Aggregator

ஒரு பயணமும் சில கதைகளும்

1 month 2 weeks ago
4. பாட்டி வடை சுட்ட கதை ------------------------------------------ சில கதைகளை ஆயிரம் தடவைகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சில நிகழ்வுகளும் திரும்ப திரும்ப நடந்து கொண்டேயும் இருக்கின்றன. மீண்டும் அந்தக் கதைகள் சொல்லப்படும் போது அல்லது அதே நிகழ்வுகள் நடக்கும் போது ஏதாவது ஒரு சின்ன மாற்றம் அல்லது திருப்பம் இருக்கும், இருக்காமல் கூட போகலாம். இந்தச் சில கதைகளும், நிகழ்வுகளும் எங்களின் வாழ்க்கைகளை விட்டு என்றுமே தூரமாகப் போவதில்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் ஏராளமான கதைகள் முற்றாக எங்களை விட்டு நீங்கிவிட்டன. நான் சிறு வயதாக இருக்கும் போது அம்மாச்சி ஒரு கூனன் - கூனி என்னும் இருவரை வைத்து பல கதைகள் சொல்லியிருக்கின்றார். அந்தக் கதைகளை நான் பின்னர் வேறெங்குமே காணவில்லை. சல்லடை போட்டுத் தேடி இருக்கின்றேன், அவை அகப்படவேயில்லை. அந்தப் புகையிரத நிலையத்தில் வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக இரண்டு சோடி தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன. நான் மறு பக்கமாக, அங்கே ஒரு சோடித் தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன, நின்று கொண்டிருந்தேன். புகையிரத நிலைய மேடையில் மஞ்சள் கோடுகள் இரண்டு பக்கங்களிலும் மிக நேர்த்தியாக கீறப்பட்டிருந்தது. மஞ்சள் கோட்டை தாண்டி எவரும் நிற்கக்கூடாது என்று ஒரு அறிவுறுத்தல் எழுதியிருந்தார்கள். எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள். புகையிரத நிலையத்தின் இந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒரு சோடித் தண்டவாளம், மறுபக்கமாக போய்க் கொண்டிருந்த இரண்டு சோடித் தண்டவாளங்களுடன் நிலையத்தின் இரு முனைகளிலிருந்தும் சிறிது தூரத்தில் பின்னிப் பிணைந்து, பின்னர் இரண்டு சோடிகளாக பிரிந்து போய்க் கொண்டிருந்தன. 'தண்டவாளங்கள் சந்திப்பதில்லை............' என்ற தலைப்பில், ஏதோ ஒரு வடிவில், ஒன்றோ பலவோ வாசித்தது போல ஒரு ஞாபகம். டி. ராஜேந்திரரின் வசனமாகக் கூட இருக்கலாம். பல நல்ல உவமைகளும், சில வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உவமைகளும் அவரது பாடல்களிலும், வசனங்களிலும் எப்போதும் இருந்தன. அடுக்கு மொழியில் தான் எழுதுவது என்று முடிவெடுத்தால் சில இடங்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது. ஒரு புகையிரதம் மறு பக்கத்தில் வந்து நின்றது. அது நாங்கள் ஏற வேண்டியது இல்லை. சிட்னி நகர மையத்துக்குப் போவதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மனிதர்கள் கண்டுபிடித்ததில், மனிதகுலத்தின் மொத்த வளர்ச்சியில் புகையிரதம் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு இலகுவாக ஒரு கூட்ட மக்களையும், பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு செல்கின்றது. ஒரு அராபியக் குதிரைக்கு, ஒரு காட்டு யானைக்கு இருக்கும் கம்பீரம் புகையிரதங்களுக்கு இருக்கின்றது. மேற்கு நாட்டவர்கள் நீராவியில் இயங்கும் இயந்திரங்களை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு கப்பல்களும், புகையிரதங்களும் செய்தார்கள்; அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே நாங்கள் நீராவியில் ஒரே மாவை இரண்டு தடவைகள் அவித்து புட்டு செய்து சாப்பிட்டோம் என்று சொல்லிச் சிரிப்பான் நண்பன் ஒருவன். இன்று அவன் போக்குவரத்து துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்றான். உலகில் ஏறக்குறைய எல்லா பெரு நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் புகையிரத சேவைகள் திறம்பட இருக்கின்றன. ஆனால் நான் வாழும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் ஒரு விதிவிலக்கு. மிகவும் குறைந்த புகையிரத சேவைகளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கின்றன. ஒரு மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அராபியக் குதிரைகள் போல, காட்டு யானைகள் போல இந்த நகரில் புகையிரதங்கள் சோம்பி நிற்கின்றன. ஒழுங்கான புகையிரதப் பாதைகளோ அல்லது விரிவான தடங்களோ இல்லை. ஆனால் இங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒரு வாகனங்கள் அல்லது இரு வாகனங்கள் என்று வைத்திருக்கின்றார்கள். தனித்தனியே பயணிக்கின்றார்கள். அதுவே சுதந்திரம், வசதி என்கின்றார்கள். உலகில் நல்லதொரு புகையிரதச் சேவையை எங்கு பார்த்தாலும் மனம் ஏங்குகின்றது. சிட்னி நகரின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சுழலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். 