Aggregator

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

1 month 3 weeks ago
தேஜஸ் விமான விபத்து பற்றி துபை ஊடகங்களும், நேரில் கண்டவர்களும் சொல்வது என்ன? பட மூலாதாரம், Giuseppe CACACE / AFP via Getty Images படக்குறிப்பு, நவம்பர் 20 அன்று துபையில் நடைபெற்ற விமான கண்காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (2025 நவம்பர் 20) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, இந்திய போர் விமானம் தேஜஸ் விபத்துக்குள்ளான செய்தியே துபை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதை இயக்கிய விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார். துபையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ், தேஜஸ் விபத்து தொடர்பான பல செய்திகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, அது போலிச் செய்தி என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் பி.ஐ.பி-யின் உண்மைச் சரிபார்ப்பு சமூக ஊடகக் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பதிவு ஒன்றில், "துபை விமானக் கண்காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. அதில் விமானத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூற்றுகள் முற்றிலும் போலியானவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு, துபை விமான நிலைய தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல்-மக்தூம், விமானியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாக துபை செய்தி ஊடகமான அமராத் அல்-யூம் தெரிவித்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன? கல்ஃப் நியூஸ் வெளியிட்ட மற்றொரு செய்தியில், "தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் எங்கள் செய்தியாளர்களில் ஒருவர் அங்கு இருந்தார். விமானம் கீழே விழுந்தவுடன், அந்த இடம் முழுவதும் புகைமூட்டம் பரவியது. அவசரக் குழு உடனடியாக விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தது" எனத் தெரிவித்துள்ளது. மேலும் "விமானக் கண்காட்சியைக் காண காலையில் இருந்தே கூட்டம் கூடியிருந்தது. மதியம் 1:30 மணியளவில், இந்தியாவின் சூர்ய கிரண் குழுவினர் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகளைக் கொண்டாடும் விதமாக வானில் சாகசம் நிகழ்த்தினர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பல நாள் பட்டினி கிடந்து, கொடிய விஷத் தவளைகளை உண்ட பாம்புகள் உயிர் பிழைத்தது எப்படி? தேஜஸ் விமான விபத்து பற்றி துபை ஊடகங்களும், நேரில் கண்டவர்களும் சொல்வது என்ன? ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் வீழ்ச்சி - புதினின் இந்திய வருகைக்கு முன்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? சமையல் அலுமினிய பாத்திரங்களை எப்போது மாற்ற வேண்டும்? End of அதிகம் படிக்கப்பட்டது குறிப்பாக இதய வடிவிலான சாகசத்திற்குப் பிறகு மக்கள் சத்தமாகக் கைதட்டினர். நூற்றுக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே தங்கள் மொபைல் போன்களில் சாகசங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்." பட மூலாதாரம், @Suryakiran_IAF படக்குறிப்பு, துபையில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தின் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் "சில நிமிடங்களுக்குப் பிறகு, எஃப்-35 விமானத்தின் ஓசை கூட்டத்தின் கவனத்தை ஈர்த்தது. மதியம் 2:10 மணியளவில், மற்றொரு ஜெட் விமானம் தோன்றியது. அது இந்தியாவின் தேஜஸ் என்று செய்தியாளர்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர்" என்று கல்ஃப் நியூஸ் எழுதியிருக்கிறது. சம்பவ இடத்தில் இருந்த கல்ஃப் நியூஸ் செய்தியாளர், "விமானம் தோன்றிய சுமார் மூன்று நிமிடங்கள் கழித்து வேகமாக உயர்ந்தது. ஆனால் மேலே ஏறும்போது நடுவில் அது திடீரெனத் தனது சக்தியை இழந்து கீழே வந்து மோதியது. ஒரு கணம் நான் அப்படியே உறைந்துபோனேன். என்னைச் சுற்றி குழப்பமும் பீதியும் நிலவிய போதும், என் மொபைல் போன் அங்கு நடந்து கொண்டிருந்தவற்றைப் பதிவு செய்து கொண்டிருந்தது" என்று தெரிவித்துள்ளார். அருகில் நின்றிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், "அடக் கடவுளே... விமானி நலமாக இருப்பார் என நம்புகிறேன்" என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தியாளர் கூறினார். கல்ஃப் நியூஸ் செய்தியின்படி, "கூட்டத்தில் பீதி எப்படி இருந்தது என்பதை மற்றவர்கள் விவரித்தனர். வெளிநாடுவாழ் இந்தியர் ஷாஜுதீன் ஜப்பார் தனது மனைவி மற்றும் மகளுடன் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் துயர சம்பவம் சில நொடிகளில் நடந்துவிட்டதாக அவர் கூறினார்." "விமானங்களின் சாகசக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று விபத்து ஏற்பட்டது. மக்கள் அலறத் தொடங்கினார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது. சிறந்த நிகழ்ச்சியாக நடந்து கொண்டிந்தபோது திடீரென இந்தத் துயர விபத்து நடைபெற்றது. விமானியைக் காப்பாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது. நம் கண் முன்னே ஒருவர் இறப்பதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது" என்று விபத்தை நேரில் கண்ட ஷாஹத் அல்-நக்பி கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் முழுக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக துபையில் வசித்து வரும் ஹாபிஸ் ஃபைசல் மதனி, "இதுவொரு துயரமான, எதிர்பாராத சம்பவம். நான் பார்த்த முதல் விமானக் கண்காட்சி இதுதான். என் சகோதரர் முகமது உஸ்மானுடன் வான்வழிக் கண்காட்சிப் பகுதிக்குள் அப்போதுதான் நுழைந்தோம். திடீரென்று ஜெட் விமானம் ஒன்று கீழே விழுவதைக் கண்டோம். அது நமது தேஜஸ் என்பதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. விமானியைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிய வந்தது" என்று கல்ஃப் நியூஸிடம் கூறினார். 'பிரிட்டனை சேர்ந்த வில் கில்மோர் என்பவர் விபத்து நடந்தபோது விமானக் கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்' என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு நாளிதழ் தி நேஷனல் நியூஸ் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. "யாரும் வெளியேறுவதையோ அல்லது அதுபோன்ற எதையும் நான் பார்க்கவில்லை. எல்லாம் மிக வேகமாக நடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்துவிட்டதாக நினைக்கிறேன்" என்று வில் கில்மோர் கூறினார் "நான் ஒரு கூடாரத்தின் பின்னால் இருந்தேன், அதனால் விமானம் தரையில் மோதியது சரியாகத் தெரியவில்லை" என்று கில்மோர் கூறினார். "புகைமூட்டத்தைத்தான் நாங்கள் பார்த்தோம். விபத்து நடைபெற்றவுடன் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. சூழல் முற்றிலும் மாறியது. மிகவும் உற்சாகமாக இருந்த சூழல், ஒரே நொடியில் சோகமயமாகிவிட்டது." பட மூலாதாரம், @SukhuSukhvinder படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் நிபுணர்களின் கருத்து என்ன? கலீஜ் டைம்ஸ், லண்டனை தளமாகக் கொண்ட ஸ்ட்ராடஜிக் ஏரோ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சஜ் அகமதுவிடம் இந்த விபத்து குறித்துப் பேசியது. "தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. விமானி தனது சுழற்சியை (லூப்) முடித்த நேரத்தில் விமானத்துக்கும் தரைக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி விமானி உயிரிழந்தார்" என்று அவர் கூறினார். இருப்பினும், "விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவம் பல கேமராக்களில் பதிவாகியுள்ளது" என்று அவர் கூறுகிறார். "சூலூர் விமானப்படை தளத்தின் நம்பர் 45 ஸ்குவாட்ரன் 'ப்ளையிங் டாகர்ஸ்-இன் மிகவும் திறமையான விமானி நமான்ஷ் ஸ்யால். ஏரோ இந்தியா மற்றும் பல தேசிய விமானக் கண்காட்சிகளில் தனது அற்புதமான பறக்கும் திறன்களால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் எனக் கூறப்படுகிறது" என்று கலீஜ் டைம்ஸ் எழுதிய மற்றொரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "வெளிநாட்டு இயந்திரம் பொருத்தப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு இலகுரக போர் விமானமான (LCA) HAL தேஜஸை நமான்ஷ் ஸ்யால் ஓட்டிச் சென்றார். இந்த விபத்து தேஜஸ் சம்பந்தப்பட்ட இரண்டாவது விபத்து" என்று அந்தச் செய்தி கூறுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்து நடப்பதற்கு முன்னர் விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgexdpe802do

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

1 month 3 weeks ago
கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் Published By: Vishnu 22 Nov, 2025 | 05:09 AM மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால், துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை, இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/231065

