Aggregator

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

1 month 2 weeks ago
ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:47 AM (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது. மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக்.) அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார். இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்துள்ளது. இது இவ்வாறிருக்க, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தால் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு, செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இங்கிலாந்துடான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஒதுக்கியிருந்தது. ஆனால், குறுகிய டெஸ்ட் போட்டிகள் கருப்பொருளாக மாறினால் அது மிகவும் கடினமான சூழலை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி 2 நாட்களில் முடிவடைந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு 3ஆம், 4ஆம் நாட்களில் கிடைக்கவிருந்த 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் இல்லாமல் போய் நட்டம் ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாளன்று 19 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் திறமையாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார். இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலதிகமாக 9 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 164 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களுக்குள் வெற்றி அடையச் செய்தார். ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஹெரி ப்றூக் 52, ஒலி போப் 46, ஜமி ஸ்மித் 33, மிச்செல் ஸ்டார்க் 58 - 7 விக்., ப்றெண்டன் டொகெட் 27 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (அலெக்ஸ் கேரி 26, கெமரன் க்றீன் 24, ட்ரவிஸ் ஹெட் 21, பென் ஸ்டோக்ஸ் 23 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 45 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 11 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (கஸ் அட்கின்சன் 37, ஒலி போப் 33, பென் டக்கட் 28, ப்றைடன் கெயார் 20, ஸ்கொட் போலண்ட் 33 - 4 விக்., ப்றெண்ட்ன் டொகெட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 55 - 3 விக்.) அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 205 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 205 - 2 விக். (ட்ரவிஸ் 123, மானுஸ் லபுஷேன் 51 ஆ.இ., ஜேக் வெதரோல்ட் 23, ப்றைடன் கெயார் 44 - 2 விக்.) https://www.virakesari.lk/article/231189

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

1 month 2 weeks ago

ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா  வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் 

Published By: Digital Desk 3

23 Nov, 2025 | 11:47 AM

image

(நெவில் அன்தனி)

பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது.

மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக்.) அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.

2211_travis_head.png

2211_mitchell_starc.png

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தால் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு, செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இங்கிலாந்துடான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஒதுக்கியிருந்தது. ஆனால், குறுகிய டெஸ்ட் போட்டிகள் கருப்பொருளாக மாறினால் அது மிகவும் கடினமான சூழலை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டி 2 நாட்களில் முடிவடைந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு 3ஆம், 4ஆம் நாட்களில் கிடைக்கவிருந்த 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் இல்லாமல் போய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாளன்று 19 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

2211_ben_stokes.png

பென் ஸ்டோக்ஸ் திறமையாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார்.

இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலதிகமாக 9 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டை இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 164 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களுக்குள் வெற்றி அடையச் செய்தார்.

ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம்  இழந்து  172 (ஹெரி ப்றூக் 52, ஒலி போப் 46, ஜமி ஸ்மித் 33, மிச்செல் ஸ்டார்க் 58 - 7 விக்., ப்றெண்டன் டொகெட் 27 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (அலெக்ஸ் கேரி 26, கெமரன் க்றீன் 24, ட்ரவிஸ் ஹெட் 21, பென் ஸ்டோக்ஸ் 23 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 45 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 11 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (கஸ் அட்கின்சன் 37, ஒலி போப் 33, பென் டக்கட் 28, ப்றைடன் கெயார் 20, ஸ்கொட் போலண்ட் 33 - 4 விக்., ப்றெண்ட்ன் டொகெட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 55 - 3 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 205 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 205 - 2 விக். (ட்ரவிஸ் 123, மானுஸ் லபுஷேன் 51 ஆ.இ., ஜேக் வெதரோல்ட் 23, ப்றைடன் கெயார் 44 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/231189

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது நேரடித் தோல்வி 23 Nov, 2025 | 04:39 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. ஏற்கனவே ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த இலங்கைக்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றிகளை ஈட்டினால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு செல்லக்கூடியதாக இருக்கும். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் ஜனித் லியனகே 41 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 25 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் காமில் மிஷார 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். துடுப்பாட்டத்திற்கு கடினமாக அமைந்த ஆடுகளத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் சஹிப்ஸாதா பர்ஹான் 45 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 80 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சய்ம் அயூப் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: மொஹமத் நவாஸ் https://www.virakesari.lk/article/231152

