Aggregator
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்
19 Jan, 2026 | 01:08 PM
![]()
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் திங்கட் கிழமை (19) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் 'இந்தியா - இலங்கை அறிவுசார் பங்காண்மையின்' ஒரு சான்றாகவும் திகழ்கின்றது.
இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்கின்றது. அங்கு ஏறத்தாழ 1,300 பல்கலைக்கழகங்களும் 75,000 கல்லூரிகளும் உள்ளன.
இங்குள்ள யாழ்ப்பாண மாணவர்களுக்கு, முதன்மையான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஒரு மாணவருக்கு, இந்தியாவில் கல்வி கற்பது அதிகபட்ச கலாசார இணக்கப்பாட்டையும், ஒரு இணக்கமான சூழலையும் வழங்குகின்றது.
எமது பிராந்தியம் ஏற்கனவே வலுவான பழைய மாணவர் தடம் ஒன்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றின் பல விரிவுரையாளர்கள், இந்தியாவில் தமது பயிற்சியைப் பெற்ற பெருமைமிக்க ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்கள்.
இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இவை இளங்கலை, முதுகலை மற்றும் செவ்வியல் இசை, நடனம் போன்ற விசேட துறைசார் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன.
இந்தக் கண்காட்சியானது 'நம்பிக்கையின் புதிய பாலமாக அறிவு' அமையப் பெறுவதற்கான ஒரு மேடையாகும். இந்தியாவில் கல்வி கற்கத் தெரிவு செய்வதன் மூலம், எமது மாணவர்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை.
அவர்கள் எமது முழுப் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களின் இருவழிப் பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றனர்.
ஒன்றாக இணைந்து, பாக் நீரிணையை ஒரு 'அறிவுசார் நீரிணையாக' மாற்றுவோம். பகிரப்பட்ட கற்றல் மற்றும் வளர்ச்சியின் ஊடாக எமது சிறந்த அறிவாளிகள் அங்கு வளம் பெறட்டும் என்றார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.






'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!
19 Jan, 2026 | 03:59 PM
![]()
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் 3.2 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.
321 மீற்றர் நீளத்தில் 11 மீற்றர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2018-2019 காலப்பகுதியில் இப்பகுதியில் மூன்று மேம்பாலங்களை அமைக்கத் திட்டமிடப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இந்த மேம்பாலத்தின் பணிகள் தடைப்பட்டிருந்தன. குறிப்பாக, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பொலிஸ் குடியிருப்புகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக 2022 இல் நிறைவடைய வேண்டிய இப்பணிகள் காலதாமதமானதுடன், இதனால் ஆரம்ப மதிப்பீடான 2,700 மில்லியன் ரூபாயுடன் மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு, தற்போது மொத்தம் 3.7 பில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மேம்பாலமானது ஒரு வழிப் பாதையாகச் (One-way) செயற்படுவதுடன், இது கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இந்த நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு நகரை ஒரு சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, இப்பகுதியில் அகற்றப்பட்ட பொலிஸ் குடியிருப்புகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.