1.4 லட்சம் ஆண்டு பழமையான குழந்தையின் மண்டை ஓடு; நவீன மனிதன் - நியாண்டர்தால் தொடர்பு பற்றி தெரியவந்தது என்ன?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Courtesy of Tel Aviv University படக்குறிப்பு, இஸ்ரேலின் கார்மல் மலையில் குழந்தை 'ஸ்குல் I' (Skhūl I) கண்டுபிடிக்கப்பட்ட குகை கட்டுரை தகவல் இசபெல் காரோ பிபிசி முண்டோ 22 நவம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது. 140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள் ஒன்றில் கண்டறியப்பட்டது. மிகப் பழமையான கல்லறையாக அறியப்படும் இந்தக் குகையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஓர் பகுதியாக இந்த மண்டையோடும் இருந்தது. இந்த மண்டையோடு தொடர்பான ஆய்வு, L'Anthropologie என்ற அறிவியல் இதழில் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு வந்த நிலையில், அவை பெரும்பாலும் உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்களாகக் கருதப்பட்டன. 3 முதல் 5 வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தை, லெவண்டினின் அந்தப் பகுதியில் வேண்டுமென்றே புதைக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பகுதி, மத்திய ப்ளீஸ்டோசீனின் காலத்தின் போது ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியாவிலிருந்து வந்த பூர்வீக வம்சாவளிகளுக்கும் பிற குழுக்களுக்கும் இடையில் மரபணு ஓட்டங்கள் கலந்த உயிர் புவியியல் பகுதியாகும். 1931-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டோரதி கரோட் மற்றும் அமெரிக்க இயற்பியல் மானுடவியலாளர் தியோடர் மெக்கவுன் ஆகியோர் இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது கண்டுபிடித்த முதல் புதைபடிவத்தில் உள்ள இந்த குழந்தையின் மண்டையோடு ஸ்குல் I (Skhūl I) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஆராய்ச்சியின் படி, அதன் உருவவியல், ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் மற்றும் ஹோமோ சேபியன்களுக்கு இடையிலான கலப்பினத்திற்கான பழமையான சான்றாக இருக்கலாம். இரண்டு இனங்களும் கலந்திருந்தன என்பதும், நவீன மனிதர்களுக்கு நியாண்டர்தால் மரபணுக்கள் 1% முதல் 5% வரை இருப்பதும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஸ்குல் I என்ற குழந்தையின் வயதுதான் வித்தியாசமாக உள்ளது. "நாங்கள் இப்போது சொல்வது உண்மையில் புரட்சிகரமான ஒன்று" என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்ரேலிய பழங்கால மானுடவியலாளரும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் மற்றும் மானுடவியல் துறையின் பேராசிரியருமான இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ஸ் பிபிசியிடம் விளக்குகிறார். "முன்னர் கருதப்பட்டது போல், நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேபியன்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழவில்லை என்பதை நாங்கள் காட்டுகிறோம், அது குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 140,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்பது முக்கியமானது," என்று அவர் கூறுகிறார். ஆனால் எல்லா விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பட மூலாதாரம், Dan David Center for Human Evolution, Tel Aviv University படக்குறிப்பு, ஸ்குல் I மண்டை ஓட்டின் படங்கள். இளம் வயதிலேயே இயற்கையான காரணங்களால் ஸ்குல் I குழந்தை இறந்தது. அந்தக் குழந்தையின் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் அதிகம் அறியப்படவில்லை. இளம் வயதிலேயே அந்தக் குழந்தையின் இறப்புக்கு காரணமான நோய் என்ன என்பதை மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் பாலினத்தைக் கூட உறுதியாக கூற முடியாது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெவண்ட் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகவும், கூட்டு கல்லறையாகவும் கருதப்படும் அந்த இடத்தில், பிற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சேர்ந்து ஸ்குல் I குழந்தையும் அடக்கம் செய்யப்பட்டிக்கலாம் என்று அறியப்படுகிறது. ஸ்குல் I மண்டை ஓடு மற்றும் தாடையின் உருவவியல் (அகழாய்வின் போது எலும்புக்கூட்டிலிருந்து தற்செயலாகப் பிரிக்கப்பட்டு பிளாஸ்டருடன் ஒருங்கிணைக்கப்பட்டது) அதன் தொடர்பு மற்றும் வகைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக டோமோகிராஃபி படங்கள் மற்றும் 3D மெய்நிகர் புனரமைப்புகளைப் பயன்படுத்தி மறு மதிப்பீடு செய்தனர். பிற ஹோமோ சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால் குழந்தைகளின் எச்சங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்த ஹெர்ஷ்கோவிட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, "அவற்றின் உருவவியல் பண்புகளின் மொசைக் தன்மை" மற்றும் இரு குழுக்களுக்கிடையில் ஓர் "இருவகை உருவவியல்" இருப்பதைக் கவனித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குழந்தையின் மண்டை ஓட்டின் அமைப்பு பொதுவாக ஹோமோ சேபியன்களின் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தாலும், தாடையின் குணங்கள் நியாண்டர்தால்களின் பரிணாமக் குழுவுடன் "வலுவான உறவை" சுட்டிக்காட்டின. பட மூலாதாரம், Dan David Center for Human Evolution, Tel Aviv University படக்குறிப்பு, ஸ்குல் I இன் தாடையின் படம் "ஸ்குல் I-இல் காணப்பட்ட பண்புகளின் கலவையைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தை நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேபியன்களுக்கும் இடையிலான கலப்பினமாக இருக்கலாம் என்று கூற முடியும்" என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அந்தக் குழந்தை நவீன மனிதனாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அதை நியாண்டர்தால் அல்லது ஹோமோ சேபியன் என வகைப்படுத்துவது "கிட்டத்தட்ட சாத்தியமற்றது" என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "கலப்பினம்" என்ற சொல், அந்தக் குழந்தை ஒரு நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன் பெற்றோருக்குப் பிறந்தது என்பதைக் குறிக்கவில்லை என்றும், மாறாக இரு குழுவுக்கும் இடையிலான படிப்படியான கலவையின் விளைவாகும் என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் அதை 'மரபணு ஊடுருவிய மக்கள் குழு' என்று அழைக்கிறோம், அதாவது ஓர் மக்கள் குழுவின் மரபணுக்கள் மெதுவாகவும் படிப்படியாகவும் மற்றொன்றுக்குள் ஊடுருவின. எனவே, உண்மையில், ஸ்குல் I-இல் நாம் காண்பது கிட்டத்தட்ட ஹோமோ சேபியன்களைக் கொண்ட ஓர் இனமாகும், ஆனால் இது நியாண்டர்தால் மரபணுக்களின் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார். அந்த வகையில், அந்தக் குழந்தையை "பேலியோடீம்" என்று வகைப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், அதாவது, இனக்கலப்பு காரணமாக ஏற்படும் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் குழு, இது ஓர் இனத்திற்குள் குறிப்பிட்ட குழுவாக அங்கீகரிக்கப்படத் தகுதியானது ஆகும். பட மூலாதாரம், Fudan University படக்குறிப்பு, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு, மனித பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலை "முற்றிலும் மாற்றிவிட்டது" என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் லபெடோ குழந்தை மற்றும் இரண்டாம் யுன்சியான் II-வின் பின்னணி 1990களின் பிற்பகுதி வரை, நியாண்டர்தால்களும் நவீன மனிதர்களும் இரண்டு வெவ்வேறு இனங்கள் என்பதால் அவர்கள் கலப்பினமாக இருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தொற்றுமை இருந்தது. 1998-ஆம் ஆண்டு போர்ச்சுகலில் லபெடோ குழந்தை போன்று கிட்டத்தட்ட அப்படியே இருந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது, சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால்களுக்கு இடையிலான கலவையான பண்புகளையும் கொண்டிருந்தது, பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலில் இது தீவிர மாற்றத்தை இது ஏற்படுத்தியது. சுமார் 29,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிட்டத்தட்ட 4 வயது குழந்தை இரு குழுக்களுக்கும் இடையில் கலப்பினத்திற்கான தெளிவான ஆதாரங்களைக் காட்டியது. இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்திய பெருமாற்றம் 2010-களில் வந்தது, அப்போது முதல் நியாண்டர்தால் மரபணு வரிசைப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நவீன மனிதர்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்கர் அல்லாத மக்களின் டி.என்.ஏவில் 1% முதல் 5% வரை நியாண்டர்தால்களிடமிருந்து தோன்றியது என கண்டறியப்பட்டது. மனித பரிணாம வரலாற்றின் சமீபத்திய கிராசிங்கைப் பற்றி லபெடோ குழந்தை நமக்குச் சொன்னது போல், ஸ்குல் I மிகவும் முந்தைய காலத்தைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு யுன்சியான் II பற்றிய ஆய்வை, journal Science இதழ் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது. அதன்படி, ஹோமோ சேபியன்கள் நாம் நினைத்ததை விட குறைந்தது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றத் தொடங்கியது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு தங்கள் ஆய்வின் முடிவுகளுடன் தொடர்புடையது அல்ல என்று ஸ்கல் I தொடர்பாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "சீன யுன்சியான் II மண்டை ஓடு மிகவும் பழமையானதாகக் கூறப்படுகிறது. அதற்கும் எங்கள் ஆய்வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் கூறுகிறார். "மத்திய மற்றும் பிற்பகுதியில் ப்ளீஸ்டோசீன் காலத்தில் பூமியில் அதிக அளவிலான ஹோமோ இனங்கள் நடமாடியதில் ஆச்சரியமில்லை" என்றும் அவர் கூறுகிறார். ஸ்பெயினில் உள்ள தேசிய இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் (CSIC) பழங்கால உயிரியல் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியரான அன்டோனியோ ரோசாஸ், ஸ்குல் I பற்றிய சில கண்டுபிடிப்புகள் பற்றி கேள்வி எழுப்புகிறார். ஹோமோ சேபியன்களின் மண்டை ஓட்டின் அடிப்பகுதி மற்றும் நியாண்டர்தால் உடற்கூறியல் தொடர்பான தாடை ஆகியவற்றின் கலவை "உயிரியல் ரீதியாகப் பொருந்தாதது" என்கிறார். "உடற்கூறியல் மரபணு நிர்ணயம் சிக்கலானது மற்றும் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட எலும்பு கூறுகளில், அதாவது மண்டை ஓடு மற்றும் தாடையில் இவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை" என்று அவர் கூறுகிறார். போர்ச்சுகலில் சேபியன்ஸ்-நியாண்டர்தால் கலப்பினத்தின் மற்றொரு உதாரணமாக இருப்பது லாகர் வெல்ஹோ. இது, மிக சமீபத்திய காலத்தின் ஹோமோ சேபியன்ஸின் தாடை எலும்பை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது, இது ஸ்குல் I-இல் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. அன்டோனியோ ரோசாஸின் கூற்றுப்படி, சடலத்தின் அடக்கத்தின் வகைப்பாடு முக்கியமானது. அடக்கம் செய்யப்பட்ட சடலம் அதற்குப் பிறகு மாற்றங்களுக்கு உட்பட்டதாக அறியப்படுகிறது. "ஸ்குல் I கீழ் தாடை நியாண்டர்தால் நபருக்கு சொந்தமானது, அவர் ஹோமோ சேபியன்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது ஏன் என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார். அறிவியல் உலகில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, பரிணாம ஆய்வின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பண்டைய புதைபடிவங்களிலிருந்து டிஎன்ஏவை மீட்டெடுக்கும் திறன் ஆகும். "சந்தேகத்திற்கு இடமின்றி, இங்கே வழிமுறை சிக்கல் உள்ளது. மனித இனங்களுக்கிடையேயான கலப்பினமாக்கல், பழங்கால மரபணு தரவுகள் மூலம் மறுக்க முடியாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது, உருவவியல் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது கடினம். நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன்களின் மரபணு தகவல்களின் கலவையானது உடற்கூறியல் துறையில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு பெரும்பாலும் தெரியாது" என்று ரோசாஸ் கூறுகிறார். இந்த ஆய்வு மண்டை ஓடு பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது. ஆனால், அதன் டிஎன்ஏவைப் பிரித்தெடுக்காமல் அந்தக் குழந்தையை ஒரு கலப்பினமாக உறுதியாக அடையாளம் காண முடியாது என பிற விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். பட மூலாதாரம், Mike Kemp/In Pictures via Getty Images படக்குறிப்பு, நியாண்டர்தால்களும் நவீன மனிதர்களும் கலப்பினமாக வாழ்ந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது ஒருங்கிணைப்பு மற்றும் கலாசார நடைமுறைகள் ஸ்குல் I ஆய்வு, மனித பரிணாம வளர்ச்சியில் ஆரம்பகால கலப்பினமாக்கல் குறித்த அறிவை வழங்குவதுடன், இரு குழுக்களுக்கிடையிலான ஒருங்கிணைவு மற்றும் வரலாற்று ரீதியாக நவீன மனிதர்களுடன் தொடர்புடைய கலாசார நடைமுறைகள் பற்றிய புதிய நுண்ணறிவுகள் என இரு முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. "மிகவும் வியத்தகு மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு குழுக்களும் மிக நீண்ட காலத்திற்கு அருகருகே வாழ முடிந்தது என்பது நமக்கு இப்போது தெரிய வந்துள்ளது" என்பதை ஹெர்ஷ்கோவிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை, இது ஹோமோ சேபியன்ஸ் என்பது "வலிமையானவர்களின் சட்டத்தின்" மூலம் மற்றவர்களை விட மேலோங்கிய ஓர் இனம் என்ற விஷயத்திற்கு மாறுபட்டுள்ளது. "இதுதான் உண்மையான ஆச்சரியம், ஏனென்றால் பூமியில் உள்ள பிற அனைத்து ஹோமோ குழுக்களையும் ஒழிப்பதற்கு ஹோமோ சேபியன்கள் மட்டுமே காரணம் என்று மானுடவியலாளர்கள் நீண்ட காலமாக நினைத்தார்கள்," என்று அவர் கூறுகிறார். "நாம் ஆக்கிரமிப்பு இனமாக இருந்ததால் அவற்றை வெளியேற்றினோம், இடம்பெயர்த்தோம் அல்லது அழிவுக்கு அழுத்தம் கொடுத்தோம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, அடிப்படையில், சிறிய எண்ணிக்கையிலான ஹோமோ சேபியன்களை பெரிய குழுக்களாக இணைத்தோம், அவை சிறிது சிறிதாக மறைந்துவிட்டன" என்று அவர் மேலும் கூறுகிறார். ஸ்குல் குகை என்ற கூட்டு கல்லறையில் ஸ்குல் I குழந்தையும் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அங்கு இறந்தவர்களின் சடலங்களுடன் காணிக்கைகளும் (பொருட்களும்) வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது, இது குழு சார்ந்த உணர்வு மற்றும் குழந்தைகளுக்கான மரியாதை மற்றும் ஆரம்பகால பிராந்திய நடத்தை ஆகியவற்றைக் குறிக்கிறது. "அனைவராலும் நம்பப்படும் முன்னுதாரணத்திற்கு மாறாக, அடக்கம் சம்பந்தப்பட்ட பழமையான சவக்கிடங்கு நடைமுறைகள் போன்றவை, ஹோமோ சேபியன்கள் அல்லது ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் என்பதாக மட்டுமே இருக்க முடியாது" என்று ஆய்வு குறிப்பிடுகிறது. "பல ஆண்டுகளாக, கல்லறை என்பது மனித கலாசாரத்தின் மிக சமீபத்திய கண்டுபிடிப்பு என்பதை நாம் புரிந்துகொண்டோம். கல்லறை என்பது சமூக அடுக்குமுறை என்றும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் நம்பிக்கை, மனித கலாசாரம், அதன் இயல்பு, அதன் நம்பிக்கைகள், உளவியல் பற்றிய பல விஷயங்களைக் குறிக்கிறது," என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் மேலும் கூறுகிறார். "140,000 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை நாம் கொண்டிருந்தோம் என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr7lre1xp3yo

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

1 month 3 weeks ago
இன்றைய வானிலை Nov 22, 2025 - 06:20 AM அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmi9kouct01v0o29nqzga7aba

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 47 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 47 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தரின் சாக்கிய குலத்துடன் இலங்கைக்கு, உயிரியல் ரீதியாக தொடர்புடையதா?' வடகிழக்கு பருவக்காற்று [North East Monsoonal wind] அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கணிசமான வலிமையுடன் அமைகிறது, இது [பாய்க்] கப்பல் ஒரு இடத்தில் இருந்து இன்னும் ஒரு இடத்துக்கு நகர அல்லது இடம்பெயர்வுக்கு உதவி இருக்கலாம். இருப்பினும், விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் 'மே [may]' மாதத்தில் தரையிறங்கினர். அவர்கள் முதலில் சுப்பராவிற்கும் பின்னர் பருகாச்சாவிற்கும் சென்றனர். ஆனால், வடகிழக்கு பருவக்காற்றுடன் அசைந்து செல்வதால், இலங்கையை கடந்து, சுப்பரா மற்றும் பருகாச்சாவை அடைய, வடக்கு நோக்கி திரும்ப முடியாமல் கட்டாயம் போயிருக்கும். சுமார் மூவாயிரம் மைல்களுக்கு மேல் கடல் பயணம் வெறுமனே காற்றோடு அலைந்து திரிந்து இலங்கைக் கடற்கரையில் தரையிறங்கியிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தாகம் மற்றும் பசியின் கொடுமையில் மிக விரைவில் அழிந்திருப்பார்கள். எனவே விஜயன் மற்றும் அவனது சகாக்கள் வந்ததாகக் கூறப்படுவது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு நிலத்தை அபகரிப்பதற்காக, கண்டுபிடிக்கப்பட்ட கற்பனைக் கதையாகும். அத்தியாயம் 10 இலங்கையின் இரண்டு மன்னர்களின், பண்டுவாசுதேவன் அல்லது பண்டுவாசுதேவ மற்றும் அவர் மகன் அபயனின் [Panduvasa and his son Abhaya.] ஆட்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறது; ஆனால், தீபவம்சத்தில் பாண்டுவாசன் எங்கிருந்து வந்தான், விஜயனுக்கும் அவனுக்கும் எப்படி சம்பந்தம் என்று தெளிவுபடுத்தப் படவில்லை. அவர் எப்படி இலங்கைக்கு வந்தார் என்பதும் தீபவம்சத்தில் கூறப்படவில்லை. இருப்பினும், அவர் இலங்கைக்கு வந்த அதே ஆண்டில் மன்னராக முடிசூட்டப்பட்டார். 10 - 1 முதல் 2 வரை இந்தியாவிலிருந்து வந்த சக்க இளவரசர் பாண்டுவின் மகள் கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசியை பண்டுவாச மணந்தார். மற்றும், பாண்டு கௌதம புத்தருடன் தொடர்புடையவர் என்பதை சக்கா [Sakka] அடைமொழி குறிப்பிடுகிறது. என்றாலும் அவர் கௌதம புத்தருடன் எவ்வாறு தொடர்புபட்டார் என்பது தீபவம்சத்தில் தெளிவுபடுத்தப் படவில்லை. சக்யா, சில சமயங்களில் சக்கா [Sakya, sometimes also Sakka], ஒரு பிராந்தியத்தின் பெயராகவும், அங்கு வாழ்ந்த மக்களின் குலமாகவும் இருந்தது. புத்தர் என்று வரலாற்றில் அறியப்பட்ட கௌதம சித்தார்த (Gowthama Siddartha) ஒரு சக்கியன். புத்தரின் தந்தை சுத்தோதனன் சக்கியர்களின் அரசன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. கச்சனா எப்படி இங்கு வந்தாள் என்பதும் தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. பண்டுவாசன் 30 ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சம், தீபவம்சத்தில் காரணங்கள் சொல்லப்படாத அல்லது அடையாளம் காட்டப்படாத நிகழ்வுகள் மற்றும் உறவு முறைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி அதைச் சுற்றி பொய்களையும் வஞ்சனைகளையும் ஒன்று சேர்த்து பெரும் புரளியைச் சுழற்றியது போல் தெரிகிறது. பண்டுவாசுக்கும் கச்சனாவுக்கும் பதினொரு குழந்தைகள் பிறந்தன; பத்து மகன்கள் மற்றும் ஒரு மகள். அபயன் அல்லது அபய, திஸ்ஸ, உத்தி, திஸ்ஸ, அசேல, விபாதா, ராம, சிவா, மட்ட அல்லது மத்தா, மற்றும் மட்டகலா [Abhaya, Tissa, and Utti, Tissa, and Asela the fifth, Vibhāta, Rāma, and Siva, Matta together with Mattakala.] ஆகிய மகன்கள், சித்ரா [Cittā or Ummādacittā] என மிகவும் வசீகரமாக விவரிக்கப்படும் மகள் ஆவார்கள். 10 - 3 முதல் 4. அபய தனது தந்தை பண்டுவாசனுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். சித்தார்த்தாவின் தந்தை (அறிவொளிக்குப் / ஞானத்திற்குப் பிறகு தான் புத்தர் என்று அழைக்கப் பட்டார்), சுத்தோதனனுக்கு (Suddhodana) நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில், அமிதோதனா [Amitodana] இளையவர் ஆவார். அமிதோதனாவுக்கு ஏழு பேரன்கள் இருந்தனர்; இராம, திஸ்ஸ, அனுர்தா, மஹாலி, திகாவு, ரோஹனா மற்றும் காமணி 10 - 6: There were seven Sākiya princes, the grand-children of Amitodana, born in the family of the Lord of the world: Rāma, Tissa, and Anurādha, Mahāli, Dīghāvu, Rohana, Gāmanī the seventh of them. இவ்வளவும் தான் தீபவம்சத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தீபவம்சத்தின் பின் எழுதிய மகாவம்சத்தில் தான், கச்சனா அல்லது புத்தகாஞ்சனா என்ற மகளும் இருந்தாள், அவள் பின்னர் பண்டுவாசனை மணந்தாள் எனக் கூறப்பட்டுள்ளது. அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் எப்படி, ஏன் இலங்கைக்கு வந்தனர் என்பது தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. அமிதோதனாவின் மருமகன் தான் புத்தர். எனவே, நாளாகமங்களை எழுதிய துறவிகள், புத்தரின் சக்கிய குலத்துடன் இலங்கைக்கு உயிரியல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனால் இலங்கைக்கு அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் வந்து இலங்கை அரச வசம்சாவளியுடன் கலந்தனர் என்று எழுதியிருக்க வேண்டும். எனினும் அமிதோதனைப் பற்றி மேலே கொடுக்கப்பட்ட விவரம் தீபவம்சத்தில் கொடுக்கப்படவில்லை, ஆனால் புரிந்து கொள்வதற்கான உதவியாக சேர்க்கப்பட்டுள்ளது, அது தீபவம்சத்தின் பின் எழுதிய மகாவம்சத்தில் தான் உள்ளது. திகவுவின் [Dīghāvu] மகன் காமனி [தீககாமினி, Dighagamini ,son of Prince Digayu and Princess Disala] ஆவான். இவன் அன்றைய இலங்கையின் ஆட்சியாளரான பண்டுவாசுதேவவுக்கு (பண்டுவாச என்றும் அழைக்கப்படுகிறார்) சேவை செய்தார். அந்த தருவாயில் இளவரசி சித்ராவுடன் [அல்லது உன்மாதசித்திரா / Unmadachithra] தொடர்பு ஏற்பட்டு, பண்டுகாபயனைப் [In the Dipavansa, Pandukabhaya is mentioned as Pakundaka] பெற்றெடுத்தார். மேலும் இங்கே பண்டுகா, பகுண்டா மற்றும் பகுண்டகா [Panduka, Pakunda and Pakundaka] ஆகிய அனைத்தும் பண்டுகாபயனைப் குறிக்கின்றன. பண்டுவாசன் இறந்தபோது பண்டுகாபயன் பிறந்தார், இளவரசர் அபய முடிசூட்டப்பட்டார். பண்டுகாபயனின் தாய் மாமன்கள் அவரைக் கொல்ல முயன்றனர், அவர் தனது மாமாக்களிடமிருந்து மறைந்து வாழ்ந்தார். Part: 47 / Appendix – Dipavamsa / 'Is Sri Lanka biologically related to the Sakya clan of Buddha?' North East Monsoonal wind sets in appreciable strength during October to February, which might have aided the drifting of the ship. However, Vijaya and his companions landed in May. They first drifted to Suppara and then to Bharukaccha. Drifting with North-East Monsoon would not have enabled them to turn northwards after passing Lanka to reach Suppara and Bharukaccha. There is no way that they could have landed on the coast of Lanka more than about three thousand miles of sea journey simply drifting and going with the wind. They would have perished very early on their drift of thirst and hunger. The alleged arrival of Vijaya and his companions is an invented fiction to misappropriate land for a particular group. The Chapter 10 speaks reigns of two kings of Ceylon only Panduvasa and his son Abhaya. It is not clarified in the Dipavamsa that where Panduvasa came from, and how he is related to Vijaya. How he arrived in Lanka is also not given in the Dipavamsa. He was, however, crowned the king on the same year he arrived in Lanka. Panduvasa married the princess Kaccana, the daughter of Sakka prince Pandu, who also came from India. Sakka epithet indicates that Pandu is connected to Gautama Buddha. It is not clarified in the Dipavamsa how he is connected to Gautama Buddha. How Kaccana came here is also not elaborated in the Dipavamsa. Panduvasa reigned for 30 years. The Mahavamsa took advantage of this to spin another canard around it. Eleven children were born to Panduvasa and Kaccana; ten sons and one daughter. Abhaya, Tissa, Utti, Tissa, Asela, Vibhata, Rama, Siva, Matta, and Mattakala are the sons, and Cita is the daughter who is as very fascinating in appearance. Abhaya ruled after his father, Panduvasa, for twenty years. Suddhodana was the father of Siddhattha (Buddha after enlightenment), and Suddhodana had four brothers. Amitodana was the youngest. Amitodana had seven grandsons; Rama, Tissa, Anurdha, Mahali, Dighavu, Rohana, and Gamani, and one granddaughter; Kaccana. How and why Amitodana’s grandchildren ended up in Lanka is not given in the Dipavamsa. Amitodana’s nephew was Buddha and the monks who wrote the chronicles wanted Lanka to have biological connection with the Buddha’s Sakya clan, and must have invented the presence of Amitodana’s grandchildren in Lanka. The detail given above about Amitodana is not given in the Dipavamsa, but added as an aid to understand, and it is from the Mahavamsa. Dighavu’s son was also Gamani, and he was attending to Panduvasa. He, Gamani, while attending Panduvasa cohabitted with Cita and gave birth to Panduka. Panduka, Pakunda and Pakundaka all refer to the same person. Panduka was born when Panduvasa died, and prince Abhaya was crowned. Pakunda’s maternal uncles were trying to kill him and he resided at Dovarikamandala, hiding from his uncles. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 48 தொடரும் / Will follow துளி/DROP: 1909 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 47] https://www.facebook.com/groups/978753388866632/posts/32498496956465531/?

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago
அரசியல் தீர்வு என்பது முழுமையாய் ஏமாற்று பொருளாய் மாறிய பின் .உங்கள் பார்வையில் எப்படி நடந்து கொண்டு இருந்தால் நல்லது நடந்து கொண்டு இருக்கும் அந்த தீவில் ?

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

1 month 3 weeks ago
உங்களது தனிப்பட்ட சென்றிமென்றுக்கோ குட்டி குட்டி சந்தோசத்துற்கோ நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இவை போன்ற நிகழ்வுகள் எந்த விதத்திலும் தாயகத்தில் தீர்வுக்கு உதவப்போவதில்லை என்ற விழிப்புணர்வு எமது பட்டறிவில் உள்ளதை நிச்சயம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். ஏற்கனவே, “தமிழீழம்” என்ற கற்பனை எண்ணக்கருவை நம்பியதால், practical அரசியல் தீர்வுகளை முயற்சிக்காமல் புறக்கணித்ததன் விளைவுகளை தமிழ் மக்கள் அனுபவித்துக்கொட்டிருக்கும் போது, இப்படியானவை தாயக மக்களுக்கு பயன்பாடாது என்ற ஜதார்ததத்தை உரைப்பதால் எவருக்கும் நட்டம் இல்லை.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

1 month 3 weeks ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 : அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல் அ. குமரேசன் புத்தகக் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் தாளில் சுற்றி வேறு ஏதோவொரு பொருள் போலக் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் அப்படியே வேறு ஏதோவொரு பொருள் போல எடுத்துச் செல்வார்கள். அந்த அளவுக்குக் கவனத்தோடு விற்கப்பட்டது, எச்சரிக்கையாக கொண்டுசெல்லப்பட்டது ஒரு நாவல். காரணம் ஆஸ்திரேலிய நாட்டின் பல மாநிலங்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, நியூஜிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்தக விற்பனைக்குக் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. பொதுவான வன்முறை மன நிலையையும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடூரங்களையும் நியாயப்படுத்துகிறது, அத்தகைய வன்மங்கள் மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று எதிர்மறை விமர்சனங்கள் மேலோங்கின. ஆனால், இலக்கியவாதிகளின் தொடர்ச்சியான விவாதங்கள், வாசகர்களின் வரவேற்பு உள்ளிட்ட ஆதரவுகளால் தடைகள் விலக்கப்பட்டன. இன்று, “வாசக சமூகத்தை ஈர்த்த செழுமையான படைப்பு” என்ற அடையாளத்தைப் பெற்று, உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) என்ற புத்தகம் பற்றி தகவல் தொகுப்புப் பெட்டகமாகிய விக்கிபீடியா, செயற்கை நுண்ணறிவுக் கருவியாகிய ஜெமினி இரண்டும் தருகிற தகவல்கள் கவனிக்கத் தக்கவை. தீவிரமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஒரு வன்மமான நையாண்டிக்கு உட்படுத்தும் “கறுப்பு நகைச்சுவை” வடிவத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 1991இல் வெளியானது. 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நியூயார்க் நகர வாழ்க்கையோடு இணைந்ததாக ஒரு பணக்கார இளைஞனின் உளவியல் சிக்கல்களைக் கதையாக்கியிருக்கிறார் எல்லிஸ். குறிப்பாக பெரு முதலாளித்துவப் பங்குச் சந்தை வேட்டைக் களமான வால் ஸ்ட்ரீட், அதில் புரையோடிப் போயிருக்கும் மோசடிகள், அது கட்டமைக்கும் நுகர்வுக் கலாச்சார நிலவரங்கள், அதனால் பரவியிருக்கும் சமூகப் போலித் தனங்கள், தனி மனிதருக்கு ஏற்படும் எதிர்மறையான உளவியல் தாக்கங்கள் ஆகியவற்றை நாவல் துணிச்சலாகப் பேசுகிறது. வால் ஸ்ட்ரீட் சந்தையின் பெரு நிறுவனங்களின் பங்குகள் விற்பனையால் “பேராசை பெருநன்மை” என்ற மனப்பான்மை வளர்க்கப்பட்டிருப்பதை நாவல் கடுமையாகச் சாடுகிறது. மனிதர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள், புழங்குகிற பணக்கார உணவகங்கள் என்ற நிறுவன விற்பனை அடையாளப் பெயர்களில்தான் (பிராண்ட்) மதிப்பிடப்படுகிறார்கள். மனித உணர்வுகளும் உறவுகளும் அற்பமானவையாகத் தள்ளப்படுகின்றன. சமூகப் பொறுப்பைப் பொறுத்த மட்டில் கார்ப்பரேட் உலகத்தின் உள்ளீடற்ற மேலோட்டத் தன்மையை நாவல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது என்றும் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் விரிவாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், அப்படிப்பட்ட கொடுமைகள் மீது ஒரு ரசனையை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று பெண்ணுரிமைக் கருத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிமனிதர்களை சமுதாயம் கொடியவர்களாக மாற்றுவதைத்தான் எழுத்தாளர் இவ்வாறு சித்தரித்திருக்கிறார் என்று நாவலின் ஆதரவாளர்கள் விளக்கமளித்தார்கள். இன்றளவும் இந்த விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம் கதையின் நாயகன் சித்தரிக்கப்படும் விதமும் விமர்சிக்கப்பட்டது. அவன் உண்மையிலேயே குற்றங்களைச் செய்கிறானா அல்லது குற்றங்களைச் செய்வது போன்ற மனதின் மாயக் கற்பனையில் மூழ்கி, அவனே அதை நம்புகிறானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நம்பகத் தன்மையில்லாத கதையாடலாகவும், உண்மை வாழ்க்கை நடப்புடன் இணையாததாகவும் நாவல் அமைந்திருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அப்படியில்லை, முதலாளித்துவம் திணிக்கிற நுகர்வுக் கலாச்சாரம் மனிதர்களை உண்மை நடப்புச் சூழல்களிலிருந்து துண்டித்துவிடுகிறது, அதைத்தான் நாவல் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள். நாவலை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம், அதன் உள்ளடக்கம் காரணமாக ஒதுங்கிக்கொண்டது. வெறொரு பதிப்பகம் வெளியிட்டது. அமெரிக்க நூலகங்கள் சங்கத்தால் 1990களில் அதிகமாகத் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இது இடம் பிடித்தது. எல்லிஸ்சுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இத்தகைய நிகழ்வுகள் உலகப் புத்தகச் சமூகத்தின் கவனத்தைப் பெற்றன. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் துறுதுறுப்போடு, புத்தகப் படிகளைக் கடத்தி வரச்செய்து பல நாடுகளின் வாசகர்கள் படித்தார்கள். படிப்படியாகத் தடை நீர்த்துப்போனது. கதை என்னவெனில்… 1989 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் வணிகம் உச்சத்தில் இருக்கிறது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பேட்மேன் ஒரு முதலீட்டு வங்கியில் ஊழியராக வேலை செய்கிறான். அவன் பகல் நேரங்களில் வால் ஸ்ட்ரீட் உயரடுக்கு வட்டத்தில் பளபளப்பான வாழ்க்கையை வாழ்கிறான். இரவில் ஈவிரக்கமற்ற கொலைகளையும், பாலியல் அத்துமீறல்களையும், சித்திரவதைகளையும் செய்கிறான். தனது சகாக்களுடன் வெள்ளிக்கிழமை இரவுகளில் கோகெய்ன் எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களின் ஆடைகளை விமர்சிக்கிறான். நாகரிகமாக இருப்பது பற்றி ஆலோசனைகள் கூறுகிறான். நடத்தை விதிகள் குறித்துக் கேள்வி கேட்கிறான். அவனுக்கும் இன்னொரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த எவலின் எனும் பெண்ணுக்கும் அவனுடைய விருப்பத்தை விசாரிக்காமலே, திருமணத்தை நிச்சயிக்கிறார்கள் பணக்காரப் பெற்றோர்கள். தனது சகோதரனுடனும் மறதிநோயாளியான தாயுடனும் தகராறு செய்கிறான். ஒருநாள், சக ஊழியர்களில் ஒருவனான ஓவன் என்பவனைக் கொலை செய்கிறான் பேட்மேன்.. பிறகு ஓவனுடைய வீட்டைக் கைப்பற்றி, தன்னிடம் சிக்குகிறவர்களை அங்கே அழைத்து வந்து கொல்கிறான். தனது செயல்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் பேட்மேன் முற்றிய உளவியல் சிக்கலுள்ளவனாக (சைக்கோ) மாறுகிறான். சாதாரண கத்திக் குத்துகளில் தொடங்கி, நீண்ட நேர பாலியல் வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புச் சிதைவு, கொல்லப்பட்டவர்களின் உடல் சதையை அறுத்து உண்ணுதல், சடலத்துடன் உடலுறவு என்று அவனுடைய உளவியல் நிலை கொடூரமாகச் சீர்குலைகிறது. பல சமயங்களில் தனது கொடூரச் செயல்களை வெளிப்படையாகத் தனது சக ஊழியர்களிடம் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கொலை, மரண தண்டனை என்று அவன் சொல்வதை, வால் ஸ்ட்ரீட் வர்த்தகத்தோடு இணைந்த “நிறுவன இணைப்பு”, “கையகப்படுத்துதல்” என்ற பொருளில் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள். நிலைமை முற்றிக்கொண்டே போகிறது.