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன? - துரைராசா ரவிகரன் எம்.பி. கேள்வி

1 month 2 weeks ago
23 Nov, 2025 | 11:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு அரசாங்கத்தின் வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இத் தீவிலே ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம். அரசியல் வழியில் போராடித்தோற்று ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் அயல் வீட்டுப் பிள்ளை – தம்பி ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும்,மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டி மாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம். எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது. இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான். தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள். உங்கள் வரவு ,செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்து விடுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/231171

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன? - துரைராசா ரவிகரன் எம்.பி. கேள்வி

1 month 2 weeks ago

23 Nov, 2025 | 11:24 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து  தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக   சிறையில் இருக்கும்  தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு  அரசாங்கத்தின்  வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென   தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23)  நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

இத் தீவிலே ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம். அரசியல் வழியில்  போராடித்தோற்று ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள்.

எங்கள் அயல் வீட்டுப் பிள்ளை – தம்பி ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும்,மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டி மாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம்.

எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது. இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான்.

தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள். உங்கள் வரவு ,செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்து விடுங்கள்  என்றார்.

https://www.virakesari.lk/article/231171

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய அநுர

1 month 2 weeks ago
Published By: Digital Desk 1 23 Nov, 2025 | 10:37 AM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்று ஜனாதிபதி உட்பட சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் அதிகமாக ஆங்கிலமொழியிலேயே விவரிப்புக்கள் காணப்பட்டிருந்தன. இதனை அவதானித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சொற்ப நேரத்திலேயே அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாகவே சுட்டிக்காட்டி குறித்த விடயங்கள் ஏன் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அதிகாரிகள் ஆங்கில மொழியில் நாங்கள் அளிக்கையை தயாரித்துள்ளதாக பதிலளித்தபோது, கட்டாயமாக தமிழ் மொழியில் விடயங்களை விவரிக்கும் வகையில் தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து கலந்துரையாடல் ஆரம்பித்தபோது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த அறிக்கையில் தமிழ் மொழி குறைவாக காணப்படுவது தொடர்பில் தான் கேள்வி எழுப்பவிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அதனை அவதானித்து வெளிப்படுத்திய கரிசனைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231165

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய அநுர

1 month 2 weeks ago

Published By: Digital Desk 1

23 Nov, 2025 | 10:37 AM

image

ஆர்.ராம்

ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்று ஜனாதிபதி உட்பட சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் அதிகமாக ஆங்கிலமொழியிலேயே விவரிப்புக்கள் காணப்பட்டிருந்தன. இதனை அவதானித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சொற்ப நேரத்திலேயே அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாகவே சுட்டிக்காட்டி குறித்த விடயங்கள் ஏன் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது அதிகாரிகள் ஆங்கில மொழியில் நாங்கள் அளிக்கையை தயாரித்துள்ளதாக பதிலளித்தபோது, கட்டாயமாக தமிழ் மொழியில் விடயங்களை விவரிக்கும் வகையில் தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனையடுத்து கலந்துரையாடல் ஆரம்பித்தபோது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த அறிக்கையில் தமிழ் மொழி குறைவாக காணப்படுவது தொடர்பில் தான் கேள்வி எழுப்பவிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அதனை அவதானித்து வெளிப்படுத்திய கரிசனைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/231165

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு; இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் விளக்கம்

