாடி பாலாஜி, "கஷ்டம் என்று யார் சொன்னாலும் உடனே உதவி செய்வார். நான் கஷ்டப்பட்ட போது எனக்கு உதவி செய்துள்ளார். என் உட்பட அந்த குடும்பங்கள் அனைவருக்கும் இது பெரிய இழப்பு. உடல் நலன் குன்றி பின்பு மீண்டும் வந்த போது, இரவும் பகலும் ஓடி ஓடி உழைத்தார். இவ்வளவு கடுமையாக உழைத்தவரை ஏன் கடவுள் இவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொண்டார் என்று புரியவில்லை.''என்றார் ''நேற்று காலையில் தான் அவரது மகளிடம் பேசினேன், அவரைப் பற்றி விசாரித்தேன். தேவைப்பட்டால் நேரில் வருகிறேன் என்று கூறினேன். அப்பா நன்றாக இருப்பதாக அவர் கூறினார். அதற்குள் எல்லாரையும் விட்டுச் செல்வார் என்று நினைக்கவில்லை. எங்கள் வீட்டு ரேஷன் அட்டையில் அவர் பெயர் இருக்காது, ஆனால் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். மிகவும் அன்பு செலுத்தக் கூடியவர். படப்பிடிப்பின் போது உணவு இல்லை என்றால், வீட்டில் இருந்து உணவை சமைத்து மனைவி பிரியங்காவை கொண்டு வர சொல்வார். அவரும் எங்களுக்காக கொண்டு வருவார். அந்த விசயத்தில் அவர் சின்ன விஜயகாந்த் என்றே கூறலாம். " என்று தெரிவித்திருந்தார் தாடி பாலாஜி. ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் வையாபுரி, "சினிமா, மேடை நிகழ்ச்சிகளில் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு அவரை தெரியும். இவ்வளவு ஊடகங்கள் இல்லாத காலத்திலேயே உடலில் அந்த அலுமினியத்தை பூசிக் கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை மட்டுமே கொண்டு மக்கள் மனதில் நின்றவர் " என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g904n25ldo

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 3 weeks ago
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்" எங்களூர் வீரபத்திரர் சனசமூக நலநோம்பு மூலவளநிலையத்தில் (வாசிகசாலை) எழுதி இருந்த நன்மொழி! 95 முன்னரான போராளிகளின் கட்டுப்பாட்டில் எமது பகுதி இருந்தபோது நிறைய தமிழாக்க சொற்கள் இருந்தது. தொடருங்கள் @ரசோதரன் அண்ணை.

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 3 weeks ago
யாழ் களத்திற்கு உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கின்றேன், ரதன். நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு சமயம் ஓங்கில் மீன் ஒன்று யாரோ ஒருவரின் வலையில் அகப்பட்டு விட்டதாக வீட்டில் கதைத்தார்கள். அதை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டதாகவும் சொன்னார்கள். ஓங்கில் மீன் என்றால் அது தான் டால்பின் மீன் என்று அந்த நேரத்தில் யாரோ விளக்கமும் கொடுத்திருந்தார்கள் என்றும் நினைக்கின்றேன். அது அப்படியே தங்கிவிட்டது. பின்னர் போராட்ட காலத்தில் என்று நினைக்கின்றேன். எங்களூர் கடற்கரையில் ஓங்கில் மீன் ஒன்று (அல்லது சில?) திசை மாறி ஒதுங்கின என்றும், அதை சில இளைஞர்கள் மீண்டும் ஆழக் கடலில் சேர்த்து விட்டதாகவும் செய்திகளில் வந்திருந்தது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே ஓங்கில் என்பது காரணப் பெயராக இருக்கலாம். பல புதிய சொற்கள் காரணப் பெயர்களாகவே உருவாகின்றன என்று நினைக்கின்றேன். ஓங்கில் என்னும் சொல் மூங்கில் போல மெலிதாக நீண்டு உயரமாக வளர்ந்தவர்களை விளையாட்டாக குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்ப்படுகின்றது.

காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

1 month 3 weeks ago
வட மாகாண காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். காணி பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே நடந்த விவாதத்தின்போது, கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இவ்வாறு நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், வடக்கில் காணிகள் விடுவிப்பது உட்பட பல பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பினார். https://adaderanatamil.lk/news/cmfql3p3d00j0o29nwy41jo85

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 3 weeks ago
ஆசியக் கிண்ணம் : சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் 18 Sep, 2025 | 12:51 PM இணையதளச் செய்திப் பிரிவு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன. இந்த பரபரப்பான போட்டி எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற இருக்கிறது. புதன்கிழமை (17) இரவு துபாயில் இடம்பெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 50 ஓட்டங்களை குவித்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சோப்ரா அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்தப் போட்டியில், துடுப்பாட்டத்தில் 29 ஓட்டங்களையம் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர் ஷாகீன் ஷா அஃப்ரிடி ஆட்ட நாயகன் விருதை வென்றார். குழு ஏ பிரிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை (செப்.19) ஓமனுடன் விளையாட உள்ளது. ஏற்கனவே, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், மீண்டும் இரு அணிகளும் மோத இருப்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/225406

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

1 month 3 weeks ago
கிராபியென் ப்ளாக் 10 Min Read கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM கல்லீரல் மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக். விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும். மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரலின் வேலை என்ன? உடலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு. சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம். கல்லீரலை பாதிக்கும் நோய்கள் நம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால் (Hepatitis A,B,C,D,E) கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), கல்லீரல் கொழுப்புநோய்’ (Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன. காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும். கல்லீரல் அழற்சி நோய் பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் இந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும். பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது. கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் கொழுப்புநோய் கல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள். போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும். கல்லீரல் புற்றுநோய் இந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் 15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும். வில்சன் நோய் மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும். உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அயர்ன் மெட்டபாலிஸம் சிலருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை எப்போது அவசியம்? பிரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். `மெல்டு ஸ்கோர்’ ஒரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது. மூளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். மஞ்சள்காமாலை மஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு! ரத்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு. அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும். கல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. மதுப்பழக்கமும் கல்லீரலும்! இயல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம். சோஷியல் டிரிங்கிங் மேற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். தவிர்க்க வேண்டியவை கார்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும். இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா? கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா? கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள். கீழாநெல்லி வேர் மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா? `மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும். கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்! புரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும். முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் `எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும். அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’ (Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும். திராட்சை: சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது. நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’ (Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும். பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் (Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும். பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். காபி: காபியிலுள்ள கஃபைன்’ (Cafeine), பாராஸான்தைன்’ (Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், காவியோல்’ (Kahweol), கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்! ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும். ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம். - கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள். Liver Protection: What to Eat & What to Avoid – A Simple Guide | கல்லீரல் காப்போம் : உண்ண வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - எளிமையான கையேடு - Vikatan

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

1 month 3 weeks ago

கிராபியென் ப்ளாக்

10 Min Read

கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும்.

Published:Today at 9 AMUpdated:Today at 9 AM

கல்லீரல்

கல்லீரல்

னித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக்.

விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும்.

மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

கல்லீரலின் வேலை என்ன?

டலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம்.

கல்லீரலை பாதிக்கும் நோய்கள்

ம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால்

(Hepatitis A,B,C,D,E) கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), கல்லீரல் கொழுப்புநோய்’

(Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன.

காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும்.

கல்லீரல் அழற்சி நோய்

பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும்.

ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்

ந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது.

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்

ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.

சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.

பாதிக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன.

இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது.

கல்லீரல் சுருக்கம் (Cirrhosis)

ல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும்.

இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் கொழுப்புநோய்

ல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.

போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது.

ந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும்.

கல்லீரல் புற்றுநோய்

ந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும்

15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும்.

வில்சன் நோய்

னிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும்.

இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும்.

அயர்ன் மெட்டபாலிஸம்

சிலருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

கல்லீரல் மாற்று சிகிச்சை

எப்போது அவசியம்?

பிரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

`மெல்டு ஸ்கோர்’

ரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது.

மூளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும்.

மஞ்சள்காமாலை

ஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம்.

மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு!

த்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு.

அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும்.

ல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு.

மதுப்பழக்கமும் கல்லீரலும்!

யல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம்.

சோஷியல் டிரிங்கிங்

மேற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும்.

தவிர்க்க வேண்டியவை

கார்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும்.

இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா?

கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா?

கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள்.

கீழாநெல்லி வேர்

மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா?

`மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்!

புரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன.

இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும்.

முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும்

`எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.

அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’

(Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும்.

திராட்சை: சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது.

நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’

(Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும்.

பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம்

(Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்.

பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும்.

மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

காபி: காபியிலுள்ள கஃபைன்’ (Cafeine), பாராஸான்தைன்’

(Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், காவியோல்’ (Kahweol), கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்!

ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும்.

ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம்.

- கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

Liver Protection: What to Eat & What to Avoid – A Simple Guide | கல்லீரல் காப்போம் : உண்ண வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - எளிமையான கையேடு - Vikatan

‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி?

1 month 3 weeks ago
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் திரைக்கதை. கதை 2008 காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் தண்டகாரண்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தலைப்புக்கு ஏற்றவகையில் படம் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையிலும் அண்ணன் - தம்பி கதாபாத்திரங்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகார ஒடுக்குமுறையையும், நக்சல் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமில்லாமல் காட்டிய இயக்குநர் அதியன் ஆதிரை, மனதை பதைபதைக்க வைக்கும் காட்சியமைப்புகளுடன் கூடிய உணர்வுபூர்வ சினிமாவை தந்து வெற்றி பெற்றுள்ளார்.முழுக்க சீரியஸ் தன்மை கொண்ட கதைக்களத்தில் லேசாக பிசகினாலும் சலிப்பை தந்துவிடக்கூடிய சூழலில், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையிலேயே அமர வைக்கும் திரைக்கதை உத்தியை ஓரளவு சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஜார்க்கண்ட் முகாமில் நடக்கும் பயிற்சி, கலையரசனுக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல்லுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் போன்றவை அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடனே நகர்வது சிறப்பான மேக்கிங். குறிப்பாக, சமையலறையில் நடக்கும் சண்டைக் காட்சி தத்ரூபம். பயிற்சி முகாம் கொடூரங்கள் ‘டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டினாலும், அதற்கு சற்றும் குறையாத வகையில் இப்படத்தில் வரும் காட்சிகளும் முகத்தில் அறைகின்றன. சித்ரவதை காட்சிகள் எந்த இடத்திலும் ஆடியன்ஸிடம் வலிந்து திணிக்காமல் வலியை கடத்துகின்றன. படத்தின் மற்றொரு ப்ளஸ் என்றால், அது நடிகர்களின் தேர்ந்த நடிப்புதான். சில தினங்களுக்கு முன்னால் ஒரு மேடையில் நடிகர் கலையரசன் தனக்கு இடைவேளையிலேயே இறந்து விடும் கதாபாத்திரத்தைத்தான் கொடுக்கிறார்கள் என்று புலம்பியிருந்தார். அவர் யாரை மனதை வைத்து அப்படி பேசினாரோ அவர்களுக்கான பதிலாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அப்பாவித்தனமும் துணிச்சலும் கொண்ட இளைஞனாக சிறப்பான நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார். படம் முழுக்க சீரியஸ் தன்மையுடன் வரும் அட்டகத்தி தினேஷ் பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பு, டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் உடையது. ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகு பேசப்படும் கதாபாத்திரமாக ‘அமிதாப்’ இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். நெகட்டிவ், பாசிட்டிவ் என இருமுகம் காட்டி ஸ்கோர் செய்கிறார். பாலசரவணன், யுவன் மயில்சாமி, நாயகி வின்சு ரேச்சல் சாம், ரித்விகா உள்ளிட்டோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வனத்தை ரசிக்கவும், சீரியஸ் காட்சிகளில் அதே வனத்தை கண்டு அச்சம் கொள்ளவும் வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக படம் முழுக்க வரும் ஓர் ஒப்பாரி, மனதை அறுக்கிறது. பாடல்கள் ஓகே ரகம். இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் கச்சிதம். படத்தின் குறைகள் என்று பார்த்தால், இப்படி ஒரு படத்தில் தினேஷுக்கான அதீத ஹீரோயிச காட்சிகள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை கற்பனை கலந்தும் முடிந்தவரை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் ‘தண்டகாரண்யம்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி? | Thandakaaranyam movie review - hindutamil.in

‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி?

1 month 3 weeks ago

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் திரைக்கதை.

