Aggregator
"மூன்று கவிதைகள் / 12"
"மூன்று கவிதைகள் / 12"
விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து
மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம்
விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி
குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்!
ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி
புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக
பாதை தவறி அழுக்கைச் சுமந்து
மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே!
........................................................
பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே
உன் அறிவும் உனக்குப் பெரிதோ?
சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும்
உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ?
பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன்
உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ?
வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம்
தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ?
பாசத்தின் அருமை உனக்குத் தெரியுது
வேசமிடும் மனிதனுக்கு அன்பு தெரியாதோ?
மோசமான இலங்கை அரசியல் உலகில்
மனிதம் வளராது இறந்தது எனோ?
............................................
யாழின் தென்றலில் நல்லூர் வளாகத்தில்
நடந்து சென்றோம் கைகள் கோர்த்தே!
புனித நிலத்தில் ஞானம் சேர
மனம் நிறைந்து ஆனந்தம் பெருகியதே!
நல்லூர் மேளமும் கடல் ஓசையும்
மனதில் நிலைத்து என்றும் வாழுமே!
கடல் சறுக்கல் டால்பின் பாய்தல்
ஈழ சுற்றுலாவைப் பறை சாற்றுமே!
தெற்கும் மேற்கும் மனிதம் நிலைத்தால்
வடக்கும் கிழக்கும் மீண்டும் தளிருமே!
ஒற்றுமை கீதம் உள்ளத்தில் பாடினால்
வேற்றுமை நீங்கி சொர்க்கம் ஆகுமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"மூன்று கவிதைகள் / 12"
https://www.facebook.com/groups/978753388866632/posts/31528636796784890/?