Aggregator
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது
26 JUL, 2025 | 05:08 PM
யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
பின்னர் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து , இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்துள்ளனர்.
அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்
சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகத்தினரால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்னர்.
கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
https://www.virakesari.lk/article/221007
NPP தீவக அமைப்பாளரும் கைது என்ற செய்தி வாசித்தேன்.
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு
பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.
கட்டுரை தகவல்
மையா டேவிஸ்
பிபிசி செய்திகள்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது.
வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது.
ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார்.
பட மூலாதாரம்,REUTERS
காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது.
காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின.
"காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர்.
மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
"பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,EPA
2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார்.
"என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார்.
"ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.
ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார்.
அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார்.
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது.
மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது.
பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.
காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது.
அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்
கிளிநொச்சி வலய கல்வி பணிமனை, துணுக்காய் கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை - ஜோசப் ஸ்டாலின்
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 11:51 AM
கிளிநொச்சி வலய கல்விப் பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் விசேடமாக விஞ்ஞானம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ( ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்த நிலையிலேயே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதில் விசேடமாக விஞ்ஞானம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் (ஐ.சி.டி) போன்ற பாடங்களுக்கு அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.
ஆனால் 35 புதிய ஆசிரியர்களே அங்கு கடமைக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோன்று முல்லைத்தீவு துணுகாய் வலயம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றன.
வடமாகாண ஆளுநருகு்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
சர்வதேச நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
Published By: DIGITAL DESK 2
26 JUL, 2025 | 03:50 PM
வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.