80 அல்லது 82 வது தளத்தில் அந்த உணவகம் இருந்தது என்று நினைக்கின்றேன். அதற்கென்று தனியே உயர்த்தி இருந்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அங்கிருந்து சாப்பிடலாம். அங்கே வேலை செய்பவர்கள் பலரும் நேபாளத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவர்கள் நேபாள மக்கள் என்று தெரிந்தது. அதில் ஒருவர் சரிதா தன்னுடைய பெயர் என்று அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் சரிதா என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கின்றது தானே என்று கேட்டார். இலங்கையிலும் நன்றாகவே இருக்கின்றது என்றேன். 'ஜூலி கணபதி' படம் நினைவில் வந்தது. சுழலும் 80 வது மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் ஜெயராமால் தப்பித்திருக்கவே முடியாது. வானம் நிறைந்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. உணவகம் சுழன்றாலும் ஈரமான மேகங்கள் எல்லா திக்கையும் மூடி வைத்திருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் 360 பாகைகளில் சில பாகைகளில் மேகங்கள் கலைந்தன. சிட்னி நகரமும், அதன் முடிவில்லாக் கடலும் அந்த வெளிகளினூடே தெரிந்தன. ஊரில் சிறு வயதுகளில் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து நான் பார்த்த அதே நீலக் கடல் தான். 15 நிமிடங்கள் இன்னும் இருக்கும் போதே உங்களின் நேரம் முடிந்து கொண்டு வருகின்றது என்று சரிதா வந்து ஞாபகமூட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்கும் போது 'மலையூர் மம்பட்டியான்' படம் ஞாபகத்திற்கு வந்தது. திரும்பி வரும் போது வங்கியில் ஏதோ எடுக்க வேண்டும் என்று போனார்கள். முன்பு சிட்னியில் திருட்டுப் பயம் மிக அதிகம். தாலியோ அல்லது பொன் நகைகளோ பலரும் அணிவதில்லை. முக்கியமாக புகையிரதங்களில் அணிவதேயில்லை. குறிப்பாக சில புகையிரத நிலையங்களில் இழுத்து அறுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள். அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து கூட திருடுவார்கள் என்றனர். புராணக் கதைகள் போல சில திருட்டுச் சம்பவங்களை விபரித்திருக்கின்றார்கள். அப்பாவித் தேவர்களிடம் அசுரர்கள் அடித்துப் பறிப்பது போல அந்தக் கதைகள் அமைந்திருந்தன. ஆதலால் பெரும்பாலான பொன் நகைகள் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களிலேயே இன்றும் இருக்கின்றது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருப்பதால் எம்மவர்களில் பலர் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தும் இருக்கின்றார்கள். இப்பொழுது திருட்டுப் பயம் ஓரளவு குறைந்திருக்கின்றது என்றார்கள். அதற்கான காரணத்தை வேறொரு தலைப்பில் பின்னர் எழுதுகின்றேன். திரும்பி வரும் போது புகையிரதத்தில் இரண்டு வரிசைகளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கதைத்தும், சிரித்தும் கொண்டிருந்தோம். சில வருடங்களின் முன் அங்கு ஆஸ்திரேலிய - இந்திய பிணக்கு இப்படியான ஒரு நிகழ்வாலேயே ஆரம்பமானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பொய்யான தகவலாகவும் இருக்கலாம். திடீரென்று முன்னால் இருந்த உறவினர் யாரோ அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஸ்பிரே அடிக்கின்றார் என்றார். அங்கே பார்த்தேன். ஒரு இளைஞன் குனிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த உறவினர் மீண்டும் அதையே சொன்னார். வங்கியில் இருந்து எடுத்த பொருட்கள் அவரிடமேயே இருந்தது. 'அய்யோ............ ஷ் ஷ் என்று ஸ்பிரே அடித்து, எங்களை எல்லாம் மயக்கிப் போட்டு, எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போகின்றான்.........' என்று அவர் சத்தமாகவே சொன்னார். இந்தப் பக்கத்தில் இருந்த நானும், என் மனைவியும் அந்த இளைஞனைப் பார்த்தோம். அவர் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே 'நானும் தமிழ் தான்..............' என்றார். கனடா டொரண்டோவில் இருந்து சிட்னிக்கு மருத்துவ படிப்பிற்காக வந்திருக்கும் இளைஞன் அவர். அன்றைய வகுப்புகள் முடிந்து அவரது தங்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய அலைபேசியையும், மடிக்கணனியையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சில தடவைகள் அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டோம். 'பரவாயில்லை, இலங்கைத் தமிழைக் கேட்பதே நல்ல சந்தோசமாக இருக்கின்றது..........' என்று அப்பாவியாக சிரித்தார் அந்த எதிர்கால மருத்துவர்.

தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்

1 month 2 weeks ago
எனது கருத்தும் அதுவே. அப்படி இந்தியா அச்சப்பட்டு அதை தடுக்க முயற்சித்தால், தானாகவே அந்த முடிவை நோக்கி மாநிலங்களை தள்ளுகிறது. எவ்வாறெனினும் அது ஒருநாள் நடக்கத்தான் போகிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

1 month 2 weeks ago
ஒவ்வொரு பிரபலங்கள் மரணிக்கும் போது அது குறித்த கட்டுரைகள்,விவாதங்கள்,அறிவுறுத்தல்கள் வருவது அதிகமாக விட்டது. இதை நான் ஏனைய மக்களுக்கான விழிப்புணர்வாகவே பார்க்கின்றேன். எனது சொந்த அனுபவத்தின் படி இன்னாருக்கு இது சாப்பிட்டுத்தான் இந்த வருத்தம் வந்தது என எங்கும் அறுதியாக கூறமுடியாது.மது அருந்துவதால் தான் இந்த வருத்தம் வந்தது எனவும் சொல்ல முடியாது.ஏனென்றால் தினசரி மது அருந்துபவர்களும் நோய் நொடியின்றி வாழ்கின்றார்கள். தினசரி 30 சிகரெட் பிடிப்பவர்களும் நோய் நொடியின்றி வாழ்கின்றார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்பவர்களும் நோயில்லாமல் வைத்தியரிடம் செல்லாமல் வாழ்கின்ற்ர்கள். நோய்களுக்கான முதல் காரணம் அவரவர் உடல்வாகு.அடுத்தது எதிர்ப்பு சக்தி.இன்னொன்று பரம்பரையை காவிக்கொண்டு வரும் உயிரணுக்கள். எனக்கு ஈரல் பிரச்சனை சிறு வயதிலிருந்தே இருக்கின்றது. ஆராய்ச்சி செய்ததில் என் குடும்பத்தினர் அனைவருக்கும் அதே பிரச்சனை உண்டு.அதற்காக தலையை கொண்டுபோய் எங்கேயாவது அடிக்க முடியுமா என்ன?😂

