Aggregator

"உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

1 month 3 weeks ago

"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 12:54 PM

image

காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன.

சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம்  மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் காலையில்  முன்னரை விட மோசமான நிலையிலேயே கண்விழிக்கின்றனர் என சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

gaza_aid_2025_july.jpg

இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகை தற்போது காசா மக்களை பட்டினியால் வாட்டிவதைக்கும் நிலையில் மனிதாபிமான பணியாளர்களும் பட்டினிகிடப்பவர்களின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர்.

தங்கள் குடும்பத்தவர்களிற்கு உணவை பெறுவதற்கான முயற்சியில் சுடப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

மனிதாபிமான உதவிகள் தற்போது முற்றாக முடிவடைந்துள்ள நிலையில் தங்களின் பணியாளர்கள் வலுவிழப்பதை மனிதாபிமான அமைப்புகள் கண்முன்னால் பார்க்கின்றன.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மனிதாபிமான அமைப்பின் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் 109 சர்வதேச அமைப்புகள் பரவும் பட்டினி நிலை குறித்து எச்சரிப்பதுடன் உலக நாடுகளை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றன.

காசாவிற்கான அனைத்து தரைவழிப்பாதையையும் திறவுங்கள்.

உணவு, சுத்தமான நீர், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றின் விநியோகம்  கொள்கை ரீதியிலான ஐநா பொறிமுறை மூலம் மீள இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள்.

முற்றுகையை முடிவிற்கு கொண்டுவந்து யுத்த நிறுத்தத்திற்கு இணங்குங்கள்.

ஒவ்வொரு நாள் காலையிலும் ஓரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது - இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்பதே அது என்கின்றார் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதியொருவர்.

உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஜூலை 13ம் திகதி வரை உணவுதேடும்போது 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா உறுதி செய்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சோர்வடைந்த பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்துள்ளன.

gaza_foodddd.jpg

ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட மிக சமீபத்திய  இடம்பெயர்வு உத்தரவு பாலஸ்தீனியர்களை காசாவின் மொத்த நிலப்பரப்பில் 12 வீதத்திற்குள் மட்டுப்படுத்துகின்றது. தற்போதைய சூழ்நிலை காசாவில் செயற்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது என உலக உணவு திட்டம் தெரிவிக்கின்றது.

போர் தந்திரோபாயமாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும்

காசாவிற்கு வெளியே களஞ்சியங்களிலும் காசாவிற்குள்ளேயும் பெருமளவு உணவுப்பொருட்கள் குடிநீர் போன்றவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. மனிதாபிமான அமைப்புகள் அவற்றை விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தாமதங்கள் போன்றவை பெரும் குழப்பம், பட்டினி, உயிரிழப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது.

உளவியல் சமூக ஆதரவை வழங்கும் ஒரு உதவி பணியாளர் குழந்தைகள் மீதான பேரழிவு தாக்கத்தைப் பற்றிப் பேசினார்: "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் குறைந்தபட்சம் சொர்க்கத்திலாவது உணவு இருக்கிறது."

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வரலாறு காணாத அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான நீர் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, சந்தைகள் காலியாக உள்ளன கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பெரியவர்கள் பசி மற்றும் நீரிழப்பால் தெருக்களில் சரிந்து விழுகின்றனர். காசாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லாரிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போதுமானதாக இல்லை அவர்களில் பலர் வாரக்கணக்கில் உதவி இல்லாமல் தவிக்கின்றனர்.

gaza_aid_11111111111111111.jpg

ஐ.நா தலைமையிலான மனிதாபிமான அமைப்பு தோல்வியடையவில்லை அது செயற்படுவது தடுக்கப்பட்டுள்ளது - தடுக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/220714

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

1 month 3 weeks ago
கொழும்பில் கைது செய்யப் பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு பின்னாலும்... எத்தனை சதி வேலைகள் பின்னப் பட்டு இருக்கின்றதோ யாரறிவர்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு Published By: VISHNU 23 JUL, 2025 | 10:08 PM யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று புதன்கிழமை (23) மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 67 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220760

சீன, இலங்கை உறவுகளை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன சின்ங்சியா மாநில வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு

1 month 3 weeks ago
Published By: VISHNU 23 JUL, 2025 | 08:24 PM (சீனாவிலிருந்து இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறை உறவுகளை நிலையானதாக மேம்படுத்த இருதரப்புக்கும் இடையில் பல திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையுடனான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத்திட்டங்கள் துரிதகரமாக செயற்படுத்தப்படும். இலங்கையுடனான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை பல்துறைகளில் மேம்படுத்துவோம் என சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் தெரிவித்தார். சீன குடியரசின் அழைப்புக்கமைய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பல்துறை சார்ந்த தரப்பினர்கள் நேற்று புதன்கிழமை சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் உத்தியோகபூர்வ வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் வருமாறு குறிப்பிட்டார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பிலான உறவை ஒரு வரையறைக்குள் உடபடுத்த முடியாது. இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் தொடர்பு காணப்படுகிறது. சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்றே குறிப்பிட வேண்டும். இலங்கையில் அரசாங்கங்கள் மாற்றமடைந்தாலும் சீனா தொடர்பான கொள்கை ஒருமித்த தன்மையிலும்,உறுதியான நிலையிலும் உள்ளது. இரு நாடுகளின் அரசுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம் காணப்படுகிறது. இலங்கையின் வெளிவிவகாரம், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா கூடிய அவதானம் செலுத்தியுள்ளது. சிறந்த நண்பன் என்ற அடிப்படையில் நெருக்கடியான நிலையில் இலங்கையுடன் கைகோர்த்துள்ளோம். பூகோள நெருக்கடி மற்றும் இரத காரணிகளால் கடந்த காலப்பகுதியில் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கைக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கினோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை துரிதமாக எழுச்சிப்பெற்றமை மகிழ்ச்சிக்குரியது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான அபிவிருத்தியடைய வேண்டும். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட அவதானம் வெளிவிவகாரத்துறை அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு எமது நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான முறையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும். இலங்கையின் கலை மற்றும் கலாசாரங்களை மேம்படுத்த விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எரிசக்தி மேம்பாடு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக செயற்படுத்தப்படும் என்றார். https://www.virakesari.lk/article/220759

சீன, இலங்கை உறவுகளை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன சின்ங்சியா மாநில வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு

1 month 3 weeks ago

Published By: VISHNU

23 JUL, 2025 | 08:24 PM

image

(சீனாவிலிருந்து இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறை உறவுகளை  நிலையானதாக மேம்படுத்த இருதரப்புக்கும் இடையில் பல திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையுடனான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத்திட்டங்கள் துரிதகரமாக செயற்படுத்தப்படும். இலங்கையுடனான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை பல்துறைகளில் மேம்படுத்துவோம் என சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் தெரிவித்தார்.

சீன குடியரசின் அழைப்புக்கமைய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பல்துறை சார்ந்த தரப்பினர்கள் நேற்று புதன்கிழமை சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் உத்தியோகபூர்வ  வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம்  ஃபேன் ஹவ்ஃபெங் வருமாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பிலான உறவை ஒரு வரையறைக்குள் உடபடுத்த முடியாது. இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் தொடர்பு காணப்படுகிறது.

சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்றே குறிப்பிட வேண்டும். இலங்கையில் அரசாங்கங்கள் மாற்றமடைந்தாலும் சீனா தொடர்பான கொள்கை ஒருமித்த தன்மையிலும்,உறுதியான நிலையிலும் உள்ளது. இரு நாடுகளின் அரசுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம் காணப்படுகிறது.

இலங்கையின் வெளிவிவகாரம், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா கூடிய அவதானம் செலுத்தியுள்ளது. சிறந்த நண்பன் என்ற அடிப்படையில் நெருக்கடியான நிலையில்  இலங்கையுடன் கைகோர்த்துள்ளோம்.

பூகோள நெருக்கடி மற்றும் இரத காரணிகளால் கடந்த காலப்பகுதியில் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கைக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கினோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை துரிதமாக எழுச்சிப்பெற்றமை மகிழ்ச்சிக்குரியது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான அபிவிருத்தியடைய வேண்டும்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட அவதானம் வெளிவிவகாரத்துறை அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு எமது நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான முறையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும்.

இலங்கையின் கலை மற்றும் கலாசாரங்களை மேம்படுத்த விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எரிசக்தி மேம்பாடு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/220759

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...

1 month 3 weeks ago
மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் - சாணக்கியன் 23 JUL, 2025 | 04:42 PM மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றியபோது மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, மன்னார் - ராமேஸ்வரம் படகுச் சேவை குறித்து விளக்கிக் கூறிய சாணக்கியன், போக்குவரத்து அமைச்சகம் இந்த செயல்முறையை விரைவுபடுத்த முடிந்தால், மன்னார் - ராமேஸ்வரம் படகு சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நிதிப் பங்களிப்பினை பெற, நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், மன்னார் - இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால், காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகிறது. அந்தப் படகு சேவை மிக நீளமானது ஆகும். இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்கள் மிகவும் நன்மையடைவர். அத்துடன் வியாபார நடவடிக்கைகளும் வலுப்பெறும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும். இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கும் விடயத்தில் இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220745

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

1 month 3 weeks ago
சம்பூரில் மனித எச்சங்கள்; எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு Published By: DIGITAL DESK 3 23 JUL, 2025 | 03:06 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டுள்ளார். குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் குறித்த பகுதியை நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றது அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/220726

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

1 month 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440356

டெல்லியில் இடிக்கப்பட்ட 'மதராஸி கேம்ப்' - 4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன?

1 month 3 weeks ago
மதராசி கேம்ப் இடிப்பு: டெல்லியில் வீடுகளை இழந்த 380 தமிழ் குடும்பங்கள் இப்போது எப்படி உள்ளன? கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 23 ஜூலை 2025, 09:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேற்று வரை கூப்பிடு தூரத்தில் இருந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த உங்கள் குழந்தை நாளை முதல் பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ. பயணிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தரும் வேலைக்காக 8 ஆயிரம் வாடகை கொடுத்து பெருநகரத்தில் தங்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேற்று வரை தமிழ்வழியில் படித்த குழந்தையை, நாளை முதல் இந்தி வழிக் கல்வியில் சேர்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? "இதுதான் இன்று தங்களின் நிலை" எனக் கூறுகின்றனர் முன்பு டெல்லி ஜங்புராவில் வசித்த தமிழர்கள். ஜூன் 1ஆம் தேதி டெல்லி ஜங்புராவில் மதராசி கேம்ப்(Madrasi Camp) என்று அழைக்கப்படும் தமிழர் குடும்பங்கள் வசித்த பகுதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட நினைக்கும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய் துகொடுக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம், மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக" கூறினார். இது நடந்து ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துவிட்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் தலைநகரில் வசித்த தமிழர்களைத் தேடிப் பயணித்தது. படக்குறிப்பு, உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடியிருப்புகள் ஜூன் 1ஆம் தேதி இடித்து அகற்றப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் தலைநகரில் குடியேறிய இந்த மக்கள், இத்தனை ஆண்டுகளில் தங்கள் சொந்த ஊரின் வேரை மறந்து டெல்லிவாசிகளாகவே மாறிப் போயிருக்கின்றனர். ஆனால், இவர்கள் தற்போது தங்கள் குடியிருப்புகளை இழந்துவிட்டதாக கவலையில் உள்ளனர். அவர்கள், "ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது புதிய குடியிருப்பு கொடுப்பதற்காக அரசு வகுத்துள்ள கொள்கை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர். முதலில் ஜங்புராவுக்கு சென்றபோது, மதராசி கேம்பில் இருந்த சுமார் 380 வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டு மணல் மேடுகளே எஞ்சியிருந்தன. பின்னர் அங்கிருந்து புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நரேலா பகுதி நோக்கிப் பயணித்தோம். நரேலா, தலைநகர் டெல்லியின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்பேட்டை. ஒரு காலத்தில் விவசாய பூமியாக மிளகாய் உற்பத்திக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்த நரேலா தற்போது தலைநகர விரிவாக்கத்தால், தொழிற்பேட்டையாக மாறியிருப்பதாகக் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள். நாங்கள் சென்ற போது டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால் (DDA) கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், வீடுகளும் எங்களை வரவேற்றன. ஆச்சரியப்படுத்தும் வகையில் இத்தனை குடியிருப்புகளுக்கும் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர். படக்குறிப்பு,முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ள ஜங்புரா மதராசி கேம்ப் நரேலாவில் குடியேறியுள்ள கணேஷ் பிரபு அவருடைய இருப்பிடத்தை கூகுள் மேப் மூலம் பகிர்ந்ததால் நமது வாகனத்தில் எளிதாக அங்கு செல்ல முடிந்தது. பிபிசி குழு கார் மூலம் சென்றதால் சுமார் 1 மணிநேரத்தில் இந்த இடத்தைச் சென்றடைய முடிந்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் கூடுதலாக நேரம் ஆகலாம் என நரேலாவுக்கு சென்று திரும்பியவர்கள் கூறினர். ஒரு வழியாக அங்கிருந்த ஒரு மிகப்பெரிய குப்பை மேட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 'பாக்கெட் 5' என்னும் இடத்தைக் கண்டுபிடித்தோம். அந்த வளாகத்தின் பாதுகாப்புக்கென இருந்த காவலாளி, எங்கள் வருகையைப் பதிவு செய்துகொண்டு உள்ளே அனுமதித்தார். அங்கு கணேஷ் பிரபு எங்களை வரவேற்றார். படக்குறிப்பு, மளிகைக் கடை நடத்தி வந்த கணேஷ் பிரபு தற்போது தனக்கு வாழ்வாதாரம் இல்லை எனக் கூறுகிறார் "நான் மதராசி கேம்பில் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தேன். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது அது இடிக்கப்பட்டுவிட்டது. எனக்கு வேறு வேலை தெரியாது. இப்போது எனக்கு இங்கே இரண்டாவது மாடியில் வீடு கொடுத்துள்ளார்கள். கீழே வீடு இருந்தால் இங்கேயும் கடை வைத்துப் பிழைத்துக் கொள்வேன்" என்றார். அங்கும் தரைத்தளத்தில் வசிக்கும் சிலர் குடியிருப்பிலேயே கடைகளை அமைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பேசிய கணேஷ் பிரபு, "எனக்கு இன்று பிழைக்க வழி இல்லை. வாடகை கொடுத்து குடியிருக்க என்னால் முடியாது. எனது மகன்களை மதுரையில் எனது பெற்றோரிடம் விட்டுவிட்டேன். நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லி நகருக்கு உள்ளாக என்னால் வாடகை கொடுக்க முடியாது. எனவே இங்கு வந்துவிட்டேன்" என்றார். "இந்த வீடுகள் ஒதுக்கப்படுவதற்காக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் என்பவரின் தாயார் பெயரில் 4வது தளத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில சிக்கல்களைக் காரணம் காட்டி அவர்களுக்கு வீட்டைக் கொடுக்க மறுக்கின்றனர்" என்று கூறிய கணேஷ் பிரபு அந்த வீட்டைக் காண்பித்தார். இவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை தண்ணீர்தான். "பல வீடுகள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் குழாய் அடைப்புகள் சரி வரப் பொருத்தப்படாமல் இருக்கின்றன. இதனால் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை" என கணேஷ் பிரபு கூறுகிறார். படக்குறிப்பு, மொத்தம் 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் 3 தனிநபர்களை மட்டுமே நரேலாவில் பார்க்க முடிந்தது நரேலாவில் குடியேறியிருக்கும் அஞ்சலை பிபிசி தமிழிடம் பேசினார். "அங்கே (ஜங்புரா) இருக்கும்போது காலை 7.30 மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்று விடுவேன். 10 மணிக்கு வீடு வந்துவிட்டு, பின்பு மீண்டும் வேலைக்குச் செல்வேன். மாதத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை என்னால் சம்பாதிக்க முடிந்தது. ஆனால் இங்கே வந்த பின்னர் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது?" எனக் கேள்வி எழுப்பினார். "நான் வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளைச் செய்துதான் பிழைப்பு நடத்துகிறேன். இங்கே நரேலாவில் இப்படி வேலை கொடுப்பதற்கான மக்கள் யாரும் இல்லை. நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது?" என்று கேள்வி எழுப்பினார். தமிழ்க் குடும்பங்களைத் தேடிச் சென்ற எங்களால் மூன்று பேரிடம் மட்டுமே பேச முடிந்தது. அவர்கள் தவிர வீடு ஒதுக்கீடு பெற்ற உலகநாதன் என்பவர், மற்ற தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியை ஏற்றிருக்கிறார். தமக்கு வேறு வேலை ஏதுமில்லாத சூழ்நிலையில், தற்காலிக வேலையாக இது அமைந்துள்ளதாக அவர் கூறுகிறார். வீடு ஒதுக்கீடு பெற்ற மற்றவர்கள், வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இந்த இடம் இல்லை என்பதால் தாங்கள் வசித்த பழைய இடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறியுள்ளனர். கூலி வேலையில் சொற்ப ஊதியமே பெறும் தாங்கள் வாடகை செலுத்தவே முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் கவலையை வெளிப்படுத்தினர். நரேலாவில் தமிழ்க் குடும்பங்கள் தவிர சிஆர்பிஎஃப் போன்ற மத்திய காவல் படைகளில் பணியாற்றுவோருக்கும் அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிசைகள் அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் இங்கே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 8 மாதங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் குடியேறிய சில இந்தி பேசும் சிறுவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளி செல்வதற்கே காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் நிலை இருப்பதாக அவர்கள் கூறினர். கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மற்றொரு இளைஞரும் பிபிசி தமிழிடம் இதே கவலையைப் பகிர்ந்துகொண்டார். "என்னால் இங்கு வந்த பின்னர் கல்வியைத் தொடர முடியவில்லை. நான்தான் எனது குடும்பத்தின் முதல் தலைமுறையாக பட்டம் பயில்கிறேன். ஆனால் இங்கிருந்து டெல்லி நகருக்குள் கல்விக்காகச் சென்று திரும்புவது இயலாத ஒன்றாக இருக்கிறது. இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் 40 கி.மீ. தாண்டித்தான் செல்ல வேண்டும். அங்கே நகருக்குள் நாங்கள் இருந்த போது எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அருகிலேயே இருந்தது" என்றார். படக்குறிப்பு, நரேலாவில் வீடுகள் மட்டுமே இருக்கின்றன அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் 'மொத்தம், 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டன' என்ற தகவலுக்கும், அங்கு இயல்பில் உள்ள சூழலுக்கும் முரண் இருந்ததால் மீண்டும் ஜங்புரா பகுதிக்கே திரும்பினோம். ஜங்புராவில் மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் நாங்கள் நுழைந்தோம். அங்கு மக்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருந்தனர். நரேலாவில் வீடு ஒதுக்கப்படாத மக்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும், ஏற்கெனவே வீடு பெற்றவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது. அங்கிருந்த அன்பழகி என்ற பெண் பிபிசியிடம் பேசுகையில், "நான் இங்கிருந்து நரேலாவுக்கு வேனில் சென்று பார்த்தேன். ஓலா டாக்சியில் செல்வதற்கு 750 ரூபாய் வாங்கி விட்டனர். அங்கிருந்து திரும்ப வருவதற்கு மாலை 6 மணிக்குப் புறப்பட்டோம். இங்கு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது. வீட்டு வேலை செய்வதற்காக தினமும் இவ்வளவு தொலைவு என்னால் பயணிக்க முடியாது" என்றார். மேலும் "எனது பேரப்பிள்ளைகள் இங்குள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் நரேலாவுக்கு சென்றால் படிப்பைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்" என்றும் அன்பழகி கூறினார். இதேபோன்று போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஜானகி பேசுகையில், "ஏற்கெனவே நரேலாவில் வீடு பெற்ற 170 பேர் போக மேலும் 26 பேருக்கு வீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அந்த வீடுகளை ஒதுக்கவில்லை" என்று கூறினார். படக்குறிப்பு, ஏற்கெனவே வீடு ஒதுக்கீடு பெற்றவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் டெல்லி லோதி பார்க்கில் தில்லி தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் பள்ளியில் இந்தக் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கிருந்த குழந்தை பள்ளியில் படித்த தமிழ்ப் பாடலை பாடிக் காட்டினார். இனி இந்தக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். இவர்கள்போக, வீரம்மா, செல்வி ஆகிய இரு பெண்கள் வீடுகளில் வேலை பார்த்துவிட்டு, ஓய்வாக ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தனர். இவர்களில் வீரம்மாவுக்கு வீடு கிடைத்துள்ளது. செல்விக்கு வீடு கிடைக்கவில்லை. "ஆனால் எங்கள் இருவரின் நிலையும் ஒன்றுதான்" என்கிறார் வீரம்மா. "பிழைப்பின்றி வீடு மட்டும் கிடைத்தால், அதை வைத்து என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்புகிறார். இதேபோன்று மூதாட்டி செல்லம்மாள் பேசுகையில், "45 வருடங்களாக இதே ஊரில் இருக்கிறேன். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம்தான் எனக்கு சொந்த ஊர். நான் இப்போது 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் 8 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். ஏற்கெனவே, வீட்டு உரிமையாளர். வாடகை பிரச்னையில் காலி செய்யச் சொல்கின்றனர்" என்றார். படக்குறிப்பு, வீடு பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னை வேலைவாய்ப்பு. தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை இந்த குடும்பத்தினர் அனைவருக்குமே கிடைத்துள்ளது. குடும்பத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் பணமும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களையும் பெற்றிருப்பதாக வீரப்பன் என்பவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். இன்றைய சூழ்நிலையில் உணவுக்கே கஷ்டப்படும் மக்களுக்கு இது மிகப்பெரிய உதவி. ஆனால் இவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவை எனவும் வீரப்பன் கூறுகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு குடிசைகள் அகற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவர்களின் வேலைவாய்ப்பு கிடைக்கும் இடத்திற்கு அருகில் மாற்று குடியிருப்பு வழங்கப்பட வேண்டும் என்று உறுதியளிக்கிறது (Gainda Ram vs. Municipal Corporation of Delhi, [2010 (10) SCC 715]). தொலைதூர இடங்களுக்கு இந்த மக்கள் மாற்றப்பட்டால், வேலை வாய்ப்புக்காக மீண்டும் அதே இடங்களில் குடியேறுவார்கள் என ஆய்வறிக்கைகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் டெல்லி குடிசைவாசிகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கை 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, தலைநகர் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், வீட்டுவேலை செய்பவர்கள் என முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்கின்றனர். கடந்த காலத்தில் நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களுக்கான வீடுகளைக் கட்டும்போது இவர்களுக்கான வீட்டு வசதி திட்டமிடப்படவில்லை. இதன் விளைவாகவே டெல்லி முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இடங்களைச் சுற்றி குடிசைகள் அதிகரித்ததாகவும் அந்தக் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த புதிய குடிசைப் பகுதியும் உருவாவது அனுமதிக்கப்படாது எனக் குறிப்பிடும் இந்த கொள்கை, ஏற்கெனவே குடிசைகளில் குடியிருப்பவர்கள் எவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. தமிழ்நாடு அரசு கூறுவது என்ன? பட மூலாதாரம்,AKS VIJAYAN/X படக்குறிப்பு, டி.ஆர்.பாலுவுடன் டெல்லி முதல்வரைச் சந்தித்தபோதும் நரேலாவில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு வலியுறுத்திதாக ஏ.கே.எஸ்.விஜயன் குறிப்பிட்டார். ஜங்புராவாசிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடம் பேசினோம். தமிழ்நாடு அரசு சார்பில் ஜங்புராவாழ் தமிழர்களுக்குத் தேவையான "வசதிகளைச் செய்து தரத் தயாராக இருக்கிறோம்" என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் கூறினார். "தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் எங்கே அவர்கள் வசிக்க விரும்புகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரோடு தொடர்புகொண்டால் அங்கு அவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கி வீடுகளைக் கட்டித் தருகிற திட்டதை நிறைவேற்றித் தருவோம் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் நாங்கள் அவர்களிடமும் கூறினோம்." ஆனால், தாங்கள் மூன்று தலைமுறைகளாக இங்கேயே இருந்துவிட்டதாகவும், இப்போது அங்கு வந்து என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் கூறிய மக்கள் தாங்கள் இங்கேயே இருந்து விடுவதாகவும் கூறியதாக அவர் குறிப்பிடுகிறார். மேலும், "தமிழ்நாட்டிற்கே வந்துவிடலாம்" என்று நினைப்பவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டார். அதோடு, "திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுடன் சேர்ந்து டெல்லி முதலமைச்சரைச் சந்தித்தபோதும், நரேலா பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு" தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். டெல்லி அரசின் நிலைப்பாடு என்ன? மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். "குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும்" என ரேகா குப்தா தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக டெல்லி தென்கிழக்கு மாவட்ட ஆட்சியர் அனில் தம்பா மற்றும் ஜங்புரா எம்எல்ஏ தர்விந்தர்சிங் தாகூர் ஆகியோரைத் தொடர்புகொள்ளப் பல வழிகளில் பிபிசி முயன்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்படும் பட்சத்தில் அதுவும் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7d5lkj56xo