தெருவில் சீரில்லாமல் சுற்றுகிறவர்களைக் கொல்கிறான். அவனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் ஹெலிகாப்டரில் அனுப்பப்படுகிறார்கள். பேட்மேன் தப்பி ஓடி தனது அலுவலகத்தில் ஒளிந்துகொள்கிறான். ஹரோல்ட் கார்ன்ஸ் என்ற தனது வழக்குரைஞருடன் தொலைபேசியில் தொடர்புகொள்கிறான். தொலைபேசியை அவர் எடுக்காத நிலையில் அதன் பதிலனுப்புக் கருவியில் தனது எல்லா குற்றங்களையும் சொல்ல்ப் பதிவு செய்கிறான். அந்தக் கொலை வீட்டுக்கு மறுபடியும் போகிறான். அங்கே அவன் ஏற்கெனவே இரண்டு பாலியல் தொழிலாளர்களைக் கொன்று சிதைத்திருந்தான். அழுகிய உடல்களை எதிர்பார்த்துச் செல்கிறவன் அந்த வீடு முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைக்கிறான். துர்நாற்றம் வீசுமானால் அதை மாற்றுவதற்குக வாச மலர்கள் நிரப்பப்பட்டிருகின்றன. வீட்டு மனை வணிக முகவர் ஒருவர், பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அந்த வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எந்த விளம்பரமும் இல்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறும் மீண்டும் வர வேண்டாம் என்றும் அந்த முகவர் பேட்மேனிடம் கூறுகிறார். விலை மதிப்புமிக்க அந்த வீட்டின் விற்பனை வாய்ப்பு குறையாமல் இருப்பதற்காகக் கட்டட உரிமையாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு, கொலைகள் மறைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. பேட்மேன் விசித்திரமான மாயத் தோற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகிறான். ஒரு உணவுத் துணுக்கிற்குள் தன்னை யாரோ நேர்காணல் செய்வதாக, ஒரு பூங்கா இருக்கை உயிர் பெற்று எழுந்து துரத்துவதாக, ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மனித எலும்புத்துண்டு கிடப்பதாக… இப்படியெல்லாம் மாயையான நிகழ்வுகளை அனுபவிக்கிறான். வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளும் பேட்மேன், அவருடைய தொலைபேசி இயந்திரத்தில் பதிவு செய்திருந்த வாக்குமூலம் பற்றிக் கேட்கிறான். அவரோ அதை ஒரு வேடிக்கை என்று கருதிச் சிரிக்கிறார். வழக்குரைஞர் கார்ன்ஸ் தன்னோடு இப்போது தொடர்புகொண்டிருப்பவன் உண்மையான பேட்மேன் அல்ல என்றும், அவனுக்கு இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் துணிவு கிடையாது என்றும் கூறுகிறார். பேட்மேனும் நண்பர்களும் ஒரு புதிய விடுதியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதோடு நாவல் முடிவடைகிறது. அங்கே எல்லோரும் பொருளாதார வெற்றிதான் உண்மையான மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் பதவியேற்பு விழா மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. , பல்வேறு எழுத்துருக்களுடன் கூடிய ஒரு விளம்பரப் பலகையில் “இது வெளியேறும் வழியல்ல” என்று எழுதப்பட்டிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரச் சூழல்களிலிருந்து அவனோ, அவன் உருவாக்கிய கொலைச் சூழல்களிலிருந்து மற்றவர்களோ தப்பித்து வெளியேறிவிட முடியாது என்று அந்த வாசகம் உணர்த்துகிறது. பெயர்க் காரணம் நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளர் எல்லிஸ்சிடம் அதன் தலைப்பு பற்றிக் கேட்டிருக்கிறார். 1980கள் வாக்கில் பல திரையரங்குகளும் கடைகளும் கொண்ட ஒரு பன்முக வளாகத்திற்குச் சென்றிருந்தாராம். ஒரு திரையரங்கப் பெயர்ப் பலகையில் பெரிய எழுத்துகளில் “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டப்பட்டிருந்ததாம். விசாரித்தபோது, “அமெரிக்கன் ஆந்த்தெம்“ (அமெரிக்க நாட்டுப்பண்), “சைக்கோ 3” (உளவியல் கொடூரன் 3) என்ற இரண்டு திரைப்படங்களின் தலைப்புகளைச் சேர்க்க முடியாததால், இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டியதாகச் சொன்னார்களாம்! “அதைப் பார்த்ததும் எனக்கு ‘பூம்!,’ என்று தோன்றியது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு அதுதான் தலைப்பு,” என்று கூறினார் எல்லிஸ். இலக்கியத் திறனாய்வளரான ஜெஃப்ரி டபிள்யூ. ஹண்டர், “பெருமளவுக்கு முதலாளித்துவத்தின் மேலோட்டத்தனமான சமூகப் பொறுப்பையும் அதன் கொடிய கூறுகளையும் பற்றிய விமர்சனமே இந்த நாவல். கதைமாந்தர்கள் பெரும்பாலும் பொருள்சார் ஆதாயங்களிலும் வெளித்தோற்றங்களிலும்தான் அக்கறை காட்டுகின்றனர். இந்தக் கூறுகள் “மேம்போக்குத்தனம்” உச்சம் பெறுகிற ஒரு பின்நவீனத்துவ உலகின் அடையாளங்களே. அதுதான் பேட்மேன் போன்றோர் மற்ற மனிதர்களையும் வெறும் பண்டங்களாக நினைக்க வைக்கிறது,” என்று பதிவிட்டிருக்கிறார். நாவலின் ஒரு கட்டத்தில் பேட்மேன் ஒரு பெண்ணின் சதையை உண்ணும்போது, “எனது செயல்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நான் உணர்ந்தாலும் இந்தப் பெண், இந்த உடல், இந்த சதை எதுவுமே ஒன்றுமில்லை என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடுகிறான். அடையாளச் சிக்கல்கள் இளைஞர்களின் மனக்குழப்பங்கள், சமூகச் சீர்கேடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதக விளைவுகள் உள்ளிட்ட நிலைமைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருட்களாக எடுத்துக்கொள்கிறார் நையாண்டி எழுத்தாளரும் திரைக்கதையாளருமான பிரெட் ஈஸ்டன் எல்லிஸ். 1964இல் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் பிறந்தவரான எல்லிஸ் 1980களிலும் 90களிலும் மாறுபட்ட கலைப் பார்வைகளோடு முன்னணியில் இருந்த ‘இலக்கிய பிராட் பேக்’ என்ற இளம் எழுத்தாளர்கள் குழுவிலும் அங்கம் வகித்தார். அமெரிக்க இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியிருப்பதைக் கூறும் ‘லெஸ் தேன் ஜீரோ’, அதன் இரண்டாம் பாகமான ‘இம்பீரியல் பெட்ரூம்ஸ்’’ ஆகிய நாவல்களையும் சில ‘தி இன்ஃபார்மர்ஸ் என்ற சிறுகதைத் தொகுப்பையும், வாழ்க்கைப் பயண நினைவுக் குறிப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார். லெஸ் தேன் ஜீரோ, தி ரூல்ஸ் ஆஃப் அட்ராக் ஷன், தி இன்ஃபார்மர்ஸ், அமெரிக்கன் சைக்கோ (American Psycho) ஆகிய கதைகள் திரைப்பட வடிவமெடுத்துள்ளன. எடுத்துச் சொல்லப்படும் உண்மை நிலைமைகளாலும், அப்பட்டமான சித்தரிப்புகளாலும் வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிற போதிலும், பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் தனது சர்ச்சைக்குரிய படைப்புகளின் மூலம், ஆழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து, நவீன அமெரிக்க சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று இலக்கிய உலகினர் சான்றளிக்கின்றனர். https://bookday.in/books-beyond-obstacles-series-19-about-bret-easton-ellis-american-psycho-written-by-a-kumaresan/#google_vignette