அறிமுகம்
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை
ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை
ஜனாதிபதி நிதியத்தில் கடும் நிதி முறைகேடுகள் : அனுமதியில்லா முதலீடுகள், அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் நிதி வழங்கல் – கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை
19 Jan, 2026 | 11:59 AM
![]()
(இராஜதுரை ஹஷான்)
2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏதேனும் நிதியை ஜனாதிபதியால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே முதலீடு செய்ய முடியும்.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிர்வாக சபையின் அனுமதியில்லாமல் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நிலையான மற்றும் குறுகிய கால முதலீடு என்ற அடிப்படையில் 944.7 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
முகாமைத்துவ கணக்காய்வில் 2024 ஆம் ஆண்டு நிர்வாக சபை ஒரு தடவை மாத்திரமே கூடியுள்ளது. அதாவது 2024.08.15 ஆம் திகதி நிர்வாக சபை கூடியுள்ளது.எவ்வாறாயினும் இந்த வைப்புகளுக்குரிய அனுமதி 2025.01.28 ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக 56 பேருக்கு மருத்துவ உதவி என்ற அடிப்படையில் 131,371,110 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிக்கான கொடுப்பனவை வழங்கும் முறை பரிசீலிக்கப்படும் முறையான விண்ணப்பம், மாத வருமானம், பிரதேச செயலாளரின் அறிக்கை, சொத்துக்கள், உயர்ந்தபட்ச மருத்துவ உதவித் தொகை வரையறை உள்ளிட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படாமல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் பிரகாரம் நிதியை கடனாக வழங்கும் சட்ட ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.இவ்வாறான பின்னணியில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியத்தின் ஊடாக முன்னாள் பிரதமருக்கு 29,809,143 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட விடயங்களுக்கமைய அந்த தொகையில் 13,748,217 ரூபா மீள அறவிடப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2025 ஜுலை மாதம் வரை அந்த தொகை மீள அறவிடப்படவில்லை என்று கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி நிதியத்தின் பணிக்குழாமினருக்கான சம்பளம் மற்றும் ஏனைய செலவுகள் நிதியத்தின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்குரிய 51,128,078 ரூபா செலவை ஜனாதிபதி செயலகவே ஏற்றுக்கொண்டுள்ளது.
அதற்கமைய மீளாய்வு ஆண்டின் இறுதி பகுதிக்குரிய விதிமுறைகள் ஜனாதிபதி நிதிய சபையினால் தயாரிக்கப்படவில்லை.அதன் காரணமாக அதிகாரங்கள் பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் இல்லாமல் செயற்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?

படக்குறிப்பு,இரான் போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு டொனால்ட் டிரம்பைக் குற்றம் சாட்டினார் ஆயதுல்லா அலி காமனெயி
கட்டுரை தகவல்
ரௌனக் பைரா
பிபிசி செய்தியாளர்
19 ஜனவரி 2026, 07:58 GMT
புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவது போலத் தெரிந்தது. அமெரிக்கா இரான் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டபோது இந்த அச்சம் மேலும் அதிகரித்தது.
மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமான அல்-உதெய்த் தளத்திலிருந்து தனது சில படைகளைத் திரும்பப் பெற கத்தார் உத்தரவிட்டது.
இரான் போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டால், அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார், இருப்பினும் வியாழக்கிழமை மாலைக்குள் மரணதண்டனைகள் ஒத்திவைக்கப்பட்டதாக இரானிலிருந்து செய்திகள் வந்தன.
அதன் பிறகு டிரம்ப், "இரானில் கொலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டங்கள் எதுவும் இல்லை," என்று கூறினார்.
வியாழக்கிழமை மாலைக்குள், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.
புதன்கிழமை எச்சரிக்கையுடன் இருந்த கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை அளவை அமெரிக்கா குறைத்தது.
புதன்கிழமை இந்தத் தளத்திலிருந்து அகற்றப்பட்ட அமெரிக்க ராணுவ விமானங்கள் இப்போது மெதுவாகத் திரும்பி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஒரு நம்பகமாக செய்தி ஆதாரத்தை மேற்கோள் காட்டித் தெரிவித்தது.
ஆனால் 'தி டெலிகிராப்' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தி அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
"குறைந்த அளவிலான வாய்ப்புகள் மற்றும் திறன்கள் காரணமாக இரான் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டு ராணுவம் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு ரகசியமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது"என்று பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிகிராப்பை மேற்கோள் காட்டி பிபிசி பாரசீக சேவை தெரிவித்துள்ளது.
அந்த செய்தியின் படி, "ஆட்சிக்கு எதிராக ஒரு தீர்க்கமான தாக்குதலுக்கு உத்தரவாதம் அளிக்க முடிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது."
ஆனால் அத்தகைய உத்தரவாதங்களை வழங்க முடியாது என்று அதிகாரிகள் என்.பி.சி நியூஸிடம் தெரிவித்தனர்.
ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய ஒரு பெரிய மோதலைத் தூண்டும் என்றும், இரானிடமிருந்து கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
தாக்குதல் நடத்தப்படுமா இல்லையா என்ற குழப்பத்திற்கு மத்தியில், ஜனவரி 11-ஆம் தேதி வெளியான 'டைம் மேகசின்' செய்தியிலும் இது போன்ற அறிகுறிகள் வழங்கப்பட்டன.
அலங்கார வார்த்தைகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், டிரம்ப் கொடுத்த வாக்குறுதிகளை எந்த ஒரு ராணுவ நடவடிக்கையாலும் நிறைவேற்ற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை என்று அந்த செய்தி கூறுகிறது.
அமெரிக்கா ஒரு அடையாளப்பூர்வமான தாக்குதலைத் தொடுத்தாலும், அது மிகவும் பலவீனமானதாக இருக்கும் என்பதால் அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது.
தற்போதைக்கு இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும், இரானின் நிலவியல் அமைப்பும் அதன் மீதான எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒரு 'தடுப்பாக' அமைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தவிர, இரான் கடந்த சில மாதங்களில் தனது பாதுகாப்பு அமைப்பிலும் தீவிர மாற்றங்களைச் செய்துள்ளது.
இரான் எவ்வளவு வலிமையானது?

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஜூன் மாதத் தாக்குதலுக்குப் பிறகு தனது ராணுவ பலத்தை கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாக இரான் கூறுகிறது (கோப்புப் படம்)
இரானிய ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி, கடந்த கால மோதல்களுக்குப் பிறகு இரான் எந்த அளவுக்குத் தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
"2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின் போது இருந்ததை விட, இன்று இரானிய ஆயுதப் படைகள் மிகவும் தயாராக உள்ளன. அந்தப் போர் இரானிய ராணுவத்திற்கு ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது. அது எங்களின் வலிமையை அதிகரித்ததுடன், வீரர்களின் பயிற்சி அளவை மேம்படுத்தியது மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தியது"என்று அமீர் ஹடாமி கூறியதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டிஏஏஎஸ் (TASS) தெரிவித்துள்ளது.
"சாத்தியமான எந்தவொரு தாக்குதலையும் தடுத்து நிறுத்தவும், இரானின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இரான் தனது ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்தியுள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான நிபுணரும், ஐசிடபுள்யூஏவின் மூத்த ஆய்வாளருமான முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இரானின் நிலவியல் அமைப்பு எப்போதும் அதற்கு சாதகமாகவே இருந்து வருகிறது என்பது உண்மைதான். கடந்த காலங்களிலும், இந்த அமைப்பினால் இரான் உத்தி ரீதியாகப் பயனடைந்துள்ளது"என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், நவீன கால போர்களில் தரைவழித் தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவு. அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் வான்வழியே தாக்குதல்களை நடத்தக்கூடிய பல ஆபத்தான ஏவுகணைகள் உள்ளன. ஆனால், ஒரு தரைவழித் தாக்குதலைத் திட்டமிடும் போது இரானின் நிலவியல் அமைப்பை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது"என்றும் குறிப்பிட்டார்.
இரானை தாக்குவது ஏன் கடினம்?

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிரம்ப் கத்தாரின் அல்-உதெய்த் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்தார் (கோப்பு புகைப்படம்)
"வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை 'சிறைபிடித்த' பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து டிரம்ப் உற்சாகமாகப் பேசினார்" என்று ஆங்கில செய்தித்தாளான தி கார்டியன் தெரிவித்துள்ளது.
"ஆனால் அமெரிக்கா உண்மையில் ராணுவ ரீதியாக எந்தத் தயாரிப்புகளையும் செய்யவில்லை. சொல்லப்போனால், இரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில மாதங்களில் குறைக்கப்பட்டன, இது அவர்களின் வாய்ப்புகளைக் குறைக்கிறது. 2025 அக்டோபருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை."