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
கோஷான்! அவனவன் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பான்.அது போல் இனம் என்று வந்தாலும் தன் இனம் பற்றியே சிந்திப்பான். எம் அரசியல் தலைவர்கள் விடும் /விட்ட தவறுகளுக்கு கேள்வி கேட்டால் அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்கள். ஆரம்ப அரசியல் காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஈழத்தமிழினம் வந்த நல்ல நல்ல சந்தர்ப்பங்களை தவற விட்ட இனமாகவே எனக்கு தென்படுகின்றது. அடுத்தது எம் மக்களின் நிலைப்பாட்டிற்கு வருவோம்... பழைய சோறு சாப்பிட்டாலே கேவலமாக பார்க்கும் எம் சமூகம் பழைய வரலாற்று அடையாளங்களை பாதுகாப்பது பற்றி சிந்திக்கும் என நினைக்கின்றீர்களா? 😂

உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் விடுவித்த பின் மீண்டும் கைது!

1 month 2 weeks ago
குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கைது செய்யப்பட்ட இருவரும் வேண்டிய ஆட்கள் போல. பாவம் வீதியில் சென்ற வைத்தியர் ஐயாவுக்கு தெருவில் நிற்கும் நாய்களிடம் கடிவாங்கிய நிலமை போல் ஆகிவிட்டதே.

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 month 2 weeks ago
தமிழ் நாட்டில் எந்த ஒரு நடிகரும் அரசியலில் சடுதியாக கட்சி ஆரம்பித்து பெரும் வெற்றி பெற்ற சரித்திரம் இல்லை . பலரும் MGR இன் அரசியல் வரலாற்றை சரியாக அறியாமல் அவரைப் போல வர ஆசைப்படுகின்றனர். இதில் விஜயும் அடக்கம் . சீமானின் அரசியல் வேறு அவர் களத்தை நன்கு அறிந்தே வேலை செய்கின்றார் . இப்போதும் அவர் உடனடியாக முதல்வராக வருவேன் அல்லது வரவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை. யசோதரன் கூறும் வெற்றிடம் ஸ்டாலினுக்குப் பின்னர் வர வாய்ப்புக்கள் உள்ளன. சீமான் அதுவரை காத்திருக்க வாய்ப்புக்கள் அதிகமே தவிர குறையாது.

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

1 month 2 weeks ago
நாங்கள் ( தமிழர்கள்) எம்மு வரலாறுகளை பாதுகாக்கமுடியாத முழு முட்டாள்கள். எவ்வளவு வரலாற்று சின்னங்கள்…. அந்த காலத்திருந்நு இந்தகாலம் வரை இது தொடருகிறது…. அல்லது சோழனின் கோட்டை, பாண்டியனின் கோட்டை மாளிகைகள் எல்லாம் இருந்திருக்கு்ம்

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 month 3 weeks ago
கமல் அரசியல், நிர்வாகம், ஆட்சி என்பனவற்றில் எவ்வாறு அனுபவம், நடைமுறை அறிவு, பொதுப் புரிதல் என்பன இல்லாமல் இருந்தாரோ, அதே போலவே விஜய்யும் இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். கமலை விட மிகவும் செயற்கையாக விஜய் தோன்றுகின்றார். விஜய்யின் மேடைப் பேச்சுகளும், அங்க அசைவுகளும் மிகவும் அந்நியமாகத் தெரிகின்றன. எம் ஜி ஆரும், விஜய்காந்தும் அவர்களின் காலங்களில் அந்நியமாகத் தெரியவில்லை. ஆனாலும் 'அண்ணா..........' என்று அவரைத் தொடரும் ஒரு வயதினரில் பெரும்பகுதி வாக்குகள் அவருக்கு முதல் தடவையில் கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். இன்றைய நிலையில் அடுத்த தேர்தலில் தவெக மூன்றாவதாக வரக்கூடும்.