தந்தை-மகன் கொலை: காவல் நிலைய சித்ரவதைக்கு பிறகு சிறையில் 3 நாட்களை கழித்தது எப்படி?

1 month 3 weeks ago
"அலறல் சத்தத்தை ரசித்தவர் அப்ரூவரா?" - ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை சந்தேகிக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் பட மூலாதாரம்,SPL ARRANGEMENT படக்குறிப்பு, வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்ரீதர் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் முதல் நபராக (A1) குற்றம் சுமத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாறி உண்மையைக் கூற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். "இது வழக்கை இழுத்தடிப்பதற்கான நாடகம்" என ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்ரூவர் ஆக மாறுவதால் என்ன நடக்கும்? தண்டனை கிடைப்பதில் இருந்து விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளதா? 2020 ஜூன் 19. கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். பொதுமுடக்கம் காரணமாக இரவு கடையை மூடுவது தொடர்பாக பென்னிக்ஸ் மற்றும் போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES தந்தை-மகன் என இருவர் மீதும் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்தனர். இதன்பிறகு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஜூன் 20 அன்று மருத்துவ அலுவலர் சான்று அளித்ததால் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் ஜூன் 23 அன்று ஜெயராஜும் உயிரிழந்தனர். காவல் மரணத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட பத்து காவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. (குற்றம் சுமத்தப்பட்டவர்களுள் ஒருவரான பால்துரை 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் 2,427 பக்க குற்றப்பத்திரிகை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்பட்ட காவலர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இரு கட்டங்களில் 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. கைதான நாளில் இருந்து காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்பட ஒன்பது பேரும் மதுரை மத்திய சிறையில் அடைபட்டுள்ளனர். தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில், வழக்கில் இருந்து தான் அப்ரூவராக மாற விரும்புவதாக காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,TNPOLICE படக்குறிப்பு, இடமிருந்து வலமாக முதலில் இருப்பவர் ஸ்ரீதர். அடுத்ததாக, சிறையில் உள்ள பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் அந்த மனுவில், அரசுக்கும் காவல்துறைக்கும் நேர்மையாகவும் உண்மையாக இருக்க விரும்புவதால் அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியுள்ளார். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 'மனசாட்சிக்கு உட்பட்டு தந்தை-மகனை இழந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' எனவும் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் முதல் நபராக ஸ்ரீதர் இருப்பதால், அவர் தாக்கல் செய்த மனு விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜெயராஜ் குடும்பத்தினர் கூறுவது என்ன? "ஐந்தாண்டுகளாக எதுவும் பேசாமல் தற்போது அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் கூறுகிறார். இது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், ஜெயராஜின் மகள் பெர்சிஸ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குற்றம் சுமத்தப்பட்டவர்களில் முதல் நபராக ஸ்ரீதர் இருக்கிறார். என் அப்பா-தம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட அன்று காவல்நிலையத்தில் அவர் இருந்துள்ளார். பெண் காவலரின் சாட்சியத்தில், இவரது பங்கு குறித்தும் கூறியுள்ளார்" என்கிறார். "காவல்நிலையத்தில் இருந்தபோது, 'சத்தம் வரவில்லை, நன்றாக அடி' என உதவி ஆய்வாளரிடம் இவர் கூறியதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு அவர் ரசித்ததாகவும் சாட்சி கூறியுள்ளார். அந்தவகையில், அப்ரூவர் என்ற பெயரில் தற்போது நாடகமாடுவதாகவே பார்க்கிறோம்" எனக் கூறுகிறார், பெர்சிஸ். வழக்கை இழுத்தடிக்கும் வேலைகளை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மேற்கொள்வதாகக் கூறும் பெர்சிஸ், "தனக்கென எந்த வழக்கறிஞரையும் ஸ்ரீதர் வைத்துக்கொள்ளவில்லை. தானே வாதாடுவதாகக் கூறி, குறுக்கு விசாரணை என்ற பெயரில் தலையிட்டு தாமதம் செய்கிறார்" என்கிறார். "தற்போது நடக்கும் வழக்கின் விசாரணை முறை திருப்தியளித்தாலும் இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்ரூவராக மாற உள்ளதாக ஸ்ரீதர் தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்" என்கிறார், பெர்சிஸ். "சட்டத்தின்படி இரண்டு வழிகள்" "அப்ரூவர் ஆக மாற உள்ளதாகக் கூறும்போது முதல் நபராக (ஏ1) குற்றம் சுமத்தப்பட்டவருக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதா?" என, பெர்சிஸின் வழக்கறிஞர் ராஜிவ் ரூஃபஸிடம் பிபிசி தமிழ் கேட்டது. "சட்டத்தின்படி இரண்டு வழிகள் உள்ளன. அவரது கோரிக்கையில் அர்த்தம் உள்ளதாக நீதிமன்றம் கருதினால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 305, 306 ஆகிய பிரிவுகளின்படி மன்னிப்பு கோருவதை (Tendor of burden) ஏற்றுக்கொள்ளும். அடுத்து, ஸ்ரீதரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அப்ரூவராக வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என நீதிமன்றம் முடிவெடுக்கும். அதுதொடர்பாக நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "அதேநேரம், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரின் கோரிக்கை ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் ராஜிவ் ரூஃபஸ், "வழக்கில் முறையான சாட்சிகள் ஏராளமானோர் உள்ளனர். கண்ணால் கண்ட சாட்சிகளும் உள்ளனர்" என்கிறார். "சாட்சிகள் இல்லாத வழக்குகளில் இதுபோன்ற கோரிக்கைகள் தேவைப்படலாம். அந்தவகையில் ஸ்ரீதரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது கடினம் என்றே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார். தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையில் அப்ரூவர் ஆகும் முயற்சியை ஸ்ரீதர் தரப்பினர் கையில் எடுத்துள்ளதாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். "அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது" "தனக்குக் கீழ்நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே தவறு செய்ததாகக் கூறி அப்ரூவர் ஆவதற்கு ஸ்ரீதர் முயற்சித்தாலும், நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் குறைவு" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி. "ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார். தனக்குத் தெரியாது என அவர் கூற முடியாது. நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டாலும் ஸ்ரீதர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் கருணாநிதி. தொடர்ந்து பேசிய அவர், "குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களில் முதல் நபராக குறிப்பிடப்பட்டிருப்பதால், குற்றத்தில் அவர் பிரதான பங்கு வகித்ததாகவே பார்க்கப்படும். தன் மீது தவறு இல்லை என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆய்வாளரின் காவல் எல்லைக்குள் தவறு நடந்திருப்பதால் அவர் மட்டுமே பொறுப்பாவார் - ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி "ஸ்ரீதருக்கு எதிரான சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை இருந்தால் தான் வழக்கில் முதல் நபராக சேர்க்கப்படுவார். இந்த வழக்கில், 'ஆய்வாளர் கூறுவது தவறு. அவர் முன்னிலையில் தான் செய்தோம்' என மற்ற காவலர்கள் கூறினால், அப்ரூவர் என்ற வாதம் எடுபடாது" எனவும் அவர் தெரிவித்தார். "சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, புலனாய்வு அதிகாரி கூறியுள்ள விவரங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பார்த்து அப்ரூவராக ஏற்கலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். அவ்வாறு கேட்பதாலேயே ஏற்றுக்கொண்டதாக பார்க்க முடியாது" எனவும் கருணாநிதி குறிப்பிட்டார். "சமீபத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது இறந்துள்ளார். காவல் மரணங்களில் வழக்குகளை விரைந்து நடத்தும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்" என்கிறார். தூத்துக்குடியில் உப்பளத்தில் வேலை பார்த்து வந்து ஒருவர் காவல் மரணத்தில் இறந்து போன வழக்கில், 24 வருடங்களுக்கு பிறகு நீதி கிடைத்த சம்பவத்தையும் அவர் மேற்கோள் காட்டினார். 24 வருடங்களுக்கு பிறகு தண்டனை தூத்துக்குடி மாவட்டம், மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்ற தொழிலாளியை 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி, தாளமுத்து நகர் காவல்நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். மறுநாள் (18.9.1999) காவல்நிலைய லாக்கப்பில் அவர் உயிரிழந்தார். தனது கணவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக வருவாய் கோட்டாட்சியரிடம் அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார். விசாரணையில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. '5 ஆண்டாகியும் நீதி கிடைக்கவில்லை' - சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு என்ன ஆனது? சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு 'அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை நான் எடுத்தேன்' - சாட்சிகளுக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு என்ன? தற்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ள ராமகிருஷ்ணன் உள்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். "24 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டுத் தான் கிருஷ்ணம்மாள் குடும்பத்தினர் வழக்கை நடத்தியுள்ளனர். விரைந்து நீதி கிடைக்கும்போது தான் தவறு செய்யும் காவலர்களுக்கு பாடமாக அமையும்" எனக் கூறுகிறார் பெர்சிஸ். "கடந்த ஐந்தாண்டுகளாக குடும்ப உறவுகளின் சுக, துக்க காரியங்களுக்குச் செல்ல முடியவில்லை. நாங்கள் ஏதோ குற்றம் செய்தது போல சிலர் பேசும்போது வேதனையாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். "அப்பாவும் தம்பியும் இறந்தபிறகு அங்கு வசிப்பது பாதுகாப்பில்லை என்பதால் தென்காசிக்கு குடிபெயர்ந்துவிட்டோம். இன்று வரை எங்கள் குடும்பத்தினர் யாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை" எனக் கூறுகிறார் பெர்சிஸ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8z76k5319o

வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு

1 month 3 weeks ago
23 JUL, 2025 | 05:12 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலைமைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற வேலையாட்களின் வரவு - செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவு தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம். 1983 காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர். இதனால் நீண்டகாலமாக அங்கிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது. “திரிவச்சகுளம்” வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளத்தையும் ஏறத்தாழ 150 ஏக்கருக்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது. இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப்பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச்செய்கைக்காக துப்புரவு செய்தபோது வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. 5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024இல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகார சபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர் அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர். வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகார சபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்? புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கருக்கு அதிகமான பிரதேசம் திட்டமிட்ட வகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜே.சீ.பி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு ஒன்றரை மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது. அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ஒரு இலட்சம் ரூபா தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகளை துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்? அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்யமுடியுமா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்ததில் இந்தக் காடழிப்பு பற்றி பொலிஸாரோ வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரோ அறிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை நம்பக்கூடியதாக உள்ளதா? ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைகளில் உங்கள் ஆட்சியிலும் எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை என்றார். https://www.virakesari.lk/article/220751

வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு

1 month 3 weeks ago

23 JUL, 2025 | 05:12 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலைமைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற வேலையாட்களின் வரவு - செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன  திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு  பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவு தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம்.  இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம்.