இதன் பொருள், இரானிய அரசாங்க இலக்குகளையோ அல்லது இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மீதோ அமெரிக்காவால் தனித்துத் தாக்குதல் நடத்த முடியாது என்பதாகும்.
இதைச் செய்ய அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு எதிராக இரான் ஏற்கனவே அந்த நாடுகளை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிடம் பி-2 ரக குண்டுவீச்சு விமானம் என்ற மற்றொரு வழி உள்ளது, இதனை அமெரிக்கா 2025 ஜூன் மாதம் பயன்படுத்தியது. அதுவும் இரானின் அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று இரான் கூறுகிறது.
முனைவர் ஃபஸ்ஸூர் ரஹ்மான் இதுகுறித்து கூறுகையில், "அமெரிக்கா அக்டோபர் மாதத்தில் தனது விமானம் தாங்கி கப்பல்களைத் திரும்பப் பெற்றது, இரானுக்கு சற்று நிம்மதி அளித்தது. ஆனால் இப்போது அமெரிக்கா மீண்டும் தனது விமானம் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்புகிறது. இவை தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சொல்ல முடியாது. இரானின் அண்டை நாடுகளில் தனக்குள்ள ராணுவ தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த வாய்ப்புள்ளது"என்றார்.
இரானின் நிலவியல் இருப்பிடம் அமெரிக்காவுக்கு முன்வைக்கும் சவால்

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,1980களில், நீண்ட போர் நடந்த போதிலும் இராக்கிய ராணுவத்தால் இரானை தோற்கடிக்க முடியவில்லை (கோப்பு புகைப்படம்)
இரானின் நிலவியல் அமைப்பு அதன் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.
'அட்லஸ் ஆஃப் வார்' இதழின் படி, இரான் நாட்டைச் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள வலுவான அரண்கள் எதிரிகளுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. இரான் இயற்கையிலேயே ஒரு பாதுகாப்பான அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது.
வடக்கே காஸ்பியன் கடல், தெற்கே பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகியவையும், கிழக்கு மற்றும் மேற்கே பாலைவனங்களும் மலைகளும் சூழ்ந்துள்ளன. மேற்குப் பகுதியில் சாக்ரோஸ் மலைத்தொடரும், வடக்குப் பகுதியில் எல்பர்ஸ் மலைத்தொடரும் அமைந்துள்ளன.
இவை எந்தவொரு எதிரி ராணுவத்திற்கும் பெரும் சவாலாக அமைகின்றன. வரலாற்று ரீதியாக, இந்த மலைத்தொடர்கள் படையெடுக்கும் ராணுவங்களை பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளன.
1980-களில் இரான் மற்றும் இராக் போர் நடைபெற்றது. 1980-இல் சதாம் உசேனின் படைகள் இரான் மீது படையெடுத்தன. இருப்பினும், சாக்ரோஸ் மலைத்தொடரின் கடினமான நிலப்பரப்பு காரணமாக, இராக் ராணுவத்தால் இரானுக்குள் அதிக தூரம் செல்ல முடியவில்லை.
முதலில் அஹ்வாஸ் (ஒரு முக்கியமான எண்ணெய் பகுதி) பகுதியைக் கைப்பற்றி, பின்னர் மலைகளைக் கடந்து இரானின் உட்பகுதிக்குள் நுழைய வேண்டும் என்பதே சதாம் உசேனின் திட்டமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்தது.
இயற்கை ஒரு வலிமையான அரணாக இருந்தது. அந்தப் போர் எட்டு ஆண்டுகள் வரை நீடித்தது.
இறுதியில், யாருக்கும் வெற்றி கிடைக்காமல் போர் முடிவுக்கு வந்தது.
அதேபோல், யாராவது கிழக்கிலிருந்து இரானைத் தாக்க விரும்பினால், அவர்கள் 'தஷ்ட்-இ-லுட்' மற்றும் 'தஷ்ட்-இ-கவீர்' போன்ற பரந்த பாலைவனங்களைக் கடக்க வேண்டும். இவை ஒரு பெரிய ராணுவ நடவடிக்கைக்குப் பெரும் சிக்கல்களை உருவாக்கும்.
