Aggregator
துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; - ரவிகரன் வலியுறுத்து
துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - ரவிகரன் வலியுறுத்து
17 JUL, 2025 | 02:17 PM
துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன் மூலம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடியபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நிச்சயமாக இந்த சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றிய 44 பேர் இங்கிருந்து பணி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெளிவலயங்களிலிருந்து 4 ஆசிரியர்கள் மாத்திரமே துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்துள்ளனர். 40 ஆசிரியர்கள் இதுவரை துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்கள் காணப்படுகின்றன. மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். எனவே, இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
துணுக்காய் வலயத்தில் ஏற்கனவே 160 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தற்போது 40 ஆசிரியர்கள் கடமைகளைப் பெறுப்பேற்காத நிலையில், துணுக்காய் வலயத்தில் ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 200ஆக உயர்வடைந்திருக்கிறது. இதனால் துணுக்காய் வலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்னும் மோசமடைவதற்கான சூழ்நிலையே காணப்படுகிறது.
எமது பிள்ளைகளும் கல்வி கற்கவேண்டும். வன்னி என்றால் ஒதுக்கிவிடுக்கின்ற நிலைமை, முல்லைத்தீவு மாவட்டம் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை, துணுக்காய் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
மேலும், இப்பிரச்சினை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்னார், முசலிப்பிரலி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.
அந்தக் கூட்டத்திலும் மன்னார் வலயத்திலிருந்து பல ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்றுச் சென்றிருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களிலிருந்து ஆசிரியர்கள் சென்று, தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன்போது ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை முன்னெடுக்க வேண்டுமென முசலி பிரதேச அபிவிருத்திக் குழுவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக பொ.வாகீசன் நியமனம்!
வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக பொ.வாகீசன் நியமனம்!
வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
17 JUL, 2025 | 01:20 PM
வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
புத்தத் துறவிகளை பாலியல் வீடியோ மூலம் மிரட்டி ரூ 100 கோடி பணம் பறித்த பெண் சிக்கியது எப்படி?
சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு!
கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
களைத்த மனசு களிப்புற ......!
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
குட்டிக் கதைகள்.
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் இணக்கம்
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் இணக்கம்
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்
Published By: RAJEEBAN
17 JUL, 2025 | 11:34 AM
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது.
கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது;
இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது;
பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்;
இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல்.
சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும் பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதி ஊடாக நடந்தார் இளவரசர் ஹரி
தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதி ஊடாக நடந்தார் இளவரசர் ஹரி
17 JUL, 2025 | 10:58 AM
அங்கோலாவில் மிகப்பெருமளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து சென்றுள்ள பிரிட்டிஸ் இளவரசர் ஹரி சிறுவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கநாட்டிற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான விஜயத்தினை ஹரி மேற்கொண்டுள்ளார்.
தனது தாயாரின் பாராம்பரியத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவர் இளவரசி டயனாவின் அடிச்சுவடுகளை பின்பற்றியுள்ளார்.
தனது தாயார் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டு 28 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு சென்றுள்ள ஹரி நிலக்கண்ணி வெடி ஆபத்து இன்னமும் நிலவும் குயிடோ குவானாவேல் பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்துள்ளார்.
வெளியில் விளையாடுவதற்கோ பாடசாலைக்கு செல்வதற்கோ சிறுவர்கள் ஒருபோதும் அச்சப்படும் நிலை நிலவக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மூன்று தசாப்தத்தின் பின்னரும் அங்கோலாவில் போரின் எச்சங்கள் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டும் இளவரசர் ஹரி டயான விஜயம் மேற்கொண்ட இந்த பகுதிக்கு சென்றிருந்தார்.
1997 இல் இளவரசி டயனா ஹலோ டிரஸ்டுடன் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் - கார் விபத்தில் அவர் உயிரிழப்பதற்கு ஏழு மாதங்களிற்கு முன்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.
இரண்டுதசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருந்தவேளை அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகள் ஊடாக பாதுகாப்பு சாதனங்களுடன் டயான நடந்து செல்லும் படம் அவ்வேளை வெளியாகியிருந்தது.
டயனாவின் பரப்புரை நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை சாத்தியமாவதற்கு காரணமாகயிருந்தது -டயனா உயிரிழந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது கைகச்சாத்திடப்பட்டது.