1 month 2 weeks ago
Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 10:33 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலைப்பாடு கொண்ட நாடாக இலங்கை இருப்பதால், அதனை ஒத்துழைப்பு கடல்சார் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்திய இருதரப்பு கலந்துரையாடல் ஆகும். இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தின. கொழும்பு பாதுகாப்பு மாநாடு கூட்டம், இலங்கை - இந்திய பாதுகாப்புப் பங்காளித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வந்துள்ள நிலையில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இந்த மாநாட்டில் ஆற்றிய உரை, பிராந்தியத்தின் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கூர்மையாக எடுத்துக்காட்டியது. உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்வதால், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார். இந்தியப் பெருங்கடலை 'நமது மிகப்பெரிய பகிரப்பட்ட பாரம்பரியம்' என்று வலியுறுத்திய தோவால், பிராந்திய கடற்பரப்பை பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத கடத்தல், கடற்கொள்ளை மற்றும் பிராந்திய வல்லரசுப் போட்டி ஆகியவை மீண்டும் எழுந்துள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, விதிகளின் அடிப்படையிலான கடல்சார் ஒழுங்கின் அவசியத்தையும் இதன் போது அவர் வலியுறுத்தினார். இது இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்திற்கும் வலு சேர்க்கிறது. இந்த மாநாட்டில், ஆழ்கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், மற்றும் பேரிடர் நிவாரணத்தில் கூட்டுச் செயல்பாடு ஆகிய முக்கியத் தூண்களின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஐந்து தூண்களிலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் கூட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231176

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு; இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் விளக்கம்

1 month 2 weeks ago

Published By: Digital Desk 3

23 Nov, 2025 | 10:33 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலைப்பாடு கொண்ட நாடாக இலங்கை இருப்பதால், அதனை ஒத்துழைப்பு கடல்சார் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்திய இருதரப்பு கலந்துரையாடல் ஆகும். இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தின.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு கூட்டம், இலங்கை - இந்திய பாதுகாப்புப் பங்காளித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வந்துள்ள நிலையில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இந்த மாநாட்டில் ஆற்றிய உரை, பிராந்தியத்தின் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கூர்மையாக எடுத்துக்காட்டியது.

உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்வதால், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார்.

இந்தியப் பெருங்கடலை 'நமது மிகப்பெரிய பகிரப்பட்ட பாரம்பரியம்' என்று வலியுறுத்திய தோவால், பிராந்திய கடற்பரப்பை பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத கடத்தல், கடற்கொள்ளை மற்றும் பிராந்திய வல்லரசுப் போட்டி ஆகியவை மீண்டும் எழுந்துள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, விதிகளின் அடிப்படையிலான கடல்சார் ஒழுங்கின் அவசியத்தையும் இதன் போது அவர் வலியுறுத்தினார். இது இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்திற்கும் வலு சேர்க்கிறது.

இந்த மாநாட்டில், ஆழ்கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், மற்றும் பேரிடர் நிவாரணத்தில் கூட்டுச் செயல்பாடு ஆகிய முக்கியத் தூண்களின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஐந்து தூண்களிலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் கூட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/231176

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 2 weeks ago
முதல் STF ல இருந்தவராம் மஹிந்தவுக்காக உயிரையும் குடுப்பாராம் @ island ஒரு சின்ன உதாரணம்...நாமலின் நுகேகொட ஊர்வலத்தில்

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 2 weeks ago
அய்யா ..இந்த இரண்டிலும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் .. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் ..பொத்திக்கொண்டு இருந்தால் சமாதானம் தன்னுடையபாட்டில் வரும் ...இதையும் நீங்கள் 16 வருசமா எழுதிறியள்..உங்கடை நம்பிக்கைக்குரிய சிங்கள சனாதிபதிகள் .. மகிந்த ,மைத்திரி ,ரணில், கோட்டா ...இப்ப .அனுர ..இவர்களில் யாராவது ஒருதர் ...இனப்பாகுபாட்டை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா.... இல்லை ..அப்ப உள்ள உங்கடை சனாதிபதி அனுரவின் ...கடந்த 2 நாள் ...செயல்பாட்டை எடுப்பம் ...தூக்கின புத்த சிலையை ..ஒருநாளில் நவதுவாரங்களை பொத்தியபடி பழையைடத்தில் வைத்துவிட்டு போகிறார்...தையிட்டியில் ..கட்டிடம் கட்டுகிறார்..குருந்தூர் மலையில் காணி பிடிக்கிறார்...மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் புத்த சிலைவைக்கிறார் ...நாமலின் ஊர்வலத்தில் பட்டவர்த்தனமாக தமிழனை கொல்லுவோம் ..வெட்டுவோம் என்று கோசமிடுகின்றார்கள் ...இதற்கானகாணொலிகள் .. இருந்தும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா....இப்படி ஆயிரம் என்னால் சொல்லமுடியும் ...நீங்கள் .. இங்கு கருத்திடுவதும் ..அர்ச்சனா பார்லிமெண்டில் சத்தம் போடுவதும் ஒன்று...அதாவது அர்ச்சனா புலிபோல நடித்து ...புலிகளை விற்கிறார் ...நீங்கள் தமிழர் மேல் அனுதாபம் கொள்வதுபோல.. தழருக்கு விடிவு ஏற்படுத்தவோ...அல்லது ..பிரச்சினை பிரச்சாரப் படுத்துவதை ...நரித்தனமாக தடுப்பதுபோல்தான் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் ... கனடாவில் நினைவுத்தூபி...இப்பகொடி ..இது அவர்களால் முடிந்தது ...அதாவது எமது பிரச்சினைகளை உலகறியச் செய்ய சின்ன உதவி....இதன செய்யாமல்விட்டால் ..நம்மினம் நாட்டில் நின்மதியாக இருக்கும் என்றால் செய்யாமல் விடலாம் ...அதுதான் இல்லையே ...ஏன் அதை செய்யக்கூடாது ..என்பதை இலங்கையில் கடந்த 2 நாளில் நடந்த சம்பவத்துடன் ..விளக்க முடியுமா ...அது முடியாது...நான் ஒரு பத்தி எழுத்தளானோ..பத்திரிகை காரனோ அல்ல ..சாதாரண .. பத்திரிகை படிப்பவன் ...அதிகம் எழுதத் தெரியாதவன் ...இந்த கருத்துக்கு .. உங்களுடன் பல ஜம்பாவான்கள் களத்தில் குதிப்பர் ... என்பது தெரியும் ...என்னுடைய நியாயம் இது.....அவ்வளவுதான்...

உயிரை பறிக்கும் “மாவா”!!

1 month 2 weeks ago
1985 கால பகுதிகளில் இல்லை தோழர், இது 1989 பகுதிகளில் ஆரம்பித்து இருக்க வேண்டும் டிஸ்கி இருந்தால் பகிடி தலைவர் அதையும் (மாவா) சேர்த்திருப்பார் .. மண்ணுகேத்த பொண்ணு (1985)

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

1 month 2 weeks ago
யாரப்பா அது குளியறையில் பாட்டு பாடுறது.. அப்புறம் ஹம்மிங்க் செய்வது ..? மருந்தகத்தில் காச கொடுத்து ப்ரசர் குளிசை வாங்குறீங்க.. மன வலி போக்கும் என்னுடைய இசை மருந்துக்கு காச கொடுத்துட்டு அப்புறம் நீங்க கண்டினியு பண்ணுங்க.. 😁

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 2 weeks ago
உண்மையில் நான் எழுதியது பகிடி இல்லை. இது என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். உங்களுக்கு நினைவிருக்கலாம், அத்தனை எதிர் கருத்து இருந்த போதும் தான் அரசியலில் இறங்க யோசிப்பதாக நெடுக்ஸ் சொன்னபோது அதை நான் வரவேற்றேன். அப்படியாவது ஒரு வினைதிறானவர் முன்னுக்கு வரவேண்டும் என்பதால். என் போன்றவர்களை நம்பினால் இன்னும் அழிவே மிஞ்சும். நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா? இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 2 weeks ago
எனது பார்வையில் தமிழருக்கு அதிகபட்ச நன்மை தந்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான அருமையான இறுதிச் சந்தர்ப்பம் 2002 பேச்சுவார்ததைகள். அதை உதைத்து தள்ளிய பின் இனி செய்யக்கூடியது ஒன்று தான், தமிழரசுக் கட்சியானது எப்படி இனவாதத்தை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை காண முயலாமல், மக்களுக்கு இனவாத பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி தங்கள் பின் வந்த இரண்டு தலைமுறையை நாசப்படுத்தியதோ அதே போல் நாமும் ஏற்கனவே தோல்வியடைந்த. எமது அணுகுமுறைகளை மாற்றாமல் அதை அப்படியே தொடர்ந்து அதே பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி அடுத்த தலைமுறையையும் நாசப்படுத்தி விட்டு அந்த மகிழ்வுடன் நிம்மதியாக கண்ணை மூடுவது தான்.