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

1 month 3 weeks ago
பகைவனுக்கும் அருள்வாய்! மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பணிவே உயர்வைத் தரும் பீமன் பிறக்கும் பொழுதே அதிக வலுவுடன் பிறந்தவன். அவன் வளர வளர அவனது தேகமும், தேகத்தின் வலிமையையும் பெருகியது. அதற்கேற்றாற்போல் அவனது பெருமையும் பரவத் துவங்கியது. ஒருவரது பெருமை அதிகம் பரவினால் அவருக்கு சிறிதளவாவது அகந்தை வரும். பீமனுக்கும் தனது வலிமை குறித்து அகந்தை இருந்தது. வனத்தில் வசித்து வந்த சமயத்தில், ஒருமுறை தனியாக காட்டில் சென்று கொண்டிருந்தான் பீமன். அடர்ந்த வனத்தின் குறுகிய பாதைகளில் அவன் சென்றுகொண்டிருந்த பொழுது அவனது பாதையை மறித்த வண்ணம் தனது நீந்தல் வாலை நீட்டிய வண்ணம் ஒரு வயதான குரங்கு ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. பீமன் வந்த சப்தத்தை கேட்டு விழித்த அந்தக் குரங்கு அவனை உற்றுப் பார்த்து “புகழ் பெற்ற வீரன் பீமன் அல்லவா நீ? உன்னை வணங்குகிறேன்” எனக் கூறியது. குரங்கு பேசுவதைக் கேட்டு வியந்த பீமன் “நான் யாரென நீ தெரிந்து வைத்திருப்பதில் சந்தோசம் அடைகிறேன். நான் யாரென தெரிந்து கொண்டாய் அல்லவா? இப்பொழுது உன் வாலை நகர்த்திக் கொண்டு எனக்கு வழி விடு. உன்னை போன்ற உயிரினத்தை தாண்டி செல்வது என்னை போன்ற வீரனுக்கு அழகல்ல” என கூறினான். “ஓ பீமா! எனக்கு வயதாகி விட்டது. மேலும், நோய் வாய்ப்பட்டுளேன். எனவே தயைக் கூர்ந்து நீயே என் வாலை நகர்த்தி விட்டு செல்வாயாக” என அவனைக் கேட்டது. பீமன், அந்த குரங்கின் வாலை தொட அசூயை பட்டு, தனது இடது கை சுண்டு விரலால் அதன் வாலை நகர்த்த முயன்றான். ஆனால், அதன் வால் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. அதைக் கண்டு வியப்படைந்தாலும், அதை மறைத்துக் கொண்டு தன் இடது கையால் அதை நகர்த்த முயன்றான். அப்பொழுதும் அதன் வால் அகல மறுத்தது. பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது. அவனது அகந்தை முற்றிலும் அழிந்த நிலையில் “பலவானே! யார் நீங்கள்? உங்களின் சுய ரூபத்தை எனக்கு காட்டுவீர்களாக! என்னை இனியும் சோதிக்க வேண்டாம்!” எனப் பணிவாக வேண்டினான். அவனின் பணிவான வேண்டுதலைக் கேட்ட குரங்கு தனது வேடத்தைக் களைந்தது. பீமனை சோதிக்க குரங்கின் வடிவில் வந்தது வாயு புத்திரனான ஹநுமானே! “பெருமையைக் கை விடு! இறைவனிடம் சரண் அடை! நீ வெற்றிப் பெறுவாய்! என்னுடைய முழு பலமும் பாண்டவர்களுக்கு கிட்டும்! அர்ஜுனன் தேர் கொடியில் நான் வீற்றிருப்பேன்!” என ஹனுமான் அவனை ஆசிர்வதித்தார். பகைவனுக்கும் அருள்வாய்! பாண்டவர்களின் வனவாசத்தில் இருந்த சமயத்தில் ஒரு பிராமணர், அரசன் திருதிராஷ்டிரனை பார்க்க சென்றார். வந்த பிராமணரை வரவேற்று அவருக்கு உபசாரங்கள் செய்த அரசன் பாண்டவர்களின் நலம் பற்றி அவரிடம் விசாரித்தான். அவரும் வனவாசத்தின் பொழுது பாண்டவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விவரித்து, எவ்வாறு அர்ஜுனன் சிவனிடம் இருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றான் என்பதைப் பற்றியும், வனத்தில் அவர்களுக்கு பிரச்சனை வரும் சமயங்களில் எல்லாம் எவ்வாறு பீமன் காப்பாற்றுகிறான் என்பதை பற்றியும் விவரித்தார். பாண்டவர்கள் படும் கஷ்டங்களை கேட்ட மன்னனின் மனம் தடுமாறியது. அதே நேரத்தில், கௌரவர்களும், கர்ணனும் அவர்களுக்கு கிடைத்த திவ்ய அஸ்திரங்களை பற்றி கேட்டு மனம் குமைந்தனர். பாண்டவர்களின் வனவாசம் முடிய குறுகிய காலமே இருந்ததால் அவர்களை எப்படியாவது சூழ்ச்சியில் சிக்கவைத்து மீண்டும் வனவாசத்திற்கு அனுப்புவதில் சகுனியும் மற்றவர்களும் குறியாக இருந்தனர். எனவே இந்தமுறை அவர்களே நேரில் செல்ல நினைத்து பாண்டவர்கள் அப்பொழுது தங்கி இருந்த காம்யக வனத்திற்கு அருகில் இருந்த த்வைதவனத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். நேராக அரசனிடம் சென்று த்வைதவனத்தில் ஆநிரைகளை கணக்கெடுக்க செல்ல அனுமதி வேண்டினர். அவர்களின் உண்மை நோக்கம் அறிந்த மன்னர் முதலில் அனுமதிக்க மறுத்தாலும், அவர்களின் தொடர் வேண்டுகோளால் வேறு வழியின்றி அனுமதித்தார். அவர் அனுமதி கிடைத்தவுடன், துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் மற்றும் தன் படைகள் சூழ த்வைதவனத்திற்கு விரைந்தான். அங்கே வந்தவுடன் ஏரிக்கு அருகே பாண்டவர்கள் முகாம் அமைந்துள்ளதாக தகவல் கிடைக்க, தங்கள் முகாமையும் அங்கேயே அமைக்க துரியோதனன் உத்தரவிட்டான். அவனது உத்தரவை ஏற்று அங்கே சென்று கூடாரங்கள் அமைக்க முயன்றனர். ஆனால் அங்கே இருந்த கந்தர்வர்களின் படை அவர்களை விரட்டி அடித்தது. தங்கள் முயற்சியில் தோற்ற வீரர்கள் திரும்ப சென்று துரியோதனனிடம் முறையிட்டனர். தன் வீரர்கள் துரத்தி அடிக்கப்பட்டதில் கோபம் கொண்ட துரியன், தன் நண்பர்களையும் படையையும் அழைத்துக் கொண்டு கந்தவர்களை எதிர்த்து சண்டையிட சென்றான். கௌரவர்களுக்கும் கந்தவர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கந்தவர்களின் தெய்வீக அஸ்திரங்களை கௌரவர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ள இயலாத கர்ணன் போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடித்தான். துரியோதனன் எதிரிகளிடம் தனியாக சிக்கிக் கொள்ள, கந்தர்வர்கள் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து தங்கள் தலைவனிடம் கொண்டு சென்றனர். பல கௌரவ வீரர்கள் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்து பாண்டவர்களின் கூடாரத்திற்கு சென்று யுதிஷ்டிரனிடம் முறையிட்டனர். அதை கேட்ட பீமன், அவர்களுக்கு இது தேவைதான். இதை நாம் கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறினான். மற்ற அனைத்து சகோதரர்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் , தர்மனின் கட்டளைப்படி , அர்ஜுனன், நகுலன், சகாதேவன் புடை சூழ கந்தவர்களை எதிர்க்க பீமன் சென்றான். இரு தரப்பினரிடையே கடுமையான யுத்தம் துவங்கியது. கந்தர்வர்கள் தங்களிடம் இருந்த அனைத்துவிதமான திவ்ய அஸ்திரங்களை கொண்டு பாண்டவர்களை எதிர்க்க, அர்ஜுனனோ அவர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினான். இதை கண்டு வியந்த கந்தர்வர்கள் தங்கள் தலைவனிடம் சென்று முறையிட அங்கே வந்தான் சித்ரசேனன். சித்ரசேனனை கண்டு அர்ஜுனன் வியந்தான். அர்ஜுனன் இந்திரனின் சபைக்கு சென்ற சமயத்தில் அவனது நடன குருவாக இருந்தது சித்ரசேனனே. நீண்ட நாள் கழித்து சந்தித்த இருவரும் மகிழ்ந்து நலம் விசாரித்தனர். அதற்கு சித்ரசேனன் “துரியோதனன், தனது நண்பர்களுடன் இணைந்து உங்களுக்கு தொந்தரவு தரப்போவதாக அறிந்தோம். அதனால் இந்திரன் என்னை படைகளும் இங்கே அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு தரக் கூறினார்” என தான் வந்த நோக்கத்தை விளக்கினான். பின், அவர்களிடம் இருந்து துரியனையும் மற்றவர்களையும் விட்டுவிட்டு தர்மரிடம் அழைத்து சென்றான் அர்ஜுனன். துரியோதனனுக்கு அறிவுரை கூறியப் பிறகு அவனை விடுவித்து அஸ்தினாபுரத்திற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினான் தர்மன். https://solvanam.com/2025/07/13/பகைவனுக்கும்-அருள்வாய்/

