2 months ago
2026 வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு; ரூ. 1,757 பில்லியன் பற்றாக்குறை Published By: Vishnu 07 Nov, 2025 | 08:32 PM 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்த்தப்படும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சுங்க வரிக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார். அவர் உரையில், நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டின் நிலையை இவ்வாண்டின் இறுதிக்குள் மீண்டும் அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ. 5,300 பில்லியனாகவும், மொத்தச் செலவு ரூ. 7,057 பில்லியனாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரவு–செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ. 1,757 பில்லியனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ற வழக்கமான தேநீர் விருந்துபசாரம் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதனிடையே, இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (08) தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும் எனவும், வாக்கெடுப்பு நவம்பர் 14 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வாசிப்பு (குழுநிலை விவாதம்) நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229802
2 months ago
பெரியளாவில் எனக்கு இவை பற்றி போதிய அறிவில்லை கோசான். முயன்று பார்கின்ரேன். இங்குள்ள தமிழர்களிடம் கேட்டு பார்கின்றேன். சுயஸ் வந்தல்ல் என்னை சந்திக்கலாம். மிக அழகிய இடம் பழைய பிரன்சு வீடுகளை இன்னும் காணலாம்.
2 months ago
விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி 07 Nov, 2025 | 03:17 PM விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வரவு - செலவுத்திட்ட நேரலையை பார்வையிட https://www.virakesari.lk/article/229638 https://www.virakesari.lk/article/229742
2 months ago
Nov 9, 2025 - 10:59 AM அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QRதாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம். அவ்வாறு இல்லையெனில், பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம். அதன்படி, அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும் என்றும், பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmhr9xd7401hiqplptimpzqzk
2 months ago
Nov 9, 2025 - 10:59 AM

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QRதாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம்.
அவ்வாறு இல்லையெனில், பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி, அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும் என்றும், பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
https://adaderanatamil.lk/news/cmhr9xd7401hiqplptimpzqzk
2 months ago
இந்த திரியை வாசித்த போது இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டாலும், குளோபல் தமிழ் நியூஸ் வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையிலேயே கருத்துகள் பரிமாறப்படுவதை கண்டு கொண்டேன். இந்த பெண்மணிக்கு இந்த ஆடவரை முன்னமே தெரிந்துள்ளது, அவரை நம்பி போன இடத்தில் எதோ விபரீதம் நடந்துள்ளது என - செய்தியின் அடிப்படையில்தான் கருத்துகள் வந்துள்ளன. வவுனியாவுக்கு திருமணத்துக்கு போவதாக சொல்லி போன குலதீபா அம்மையாருக்கு சங்குபிட்டியில் என்ன வேலை? என்பது நியாயமான கேள்விதான். ஒன்றில் தவில்காரர் வவுனியா பஸ்சில் இருந்து அவரை தர தர என இழுத்து போயிருக்க வேணும். அப்படி என்றால் அது செய்தியாகி இருக்கும். அல்லது கேரதீவு- பூநகரி இடையே இவராக இறங்கி இருக்க வேண்டும். பிகு எழுதிய பாங்கை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் கருத்தின் போக்கு நியாயமானதே.
2 months ago
Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 12:20 PM சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார். அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். 1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அல்-ஷாரா உரையாற்றினார். மே மாதம் ட்ரம்பின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் போது இடைக்காலத் தலைவர் ட்ரம்பை முதன்முறையாக ரியாத்தில் சந்தித்தார். இந்த மாத தொடக்கத்தில், சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக், அல்-ஷாரா இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் "நம்பிக்கையுடன்" கையெழுத்திடும் என தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அல்-ஷாராவை உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாகும். https://www.virakesari.lk/article/229897
2 months ago
Published By: Digital Desk 3
09 Nov, 2025 | 12:20 PM

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார்.
அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அல்-ஷாரா உரையாற்றினார்.
மே மாதம் ட்ரம்பின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் போது இடைக்காலத் தலைவர் ட்ரம்பை முதன்முறையாக ரியாத்தில் சந்தித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக், அல்-ஷாரா இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் "நம்பிக்கையுடன்" கையெழுத்திடும் என தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அல்-ஷாராவை உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாகும்.