பாரசீக வளைகுடாவில் உள்ள 'ஹோர்முஸ் நீரிணை' மிகவும் குறுகியதாக இருந்தாலும், இரான் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
இது உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% இந்த குறுகிய நீரிணை வழியாகவே செல்கிறது. எனவே, எந்தவொரு பெரிய மோதலிலும் இது இரானுக்கு ஒரு முக்கியமான ஆயுதமாகத் திகழ்கிறது.
ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், இரானால் உலகின் எண்ணெய் விநியோகத்தை முடக்க முடியும். இந்த அச்சத்தின் காரணமாகவே இரானைத் தாக்கும் முன் அதன் எதிரிகள் பலமுறை தயங்குகிறார்கள்.
அமெரிக்கா - இரான் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை ஆயுதக் கிடங்கை இரான் கொண்டுள்ளது (கோப்புப் படம்)
'குளோபல் ஃபயர்பவர்' அமைப்பின் தரவுகளின்படி, உலகின் முதல் 20 ராணுவ வலிமை கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. 145 நாடுகளில் இரான் 16-வது இடத்தில் உள்ளது.
இரானிடம் 6,10,000 வீரர்களும், 3,50,000 ரிசர்வ் படை வீரர்களும் உள்ளனர். மொத்தமாக சுமார் 9,60,000 வீரர்கள் உள்ளனர். இரானின் புரட்சிகர காவல்படை (IRGC) என்பது வழக்கத்திற்கு மாறான போர்க்கலைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தனிப் பிரிவாகும்.
இரானிடம் 551 போர் விமானங்களும் உள்ளன.
டிரோன் தொழில்நுட்பத்தில் இரான் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடற்படை பலத்தைப் பொறுத்தவரை, இரான் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் உள்ளன.
'இரான் வாட்ச்' அறிக்கையின்படி, மத்திய கிழக்கிலேயே இரானின் ஏவுகணை கையிருப்பு தான் மிகப்பெரியது.
2022-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி கூறுகையில், "இரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதில் குரூயிஸ் ஏவுகணைகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை" என்றார்.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தரவுகளின்படி, 2024-இல் இரானின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 7.9 பில்லியன் டாலர் ஆகும்.
இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.0% ஆகும்.
2023 ஆம் ஆண்டில் இரானின் இராணுவச் செலவு தோராயமாக 10.3 பில்லியன் டாலராக இருந்தது. ராணுவச் செலவினங்களில் இரான் உலகில் 34வது இடத்தில் உள்ளது.
இரான் 2025 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை 200% அதிகரித்து, அதை 16.7 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டிருந்தது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாகும், மேலும் அதன் பாதுகாப்புச் செலவும் மிகவும் அதிகம். (குறியீட்டு படம்)
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ராணுவ வலிமையில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருக்கிறது. அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது. குளோபல் ஃபயர்பவர் குறியீட்டில் அது முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவிடம் 13.28 லட்சம் வீரர்களும், 799,000 ரிசர்வ் வீரர்களும் உள்ளனர்.
மொத்த வீரர்களின் எண்ணிக்கை தோராயமாக 21 லட்சமாகக் கருதப்படுகின்றது.
2005 முதல், உலகளாவிய ஃபயர்பவர் குறியீட்டில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவரிசையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் 997 பில்லியன் டாலர் என்றும் அது மதிப்பிடுகிறது. இது அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆகும். உலகளாவிய ராணுவ செலவினங்களில் அமெரிக்காவின் பங்கு 37% ஆகும்.
இரான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ பலத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலும், இரானைத் தாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இரானைத் தாக்காததற்கு ஒரு காரணம், இரானின் எதிரிகள் இரானை கண்டு பயப்படுகிறார்கள் என்பதல்ல. இரானுக்கு எதிரான எந்தவொரு போரும் மிகவும் கடுமையான போராக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதுதான்" என்று கடற்படை முதுகலை பள்ளியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணைப் பேராசிரியர் அஃப்ஷோன் ஓஸ்டோவர் 2024 இல் கூறினார்.
"அமெரிக்காவை எதிர்த்துப் போராட இரானிடம் உள்ள சிறந்த ஆயுதங்கள் ஏவுகணைகளும் டிரோன்களும் தான். இரானின் போர் விமானங்கள் நீண்ட காலமாகவே செயல்படவில்லை. அதன் கடற்படை சக்தியும் சராசரியாகவே உள்ளது" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு இரான் பதிலடி கொடுத்தால், அது ஏவுகணைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. மறுபுறம், அமெரிக்கா கணிசமான ராணுவ சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் இஸ்ரேலின் ஆதரவையும் கொண்டுள்ளது. இஸ்ரேல் மத்திய கிழக்குப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது. அமெரிக்காவிற்கு எல்லா வகையிலும் இஸ்ரேலால் உதவ முடியும்" என்றும் விவரித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்
மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்
மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்
Published By: Digital Desk 1
19 Jan, 2026 | 12:09 PM
![]()
(இராஜதுரை ஹஷான்)
புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது. மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும்.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு - தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் 'புலதிசி கடுகதி புகையிரதம்' மற்றும் 'உதயதேவி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான 'இரவு தபால் புகையிரத' சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று முதல் அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை - காங்கேசன்துறை வரையும் 'யாழ் ராணி' புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது.
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி
சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி
சீனாவில் 4 ஆவது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் வீழ்ச்சி
Published By: Digital Desk 3
19 Jan, 2026 | 03:48 PM
![]()
சீனாவில் 4-வது ஆண்டாக 2025-ம் ஆண்டிலும் இந்த பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, சீன தேசிய புள்ளியியல் அதிகாரசபை வெளியிட்ட தகவலை அடிப்படையாக கொண்டு இன்று வெளியான செய்தியில், 2025-ம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 5.63 என்ற அளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து உள்ளது.
2023-ம் ஆண்டில் இது 1,000 பேருக்கு 6.39 குழந்தை பிறப்புகள் என்ற அளவில் இருந்தது என தெரிவிக்கின்றது. எனினும், 2024-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் சற்று அதிகரித்து இருந்தது.
ஆனால், இது நிலைமையில் இருந்து மீண்டதற்கான பொருள் இல்லை. ஏனெனில், 2016-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவடைந்து வந்துள்ளது.
சீன மக்கள் தொகை கடந்த ஆண்டிலும் குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் 79.2 இலட்சம் குழந்தைகள் பிறந்தன. 1.131 கோடி இறப்புகள் பதிவாகி இருந்தன. இதனால், 33.9 இலட்சம் பேர் மக்கள் தொகையில் குறைந்துள்ளனர்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என முதல் இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த நிலைமையில் சீனா உள்ளது.
எனினும், 2025-ம் ஆண்டில் சீன பொருளாதாரம் வருடாந்திர இலக்கான 5 சதவீத வளர்ச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள், உள்நாட்டில் குறைவான நுகர்வு என்ற சூழலிலும், ஏற்றுமதியால் சீனா இந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.
சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகை அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. இதன்படி, 3 வயதுக்கு குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு மத்தியில் தெரிவித்தது. கடந்த 2024-ம் ஆண்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு காதல் கல்வி பற்றி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
திருமணம், காதல், குடும்பம் மற்றும் குழந்தை பிறப்பு பற்றி நேர்மறையான விசயங்களை கற்று தரும்படியும் அறிவுறுத்தி இருந்தது. இதுதவிர, திருமணம் செய்து கொள்ளுங்கள். கையில் பணம் பெற்று கொள்ளுங்கள் என ஊக்க தொகைகளையும் அறிவித்தது. எனினும், அரசின் பல்வேறு திட்டங்களும் பெரிய அளவில் பலன் பெற்று தரவில்லை.