கதை 2008 காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் தண்டகாரண்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தலைப்புக்கு ஏற்றவகையில் படம் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையிலும் அண்ணன் - தம்பி கதாபாத்திரங்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகார ஒடுக்குமுறையையும், நக்சல் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமில்லாமல் காட்டிய இயக்குநர் அதியன் ஆதிரை, மனதை பதைபதைக்க வைக்கும் காட்சியமைப்புகளுடன் கூடிய உணர்வுபூர்வ சினிமாவை தந்து வெற்றி பெற்றுள்ளார்.முழுக்க சீரியஸ் தன்மை கொண்ட கதைக்களத்தில் லேசாக பிசகினாலும் சலிப்பை தந்துவிடக்கூடிய சூழலில், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையிலேயே அமர வைக்கும் திரைக்கதை உத்தியை ஓரளவு சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

ஜார்க்கண்ட் முகாமில் நடக்கும் பயிற்சி, கலையரசனுக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல்லுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் போன்றவை அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடனே நகர்வது சிறப்பான மேக்கிங். குறிப்பாக, சமையலறையில் நடக்கும் சண்டைக் காட்சி தத்ரூபம். பயிற்சி முகாம் கொடூரங்கள் ‘டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டினாலும், அதற்கு சற்றும் குறையாத வகையில் இப்படத்தில் வரும் காட்சிகளும் முகத்தில் அறைகின்றன. சித்ரவதை காட்சிகள் எந்த இடத்திலும் ஆடியன்ஸிடம் வலிந்து திணிக்காமல் வலியை கடத்துகின்றன.

படத்தின் மற்றொரு ப்ளஸ் என்றால், அது நடிகர்களின் தேர்ந்த நடிப்புதான். சில தினங்களுக்கு முன்னால் ஒரு மேடையில் நடிகர் கலையரசன் தனக்கு இடைவேளையிலேயே இறந்து விடும் கதாபாத்திரத்தைத்தான் கொடுக்கிறார்கள் என்று புலம்பியிருந்தார். அவர் யாரை மனதை வைத்து அப்படி பேசினாரோ அவர்களுக்கான பதிலாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அப்பாவித்தனமும் துணிச்சலும் கொண்ட இளைஞனாக சிறப்பான நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார்.

படம் முழுக்க சீரியஸ் தன்மையுடன் வரும் அட்டகத்தி தினேஷ் பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பு, டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் உடையது. ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகு பேசப்படும் கதாபாத்திரமாக ‘அமிதாப்’ இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். நெகட்டிவ், பாசிட்டிவ் என இருமுகம் காட்டி ஸ்கோர் செய்கிறார். பாலசரவணன், யுவன் மயில்சாமி, நாயகி வின்சு ரேச்சல் சாம், ரித்விகா உள்ளிட்டோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வனத்தை ரசிக்கவும், சீரியஸ் காட்சிகளில் அதே வனத்தை கண்டு அச்சம் கொள்ளவும் வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக படம் முழுக்க வரும் ஓர் ஒப்பாரி, மனதை அறுக்கிறது. பாடல்கள் ஓகே ரகம். இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் கச்சிதம்.

படத்தின் குறைகள் என்று பார்த்தால், இப்படி ஒரு படத்தில் தினேஷுக்கான அதீத ஹீரோயிச காட்சிகள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை கற்பனை கலந்தும் முடிந்தவரை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் ‘தண்டகாரண்யம்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.


‘தண்டகாரண்யம்’ விமர்சனம்: நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைக் கதை எப்படி?  | Thandakaaranyam movie review - hindutamil.in

கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம்

1 month 3 weeks ago
முன்னாள் காதலியை துன்புறுத்தியவரை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம் 19 Sep, 2025 | 02:10 PM அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள யாக் கவுண்டி பகுதியில், பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நபர், பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள நோர்ட் கோடோரஸ் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது வியாழக்கிழமை (செப். 18) குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 24 வயதுடைய மத்தேயு ரூத் (Matthew Ruth) என்ற இளைஞர், அவரது முன்னாள் காதலியை துன்புறுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். பொலிஸார் அவர் இருந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, குறித்த இளைஞன் தன் வசம் வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார். இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சந்தேகநபரான ரூத்தின் முன்னாள் காதலி, ஆகஸ்ட் மாதத்தில் தனது காரை ரூத் எரித்துவிட்டதாகவும், மாறுவேடத்தில் தனது வீட்டிற்கு வெளியே தன்னை வேவு பார்த்ததாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேக நபரான ரூத் மறைந்திருந்த வீட்டிற்குள் பொலிஸார் நுழைந்தபோது, ரூத் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில, பதிலுக்கு பொலிஸார் துப்பபாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ரூத் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில், துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் சூழலில், பொலிஸ் அதிகாரிகள் மீதான இந்தத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/225498

கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம்

1 month 3 weeks ago

முன்னாள் காதலியை துன்புறுத்தியவரை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம்

19 Sep, 2025 | 02:10 PM

image

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள யாக் கவுண்டி பகுதியில், பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நபர், பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பென்சில்வேனியாவில் உள்ள நோர்ட் கோடோரஸ் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது வியாழக்கிழமை (செப். 18) குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

24 வயதுடைய மத்தேயு ரூத் (Matthew Ruth) என்ற இளைஞர், அவரது முன்னாள் காதலியை துன்புறுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

பொலிஸார் அவர் இருந்த வீட்டிற்குள் நுழைந்தபோது, குறித்த இளைஞன் தன் வசம் வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சந்தேகநபரான ரூத்தின் முன்னாள் காதலி, ஆகஸ்ட் மாதத்தில் தனது காரை ரூத் எரித்துவிட்டதாகவும், மாறுவேடத்தில் தனது வீட்டிற்கு வெளியே தன்னை வேவு பார்த்ததாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேக நபரான ரூத் மறைந்திருந்த வீட்டிற்குள் பொலிஸார் நுழைந்தபோது, ரூத் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில, பதிலுக்கு பொலிஸார் துப்பபாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ரூத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில், துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் சூழலில், பொலிஸ் அதிகாரிகள் மீதான இந்தத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

550859637_1597772991206521_3251184325428

https://www.virakesari.lk/article/225498

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

1 month 3 weeks ago
Editorial / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 06:44 - 0 - 38 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார். இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். Tamilmirror Online || மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

1 month 3 weeks ago

Editorial   / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 06:44 - 0     - 38

messenger sharing buttonஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார்.

இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். 

image_79bdaa58a6.jpg


Tamilmirror Online || மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

1 month 3 weeks ago
தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கு கற்பனைகள் உதவப் போவதில்லை. கடந்த கால கசப்பான அனுபவங்களின் படிப்பினைகளை வைத்து எமது தவறுகளை திருத்தி சரியான பாதையில் சென்று எமது மக்களின் வாழ்வியலை இலங்கையில் மேம்படுத்த வேண்டுமே தவிர அரசியலில் கற்பனைகள், சென்ரிமென்றுகள் எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும். முடிந்தது முடிந்தது தான். தோல்வியடைந்த அனுகுமுறைகள் படிப்பினைகளை தருமே தவிர அது முன்மாதிரிகளை தராது. அப்படி தரும் என நம்பிக்கைகள் வளர்த்து சில சுயநலமிகள் புலம் பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் தமது அரசியல், பண இலாபத்துக்காக கூறினாலும் ஆரோக்கியமான மனநிலை உள்ள எவரும் இந்த stupidl தனத்தை கணக்கெடுக்க மாட்டார்கள்.

விரைவில் எழுச்சி பெற உள்ள வடக்கு மாகாணம் - ஆளுநர் நம்பிக்கை!

1 month 3 weeks ago

இந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை வடிவமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த சீநோர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றியதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு தூரம் இந்த நிறுவனம் பிரபல்யமாக இருந்தது.

இன்று அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் இந்த நிறுவனம் முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும்.

இந்த அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு தொழிற்சாலைகளையும் மீள உருவாக்கி வருகின்றது. எமது மாகாணத்துக்கு தேவையாக உள்ள வேலைவாய்ப்பும், வருமானம் ஈட்டலும் இதனூடாக கிடைக்கப்பெறும்.

எமது மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதலான அக்கறையுடன் செயற்படுகின்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் எமது மாகாணத்துக்கு எவ்வாறான உதவிகளைச் செய்யவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கின்ற அமைச்சர் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளையும் கூறிக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் எழுச்சி பெற உள்ள வடக்கு மாகாணம் - ஆளுநர் நம்பிக்கை!

