Aggregator

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?

1 month 3 weeks ago
அண்மைக்காலங்களில் சிங்களம் தமிழர்களை கடற்தொழில் அமைச்சர்களாக நியமிக்கும் போதே பல சூட்சுமங்கள் விளங்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் நீதி அமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டார்.அப்போதுதான் தமிழருக்கெதிரான பல அநியாயங்கள் நடந்தன. தமிழர் பதவிகளை முன்னணியாக வைத்து ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களம் வலு கில்லாடிகள்..சேர் பொன் இராமநாதன் தொடக்கம் கதிர்காமர் ஊடாக இன்றைய கருணா,சம்பந்தன்,சுமந்திரன் வரை அந்த யுக்தியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago
கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது. தமிழீழத் தேசியக் கொடி முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள் https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago

கனடா- பிரம்டன் நகரசபை  தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது.

பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது.

இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது.

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை

தமிழீழத் தேசியக் கொடி

முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை! | Recognition Of Tamil Eelam National Flag In Canada

தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்

GalleryGalleryGalleryGalleryGallery


https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
அர்ச்சுனா தான் யார் என்பதை வெளிபடையாக காட்டி பின்னரும் அவரை புகழ்ந்து ஆதரிப்பவர்கள் இருக்கின்றார்கள் 😟

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?

1 month 3 weeks ago
இங்கு எல்லை தாண்டுவதை விட உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையே பாரிய பிரச்சனை அந்த முறை மூலம் அவர்கள் நாட்டுக்குள் அண்டை மாநில மீனவர்களை இதே வேதாரணியம் மீனவர்கள் சிறை பிடித்து பாரிய சர்ச்சைகள் உருவாகுவது வழமை ஆனால் வேண்டும் என்றே அந்த செய்திகள் மழுங்கடிக்கப்பட்டு போகின்றன . இந்த விளக்கம் கூட தெரியாத வகையில் இலங்கை மீன்பிடி அமைச்சர் இருக்கிறார் . பி பி சி தமிழ் இங்கிலாந்து வரி பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்திய மத்திய அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊது குழல் அவர்களிடம் உண்மை வருமா ? செய்தி இருட்டடிப்பு தாண்டி உண்மை செய்திகள் அத்தி பூத்தது போல் வரும் அதில் ஒன்று கிழே இணைக்கிறேன் . இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை. நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும். ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி. ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது. தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும். மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
வணக்கத்துக்குரிய புத்தரை கைது செய்து விட்டார்களாம். வணக்கத்துக்குரியவர், வணக்கத்துக்குரிய இடத்தில இருந்தாற்தான் அது வணக்கத்துக்குரியது. அதைவிட்டு மலம் சலம் கழிக்குமிடம், விவசாயம் செய்யுமிடம் எல்லாம் வைத்து கேலிக்கூத்தாக்கினால் நாய்கூட கழித்துவிட்டுத்தான் செல்லும். இந்தபிக்குகளை உழைத்துச்சாப்பிடச்சொல்லுங்கள். மக்களின் வரிப்பணத்தில் தின்றுவிட்டு முன்னுரிமை கேட்டு சும்மா இருந்து திமிர் பிடிச்சாடுதுகள். அப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தால்; ஒருத்தனும் காவிஉடுத்தி விகாரையில் இருக்க மாட்டான். குடு காரன், காவாலி, காடை எல்லாத்துக்கும் காவியும், இராணுவ சீருடையும் போத்தி தங்களை பாதுகாக்க அரசியல் வாதிகள் வளர்க்கிறார்கள், போஷிக்கிறார்கள். பிக்குகள் விகாரைக்குள் அடங்கி பௌத்த தர்மத்தை போதிக்காத வரை சலுகைகள் இல்லை, அவர்களும் சாதாரண மனிதர்களே என்று அறிவியுங்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள், பாலியல் சேட்டை விடுகிறார்கள், சண்டித்தனம் காட்டுகிறார்கள், நாட்டை கொழுத்துகிறார்கள், சாதாரண மக்களை விட கேவலமாக நடந்து மக்களை பிழையான வழியில் வழிநடத்துகிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? சட்ட விலக்கழிப்பு? இதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதனாற்தான் இவர்களுக்கு இந்தகொழுப்பு. குற்றம் புரிந்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அது அரசனாக இருந்தாலென்ன, ஆண்டியாக இருந்தாலென்ன, ஆசானாக இருந்தாலென்ன. அப்போதுதான் நாடு சமநிலை பெறும். இதை அனுரா சட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டில் சமாதானம், சமஉரிமை என்பது வெறும் பேச்சுக்கு மட்டுமே. துறவிகளை கண்டால் கையெடுத்து கும்பிட மனம் வர வேண்டும். இதுகளை கண்டால் பயந்து அலறியடித்து ஓட வேண்டியுள்ளது. எங்கும் எதிலும் மதவாதம், இனவாதம். நாடு அழிந்தும் மாறாத இரும்பு மனமெல்லாம் அன்பை போதிக்கினமாம்! அவர்களை அரசு போஷிக்குதாம்.

யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.

1 month 3 weeks ago
நாச்சியார் கோவில் என்றாலே இவர் முகம் தான் முதலில் ஞாபகம் வரும். பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த போது தாயகக் கலைஞர் என்றவகையில் இவரை மேடையில் கௌரவிக்கும் பாக்கியம் பெற்றேன். அத்துடன் இவரது மருமக்கள் எனது பிள்ளைகளின் நண்பர்கள். லூர்து மாதா கோயில் செல்பவர்கள் அங்கே இவரது மகளும் மருமகனும் நடாத்தும் கோட்டலில் தங்கி உணவருந்தலாம். ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகள்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?

1 month 3 weeks ago
எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.

அமெரிக்காவின் அவலம்

1 month 3 weeks ago
இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது. என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும். நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது. மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே. ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும். இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே. 100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது. வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார். அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

1 month 3 weeks ago
அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

1 month 3 weeks ago
நீங்கள், லண்டனில் தானே வசிக்கின்றீர்கள். ஒருக்கால்… City University ஐ, அணுகி பார்க்கிறது. 😂 லக்ஸ்மன் நாமல் ராஜபக்ச… ஒறிஜினலா, டூப்ளிகேட்டா என்று தெரிந்து விடும். 🤣

நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி!

1 month 3 weeks ago
இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா? இதுவரை காலமும் நாமலின் போட்டி பரீட்சை பிந்தைய பரீட்சைகள் சகலதையிம் ஜீ எல் பீரிஸ் எழுதி கொடுத்ததாக அல்லவா சொல்வார்கள்.

அமெரிக்காவின் அவலம்

1 month 3 weeks ago
அண்மையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் இங்கே தன்னை கூப்பிட்டு விடுமாறு தனது மனைவியின் தமையனை கேட்டிருந்தார். அவர் எனது குடும்ப உறுப்பினர் என்பதால் என்னிடமும் ஒரு பகுதி உதவியை நாடினார். கூப்பிட்டு விடலாம் ஆனால் அவருக்கு இங்கே வந்தால் இவை தான் வேலை என்பதை மட்டும் சொல்லி விட்டு கூப்பிட ஏற்பாடு செய் என்றேன். வேலையை சொன்னதும் வரவில்லை என்று விட்டார்.

இலஞ்சம் பெற முயன்ற நெடுங்கேணி பொலிஸ் சார்ஜன் கைது!

1 month 3 weeks ago
நாட்டில்... சிங்களவனுக்கு ஒரு சட்டம், தமிழனுக்கு ஒரு சட்டம். இவர்... தமிழர் என்ற படியால் கைது செய்திருக்கின்றார்கள். சிங்களவன் என்றால்... பதவி உயர்வு கொடுத்திருப்பார்கள்.

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம். கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை…. இந்த இனத்துக்கு உய்வே இல்லை.