Aggregator
மாகாணசபை முறைமையை பதிலீடு செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை; டில்வினின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்தும் பேசப்படும் சாத்தியம்
23 Nov, 2025 | 11:55 AM
![]()
(நா.தனுஜா)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும், வெகுவிரைவில் இடம்பெறவுள்ள டில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து கலந்துரையாடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்கள் ஒரு வருடகாலத்துக்குள் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழரசுக்கட்சியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பிலும் இதுகுறித்து ஜனாதிபதி உத்தரவாதமாக எதனையும் கூறவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்துவருவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது.
இவ்விஜயத்தின்போது மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்ப்பதாக இதுபற்றி அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோன்று இனிவரும் நாட்களில் மாகாணசபைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை எனவும், அதனைப் பதிலீடு செய்யக்கூடிய மாற்றுவழிகள் குறித்துச் சிந்திக்குமாறும் அரசாங்கத்துக்கு நெருக்கமான செயற்பாட்டாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்.
எனவே மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்கான காலவரையறை எதனையும் அரசாங்கம் வெளியிடாத நிலையில், ஜனாதிபதி உத்தரவாதம் அளித்ததன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளின்போது மாகாணசபை முறைமையை பதிலீடு செய்வது குறித்தும் ஆராயப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது "ஃபினா" சூறாவளி; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது "ஃபினா" சூறாவளி; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை
Published By: Digital Desk 3
23 Nov, 2025 | 04:19 PM
![]()
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தின் கரையோரம் பல நாட்கள் நீடித்த வெப்பமண்டல சூறாவளி ஃபினா, 3 ஆம் வகை சூறாவளியாக வேகமாக வலுவடைந்ததன் பின்னர் பல நாட்கள் நீடித்துள்ளது.
சனிக்கிழமை இரவு, பரபரப்பான டார்வின் நகருக்கும், கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில் உள்ள திவி தீவுகளுக்கும் இடையில் சூறாவளி வீசியுள்ளது. அங்கு மணிக்கு 110 கிலோ மீற்றர் (70 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது.
சூறாவளியின் "மிகவும் அழிவுகரமான மையம்" வடக்குப் பிராந்தியத்திிலருந்து நகர்ந்து விட்டது, ஆனால் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை மற்றும் காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பாளர் அங்கஸ் ஹைன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19,000 வீடுகள் மற்றும் வணிக செயற்பாடுகளுக்கு மின்சாரம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட பிராந்தி ஆளுநர் லியா ஃபினோச்சியாரோ தெரிவித்துள்ளார்.
சூறாவளியினால் பாரிய மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளன. வைத்தியசாலை ஒன்றின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
மரங்கள் மற்றும் மின்கம்பிகள் வீழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் நகர்ந்து செல்லும்போது கவனமாக இருக்குமாறும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஃபினா சூறாவளி மேற்கு அவுஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இது 4-வது வகை சூறாவளியாக வலுவடையக்கூடும் என கணிப்புகள் கூறுகின்றன.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை சூறாவளி கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும், வரும் நாட்களில் அது படிப்படியாக நகர்ந்து விடும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அபாயத்தை அதிகரிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 1974 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று 66 பேரைக் கொன்ற டிரேசி சூறாவளியின் வேதனையான நினைவுகளை டார்வினில் வசிக்கும் சுமார் 140,000 பேருக்கு ஃபினா சூறாவளி மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இலங்கையில் சீன மின்சார பேருந்து திட்டம்
இலங்கையில் சீன மின்சார பேருந்து திட்டம்
Published By: Digital Desk 3
23 Nov, 2025 | 11:12 AM
![]()
(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கைக்கு மின்சாரப் பேருந்துகளை வழங்குவதற்கான உதவித் திட்டத்தை சீனா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹோங்(Qi Zhenhong) தெரிவித்தார். இந்தத் திட்டம் குறித்த செய்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக வெளிநாட்டுச் செலாவணியை நம்பியிருக்கும் இலங்கை, கடந்த காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாட்டை சந்தித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது.
மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவது, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதுடன், கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன் மின்சார வாகனங்களுக்கான சோதனைத் திட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் நடந்து வருகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள், சினோபெக் எரிசக்தித் திட்டம் போன்ற சீன ஆதரவுடைய வளர்ச்சித் திட்டங்களில் இலங்கை சீரான முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த மின்சாரப் பேருந்துத் திட்டம், இந்த நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக உள்ளது. மறுபுறம் இந்த திட்டத்திற்கான அறிவிப்பு, கொழும்பில் நடைபெற்ற இலங்கை மாணவர்களுக்கான சீனாவின் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் வெளியிடப்பட்டது. நிர்வாகம், விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட 17 முக்கியப் பகுதிகளில் இதுவரை கிட்டத்தட்ட 1,000 இலங்கையர்களுக்கு சீனா பயிற்சி அளித்துள்ளது.
இந்த மின்சாரப் பேருந்துத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது இலங்கையின் போக்குவரத்துத் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படுவதால், கார்பன் உதவும். எரிபொருள் விலையின் நிலையற்ற தன்மையிலிருந்து இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை இந்தத் திட்டம் விடுவிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
பெங்களூருவில் சினிமா பாணியில் ரூ. 7 கோடி கொள்ளையடித்த நபர்களை போலீஸார் பிடித்தது எப்படி?
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது.
சுயமாக குடிவரவு பணி
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும்.
இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது.
இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.
பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://tamilwin.com/article/good-news-foreigners-who-visting-sri-lanka-1763883182
அஸ்வெசும திட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அஸ்வெசும திட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற
ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி சபை தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
https://tamilwin.com/article/important-instructions-for-opened-bank-accounts-1763885116
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாவீரர் நினைவு வாரம்..! அநுர அரசிற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்
மாவீரர் நினைவு வாரம்..! அநுர அரசிற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்
இந்த நாட்டில் அனைவரும் சமன் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவது போல் எமது மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் பதில பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் தங்கள் தேசங்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூருகின்ற மாதம்.
போராடி மடிந்தவர்களை நினைவு
அதனால்தான் உலகெங்கும் இராணுவத்தினராக இருக்கலாம் போராடியவர்களாக இருக்கலாம் அவர்களைப் பொப்பி மலரால் நினைவு கூருவார்கள். இது உலகம் எங்கும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

இப்படியான கார்த்திகை மாதத்திலே தான் நாங்களும் தங்களுக்காக அன்றி எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற ஒரு வாரத்தை அனுஷ்டிக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் 13 ஆம் திகதி நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும் விகாரமாதேவி பூங்காவிலே தன்னோடு தோள் நின்று ஆயுதம் ஏந்தி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற படங்களை நாங்கள் பார்த்தோம்.
தங்களின் அன்றைய தலைவரின் சீருடையோடு அவர் இருக்கின்ற படம் அதன் பின்னணியில் இருக்கின்றது, ஜனாதிபதி அந்த மேடையில் பேசுகின்றார்.
அன்றும் அதற்குப் பின்பு அவரின் தோளோடு தோள் நின்றவர்கள் இப்படியாக மலர் அஞ்சலி செலுத்தி அவர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தமையை நாங்கள் பார்த்தோம்.
இனத்தின் விடிவுக்காக போராடியர்கள்
அதே போன்று ஓர் இனத்தின் விடிவுக்காக போராடியவர்கள் என்றும் எங்களின் மனங்களிலே நீங்கா இடம் பெற்றவர்கள். ஏனென்றால் எங்களுக்காகக் தங்கள் உயிர்களை அவர்கள் கொடுத்தவர்கள்.
இது நான் எப்போதுமே சொல்லுகின்ற விடயம். அவர்களுடைய அந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக நாம் எதையும் சொல்ல முடியாது. ஏனென்றால் தங்களிடத்தில் இருக்கும் அனைத்தையூம் அதாவது தமது உயிரையே எமக்காக அவர்கள் கொடுத்தவர்கள்.

இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்விலே பெற்றோர் வருகின்றபோது விசேடமாக தாய்மார், சகோதரிகள் வருகின்றபோது இன்னமும் அவ்கள் அழுது புலம்புவதை கண்டோம். இங்கே இன்னமும் என நான் கூறுவது இத்தனை வருடங்களாகியும் அவர்கள் அழுகின்றனர் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு.
அந்தக் காரணம் இவர்கள் எம்மை விட்டுப் போய்விட்டனர் என்ற வருத்தம் மட்டும் அல்ல அதாவது நான் பெற்றவள் இருக்கப் பிள்ளை மடிந்து விட்டானே என்ற அங்கலாய்ப்பு மட்டுமல்ல, அவர்களின் தியாகத்தினாலே இன்னமும் எமது இனம் ஒரு விடிவைக் காணவில்லையே அது வீணாகப் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்பு அங்கே தென்படுகின்றது.
அவர்கள் மடிந்ததாலே இந்த இனம் விடிந்தது என்று தெரிந்தால் ஒரு பூரிப்பும் அதிலே கலந்து வரும். ஆனால் அப்படி இல்லாமல் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்போடு எங்களது இனம் காத்திருக்கின்றது.
விடிவு ஏற்பட வேண்டும்
தனியான ஓர் இறைமை மிக்க நாடுகாக அவர்கள் போராடினார்கள். ஆனால் சுயமாக ஆட்சி செய்கின்ற முறையிலாவது நாங்கள் எங்களை ஆளுகின்ற ஒரு முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விளைகின்றோம். அவர்களுடைய அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகப் போய் விடக் கூடாது.
அவர்கன் பெற்றோர் இருக்கின்ற காலத்திலேயே ஒரு விடிவு ஏற்பட வேண்டும். சுயாட்சி முறையாவது எங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பயணிக்கின்றோம்.
சில நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியை எங்கள் கட்சி சந்தித்துப் பேசியபோதும் இந்த விடயம் குறித்துப் பேசினோம். அதில் ஒரு மணித்தியாலம் அரசியல் தீர்வு குறித்து பேசினோம்.
70 வருடங்களாக வெவ்வேறு வடிவத்திலான போராட்டங்களை நடத்தி வருகிறோம். உலகத்திலே எந்தச் சமூகமும் எந்த மக்களும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ மாட்டார்கள் அதனை ஏற்கவும் மாட்டார்கள்.
அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம்
அப்படியிருக்க ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிலே ஒரு மக்கள் எண்ணிக்கையில் 3 மடங்காக இருக்கின்றபோது எண்ணிக்கையில் குறைந்ததாகக் காணப்படும் சமூகம் எப்படி சம அந்தஸ்து உடையவர்களாக வாழ முடியும்? ஏனெனில் வாக்கெடுப்பு நடத்தினால் அது ஒரு பக்கமாக சாய்ந்துதான் நிற்கும்.

ஆனபடியால் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். நாட்டிலே நாங்கள் பெரும்பான்மையாக வாழாவிட்டாலும் நாம் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களிலே எங்களுக்கான அரச அங்கீகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள் எனக் கேட்பதன் தார்ப்பரியம் நியாயப்பாடு அதுதான்.
இது செய்யப்பட வேண்டும். எவர் நிமித்தம் செய்யப்படாது விட்டாலும் மடிந்துபோன எங்களுடைய மாவீரர்களது தியாகத்தின்நிமித்தமாக அது செய்யப்பட வேண்டும். மாவீரர்களது உறவூகள் விசேடமாக அவர்களது பெற்றார்கள் அதனைக் காண வேண்டும்.
துரோகி பட்டம்
என்னுடைய மகன் என்னுடைய மகள் இதற்காகத்தான் தன்னுடையவாழ்வைக் கொடுத்தார், அதன் பெறுபேற்றை நானாவது காண்கின்றேன் என்று சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும்.
தனி நாடு என்ற இலக்கை விட்டு விலகி விட்டோம் எனத் துரோகி பட்டம் சுட்டுகின்றவர்கள் இன்றைக்கும் எவராவது தனிநாட்டை கோருகின்றார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

தங்களோடு கூடக் களமாடு மடிந்தவர்களுக்கு என்று அந்தக் காலங்களில் நாட்டின் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு வீதி வீதியாக ரயர்கள் போட்டு எரிக்கப்பட்ட தங்களுடைய சகாக்களுக்காக நினைவு கூருகின்றபோது ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்
அந்த நேரத்தில் அடக்குமுறையை மேற்கொண்டவர்களிடம் கேட்கவில்லை அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் நாம் கேட்கின்றோம்.
எங்கள் மக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் மடிந்திருக்கின்றார்கள் ஒரு நியாயத்துக்காகப் போரிட்டு மடிந்திருக்கின்றார்கள் நீங்கள் உங்கள் சகாக்களை நினைவூ கூருகின்றீர்கள் அதைப் போற்றுகிறார்கள். இந்த நாட்டில் அனைவரும் சமன் என நீங்கள் சொல்கின்றமை உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வாங்குவது போல் இதோ இந்த மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை ஜனாதிபதி கொடுக்க வேண்டும் என்றார்.
https://ibctamil.com/article/ma-sumanthithran-speech-in-mullaitivu-1763876050#google_vignette