இ.போ.சபைக்கு பேருந்து நிலையமொன்றை அமைத்துத் தருமாறு யாரிடமும் நாங்கள் கேட்கவில்லை - அமைச்சர் பிமலிடம் இ.போ.ச. வட பிரதி முகாமையாளர் தெரிவிப்பு

1 month 3 weeks ago

19 Sep, 2025 | 03:12 PM

image

யாழ். நகர்ப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்துத் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இ.போ.சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர், எந்த முடிவானாலும், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியே எடுக்க முடியும் என தெரிவித்தார். 

நேற்று வியாழக்கிழமை (18) யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். நகரை அபிவிருத்தி செய்வதாயின், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றவேண்டுமெனக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை போக்குவரத்து சபை இலங்கையில் தனித்துவமான சேவையை வழங்கி வரும் நிலையில் யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நாமும் தனித்துவமான சேவையை வழங்கி வருகிறோம்.

நாங்கள் யாரிடமும் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்காத நிலையில் புதிய பேருந்து நிலையம் ஒன்றில் தனியாருடன் இணைந்து நெடுந்தூர போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

நாம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய நிலையில் அந்தக் கோரிக்கையை ஏற்க மாட்டோம் என முடிவு எட்டப்பட்டது என்றார்.

இதன்போது பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், 

யாழ். நகரத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தரிப்பிடத்தை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எனது கோரிக்கையல்ல,  அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது என்றார்.

மேலும், இதன்போது கருத்து தெரிவித்த துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்  மற்றும் வடக்கு  போக்குவரத்து துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இளங்குமரன் எம்.பி தலைமையில் இலங்கை போக்குவரத்து சபை யுடன் கலந்துரையாடுமாறு தெரிவித்தார்.

இ.போ.சபைக்கு பேருந்து நிலையமொன்றை அமைத்துத் தருமாறு யாரிடமும் நாங்கள் கேட்கவில்லை - அமைச்சர் பிமலிடம் இ.போ.ச. வட பிரதி முகாமையாளர் தெரிவிப்பு  | Virakesari.lk

இதய - குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வுகூடத்தின் சேவைகள் வவுனியாவில் ஆரம்பம்!

1 month 3 weeks ago

Published By: Digital Desk 1

19 Sep, 2025 | 10:17 AM

image

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் (Cath Lab) இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இதய மற்றும் குருதிக்குழாய்  ஆய்வுகூடம் இன்றைய தினம் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்போடு இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்ட நிலையிலும்  மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இயங்காநிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட குறித்த ஆய்வுகூடம் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளினால் செயற்படாமல் இருந்தது.

இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதி மக்களும் கிழக்கு மாகாண மக்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.

குறித்த நிலையை உணர்ந்துகொண்ட சுகாதார அமைச்சு அதனைத் தீர்ப்பதற்குரிய மூலோபாய நடவடிக்கையாக வெளிநாட்டில் பயிற்சி பெற்று நாடு திரும்பிய துடிப்பு மிக்க இருதய சிகிச்சை நிபுணர் தி.வைகுந்தன் அவர்களை வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நியமித்த பின்னர் குறித்த இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சிகிச்சை நிபுணர் பி.லக்ஸ்மன் உள்ளிட்ட அணியினரின் அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டலுடனும் பங்களிப்புடனும் இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது.

இதன்மூலம் எமது பிரதேச மாரடைப்பு நோயாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிகிச்சை வழங்கப்பட ஏதுவாகியுள்ளதுடன் இலங்கையில் பல போதனா வைத்தியசாலைகளில் கூட இன்னமும் இல்லாத சேவையை வடமாகாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்து இரண்டாவது இடமாக வழங்கும் பெருமையை வவுனியா பொது வைத்தியசாலை  பெற்றுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றைய இருதய சிகிச்சை நிலைய நிபுணர் தாதியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பலரது ஒத்துழைப்புடன் இன்றைய தினம் குறித்த இருதய சிகிச்சை கூடத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக உழைத்த அனைவருக்கும் இத்திட்டத்தை செயற்படுத்த முன்னின்ற முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சு நெதர்லாந்து திட்டப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

https://www.virakesari.lk/article/225474