Aggregator
கருத்து படங்கள்
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பங்கேற்காததற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
தங்காலையில் தினமும் தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இருப்பினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த போராட்டப் பேரணியில் தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும், அதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் தான் பங்கேற்காதது சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று (10) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ, எதிர்க் கட்சிகளால் நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.
வரவிருக்கும் கூட்டத்தை வெற்றிகரமாக்கவும், கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க தேவையான வேலைத்திட்டம் குறித்து விவாதிக்கவும் தான் வந்ததாக அவர் கூறினார்.
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி
நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 170 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ பீடத்திற்கு பேருந்து!
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!
அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Athavan News
அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
லக்ஸ்மன்
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்திருந்த காலத்திலேயே அவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்கா மன்னிப்புக்கள் கோரியிருந்தனர்.
அவற்றுக்கான காரணங்களையும் கூறியிருந்தனர். அதை அடையாளம் காண்பதில் தவறுகள் நிகழ்ந்தனவா? அதே நேரத்தில், பிராயச் சித்தங்களையும் செய்திருந்தனர் என்றே கொள்ள வேண்டும். ஆனால், அரசாங்கமோ, ஏனைய தரப்புகளோ தங்களால் கவனமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக கூட இதுவரை மன்னிப்புக் கோரவில்லை.
அதற்குப் பதிலாக நியாயப்படுத்தல்களை செய்து வருகின்றனர். அத்துடன், மூடி மறைக்க முயல்கின்றனர். மௌனமாக இருந்திருக்கின்றனர். இந்த நேரத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு தமிழர்களின் மன்னிப்புக் கோரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கும்
இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால் அமைதிப்படையாக நாட்டுக்குள் வந்த இந்திய இராணுவம் வடக்கு - கிழக்கில் மேற்கொண்ட அட்டூழியங்கள் கணக்கிலடங்காதவை.
அவை தொடர்பில் இந்திய அரசாங்கம் மன்னிப்பு கோருவதை விடுத்து மீண்டும் வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்யவே ராஜீவ் காந்தி திட்டமிட்டிருந்தார்.
அதனால் அவர் தமிழ்நாட்டின் சிறிபெரும்புத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, விபரீதம் நிகழ்ந்தது.நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரபாகரன் அது ஒரு துன்பியல் சம்பவம் எனக் கூறியிருந்தார்.
இந்தப் பதிலை அதற்கான மன்னிப்புக் கோரலாகவே அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனலாம்.விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்கள் மீதான விரோத, எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த காலங்களில் சகோதரப் படுகொலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் பல கொடுமைகளும் நிகழ்ந்தன. ஆனால்,
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கொள்கையுடன் இருந்த சகோதர இயக்கங்கள், அமைப்புகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.
அந்தக் கூட்டமைப்பினை தமிழ் மக்களின் அரசியல் தரப்பாகவும் வெளிப்படுத்தியிருந்தனர். அந்தக் கூட்டமைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி கவனமாகத் திட்டமிட்டுக் குலைத்து விட்டிருப்பது வேறு கதை. அதன் பின்னர் முஸ்லிம் மக்கள் தொடர்பான விடயத்தில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து.
இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள், தவறுகளுக்காகச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேச்சுக்களை நடத்தி உடன்பாடுகளை ஏற்படுத்தி அதற்கான பரிகார நடவடிக்கைகள் எடுத்திருந்தார்.
இப்போது வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தூக்கிப்பிடித்து பெரிதாக்கி நாட்டில் இருக்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவு நிலையினைக் குழப்பி நல்லிணக்கத்திற்குப் பங்கத்தினை ஏற்படுத்த முனையும் சிலர் தேவையானவற்றை விடுத்து வேறு விடயங்களைத் தூக்கிப்பிடித்து பிழைகளை மூடி மறைக்க முனைவதாக சொல்லாம்.
இலங்கை அரசாங்கங்களைப் பொறுத்தவரையில் இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் தங்களது பிழைகள் குறித்து எந்த இடத்திலும் மன்னிப்புக் கோரவில்லை. அதே நேரத்தில், அதற்கான நியப்படுத்தல்களையும் மூடி மறைத்தல்களையுமே மேற்கொண்டு வந்திருக்கிறது.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் தங்களுக்கான சுயநிர்ணய உரிமைக்காக
அறம், அகிம்சை, ஆயுதம், இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்ற இனத்திற்கு
எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற தோரணையில் அரசாங்கம் நடந்து வருகிறது.
இது உண்மையில் பாரபட்சமே. உலகின் அனைத்து நாடுகளும் பாராமுகமாகவும், அறியாத விடயம் போலவும் இருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்புகளும் வெளிப்படுத்தல்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் தங்களது நாட்டுக்கான இராஜதந்திர செயற்படுத்தலைச் சிறப்பாக மேற்கொள்கின்றனர் என்பதே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர்கள் நடைபெறுவதும், மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடப்பதும். மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கைகளை வெளியிடுவதும் ஏதோ கண் துடைப்புகள் போலவே இருந்து வருகின்றன. இறுதியில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவற்றினால் எதுவும் நிகழ்வதில்லை என்றே கொள்ள முடிகிறது.
கால இழுத்தடிப்பு மாத்திரமே நடைபெற்று வருகிறது.யுத்தம் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற காட்சிப்படுத்தல்கள் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் அதற்கான பெறுபேறுகளைக் காணவில்லை.
இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் நாட்டுக்குள் வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகின்றன. அதே நேரத்தில், நாட்டிற்குள் நிலை பேறான அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம், சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலை பேறான மீள்குடியேற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்னமும் அவை நிறைவுக்கு வராதவைகளாகவே இருக்கின்றன.
நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு, மத ரீதியான முரண்பாடுகள்
பற்றிய எண்ணக்கருக்கள் போன்றே சமாதானம் மற்றும் மோதல் தீர்வு பற்றிய தலைப்புகள் என்பன அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டத்தில் உள்ள ஜனரஞ்சகமான பிரகடனங்கள் மற்றும் செயற்றிட்டங்களாக அமைகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் மூலம் இவ்வாறான விடயங்கள் முன்னிலைக்கு எடுத்து விடப்படுகின்றன.
இருந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தாமதங்களே ஏற்படுகின்றன. அதற்குத் தொடர்ச்சியற்ற தன்மையும், இடையீடுகளுடனான சிக்கல்களும் காரணமாகும்.
இந்த நிலையில்தான், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவாக, தமிழ்மு ஸ்லிம் நல்லிணக்கம் மற்றும் இணைந்த வாழ்வை வலியுறுத்தும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன.
நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் வரலாற்றுப் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வகையான நிகழ்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
யூத அமைப்பொன்றிடமிருந்தும் நிதியைப் பெற்று வரும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது அவ் அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவே அறியமுடிகிறது.
இந் நிகழ்வுகள் வடக்கில் மன்னிப்புக் கோரலாகவும் கிழக்கில் நீதிக்கும் மனித உரிமைக்கான குரலை இணைக்கும் வகையில் கலந்துரையாடலாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளை ஏன் இந்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு
இந்த வேளையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி இந்த இடத்தில் உருவாகிறது. இதற்கு நிதி வழங்கும் நிறுவனத்தின் அறிவுறுத்தலே காரணமாகும்.
இலங்கையின் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.
இந்தச் சிக்கலைத் தனித்து வேறு ஒரு திசையில் அவர்களைத் திருப்பி விடுவதற்காகத் தமிழர்கள் பக்கமாகத் திசை திருப்பிவிடுவது முதல் காரணமாக இருக்கலாம். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு மாற்றான சர்வதேச தலையீடற்ற செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான உதவி முயற்சியாகவும் இருக்கலாம்.
சிலவேளைகளில் அரசாங்கத்தை இஸ்ரேலியர்களின் செயற்பாடுகளுக்கு உதவக்கூடியதாக மாற்றுவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த வெளியேற்றத்தில் உள்ள நல்லவை, கெட்டவை என ஆரம்பத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தே அதற்கான முடிவுக்கு
வந்தாக வேண்டும்.
வெறுமனே எழுந்தமானமாக நிகழ்ச்சித்திட்டங்கள் தேவை, நிதிகள் தேவை என்பதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் இவ்வாறான விடயங்களை கையிலெடுப்பது தவறாகும்.
இலங்கையில் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், அவர்களின் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கின்ற தீர்வானது நல்லிணக்கமாகவும் நீதியாகவும் அமைய வேண்டும். இல்லாது போனால், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகின்ற உள்ளகப் பொறிமுறை ஏற்பாட்டை அனைவரும் ஏற்க வேண்டிய நிலையே அனைவருக்கும் ஏற்படும். அதனைத் தவிர ஒன்றுமில்லை.
இவ்வாறிருக்கையில் தான் மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாதிக்கப்பட்ட, அடக்கப்பட்ட தரப்புக்கானதா? என்ற கேள்வி தோன்றும். அது மன்னிப்பு கோர வேண்டியவர்கள் அதற்குத் தயாரா? இல்லையானால் இந்தக் கேள்விக்கான பதிலை யாரிடமிருந்து எதிர்பார்ப்பது என்பதாக தமிழர்கள் பக்கம்தான் மாறி நிற்கும்.
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி?
டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு
ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை
ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை
ஆபத்துமிக்க வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவை
11 Nov, 2025 | 10:31 AM
![]()
ஆபத்துமிக்க திருகோணமலை, வெருகல் - புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் திங்கட்கிழமை (10) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
ஆபத்துமிக்க புன்னையடி இழுவைப் பாதையினை வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதற்கு இப்பாதையூடாக சென்று வருகின்றனர்.
புன்னையடியில் பாலம் இல்லாமையினால் சுமார் 60 மீற்றர் தூரம் இம் மக்கள் இழுவைப் பாதை மூலம் அச்சத்துக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
இவ்வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்து போன்று இன்னுமொரு விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் புன்னையடியில் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி இவ் கள விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்திற்கு பேருந்து!
மருத்துவ பீடத்திற்கு பேருந்து!
மருத்துவ பீடத்திற்கு பேருந்து!
adminNovember 11, 2025

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவ பீடம் வரையில் அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்கள் விடுதி, மருத்துவ பீடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள, யாழ். நகர் பகுதியில் போதனா வைத்திய சாலைக்கு அருகில் காணப்படுகிறது.
அத்துடன் மாணவர்கள் உள்ளக பயிற்சிகளுக்காக போதனா வைத்திய சாலைக்கு மருத்துவ பீடத்திற்கு வர வேண்டிய தேவையுள்ளது.
இதனால் மாணவர்கள் போக்குவரத்தில் பல இடர்களை எதிர்கொண்டு வந்தனர்.
அந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, மருத்துவ பீடம் வரையில் பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.