https://www.virakesari.lk/article/229897
2 months ago
ஆண்கள் மிக வெளிப்படையாக பாலியல் உணர்வுகளை வெளிபடுத்துவார்களாமே? எனது இங்லிலாந்தில் பிறந்த பஞ்சாபி நண்பி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சியம் அல் ஷைக் போனார். ஆண் நண்பர் அருகில் அமர்ந்திருக்கும் போதே தன்னை அணுகி நம்பர் கேட்டதாகவும், சிலர் ஆண் நண்பரிடமே பேச்சு கொடுத்தாயும் கூட கூறினார். அதே போல் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பாலியல் சீண்டல்களும் அதிகம் என்றார். இவை உண்மைதானா. பிகு அங்கே நிற்கும் போது அருகே ஜோர்டானில் சில இடங்களையும் போய் பார்த்து வாருங்கள். பண்டைய ரோமுக்கு நிகரான பெட்றா நகரம், வாடி ரம் என அழைக்கப்படும் பாலைவன சோலை, ஓட்டமன் சாம்ராஜத்தால் கட்டப்பட்டு, லோரண்ஸ் ஆப் அரேபியா துணையுடன் அரபு கிளர்சியாளர்களால் அழிக்கப்பட்ட ரயில் பாதை, யேசு ஞானஸ்தானம் பெற்ற ஜோர்தான் நதி என இன்னொரு லிஸ்ட் வைத்துள்ளேன்😂.
2 months ago
சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி Nov 9, 2025 - 03:29 PM இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (9) அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் திருவுடல் இன்று (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -கொழும்பு நிருபர் க்ளின்டன்- https://adaderanatamil.lk/news/cmhrjkhd001hgo29ng1mous6i
2 months ago
பிகு நாம் இப்போ கைக்கொள்ளும் “இனம்” என்ற ஒற்றை வரைவிலக்கணத்துள் அரேபிய வருகைக்கு முன்னான பண்டைய எகிப்தியர்களை உள்ளடக்க முடியாது என்பதே துறைசார் ஒருமித்த கருத்து. அவர்கள் வட ஆபிரிக்காவுக்குரிய தனித்துவத்துடன், நூபியன், லெவண்ட் மக்கள் மற்றும் பலவகை தோல் நிறங்கள் சேர்ந்த ஒரு இனக்குழு கூட்டே இவர்கள். பின்னாளில் வந்த எகிப்திய அழகி கிளியோபட்றா உண்மையில் கிரேக்கத்தின் மசிடோனியா அடியில் வந்தவர்.
2 months ago
ஆபாச காணொளிகளை பதிவு செய்த தம்பதி கைது Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:51 PM ஆபாச காணொளிகளை பதிவு செய்து பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றிய திருமணமான தம்பதி நுகேகொடை சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் எனவும், மனைவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உளவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை (08) ராஜகிரியவில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கீழ் தளங்களில் வசித்து வந்துள்ளனர். குறித்த தம்பதியினால் பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் 334 ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் அவர்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ததுள்ளனர். அதன்படி, அவர்கள் மாதத்திற்கு எட்டு வீடியோக்களை வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.150,000 முதல் ரூ.200,000 வரை சம்பாதித்ததாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக பணம் செலுத்தப்பட்டதாகவும் தம்பதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரும் வேலை இன்மையால் நிதி நெருக்கடியை சந்தித்ததன் பின்னர், இந்த காணொளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இலங்கைக்குள் இந்த இணையத்தளம் அணுக முடியாமல் இருந்தமையினால் தங்கள் அடையாளங்களை எவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என தம்பதியினர் நம்பினர் இருந்தனர். தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். https://www.virakesari.lk/article/229915
2 months ago
ஆக்டோபர் 6 நகரம், கீசா, சுயஸ், கெய்ரோ, அலக்சாண்டிரியா என ஒரு 10 நாள் திட்டம் ஒன்று தயாரித்துள்ளேன். பண்டைய தமிழர் தொடர்பு உள்ள இடங்கள் பற்றிய தகவல்கள தந்துதவ முடியுமா?
2 months ago
உயிரியல், மரபியலில் பெரும் பாய்ச்சலை ஆரம்பித்த, டி என் ஏ யின் டபிள் பீலிக்ஸ் கட்டமைப்பை கண்டுபிடித்த மூவரில் ஒருவர். பிற்காலத்தில் குறிப்பாக 2019 இல் ஈயூஜினிக்ஸ் எனப்படும், இனத்துக்கும் புத்தி கூர்மைக்கும் தொடர்பு உள்ளது எனச்சொல்லும் வகையான கருத்துக்களை சொல்லி, அறிவுசார் சமூகம் இவரை ஒதுக்கிவைத்தது. ஆபிரிக்கர்கள், ஏனையோரை விட புத்தியில் பிந்தங்கியோர் என்பது இவர் நிலைப்பாடு. யாழ்பாணத்தமிழருக்கு மூளையில் ஒரு எக்ஸ்ரா மடிப்பு உள்ளது என நம்பும் நம்மவர்களும் உளர் அன்றோ😂.
2 months ago
உங்களுக்கு எகிப்தில் வேலேயே கொண்டாட்டம் போல. மத்திய கிழக்கு (நாடுகள்) பொதுவாக மதிப்பது மேற்கு நாட்டவரை. இஸ்ரேல் உம் இதில் உள்ளடக்கம். (இதே போக்கு ஜப்பான் இலும் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஏதாவது அறிந்தால் சொல்லவும்) ஆனால், ஈரான், ஈராக் எல்லோருக்கும் மதிப்பு கொடுப்பதாக (கேள்விப்பட்டது).
2 months ago
'கருணை பொழியும் கதிர்காம முருகா' கருணை பொழியும் கதிர்காம முருகா கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா! கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன் கண்கள் இரண்டும் அழகில் மயங்குது! சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள் சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்! சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று! கண்களில் ஒரு காதல் தேடல் கரை புரண்டு ஓடுது மனதில்! கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்! உன்னைக் காண தனிமை ஏங்குதே ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே! வள்ளி நீயோ முருகன் நானோ வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'கருணை பொழியும் கதிர்காம முருகா'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32280545221594040/?
2 months ago
'கருணை பொழியும் கதிர்காம முருகா'
கருணை பொழியும் கதிர்காம முருகா
கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா!
கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன்
கண்கள் இரண்டும் அழகில் மயங்குது!
சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள்
சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்!
சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட
சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று!
கண்களில் ஒரு காதல் தேடல்
கரை புரண்டு ஓடுது மனதில்!
கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே
கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்!
உன்னைக் காண தனிமை ஏங்குதே
ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே!
வள்ளி நீயோ முருகன் நானோ
வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
'கருணை பொழியும் கதிர்காம முருகா']
https://www.facebook.com/groups/978753388866632/posts/32280545221594040/?
2 months ago
பொதுவாக ஆளும்கட்சியிடம் இருந்து மக்கள் எதிர்பார்ககும் அனுகூலங்களையே கூறினேன். அது பொதுவான அனுகூலங்களாகவும் இருக்கலாம் தனிப்பட்ட அனுகூலங்களாகவும் இருக்கலாம். தீவிர தமிழ் தேசியம் பேசி வயிறு வளர்ககும் பல அரசியல்வாதிகள் புலம் பெயர் தமிழ் தேசியர்கள் கூட கூட தமது சொந்த நலன்கள் என்று வரும் போது ஆளும்கட்சியுடன் நல்லுறவை பேணி தமது நலன்களை காப்பாற்றிக் கொள்ளும் போது சாமான்ய மக்கள் அப்படி செய்வதில் தவறில்லை.
2 months ago
நீங்களாவது நின்று கவனித்தீர்களே அதற்கு நன்றி satan ........ ஆனால் இங்கு நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும் ......... ஏராளமான பாடல்களை நாங்கள் சாதாரணமாக கேட்டுக்கொண்டு கடந்து விடுகின்றோம் . ........அவற்றில் நிறைய கவிதைநயம் பொதிந்த வரிகள் உள்ளன ......அவற்றை இப்படித் தனியாக படிக்கும் போதுதான் அனுபவிக்க முடியும் . ........இது யாழ் அந்தப் பாடலாசிரியருக்குத் தரும் மரியாதை + கௌரவம் ......... தினமும் இங்கு வாருங்கள் திகட்டாத விருந்து தயாராக இருக்கு ........! 😂
2 months ago
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்கள் கொழும்புக்கு ; கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய் adminNovember 9, 2025 கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட காவல்துறைக் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்கு சொந்தமான இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்தனையும் கொழும்புக்கு அழைத்து செல்ல காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடைய காரினை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு , பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளனர். சந்தேகநபர்கள் காரினை வாடகைக்கு பெற்றே வடக்கு நோக்கி தப்பி சென்றதை அறிந்தகாவல்துறையினர் , காரினை வாடகைக்கு கொடுத்த நிறுவனத்தினை கண்டறிந்து , அவர்களிடம் இருந்து கார் தொடர்பிலான தகவல்களை பெற்று இருந்தனர் அதன் அடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த தடங்காட்டியின் (GPS) உதவியுடன் காரினை கண்காணித்த வேளை கார் , மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பினை சேர்ந்த காவல்துறைக்குழு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர் , காரினை மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர். அதனை அடுத்து காரினை மீட்டகாவல்துறையினர் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன் அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயினையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று இருந்தனர். வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில் காரில் குளிரூட்டி (AC) வேலை செய்யவில்லை என அதனை திருத்தம் செய்யவே காரினை கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , காரினை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர். அதேவேளை காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர். காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும் , கைது செய்யப்பட்ட பெண் , கைது செய்யப்பட்ட ஆணொருவரின் காதலி எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில் கொழும்பில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த காவல்துறை விசேட குழு , கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/222472/