Aggregator
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசாராக நியமனம்
07 Nov, 2025 | 01:25 PM
![]()
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர் ஒருவர் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.
ஜனாதிபதி சட்டத்தரணி நீதியரசர் எஸ்.துரைராஜா, 1988 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தில் பதிவுபெற்று, 1989 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.
இவர் நீதித்துறைக்கு தரமுயர்த்தப்படுவதற்கு முன்னதாக மேலதிக மன்றாடியார் தலைமையதிபதி நிலைவரையில் பல பதவிப்படிகளை கடந்து வந்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவரது பதவிக்காலத்தில், அதிகாரமிக்கவர்கள் புரிந்த குற்றங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு உயர்மட்ட குற்ற வழக்குகளில் வாதாடியுள்ளதுடன் பல விசேட வழக்காடல் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார்.
இவர் தனது சட்டமாணி பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் சட்ட முதுமாணி பட்டத்தினை ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.
பாரிஸ்டராகவும் சொலிசிட்டராகவும் உள்ளீர்க்கப்பட்ட இவர் பிஜி குடியரசில் நீதியரசாகவும் பணியாற்ற நியமிக்கப்பட்டார். இலங்கை நீதித்துறையின் பெருமைமிகு வரலாற்றிலேயே, அப்போதைய இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியினால், இந்திய வம்சாவழியினரில் நியமிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணி இவராவார் என்பதுடன் அவ்வருடமே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டில், இவர் தற்போது அதி சிரேஷ்ட நீதியரசராக பணியாற்றுகின்ற உச்ச நீதிமன்றத்திற்கு பதவியுயர்த்தப்பட்டதுடன் அவருடைய நீதித்தொழிலில் வழங்கியுள்ள பல அதிமுக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கலாக, 300 இற்கும் மேற்பட்ட தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார்.
நீதிமன்றங்களுக்கும் அப்பால், நீதியரசர் துரைராஜா அவர்கள் சட்டக் கல்வி மற்றும் புலமைப்பரிசில்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இலங்கை கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவையின் உறுப்பினராக விளங்கும் இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கை மற்றும் கலாநிதி கற்கை நிகழ்ச்சித்திட்டங்களின் விரிவுரையாளராகவும் மதிப்பாய்வாளராகவும் காணப்படுகின்றார்.
சட்டம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் குறித்து பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சஞ்சிகைகளில் எண்ணிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டமா அதிபர்கள் மற்றும் மன்றாடியார் தலைமையதிபதிகளின் மாநாட்டிற்கு, இந்தியாவின் சட்டமா அதிபரின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் விசேட அதிதியாக அழைக்கப்பட்ட மிகஉன்னத கௌரவத்தினையும் நீதியரசர் அவர்கள் பெற்றிருந்தார்.
இந்நிகழ்வில், இந்தியாவின் சனாதிபதியும் பிரதமரும் முறையே பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டிருந்தனர். பொதுநலவாய நாடுகளிடையே சட்டக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தி வளப்படுத்தும் பொதுநலவாய நாடுகளின் சட்டக் கல்வி சங்கத்தின் போசகராகவும் காணப்படுகின்றார். அண்மையில், இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
1802 ஆம் ஆண்டில் இலங்கையின் மீயுயர் நீதிமன்றங்கள் தோற்றம்பெற்றதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என இரண்டிற்கும் நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவழித் தமிழர் இவரேயாவார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசாராக நியமனம் | Virakesari.lk
முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு
முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு
07 Nov, 2025 | 04:10 PM
![]()
முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.
அதன் பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றுவருகிறது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு | Virakesari.lk
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி
07 Nov, 2025 | 05:13 PM
![]()
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி | Virakesari.lk
வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி
வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி
07 Nov, 2025 | 06:55 PM
![]()
பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு பண்ணையிலுள்ள சுகாதாரக் கிராமத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.11.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது.
சுதேச மருத்துவம் என்பது ஒரு சாதாரண சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். நமது மண்ணின் செடிகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் தலைமுறைகளின் அனுபவ ஞானத்தின் அழகிய சங்கமமே இந்த சிகிச்சை முறை. இந்த மரபு தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படவேண்டும்; புதிய தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறப்படவேண்டும்; அதில் நீங்கள் வகிக்க உள்ள பங்கு மிகப் பொறுப்பானதும் பெருமைமிக்கதுமானதாகும்.
எமது நோக்கம் தெளிவானது — மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சுகாதார சேவை சென்றடைய வேண்டும். நகர மையங்களில் மட்டுமல்ல தொலைதூர கிராமங்களின் கடைசிக் குடியிருப்புகளுக்கும் அது கிடைக்க வேண்டும். இந்தப் பயணத்தில், ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மக்களுக்குச் செல்லக்கூடிய மிக அருகாமையான நம்பிக்கையான மருத்துவ சேவை ஆளுமைகளாக இருப்பீர்கள்.
உங்கள் சேவை ஒரு மருந்தளிப்பு அல்ல — அது ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை, ஒரு மனிதநேயம். இன்று நீங்கள் பெறும் நியமனம் ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இது ஒரு மக்கள் சேவைக்கான உறுதி. மக்கள் உங்களை நம்பி வரும்போது, அந்த நம்பிக்கையை நீங்கள் காக்க வேண்டும்.
இதுவரை பல துறைகளில் மக்கள் சேவை பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நன்கு அறிவோம். நீங்கள் அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இல்லாமல், அத்தருணத்தை மாற்றும் தலைமுறையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நோயாளியையும் சந்திக்கும் போது, 'இந்த நிலை நான், அல்லது எனது குடும்பம் என்றால் நான் எப்படி அணுகுவேன்?' என்று நீங்கள் உங்களிடம் கேளுங்கள். அந்த ஒரு கேள்வியே உங்களை சிறந்த சேவை வழங்கும் வழியில் நடத்தி செல்லும்.
வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தை, மக்கள் சேவைக்கு மிக நெருக்கமான, அணுகத்தக்க மற்றும் செயல்திறனான இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண நிர்வாக அலுவலகங்களை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மட்டுமே வைத்திருக்காமல், மாகாணம் முழுவதுக்கும் அணுகுமுறையை சமமாக்கும் வகையில் பல திணைக்களங்கள் நிலப்பரப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் காணித் திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களம் செயல்பட்டு வருகின்றதும் அதன் எடுத்துக்காட்டுகளாகும். இதேபோன்று, சுதேச வைத்தியத்துறையையும் மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் மையத்திலேயே நாம் அமைப்போம்.
நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட வாழ்த்துகிறேன், என்றார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி | Virakesari.lk
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
ஏன் இந்தியர்களை குறி வைக்கிறார்கள்?
ஏன் இந்தியர்களை குறி வைக்கிறார்கள்?
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் - சுருக்கம்
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.