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 month 3 weeks ago
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதையே தான் எடப்பாடியார் சொன்னார். அவர் முகத்தை மூடி இருக்க வாய்ப்பில்லை தான், ஆனால் ஒரு சலிப்போ அல்லது விரக்தியோ காரணமாக, நாங்கள் சில சமயங்களில் கைகளால் நெற்றியைத் தாங்குவது போல, ஒரு கணத்தில் செய்திருக்கக்கூடும். தமிழ்நாட்டில் அரசியல் தாக்குதல்கள் தரை டிக்கெட் அளவிலும், இன்னும் கீழேயும் இருக்கும். சுற்றி நிற்கும் நாலு பேர்கள் சிரிப்பார்கள் என்றால் பேச்சாளர்களும், தலைவர்களும் எதையும் கூசாமல் சொல்லுவார்கள். அவை இணையத்திலும் வைரலாகப் பரவும். அதுவே தான் இந்த விடயத்திலும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. (அதிபர் ட்ரம்பும் இதே வழியையே பின்பற்றுகின்றார்..............)

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month 3 weeks ago
Ravindran Tharmalingam Sndotorpseh197fgg8c 4tu03i58941hi441a2chh6f1093lhttlct0um946 · யாழ் நகரத்துத் திரையரங்கு அன்று - 'புது வின்சர்' வின்சர் திரையரங்குஇன்றுள்ளவாறு தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியுற்றிராத , டிஜிட்டல் ஊடகங்களெதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில் , சினிவா பார்ப்பதென்பது முக்கியமானதொரு பொழுதுபோக்கு. திரையரங்குகளைப் பற்றி எண்ணியதுமே முதலில் என் நினைவுக்கு வருவது யாழ் 'புது வின்சர்' திரையரங்குதான். 'புது வின்ச'ரில் படம் பார்ப்பதென்பதே சுகமானதோர் அனுபவம்தான். அக்காலகட்டத்தில் இலங்கையிலேயே சிறந்த திரையரங்காக வின்சரே திகழ்ந்தது என்பேன். குளிரூட்டப்பட்ட வசதி இல்லையென்றாலும், வின்சரின் வடிவமைப்பு அதற்கு இயற்கையான குளிரூட்டும் வசதியை அளித்திருந்தது. விசாலமான திரையரங்கு; பெரிய ஜன்னல்கள் படம் தொடங்கும்மட்டும் திறந்திருப்பதால் காற்று ஜிலுஜிலுவென்று வீசிக்கொண்டிருக்கும்,. படம் தொடங்குவதற்குச் சிறிது நேரத்தின் முன், பணியாளர் ஒருவர் ஒவ்வொரு ஜன்னலையும் சாத்தத் தொடங்குவார். அதனைத்தொடர்ந்து திரையரங்கினுள் உள்ள ஒளியை வழங்கும் மின் குமிழ்கள் ஒவ்வொன்றாக மங்கிக்கொண்டு வர, திரைப்படம் ஆரம்பமாகும். திரையரங்குகளிலேயே பெரிய திரையரங்கு. நன்கு வடிவமைக்கப்பட்ட திரையரங்கு. இவற்றால் 'புது வின்சர்' ஏனைய திரையரங்குகளிலிருந்து தனித்துவத்துடன் வேறுபட்டு விளங்கியது. 'புது வின்சர்' கட்டியதும் 'பழைய வின்சர்' லிடோ என்னும் பெயரில் இயங்கத்தொடங்கியது. அளவில் சிறிய திரையரங்கு அது. 'புது வின்ச'ரில் பார்த்த நினைவில் நிற்கும் திரைப்படங்கள்; ஆரம்ப நாளன்று திரையிடப்பட்ட இரு மலர்கள், ரகசிய போலிஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, ராஜராஜ சோழன், விளையாட்டுப்பிள்ளை, தனிப்பிறவி, நினைத்ததை முடிப்பவன் & நல்லநேரம். 'புது' வின்சரிலேயே சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் 'கோமாளிகள்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. புகழ்பெற்ற வானொலி நாடகம் அது. 'குத்துவிளக்கு' திரைப்படமும் இங்குதான் வெளியிடப்பட்டது. கட்டடக்கலைஞர் துரைராஜா தயாரித்த திரைப்படம். அக்காலகட்டத்தில் வெளிநாட்டு இறக்குமதிகள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளூர்த் தயாரிப்புகள் வெற்றிகரமாக விளங்கின. அக்காலகட்டத்தில்தான் செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' நாவல் திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அக்காலகட்டத்தில்தான் மலையக அரசியல்வாதியான வி.பி.கணேசனின் (மனோ கணேசனின் தந்தையார்) 'புதிய காற்று', 'நான் உங்கள் தோழன்' ஆகிய எம்ஜிஆர் பாணித் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடின. இன்று 'புது வின்ச'ரில் திரைப்படங்கள் ஓடவில்லை. கடடடக்கூட்டுத்தாபனப்பொருட்கள் விற்குமோரு விற்பனை நிலையமாக மாறிவிட்டது. காலத்தின் பாதிப்புகள், போர்ச்சூழலின் தாக்கங்கள் ஆகிவற்றால் பழைய நினைவுச் சின்னங்களிலொன்றாகி விட்ட 'புது வின்சர்' திரையரங்கினைப் பார்க்கையில் நெஞ்சில் இலேசானதொரு வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எம் இளமைக்காலத்துக் கனவுகளின் இருப்பிடங்களாக விளங்கிய திரையரங்குகளில் 'புது வின்ச'ருக்கு முக்கிய இடமுண்டு. நன்றி வ. ந.கிரிதரன் மற்றும் சச்சி முருகேசு அவர்களுக்கு Voir la traduction நீங்காத நினைவுகள் என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை . ......! 😘

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 month 3 weeks ago
ஆனால் பன்னீர், சசி, டிடிவி, எவரையும், அமித் ஷா சொன்னாலும் சேர்பதில்லை என்பதில் எடப்பாடி வென்றுள்ளதாகவே தெரிகிறது. அதேபோல் செங்கோட்டையனும் (தன்னை) மன்னிப்போம், மறப்போம் என அடங்கி விட்டார். அதேபோல் அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கியது, டிடிவி மூலம் அண்ணாமலை ஆட ஆரம்பித்த கேமை BL சந்தோஸ் மூலம் தட்டி வைத்துள்ளது என முதல் சுற்றில் எடப்படி ஏறு முகம்தான் காட்டுகிறார். 2 ம் சுற்று - தேர்தலில் அதிமுக சீட்டுகள் எண்ணிக்கை 3ம் சுற்று - தேர்தலின் பின், பாஜக அதிமுகவை “அப்படியே சாப்பிடுவோம்” என சாப்பிடாமல் (வென்றாலும் தோற்றாலும்) எப்படி தடுப்பது. அடுத்த இரு சுற்றுக்களும் மிக கடினமானவை. பார்க்கலாம் உங்கள் பனையூரார் பற்றிய பார்வையில் மாற்றம் ஏதும் வந்துள்ளதா? வேர்க் புரொம் ஹோம், வீக் எண்ட் அரசியல்வாதி இனி புதிய டிரெண்ட்டோ? நாம் தான் பழைய முறையில் பிந்தங்கி விட்டோமோ என நினைக்கவும் வைக்கிறார் பனையூர் கிழார்.

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

1 month 3 weeks ago
எடப்பாடி அமித் ஷா வீட்டுக்கு அதிமுக தலைகளோடு போயுள்ளார் என நியூஸ் பிரேகிங் ஆன பின்னேதான் அவர் வெளியே வந்தார். போனவர் வரத்தானே வேண்டும். ஆகவே மூடி மறைக்க வாய்பில்லை. எதேச்சையாக கைகுட்டையால் முகம் துடைக்க, அதை வைத்து திமுக மற்றும் அதன் கைத்தடிகள் கதை கட்டுகிறார்கள்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு பெண் : அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே பெண் : பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு பெண் : காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ… பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ பெண் : ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே பெண் : ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே.......! --- ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ---