Aggregator

சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்

1 month 3 weeks ago

சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்

சனி, 22 நவம்பர் 2025 11:32 AM

சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்

நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற  அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், கனடா வாழ் மக்களின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த இரண்டாவது தொகுதியினர் மாற்று அவயவங்கள் பொருத்திக் கொள்வதற்காக சென்னை சென்றிருந்தது.

கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது 

வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக வடக்கு கிழக்கை சேர்ந்த 32 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். அவர்களே மாற்று அவயங்களை பொருத்திக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர் 

https://jaffnazone.com/news/52508

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

1 month 3 weeks ago
கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு November 22, 2025 4:35 pm பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக, குறித்த வீதியின் கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கண்டி – கொழும்பு கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை – கலகெதர ஊடாக கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இதே மாற்று வீதி ஊடாகவும் பயணிக்க முடியும். கம்பளை – கொழும்பு கம்பளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கொழும்பிலிருந்து கம்பளை செல்லும் வாகனங்கள் மாவனெல்ல – ஹெம்மாத்தகம ஊடான மாற்று வீதியைப் பயன்படுத்த வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இயலுமானவரை அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். https://oruvan.com/kadukannawa-landslide-death-toll-rises-to-02/

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

1 month 3 weeks ago

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

November 22, 2025 4:35 pm

கடுகன்னாவ மண்சரிவு – உயரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, காயமடைந்த நால்வர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக, குறித்த வீதியின் கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கண்டி – கொழும்பு

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை – கலகெதர ஊடாக கண்டிக்கும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இதே மாற்று வீதி ஊடாகவும் பயணிக்க முடியும்.

கம்பளை – கொழும்பு

கம்பளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கொழும்பிலிருந்து கம்பளை செல்லும் வாகனங்கள் மாவனெல்ல – ஹெம்மாத்தகம ஊடான மாற்று வீதியைப் பயன்படுத்த வேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலை

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இயலுமானவரை அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://oruvan.com/kadukannawa-landslide-death-toll-rises-to-02/

கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!

1 month 3 weeks ago

கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!

22 Nov 2025, 2:00 AM

TVK Vijay Kanchipuram

கரூரில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் முதல் முறையாக நாளை நவம்பர் 23-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இப்பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்கிறார்.

G6SeUsBaIAIzVox-710x1024.jpeg

இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், பாதுகாப்பு கோரி கொடுத்த கடிதம்: வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மட்டுமே
இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வரவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அனுமதி இல்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/after-karur-tragedy-vijay-to-visit-kanchipuram-tomorrow/

கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!

1 month 3 weeks ago
கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’! 22 Nov 2025, 2:00 AM கரூரில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் முதல் முறையாக நாளை நவம்பர் 23-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இப்பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், பாதுகாப்பு கோரி கொடுத்த கடிதம்: வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வரவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அனுமதி இல்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/after-karur-tragedy-vijay-to-visit-kanchipuram-tomorrow/

மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்

1 month 3 weeks ago
பாத்திமா... பெயரைப் பார்க்க, முஸ்லீம் பெண் மாதிரி உள்ளது. இப்ப, பாய்மார் எல்லாரும்... மொட்டாக்கு போடவில்லை என்று பொங்கி எழப் போகிறார்களே. இரண்டு கிழமைக்கு "என்ரரெயின்மென்ட்" இருக்கு. 😂 🤣

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

1 month 3 weeks ago
உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு! Vhg நவம்பர் 22, 2025 ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (21.11.2025) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. இதையொட்டி, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக, போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நேற்று (21.11.2025)மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. பெற்றோரின் பங்கேற்புடன் கண்ணீர்ப்பூ அஞ்சலி இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் பொதுச் சுடரை, மாவீரர் ஒருவரின் உறவினர் ஏற்றி வைத்து, தியாக மைந்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பலரும் கண்கலங்க மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர். இந்தத் தியாக நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவைப் போற்றினர். https://www.battinatham.com/2025/11/blog-post_22.html

மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்

1 month 3 weeks ago
மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் 22 Nov, 2025 | 01:26 PM மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங் இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். போட்டிக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு பாத்திமா போஷ் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைஸ் அவர் மீது அவமரியாதை செய்ததாக கூறப்பட்டது. விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்காக அவர் பாத்திமாவை "முட்டாள்" என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாத்திமா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏனைய போட்டியாளர்கள் இந்த நிலைமைக்கு கோபம் தெரிவித்தனர். ஊடகவியலாளர்களை சந்தித்த போது பாத்திமா போஷ் கூறியதாவது: "நவத் செய்தது மரியாதையான செயல் அல்ல. அவர் என்னை முட்டாள் என அழைத்தார். உலகம் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன்" இந்த தைரியமான பேட்டி மெக்சிக்கோ ஜனாிபதி கிளாடியா ஷீன்பா உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டது. https://www.virakesari.lk/article/231106

மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்

1 month 3 weeks ago

மிஸ் யுனிவர்ஸ் 2025: அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்

22 Nov, 2025 | 01:26 PM

image

மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி, 74 ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார். 

தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங்  இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

போட்டிக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு பாத்திமா போஷ் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைஸ்  அவர் மீது அவமரியாதை செய்ததாக கூறப்பட்டது.

விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்காக அவர் பாத்திமாவை "முட்டாள்" என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாத்திமா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏனைய போட்டியாளர்கள் இந்த நிலைமைக்கு கோபம் தெரிவித்தனர். 

ஊடகவியலாளர்களை சந்தித்த போது பாத்திமா போஷ் கூறியதாவது: 

"நவத் செய்தது மரியாதையான செயல் அல்ல. அவர் என்னை முட்டாள் என அழைத்தார். உலகம் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன்" இந்த தைரியமான பேட்டி மெக்சிக்கோ ஜனாிபதி கிளாடியா ஷீன்பா  உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டது.

WhatsApp_Image_2025-11-22_at_12.25.24_PM

WhatsApp_Image_2025-11-22_at_12.24.25_PM


https://www.virakesari.lk/article/231106

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

1 month 3 weeks ago
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நிதர்ஷன் வினேத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் வெள்ளிக்கிழமை (21) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந் நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை செயலாளரினால் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கைக்கு அமைவாக புள்ளிகளை வழங்குவதற்கான விசேட பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களை பூர்த்தி செய்துள்ளாரா? என்பது தொடர்பிலும், வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமை தொடர்பிலும் எழுந்த ஐயப்பாடுகளை அடுத்து அது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்த மானியங்கள் ஆணைக்குழு இருவரது விண்ணப்பங்களும் நியமங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/துணைவேந்தர்-பதவிக்கு-விண்ணப்பித்த-அனைவருக்கும்-நேர்முகத்-தேர்வு/175-368304

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

1 month 3 weeks ago

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

image_7ec8520dd3.jpg

நிதர்ஷன் வினேத்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால்  வெள்ளிக்கிழமை (21) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.      

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந் நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை செயலாளரினால் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கைக்கு அமைவாக புள்ளிகளை வழங்குவதற்கான விசேட பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களை பூர்த்தி செய்துள்ளாரா? என்பது தொடர்பிலும், வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமை தொடர்பிலும் எழுந்த ஐயப்பாடுகளை அடுத்து அது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்த மானியங்கள் ஆணைக்குழு இருவரது விண்ணப்பங்களும் நியமங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.    

https://www.tamilmirror.lk/செய்திகள்/துணைவேந்தர்-பதவிக்கு-விண்ணப்பித்த-அனைவருக்கும்-நேர்முகத்-தேர்வு/175-368304

பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்

1 month 3 weeks ago
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவசர சிகிச்சையின் பின்னர் ஆம்புலன்சில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார். பரீட்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பாம்பு-தீண்டிய-நிலையில்-பரீட்சை-எழுதிய-மாணவன்/175-368312

பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்

1 month 3 weeks ago

பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது.

பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவசர சிகிச்சையின் பின்னர் ஆம்புலன்சில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார்.

பரீட்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/பாம்பு-தீண்டிய-நிலையில்-பரீட்சை-எழுதிய-மாணவன்/175-368312

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!

1 month 3 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி! ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிரில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் , குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் அதற்கு பின்னரான நீதிமன்றின் நடவடிக்கைகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாகவும் அருட்தந்தை கூறினார். அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://newuthayan.com/article/உயிர்த்த_ஞாயிறு_தாக்குதல்_தொடர்பான__இறுதி_அறிக்கையை_வெளியிட__அரசாங்கம்_உறுதி!#google_vignette

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!