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

1 month 3 weeks ago
மாதா கோயில் அம்மன் தி. செல்வமனோகரன் அறிமுகம் உலக அரங்கில் முதன்மை பெற்ற வழிபாடுகளில் ஒன்றாகப் பெண் தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. இயற்கை மீதான அச்சம், வியப்பு என்பவற்றின் வழிவந்த வழிபாடு, தெய்வம் எனும் கருத்துரு என்பவற்றின் வழியும் இனக்குழு, நிலம், கலை என்பவற்றின் வழியும் பல்தெய்வ வழிபாடுகள் உருவாக்கம் பெற்றன. அவற்றுள் பெண் தேவதையாக, அம்மனாக, கன்னியாக, குழந்தையாக எனப் பலவாறு வழிபடப்பட்டாள். உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன. தெய்வங்கள் இயல்பிறந்த ஆற்றல்களை உடையன. அதேவேளை நாட்டார் தெய்வங்கள் மனிதர்களைப் போல ஆசாபாசங்களை உடையனவாக மனித நடத்தைகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. அவை பற்றிய கதைகள் இதனை வலுப்படுத்துகின்றன. பிற்காலப் பெருந்தெய்வங்கள் பரிபூரணத்துவம் பெற்ற பரம்பொருள்களாகக் கருதப்பட்டன. ஆனால் நாட்டார் தெய்வங்கள் ஆவி, உயிரி, மானா, குறி, முன்னோர் போன்ற வடிவங்களில் இருந்தன; இனக்குழுமவியலின் தெய்வமாகப் போற்றப்பெற்றன. குறித்த இனக்குழுமத்தின் தெய்வத்தை மற்றைய இனக்குலத்தவர் அறிந்திருந்தனர் எனக் கூறுவதற்கில்லை. அறிந்திருந்தாலும் வணங்கினர் எனக் கூற முடியாது. அவரவர் தெய்வம் அவரவர்க்கானது. அது அவரது நம்பிக்கையாகும். காலவோட்டத்தில் வலுவுள்ளன நிற்க, ஏனையவை அருகிப்போயின. நாகரிகம், மேனிலையாக்கம் எனும் மனப்பாங்குகள் நாட்டார் தெய்வங்கள் அருகிச்செல்ல பெரிதும் காரணமாகி நிற்கின்றன. ஆயினும் தம் குலதெய்வம் என்ற நம்பிக்கையூற்று வற்றிப்போகாத சமூகம் அல்லது இனக்குழுமம் இன்றும் நாட்டார் தெய்வங்களை – குல தெய்வங்களை ஏதோ ஒரு வகையில் பற்றிப்பிடித்து நிற்கின்றன. சமூக, கால மாற்றத்தின் வழி சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும் அவை தம் அடிக்கட்டுமானத்தில் மாற்றமின்றி நிற்கின்றன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகளின் வழி வழிபடப்படுகின்றன. தெய்வவழிபாடுகள், சமயவியற்புலத்தில் மட்டுமின்றி, சமூகவியல், மானிடவியல், இனவரைவியல் ஆகிய ஆய்வுப்புலங்களுக்கும் முக்கியமான தரவுகளைக் கொடுக்கின்றன. குறிப்பாக, ஒரு சமூகத்தின் பொருளாதாரம், அரசியல் அமைப்பு, மொழிப்பயன்பாடு, உணவுப்பழக்கம், தொழில்கள் போன்ற கூறுகளின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கும், அந்தச் சமூகத்தின் தொன்மை மற்றும் சமூக அசைவியக்கங்களை அலசுவதற்கும் இவ்வழிபாடுகள் பெரிதும் உதவுகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் அம்பன் எனும் கிராமத்தில் இன்றும் நின்று நிலவும் தெய்வமாக ‘மாதா கோயில்’ அம்மன் காணப்படுகின்றது. அம்பனைத் தன் பிறந்த ஊராகக்கொண்ட சமூகவியலாய்வாளர், எழுத்தாளர் திரு.ந. மயூரரூபனின் வழிகாட்டலில் என்னோடு வழமைபோல ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரனும் இணைந்து இந்தத் தெய்வம் பற்றிய களப்பணியினை மேற்கொண்டோம். மாதா கோயில் அம்மன் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் புழக்கத்தில் இல்லாத ஒரு வழிபாடு அம்பன் பகுதியில் காணப்படுகிறது. அதுவே மாதா கோயில் அம்மன் வழிபாடு. மாதா கோயில் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை கிறிஸ்தவ மேரி மாதாவின் கோயிலாகவே சுட்டப்படுகிறது. எவ்வாறு ‘வேதக்காரர்’ என்பது சைவர்களைச் சுட்டாது கிறிஸ்தவர்களையே சுட்டுகின்றதோ, அதுபோலவே மாதா கோயிலும் றோமன் கத்தோலிக்கக் கோயிலை சுட்டுவதாகவே அமைந்துள்ளது. அதிலும் விசேடம் என்னவெனில் கிறிஸ்தவ மாதா கோயில்கள் பொதுக்கோயிலாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். மாதா சொரூபத்தை சிலர் வீடுகளில் வைத்திருப்பர். ஆனால் அம்பன் கிராமத்தில் வீட்டுவளவிலும் தனித்த இடத்திலும் சிறு மாதா கோயில் கட்டப்பட்டு வழிபடப்படுகின்றது. இது சற்று நூதனமாகவே இருந்தது. ஆதலால் மாதா கோயில் அம்மனை ஆய்வுக்கெடுத்துக் கொண்டோம். கிறிஸ்தவ மாதா கோயிலா? ஈழத்தில் காலனியகால ஐரோப்பியர் வருகையோடு றோமன் கத்தோலிக்கம் அரச மதமாக உட்புகுகிறது. அதேசமயம் சுதேச சமயங்கள் ஒடுக்கப்பட்டு கோயில்கள் யாவும் இடித்தழிக்கப்படுகின்றன. கற்கோயில்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. ஐரோப்பியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்களும் சுதேச சமய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, றோமன் கத்தோலிக்கத்தின் மீதும் ஒடுக்குமுறையை கையாண்டு அவர்களது கோயில்களையும் இடித்தழித்தனர். புரட்டஸ்தாந்து தேவாலயங்களைக் கட்டினர். ஒல்லாந்தரின் ஆட்சியின் இறுதியில் 1890களில் சைவக் கோயில்கள் கட்டப்பட்டன. அதன்பின் கத்தோலிக்கத் தேவாலயங்களும் கட்டப்பட்டன. பிரித்தானியராட்சியில் கிறிஸ்தவ ஆதி நூலான பைபிள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றது. அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாவற்றிலும் சமஸ்கிருதச் சொற்கள் விரவியிருந்ததை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வேதாகமம், மாதா, பிதா, சுதன், கர்த்தர் என இதனை உதாரணப்படுத்தலாம். இந்துக்களின் பெண் தெய்வ வழிபாடு அம்மனின் வழிபாடாகச் சுட்டப்பட்டது. பெண் தெய்வத்தை அம்மன், அம்மா, ஆச்சி, நாச்சியார், கன்னிமார் எனப் பல பொதுச்சொற்களால் சுட்டி வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. அதேவேளை கிறிஸ்தவ பெண் தெய்வமான மேரியை மேரியன்னை, மேரி மாதா எனச் சுட்டும் வழக்கம் தமிழர் மத்தியில் காணப்பட்டு வந்துள்ளது. இச்சொற்பிரயோகங்கள் ஈழத்தில் தெளிவான சமயப்பிரிநிலைச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தென்னாசிய நாடுகளில் மாதா கோயில் இந்திய சாக்த மதத்தவரின் 64 சக்திபீடங்களில் ஒன்றாகவும், முதலானதாகவும் வர்ணிக்கப்படும் ‘ஹிங் குலாஜ்’ மாதா சக்திபீடக் கோயில் தற்போது பாகிஸ்தானின் பலூகிஸ்தான் மாகாணத்தில் லஸ்பெலா மாவட்டத்தில் ஹிங்கோர் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. ஹிங்குலி – முன்வகிடுக் குங்குமப்பொட்டு அல்லது செந்தூரம் எனப்படுகிறது. மகாசக்தி பீடேஸ்வரி தெய்வமாக வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இந்துக் கோயில் ‘மாதா கோயில்’ என்றே கூறப்படுகிறது. அதேபோல நேபாளத்தில் உள்ள அம்மன் கோயிலும் ‘பதிவரா மாதா கோயில்’ என்று சுட்டப்படுகிறது. கால்நடை (ஆடு) வளர்ப்புடன் இணைந்த தெய்வ வழிபாடாக இது காணப்படுகிறது. இது ஆசைகளின் தெய்வம் என்றும், இங்கு வரும் அடியவர் ஆசைகளை நிறைவேற்றுவதனால் இப்பெயர் பெற்றதென்றும் கூறப்படுகின்றது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேர் மாவட்டத்தில் ‘ஹர்ணி மாதா கோயில்’ காணப்படுகிறது. இங்கு வழிபடுதெய்வம் துர்க்கை. இது எலிக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் ‘பர்வானூ சீதள மாதா கோயில்’ எனும் அம்மன் கோயில் காணப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் 50 வருடப் பழமை வாய்ந்த கோயில் 19.07.2023 இல் இடிக்கப்பட்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டமை யாவரும் அறிந்ததே. அது ‘மாரி’ மாதா கோயில் ஆகும். அண்மைக்காலத்தில் இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் ‘சதி மாதா’ கோயிலும் உத்தரப்பிரதேசத்தில் ‘கொரோனா மாதா’ கோயிலும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட இந்தியப் பண்பாட்டில் மாதா கோயில் என்பது இந்துக்களின் அம்மன் வழிபாட்டைக் குறிப்பதையும், இக்கோயில்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஈழத்துத் தமிழ்ச்சூழல் இதற்கு மாறானது. தமிழகத்திலும் ஈழத்திலும் மாதா எனும் சமஸ்கிருதச் சொல்லின் சமயரீதியிலான தற்காலப் பொதுப்பயன்பாடு கிறிஸ்தவ மேரி மாதாவைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. அம்பன் கிராமத்து மாதா கோயில் அம்மன் வடமராட்சி அம்பன் கிராமத்தில் ஐந்து அம்மன் மாதா கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது கிழக்கு அம்பன் பிரதேசத்தில் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது 82) அவர்களின் வீட்டில் உள்ளது. ஏனைய கோயில்களிலும் இந்த வீட்டில் உள்ள கோயில் தனித்துவமானதாக அமைந்துள்ளது. தனது அம்மம்மா காலத்திற்கு முன்பிருந்தே இந்த மாதா கோயில் வழிபாடு இருந்து வருவதாகவும் ஆரம்பத்தில் திறந்தவெளியிலும் பின்பு ஓலைக்கொட்டிலிலும் இருந்த தெய்வத்திற்கு, சிறிய சீமெந்துக் கட்டடம் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. மாதா கோயில் என அழைப்பது ஏன் என வினவியதற்கு, யாவருமே தெரியாது என்று பதில் கூறினர். தொடக்ககால வரலாறு, இவ்வழிபாடு வந்தமுறை போன்ற எந்த வினாக்களுக்கும் அவர்களுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. மாதா கோயில் நூறு வருடத்திற்கு மேற்பட்டது என்ற வரியைக் கவனத்தில் கொண்டு சில அனுமானங்களுக்கு நாம் வரலாம். ஒல்லாந்தராட்சிக் காலத்தில் சுதேசிகளின் வணக்கமுறைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறி வழிபடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதற்குச் சுதேசிகள் சில மாற்றுத்திட்டங்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாண நாட்டாரியல் வழிபாட்டில் கல், சூலம் என்பன அதிக செல்வாக்குப் பெறுவன. சூலத்தை