Aggregator
காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி
முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை
முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு
LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு
26 Sep, 2025 | 05:21 PM
![]()
நாட்டில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் உரிமைகள் அமைப்பான EQUAL GROUND ஆல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
EQUAL GROUND நிர்வாக பணிப்பாளர் ரோசன்னா ஃபிளேமர் - கால்டெராவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலாத் தலைவர் புத்திக ஹேவாவசம் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார்.
சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையை நிலைநிறுத்தவும் அதன் திறனை அங்கீகரித்துள்ளார்.
எங்கள் சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தவும் இந்த திட்டத்தின் திறனை நாங்கள் அங்கீகரிக்கிறோம், என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி அதன் உலகளாவிய சுற்றுலா தடத்தை விரிவுபடுத்தும் இலங்கையின் மூலோபாய நோக்கங்களுடன் ஒத்துப்போவதாக அமைகிறது.
பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த திட்டத்தில், பங்குதாரர் ஈடுபாடு, பயிற்சி, விழிப்புணர்வு திட்டங்கள், வேலைவாய்ப்பு; மற்றும் சர்வதேச விளம்பர இணைப்புகள் போன்ற ஆறு விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா நடத்துபவர்கள், ஹோட்டல்கள், பயிற்சி நிறுவனங்கள், வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் தொடர்பு கொண்டு, DE&I பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள EQUAL GROUND-க்கு இலங்கை சுற்றுலா அதிகாரம் வழங்கியுள்ளது.
மேலும், சர்வதேச சுற்றுலா மன்றங்கள், கண்காட்சிகள் மற்றும் டுபுடீவுஐஞ சுற்றுலா வலையமைப்புகளில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து EQUAL GROUND-பங்கேற்பதை இலங்கை சுற்றுலா வரவேற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வெளியுறவு மற்றும் வெளிநாட்டலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரிடம் இந்த திட்டத்தை வழங்க EQUAL GROUND விருப்பம் தெரிவித்ததை கடிதம் மேலும் ஒப்புக்கொண்டது.
இந்த ஈடுபாடுகளை எளிதாக்குவதில் இலங்கை சுற்றுலா ஆதரவை உறுதி செய்துள்ளது.
இந்த முயற்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக EQUAL GROUND -உடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம், இது இலங்கையின் சுற்றுலா மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,என அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஆதரவு | Virakesari.lk
சிரிக்க மட்டும் வாங்க
சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ
சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ
(செ.சுபதர்ஷனி)
நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். எதிர்வரும் 18 ஆம் திகதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருடனும் மக்களோடு இணைந்து திருடனை பிடிப்பது போல தான் என்.பி.பி அரசாங்கமும் செயற்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள பலரின் சொத்து விபரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்திலிருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்துள்ளனர். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வு பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தொடர்ந்தும் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் எம்மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பை குற்றம்சாட்டியே கடந்து விட்டனர் மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் என்றார்.
சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி
26 Sep, 2025 | 04:16 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)
யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. காணியும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவில்லை. காணி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நிலையியற் கட்டளையின் 27.2 பிரகாரம் அண்மையில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை எனும் விகாரை ஒன்று உள்ளது. இந்த விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகிறது.
இந்த பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களே உள்ளன.
இந்த விகாரை அமையப்பெற்றுள்ள காணியானது காணி அமைச்சினால் கைப்பற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படவில்லை. காணி அரசுடடையாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் பிரசுரிக்கப்படவில்லை.
இந்த காணி தொடர்பில் அமைச்சு மட்டத்தில் எவ்வித தீர்வும் எடுக்கப்படாத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குரிய தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த காணி தமக்குரியது என்று போராடும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஜனாதிபதி எம்மை அழைத்து விரிவான கலந்துரையாடியுள்ளோர். யாழ் மாவட்ட சிவில் சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தையிட்டி பிரச்சினைக்கு ஒரு இடத்தில் மாத்திரம் தீர்வு காண முடியாது. புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு, காணி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றிணைந்தே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி | Virakesari.lk
பார்திபன் கனவு
காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி
காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்கு காரணம் என்ன, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தவிர்ந்த பிறிதொரு காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் மக்களின் காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த சிறப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தங்களுடைய தலைமையில் விவாதிக்கப்பட்ட விடயங்களில் இரண்டு முக்கியமான விடயங்கள் பொதுமக்களின் நலன் கருதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது.
முதலாவது பலாலி விமான நிலையம். சர்வதேச விமான நிலையம் என்று தாங்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு இடம்.இரண்டாவது காங்கேசன் துறை இறங்கு துறை. அதை துறைமுகம் என்றும் பொருள் கொள்ளலாம்.
வடக்கு மாகாணத்தின் இவ்விருத்தியில் எந்த ஒரு நபருக்கும் இல்லாத அக்கறையை இந்த அரசாங்கம் செலுத்துவது கண்டுப்பூரிப்படைந்து தங்கள் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை நினைத்து பூரிப்படையும் பாமர மக்களில் நானும் ஒருவன்.
ஆனால் வெறும் வாய்ப்பேச்சுகளால் ஒரு வருடத்தை கடந்து விட்ட அரசாங்கத்திடமிருந்து நிலையான அபிவிருத்தி ஒன்றை வடக்கு மாகாணத்துக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தங்களிடம் கேட்க வேண்டி இருக்கிறது.
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற பலாலி உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலைய அபிவிருத்திக்காக தங்களுடைய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மொத்த பணம் எவ்வளவு?
அதில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதற்குரிய ஆதாரங்களை பாராளுமன்றத்தில் பொதுமக்களுக்காக சமர்ப்பிக்க முடியுமா?
வடக்கின் ஒரே ஒரு பொருளாதார துறைமுகமாக இருக்கும் காங்கேசன் துறை இறங்குதுறைஅபிவிருத்திக்காக தங்களுடைய 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதில் 2025 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு?அதனை ஆதாரங்களுடன் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா?
வடக்கு மாகாணத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சிறு சிறு துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அவற்றில் செலவழிக்கப்பட்ட பணம எவ்வளவு? கடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணி தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்தக் கருத்துக்களுக்கு அமைய, பலாலி விமான நிலையத்தின் தற்போதைய நில அளவு எவ்வளவு? பலாலி விமான நிலையத்தில் சட்டரீதியாகஅரசாங்கம் கொண்டிருக்கும் நில அளவு எவ்வளவு?
விமான நிலையத்தில் சட்டரீதிய அல்லாத பொது மக்களின் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் காணி நில அளவு எவ்வளவு? பொது மக்களின் காணிகளில் இதுவரை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கம்பன்சேஷன் எத்தனை குடும்பங்களுக்குவழங்கப்பட்டது? எப்போது வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? அதன் மொத்த பெறுமதி எவ்வளவு?
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் இதுவரை அரசாங்கம் விடுவித்திருக்கும் தனியார் நிலப்பரப்பு எவ்வளவு? உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத தனியார் விடுவிக்கப்பட்ட காணிகள் எவ்வளவு?
எத்தனை குடும்பங்கள்?, இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த வேறு எந்த எந்த பகுதியில் ஆவது தனியார் காணிகள்விமான நிலைய அல்லது துறைமுக அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டு இதுவரை பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா? அவ்வாறாயின் அவற்றின் விவரங்களை சமர்ப்பிக்க முடியுமா?
காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற தங்களுடைய முடிவினை அவதானித்த பின்னர், அவ்வாறான ஒரு முடிவுக்கு தாங்கள் வந்தது என்ன
காரணம் என்பதை விளக்க முடியுமா? அவ்வாறாயின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பணம், மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்த பணம் வீண் விரயம் செய்யப்படுகிறது என்று நீங்கள் கருதினால் பலாலி விமான நிலையத்தினால் பயனடைய போகும் சர்வதேச பயணிகளின் வருடாந்த வரவையும் அனுமானமாக அதனால் ஏற்படப் போகின்ற லாபத்தையும் சொல்ல முடியுமா?
பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போது அதுவும் மத்தள விமான நிலையம் போன்று சர்வதேச விமானங்களில் வரவுகள் அற்ற ஒரு விமான நிலையமாக மாற்றமடையும் என்ற கருத்து பொதுமக்களிடையே இருப்பதால் விமான நிலையம் அபிவிருத்தி தவிர்ந்த வேறெதுவோ காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் பொது மக்களின் காணிகள் தகுந்த பண கொடுக்கல் வாங்கல் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா ?இன்றேல் ஏன்?
விமான நிலையம் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுவதும் காங்கேயன் துறை முகம் அபிவிருத்தி செய்யப்படாததும் இராணுவ அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்களின் காணிகள் பறிக்கப்படுகின்ற என்ற பொதுமக்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லை என்றால் ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.
காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி | Virakesari.lk
பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்
பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்
(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சிரித்தவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்த பின்னர் மேலதிக கேள்விகளை எழுப்பிய அர்ச்சுனா, சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன்தான். யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிலை பெட்டி அல்ல. நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேணும் பதில் வழங்கப்படவில்லை. வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் காணிகள் பெறப்படுகின்றன. அங்கே மக்கள் காணிகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பில் செய்த ஒரு வேலையை கூறுங்கள். கல் நடுவதாக ஆட்களை பேய் காட்டக்கூடாது. சும்மா ஆட்காட்டுதல், பேய் காட்டுதல் வேலையை யாழ்ப்பாணத்தில் வைக்க வேண்டாம். யாழ்ப்பாணம் உங்களின் வெற்றிலைப் பெட்டி இல்லை என்றார்.
இதன் பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதற்கு பதிலளிக்காமல் சபையின் தினப் பணிகளை முன்னெடுத்து அமைச்சின் அறிவித்தலொன்றை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சுனா தொடர்ந்தும் பதில் கூறுங்கள் என்று அமைச்சரை நோக்கி தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
இவ்வேளையின் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் ஏதோவொன்றை அமைச்சரை நோக்கி கூறினார். அந்த வாட்டுக்கே உங்களையும் அனுப்ப வேண்டி வரலாம் என்று சுஜீவ சேனசிங்கவை நோக்கி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிரித்தவாறு கூறினார்.
இதேவேளை அர்ச்சுனா தொடர்ந்தும் சபைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த நிலையில் அமைதியான இருக்குமாறு சபாநாயகரும் தொடர்ந்தும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அர்ச்சுனா அமைதியடையாமல் அமைச்சரை பார்த்து ஏதோவொன்றை கூறிக்கொண்டிருந்த போது ''நான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன் ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தயவு செய்து என்னை பேசுவதற்கு இடமளியுங்கள். இல்லையென்றால் இங்கே இடையூறு ஏற்படுத்துபவரை வெளியே போடுங்கள்'' என்று அமைச்சர் கூறினார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுனா அவர் பதிலை வழங்கவில்லை. அவர் இப்போது பைத்தியம் என்று கூறுகின்றார். அந்த வசனத்தை நீக்குமாறு கோருகின்றேன். என்றார்.
இதனை தொடர்ந்தும் அமைச்சர் அர்ச்சுனாவுக்கு பதிலளிக்காது,அமைச்சின் அறிவித்தலை வாசித்து அமர்ந்தார்.
பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில் | Virakesari.lk