1983 காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர்.

இதனால் நீண்டகாலமாக அங்கிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது.

“திரிவச்சகுளம்” வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளத்தையும் ஏறத்தாழ 150 ஏக்கருக்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது.

இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப்பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச்செய்கைக்காக துப்புரவு செய்தபோது வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.  5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024இல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகார சபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநல சேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர் அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர்.

வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகார சபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்கமுடியும்?

புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கருக்கு அதிகமான பிரதேசம் திட்டமிட்ட வகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜே.சீ.பி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு ஒன்றரை மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது.

அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ஒரு இலட்சம் ரூபா தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகளை துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்?

அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்யமுடியுமா?  இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்ததில் இந்தக் காடழிப்பு பற்றி பொலிஸாரோ வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரோ அறிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை நம்பக்கூடியதாக உள்ளதா? ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைகளில் உங்கள் ஆட்சியிலும் எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/220751

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

1 month 3 weeks ago
👍........... அந்தச் செய்தியுடன் ரவிகரன் என்னும் பெயரும் ஞாபகத்தில் இருக்கின்றது, ஏராளன். நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும்.................... இதைப் போன்ற செய்திகளும், விளம்பரங்களும் உண்டாக்கும் உணர்வு நீங்கள் சொல்லியிருப்பதே.........👍.

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
நான் இருக்கும் தென் கலிஃபோர்னியாவில் கடந்த பத்து வருடங்களில் நடந்த எம்மவர்களின் திருமணங்களில் மணமக்கள் இருவரும் தமிழர்களாக இருந்த ஒரு திருமணம் கூட நடக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். உண்மை பொய் தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்த சில திருமணங்கள் மாற்று வழிகளிலேயே நடந்திருக்கின்றன. தாயகத்தில் இன்று இப்படி நடக்கின்றது என்றவுடன் எங்களில் பலர் அங்கலாய்க்கின்றார்கள் போல. உண்மையில் தாயகத்தில் இப்படி அதிகமாக நடக்கின்றது என்பதற்கு தரவுகள் ஏதாவது இருக்கின்றதா தெரியவில்லை. ஒருவரின் அபிப்பிராயமாகக் கூட இருக்கலாம். 'திருமதி. பெரேரா' என்னும் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது. இஸுரு சாமர சோமவீர எழுதியது. தமிழ் மொழிபெயர்ப்பு அகழ் இதழில் வந்தது. @satan எழுதியிருந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதை அங்கே பார்க்கலாம். ஆனால் இந்த சிறுகதை சொல்ல வந்த விடயம் அதுவல்ல................... https://akazhonline.com/?p=2817

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 3 weeks ago
சிறியர் @தமிழ் சிறி தமிழ் - சிங்கள திருமணங்கள் புதிய விடயங்கள் இல்லை. நான் அறிந்தவரை ஒரு சிலவற்றில் முறிவு ஏற்பட்டாலும் பெரும்பாலான தம்பதிகள் வெற்றிகரமாக வாழ்ந்துள்ளார்கள், வாழ்கின்றார்கள். காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஐயாவின் துணைவியாரும் பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர் என நினைக்கின்றேன். தமிழ் பெடியள் சிங்கள பெட்டைகளுக்கு பின்னால் எப்படி உருண்டு பிரண்டு திரிந்தார்கள் என யாராவது அனுபவப்பட்டவர்கள் கூறலாம். எனக்கு தெரிந்த ஒரு திருமண உறவு சில வருடங்களில் முறிந்தது. இங்கு பெண் தமிழ் ஆண் சிங்களம். முறிவுக்கான காரணம் அந்த ஆண் பார்ட்டி கை. அதாவது சோமபானம், சொகுசு, கொண்டாட்டம் என வாழும் பேர்வழி. பொறுப்பான ஆள் இல்லை என பெண் பிரிந்துவிட்டார். தமிழ் ஆண்களை மணம் முடித்த பல சிங்கள பெண்கள் பிறப்பில் தமிழாக பிறந்த பெண்களை விடவும் கோயில், கடவுள் பக்தி என அதிகம் ஐக்கியமானவர்களும் உண்டு. இவ்வாறே திருமணத்தின் பின் முழு சிங்கள பண்பாட்டில் மூழ்கிய தமிழ் பெண்களும் உண்டு. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவும், புலம் பெயர்ந்தும் சென்ற தமிழர்கள் ஆண், பெண் வேறுபாடின்றி எல்லா சமூகத்தினுள்ளும் புகுந்து விளையாடுகின்றார்கள். இதில் பலரது திருமண உறவு வெற்றிகரமாகவே உள்ளது.