1 month 3 weeks ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!

224935858.jpeg

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே  குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாகவும்  அவர் குறிப்பிட்டார். 

இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிரில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் ,
 
குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும்  அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் அதற்கு பின்னரான நீதிமன்றின்  நடவடிக்கைகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாகவும்  அருட்தந்தை கூறினார். அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://newuthayan.com/article/உயிர்த்த_ஞாயிறு_தாக்குதல்_தொடர்பான__இறுதி_அறிக்கையை_வெளியிட__அரசாங்கம்_உறுதி!#google_vignette

கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!

1 month 3 weeks ago
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்! adminNovember 22, 2025 யாழ்ப்பாணம், கொழும்புத்துறை யோகசுவாமிகள் சமாதி திருக்கோயிலுக்கு கண்டியில் இருந்து வருகை தந்த 120 பெளத்த துறவிகள் மற்றும் அடியவர்கள் அங்கு நடைபெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர். யோகசுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் நூல்களில் படித்ததாகவும், இந்த ஆத்ம ஞானியின் சமாதியை தரிசிக்க வேண்டும் என வந்ததாகவும் கூறினார்கள். அத்துடன் அங்கு யோகசுவாமிகள் வாழ்க்கை, போதனைகள் பற்றிய செய்திகளை மிகவும் பக்தி சிரத்தையுடன் கேட்டு மகிழ்ந்தனர். https://globaltamilnews.net/2025/222921/

கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!

1 month 3 weeks ago

கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!

adminNovember 22, 2025

4-1-1.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை யோகசுவாமிகள் சமாதி திருக்கோயிலுக்கு கண்டியில் இருந்து வருகை தந்த 120 பெளத்த துறவிகள் மற்றும் அடியவர்கள் அங்கு நடைபெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

யோகசுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் நூல்களில் படித்ததாகவும், இந்த ஆத்ம ஞானியின் சமாதியை தரிசிக்க வேண்டும் என வந்ததாகவும் கூறினார்கள்.

அத்துடன் அங்கு யோகசுவாமிகள் வாழ்க்கை, போதனைகள் பற்றிய செய்திகளை மிகவும் பக்தி சிரத்தையுடன் கேட்டு மகிழ்ந்தனர்.

4-3-1.jpg?resize=797%2C800&ssl=1

https://globaltamilnews.net/2025/222921/

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!

1 month 3 weeks ago
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு! adminNovember 22, 2025 யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது. இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் 2023 ல் யாழ் மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது. இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் 22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத நிலையில் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 10 பேர் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது 80 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலர், யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை இறப்புகள் பதிவாகவில்லை. டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் கழிவுகளை அகற்றும் போது தரம் பிரித்து உரிய முறையில் அகற்ற வேண்டும் . அதேபோல் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தரம் பிரிக்காத கழிவுகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதோடு உரியவர்களே தரம் பிரித்து தருமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் . யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்பத்திரன , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர் டெங்கு நோய் தாக்கம் https://globaltamilnews.net/2025/222925/

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!

1 month 3 weeks ago

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!

adminNovember 22, 2025

dengue-with-warning.png?fit=960%2C537&ss

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு  நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  டெங்கு கட்டுப்படுத்தல்  விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம்  கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது.

இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக  எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் 2023 ல் யாழ் மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது.

அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000  ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது.

இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில்  22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத  நிலையில் 208 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை  பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 10 பேர் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது 80 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்  மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலர்,

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை இறப்புகள் பதிவாகவில்லை.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள்   கழிவுகளை அகற்றும் போது தரம் பிரித்து உரிய முறையில் அகற்ற வேண்டும் .

அதேபோல் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தரம் பிரிக்காத கழிவுகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதோடு உரியவர்களே தரம் பிரித்து தருமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் .

யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குறித்த  கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்பத்திரன , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

டெங்கு நோய் தாக்கம்

https://globaltamilnews.net/2025/222925/

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

1 month 3 weeks ago

21949215-ilayaraja.webp

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது.

'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

https://www.dinamalar.com
No image previewஇளையராஜா புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்த ஐகோர்ட் தடை
சென்னை: யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா