Aggregator
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
இரசித்த.... புகைப்படங்கள்.
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு
விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் - தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்
விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் - தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்
21 Nov, 2025 | 05:04 PM
![]()
(ஸ்டெப்னி கொட்பிறி)
விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற “விசேட தேவையுடையவர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் (German Federal Ministry for Economic Cooperation and Development) சார்பாக, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) மற்றும் சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (Swiss Agency for Development and Cooperation - SDC) ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கையின் விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புப் போட்டி மேடை (Disability Job Match Pavilion) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது தொழில் வாய்ப்புக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையவர்கள் தங்களது சுயவிவரக் கோவையை சமர்ப்பித்தனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
விசேட தேவையுடையவர்களின் தொழில் வாய்ப்புகளில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த சிக்கல்களைக் கண்டறிந்து அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அதேவேளை நாம், விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு விசேட தேவையுடையவருக்கும் தனித்துவமான திறன்கள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும்.
விசேட தேவையுடையவர்களுக்குச் சிறந்த தொழிற்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சி திட்டம் (VTSL) உட்பட பல தரப்பினர் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, விசேட தேவையுடையவர்களுக்காக சிறந்த தொழிற்கல்வி பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் அமைவதற்கு பல வழிமுறைகளை உருவாக்கிக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில், தொழில்நுட்பத்துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறைகளில் விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மட்டத்திலும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக பல கல்வி முறைகளை உருவாக்க வேண்டும். விசேட தேவையுடையவர்களுக்கு கல்வி மிக அவசியம்.
விசேட தேவையுடையவர்களின் இலட்சியத்தைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றுவதற்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பங்களிப்பு வழங்கும் என நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அவலம்
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு
Published By: Digital Desk 3
21 Nov, 2025 | 12:59 PM
![]()
மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளியினால் ஏற்கனவே விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களாகவே வியட்நாமில் சீரற்ற வானிலை நிலவுகிறது. கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு சூறாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்கி பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான சுற்றுலா நகரமான டா லாட்டுக்கான முக்கிய நுழைவுப் பாதையான மிமோசா கணவாயின் ஒரு பகுதி பள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இடிந்த பகுதியில் உருவான பெரிய இடைவெளியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு அவசரகால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளில் இராணுவப் படையினரும் பொலிஸாரும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வியட்நாமில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமானது முதல் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பௌத்த மயமாக்கல் வெல்லாவெளியில் வெடித்த போராட்டம் : துரத்தியடிக்கப்பட்ட தொல்பொருள்திணைக்களத்தினர் - களத்திற்கு விரைந்த தவிசாளர்கள்
முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
அர்ச்சுனா எம்.பிக்கு மரண அச்சுறுத்தல்
புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முகமட் பைசல் என்னை கொல்லுவதாக அச்சுறுத்தியுள்ளார் என்றும், இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபையில் முறையிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நிலையியல் கட்டளை கீழ் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது தொடர்பில் பாராளுமன்ற உணவக பகுதியில் வைத்து பைசல் எம்.பி தனக்கு அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வரவு- செலவுத்திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட முன்னர் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதுடன், அதற்கு அமைச்சர் பதிலளித்திருந்தார்.
அதன் பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக சபைக்குள் வந்த அர்ச்சுனா எம்.பி ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து அது தொடர்பில் சபாநாயகரிடம் முறையிட்டார்.
இதன்போது அர்ச்சுனா எம்.பி கூறுகையில்,
நான் புத்தளம் மாவட்டம் தொடர்பான கேள்வியை எழுப்பிவிட்டு சிற்றுண்டிச்சாலைக்கு போகும் போது, அங்கு வாசலில் உள்ள கேமராவுக்கு முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் என்னை கொலை செய்வதாக தெரிவித்தார். தயவு செய்து அந்த வீடியோ பதிவை எடுத்து விசாரணையை முன்னெடுங்கள். எனக்கு சாவதற்கு பயமில்லை. ஆனால் ஒரு கேள்வியை கேட்டதற்காக இவ்வாறு கூறுகிறார் என்றார்.
இவ்வேளையில் பதிலளித்த சபாநாயகர் இது தொடர்பான விடயத்தை சிறப்புரிமையை பிரச்சினையாக முன்வையுங்கள் என்றார்.
யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
டி.கே.ஜி. கபில
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொந்தமான இரும்புத் தொகுதியை வழங்குவதாக உறுதியளித்த ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரும்பு வாங்கும் தொழிலதிபரை விமான நிலைய வருகை முனையத்திற்கு வரவழைத்து,ரூ.1 மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றார்.
யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் அவர் இரும்பு வாங்கும் தொழிலதிபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராகம, எண்டேரமுல்ல பகுதியில் வசிக்கும் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிக அளவு இரும்பு தொகுதி இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான விலைமனு கோரலை சமர்ப்பிக்க ரூ.1 மில்லியனுடன் விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று தனது மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார். அவர்கள் விமான நிலைய வருகை முனையத்தில் அமர்ந்திருந்தனர், அவர்களிடம் ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராகமவைச் சேர்ந்த நபர் ஒரு மில்லியன் ரூபாயுடன் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், யாழ்ப்பாண தொழிலதிபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரை அணுகி இது தொடர்பாக புகார் அளித்தார். பொலிஸார், தொழிலதிபருடன் விமான நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேமரா அமைப்பை கண்காணித்தனர்.
பணத்துடன் தப்பிச் சென்ற நபரை தொழிலதிபர் அடையாளம் கண்டு, அதை காவல்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா அமைப்பின் பொறுப்பாளர் கபில சதருவன் பலிஹக்கார, வெள்ளிக்கிழமை (21) அன்று காலை, ஏதோ ஒரு காரணத்திற்காக கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அலுவலகத்தில் தரகராக பணியாற்றி, விமான நிலையத்தில் மோசடியாக பணம் பெற்ற நபரை அடையாளம் கண்டு, உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்படி, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு சென்று, ராகம, எண்டேரமுல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ரங்கநாத் சிவகுமாரை கைது செய்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamilmirror Online || யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவாலை பகுதியைச் சேர்ந்த தர்ஷன் அஸ்வின் என்ற 9 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளில், பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதை அடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது. உடனடியாக குழந்தை சங்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இறப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
20 Nov, 2025 | 02:01 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதை உறுதிப்படுத்தி சுகாதார அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி முஸ்லிம் பெண் தாதியர்கள் தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
முஸ்லிம் பெண் தாதியர்களின் ஆடை தொடர்பாக கடந்த சில நாட்களாக கருத்தாடல்கள் சமூக மட்டத்திலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்ற முஸ்லிம் பெண் தாதியர்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்காத நிலையிலேயே 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இந்தப் பாராளுமன்றத்திலே ஒரு தனிநபர் பிரேரணையை நான் கொண்டு வந்தேன். அந்தப் பிரேரணை மீது நான் பேசுகின்ற போது பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டினேன்.
இன்று தாதிமார் தொழிலென்பது சகல மக்களுக்கும் தேவையான, சகல மக்களும் பங்குபற்றக்கூடிய, சகலரும் நம்பியிருக்க வேண்டிய ஒரு பொதுவான தொழிலாக இருக்கின்றது.
அப்படியான ஒரு பொதுவான தொழிலிலை சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய கலாசாரங்களுக்கும் சமய அனுஷ்டானங்களுக்கும் ஏற்ற வகையில் சமயம் அனுமதிக்கக்கூடிய வகையில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் .
முஸ்லிம் பெண்கள் காற்சட்டையின்றி மேலாடை மாத்திரம் அணிவதை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காத காரணத்தினால் அந்தத் தொழிலில் பெருமளவில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றார்கள், எனவே, முஸ்லிம் தாதியர்கள் தங்களின் மார்க்கம், கலாசாரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சீருடை அணிவதற்கு வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறான காரணங்களுக்காக முஸ்லிம் பெண் தாதியர்களுக்கு காற்சட்டை அணிவதற்கான அனுமதி வழங்க வேண்டுமென இந்த சபையில் தனிநபர் பிரேரணையை கொண்டு வந்திருந்தேன்.
குறித்த பிரேரணை தொடர்பாக அப்போதிருந்த சகல இனத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்தாலோசித்து ஆதரவாக செயற்பட்டதுடன் அன்றைய சபாநாயகராக இருந்த சபாநாயகர் மர்ஹும் எம்.எச் முஹம்மட்டும் முஸ்லிம் தாதியர்கள் அவர்களின் கலாசார முறைப்படி சீருடை அணிய இந்த பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பிரகாரம் இறுதியில் அன்றைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரத் அனுமதியுடன் குறித்த எனது பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சபாநாயகரால் குறிப்பிடப்பட்டு அங்கீகாரத்தை வழங்கியது.
இவ்வாறான பின்னணியில் அன்றிலிருந்து இன்று வரை இலங்கையில் எல்லா அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் முஸ்லிம் தாதியப் பெண்கள் அவர்களுடைய சீருடைக்கு மேலதிகமாக காற்சட்டை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் அணிந்து, கொண்டிருந்ததுடன் இது தொடர்பில் எந்த ஒரு பிரச்சினையும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தாதியர்களாக இன்று வரை எல்லா மருத்துவமனைகளிலும் தங்களுடைய கடமைகளை புரிகிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தேசிய தாதியர் பயிற்சி பாடசாலை மற்றும் வேறு சில வைத்தியசாலைகளிலும் இவ்வாறு காற்சட்டை அணிய அனுமதி இல்லை என்ற ஒரு முறைப்பாடு எம்மிடம் வந்திருக்கின்றது.
நீங்கள் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்ற களுத்துறை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் சகல இன மக்களுடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடிய அதேபோன்று அனைத்து இன மக்களும் மதிக்கின்ற ஒரு அமைச்சர் என்ற வகையிலும் இது தொடர்பாக தங்களது அமைச்சினூடாக சுற்று நிருபமொன்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், திணைக்களங்களுக்கு அவசரமாக அனுப்பி தமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? என்றார்.
முஸ்லிம் பெண் தாதியர் தமது கலாசாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா | Virakesari.lk