வழிபடும் காலத்தில் ஒல்லாந்தரோ, அன்றி அவர்களுக்குக் காட்டிக்கொடுப்பவரோ வரின், சூலத்தின் மடிந்திருந்த இருகரைக் கம்பிகளையும் நேராக்கி விடுவர். அது சிலுவைபோல காட்சியளிக்கும். அதுபோல கற்களை புல், குழை, இலை போன்றவற்றால் மறைத்து விடுவர். அவ்வாறு செய்யமுடியாது பிடிபட்ட சந்தர்ப்பம் ஒன்றில் கல் வைத்து வழிபட்ட அம்மனை மாதா எனக் கூறியிருக்கலாம். ஏதோ ஒரு தேவையின் பொருட்டு அம்மனை மாதா எனக் கூறி வழிபட்டிருக்கலாம். கிறிஸ்தவச் சமூகத்தின் செல்வாக்கு அல்லது உதவி பெறுதற் பொருட்டு மாதா கோவில் எனும் சொல் புழக்கத்திற்கு வந்திருக்கலாம். மாதா என்பது அன்னை – அம்மன்; ஆகவே அம்மனை மாதா என அழைத்தல் தமது உரிமை, அது கிறிஸ்தவத்திற்குரியதல்ல என்ற எண்ணத்தினாலும் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம். மத நல்லிணக்க உணர்வினால் இவ்வாறு சுட்டியிருக்கலாம். இக்கோயில்கள் இருக்கும் இந்தவூரின் பெயர் அம்பன் எனப்படுகிறது. அதற்குத் தெளிவான காரணமெதுவும் கூறப்படவில்லை. அம்மன் – அம்பன் எனப் பேச்சுவழக்கில் திரிந்திருக்கலாம். இத்தெய்வ வழிபாட்டின் சிறப்பே ஊர்ப்பெயராக மாறியிருக்கலாம். ஈழத்தில் மாதா கோயில் என ஒரு சைவக் கோயில் யாழ்ப்பாணம் காரைநகர் கள பூமியில் இருக்கின்றது (பாலேந்திரன்,ச. ஆ., 2002, காரைநகர் தொன்மையும் வன்மையும், பாலாவோடை அம்மன் பதிப்பகம், காரைநகர்). காலனிய காலத்தில் சைவ வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த சூழலில் அம்மனை வழிபட்டு வந்ததாகவும், அந்நியர்கள் அக்கோவிலை உடைப்பதற்கு வருகை தந்தபோது மாதா சொரூபத்தை வைத்து வழிபட்டு அந்தக் கோயிலைக் காப்பாற்றியதாகவும், ஆதலால் அதனை மாதா கோயில் என்று அழைப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இந்தக் கோயிலுக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு என்றும், முத்துமாரியின் தாய் தான் மாதா என்றும் சொல்லுகிற வழக்கமும் அங்கு உண்டு. இந்த வழிபாட்டு மரபு அம்பன் மாதா கோவில் அம்மன் வழிபாட்டில் இருந்து வேறானது என்பதனால் இந்த ஆய்வில் அக்கோயிலைப் பற்றி விரித்துரைக்கவில்லை. தெய்வவுரு மாதா கோயில் அம்மனுக்கு உருவம் இல்லை. ‘கல்’ வைத்தே வழிபடப்படுகின்றது. தொன்மைக் கோயிலான வீரபாகு அவர்களின் வீட்டில் உள்ள அம்மனின் கல், வெள்ளைக் கல்லாகக் காணப்படுகிறது. சங்கொன்றின் நுனிப்பகுதியில் காணப்படும் சுருள் போன்ற அமைப்பில் கூம்புருவமாக ஒரு சாண் அளவுக்குட்பட்டதாகக் காணப்படுகிறது. சங்ககாலத்தில் அடி பெருத்து நுனி சிறுத்த கறுப்பு நிறத்தாலான கந்து, நந்தா விளக்கேற்றி வழிபடப்பட்டதை இவ்வடிவம் ஞாபகப்படுத்துகிறது. ஏனைய நான்கு கோயில்களிலும் கருங்கல்லாலான கூம்புருவக்கற்களே வைத்து வழிபடப்படுகின்றன. பரிவாரத் தெய்வங்களும் கூம்புருவக்கற்கள் வைத்தே வழிபடப்படுகின்றன. வீரபாகு வீட்டுக் கோயிலிலுள்ள வெள்ளைக்கல்லின் சுருள்க்கரையில் சிதைவு ஏற்படத் தொடங்கியுள்ளதெனினும், அது தனித்துவமான ஏனைய மாதா கோயில்களில் உள்ள கல்லைவிடச் சிறப்பானதாக அமைந்துள்ளது. கோயில் அமைப்பு நாட்டார் தெய்வ வழிபாடுகள் பொதுவெளியில் மரத்தடி, குளத்தடி, கிணற்றடி போன்ற இடங்களில் அமைந்திருப்பது வழக்கம். அதுபோலவே இக்கோயில்களும் பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்டன. இன்றும் திருமதி பானுமதி குணசிங்கம் அவர்களின் இல்லத்தில் சீமெந்துப்பீடம் அமைத்து, நடுவில் அம்மனும் நான்கு பரிவாரத் தெய்வங்களுமாக கூரையின்றி அமைந்து காணப்படுகிறது. திருமதி வீரபாகு தெய்வயானை, வன்னியசிங்கம் கனகநாதன், திருமதி பானுமதி குணசிங்கம் ஆகியோரின் காணிகளில் அமைந்துள்ள கோயில்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய எல்லாக் கோயில்களும் சீமெந்துக் கட்டடங்களாலான கூரையை உடைய சிறிய கோயில்களாக அமைந்துள்ளன. முதற்கோயில் மட்டும் மேற்குத்திசையை நோக்கியிருக்க ஏனையவை கிழக்குத்திசையை நோக்கியவையாக அமைந்துள்ளன. அவற்றுள் சாஸ்திர முறைப்படி – சோதிடர் ஆலோசனைப்படி கட்டப்பட்டவையும் உண்டு. மாதா கோயில் அம்மன் பற்றிய கதைகள் இந்த அம்மனுக்கு உருவமில்லையெனினும் வீட்டவருக்கு ஒரு விடயம் சொல்வதற்கோ, சிக்கலைத் தீர்ப்பதற்கோ இத்தெய்வத்தை வேண்டின், அதனை உடனடியாக நிறைவேற்றும். பொழுது சாய்ந்ததன்பின் (இருட்டியபின்) கோயிலடிக்கு யாரும் செல்வதில்லை என்றும், இரவில் கிழவி ரூபத்தில் (வயதுபோன பெண்) வெள்ளை உடுப்பு உடுத்தவளாக உலாவுவாள் என்றும், எதிரில் வந்து ஏதும் சொல்லிவிட்டுப் போவாள் என்றும் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது, 82) கூறினார். திருமதி பானுமதி குணசிங்கம், வீட்டின் மேற்குப்புற அலம்பல் வேலியை அகற்றி எல்லை அமைக்கும்போது இக்கோயிலையும் எடுத்துவிட்டார். இக்கோவிலுக்கு முன்பு விளக்குவைத்த வெளிநாட்டில் உள்ள அண்ணாவின் கனவில் இத்தெய்வம் தோன்றியதாகவும், அவர் அடுத்தநாள் கோயிலில் என்ன செய்தீர்கள் எனக்கேட்டு, நடந்ததை அறிந்து, கோயிலை மீள அமைக்கக் கூறியபடி இக்கோயிலை அமைத்ததாகவும் திரு.ஆ. குணசிங்கம் (வயது, 60) கூறினார். யுத்த இடம்பெயர்வால் கைவிடப்பட்ட கோயிலை மீள ஆதரிக்கவில்லை. வீட்டில் நிறையப் பிரச்சினைகள் நடந்தன. கட்டுக்கேட்ட இடமெல்லாம் குலதெய்வத்தை ஆதரிக்குமாறு கூறினர். அதன்பின்பே மீளக் கோயில் அமைத்தோம். இப்போது பிரச்சினைகள் குறைந்துவிட்டன என திரு. வன்னிய சிங்கம் கனநாதன் (வயது, 72) குறிப்பிட்டார். இத்தெய்வத்தை வணங்கிய எவரும் இன்றுவரை இத்தெய்வ வழிபாட்டை நாட்டாரியல் பண்போடு அவ்வண்ணமே ஆதரித்து வருகின்றனர். கனவில் தோன்றி காட்சியளித்தல், கிழவி ரூபம், வெள்ளை ஆடை என்பன யாவரும் உரைக்கும் பொதுவிடயங்களாக உள்ளன. வழிபாட்டு முறைகள் இவ்வாலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்தல் நிகழ்கிறது. திருமதி தெய்வயானை வீட்டில் திங்கட்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கமும் இருக்கிறது. விளக்கு வைக்கும் நாட்களில் வெற்றிலை, பாக்கு, பழம் என்பன படையல் வைக்கப்படுகின்றன. தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல், நவராத்திரி, திருவெம்பாவைக் காலங்களில் விசேட பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அயலிலுள்ளவர்களும் நேர்த்தி நிறைவேற்றும் நாட்களில் கலந்துகொள்கின்றனர். வருடத்தில் ஒரு நாள் மோதகப் பூசை நடைபெறும். விசேட தினங்களில் பொங்கல் பொங்கி, பலகாரங்கள் பல (வடை, மோதகம், முறுக்கு, பால்றொட்டி, சீனியரியாரம்…) வைத்து மா, பலா, வாழை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் படைத்துப் பூசை செய்யப்படுகிறது. இக்கோயில் பூசை ஆண்வழிச் சமூகத்தாலேயே நிகழ்த்தப்பட்டு வருகின்றது. வீட்டில் உற்பத்தியாகின்ற பொருள்களில் முதற் பொருளை (பழங்கள், தேங்காய், நெல்…..) இத்தெய்வத்துக்குப் படைத்தபின்பே பயன்பாட்டுக்கு எடுக்கும் வழக்கம் காணப்படுகின்றது. சமூக அடுக்கமைவு மேற்சுட்டிய ஐந்து மாதா கோயில்களும் வேளாள சமூகத்தவர்க்கானவை. அதிலும் குறித்த இரத்த பந்தம் உள்ள குடும்பங்களுக்கானவை. விவசாய நிலமும் ஆடு வளர்ப்பும் உள்ள பிராந்தியத்தில் உள்ளவை. இவற்றைவிட இதேபகுதியில் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தவரிடம் ஒரு மாதா கோயில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். அக்கோயில் பூசாரியான வேலுப்பிள்ளை சசிகரன் (வயது, 41) அக்கோயில் பற்றிய விபரங்களைக் கூறினார். தன்னுடைய தாத்தா காலத்துக்கு (சிதம்பரம்) முற்பட்ட கோயில் என்றும், கல் வைத்து அம்மனை வழிபட்டனர் என்றும், 2000 ஆம் ஆண்டு வரை மாமனார் பூசை செய்து வந்ததாகவும், 2010 இல் யுத்தம் நிறைவுற்றதன்பின் வந்து பார்த்தபோது கோயில் முற்றாக சிதைந்திருந்தது என்றும், தான் தான் தற்போதைய கோயிலைக் கட்டி எழுப்பியதாகவும் கூறினார். ஆகமக் கோயில்களைப்போல கருவறை, முன்மண்டபம் உடையதாகவும் கல்லை அகற்றிக் கருங்கல்லாலான அம்மன் திருவுருவத்தை ஸ்தாபித்துக் கும்பாபிஷேகம் செய்ததாகவும், பரிவாரத்தெய்வமாக அண்ணமார் தெய்வம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இங்கு ஆடிப்பூரம், கும்பாபிஷேக தின மணவாளக்கோல விழா, பங்குனி உத்தரம் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. விசேட தினங்களில் இவருக்குக் கலைவரினும் கட்டுச் சொல்வதில்லை. இவரின் அக்காவின் மகளே கலையாடி, கட்டுச் சொல்கிறார். முன்பு பில்லி சூனியம், வசியம், செய்வினை அகற்றல், பேய் – பிசாசு ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், தனது தாய் மந்திரவித்தையில் வல்லவர் எனவும், இவை அனைத்தையும் அவர் செய்ததாகவும் கூறினார். ஆனால், தாயார் விமர்சனத்துக்குள்ளானதினால், அதனைத் தொடர்ந்து தாம் பழகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வீரபாகுவின் மகன் திரு.வீ. காந்தனும் பில்லிசூனியம், செய்வினை, வசியம் முதலான தீவினை நீக்கத்துக்காகவே இந்தத் தெய்வம் வழிபடப்படுகிறது எனக் கூறியமை இதனுடன் ஒத்துப்போகிறது. சில அவதானிப்புகள் மாதா கோயில் என்பது காலனித்துவத்தின் பேறாய் பயன்பாட்டு நிலையில் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறது. ஒடுக்குமுறைக்குப் பயந்து அல்லது அதற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஈழத்துச் சைவ வாழ்வில் அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய இச்சொல், குறித்த பரம்பரையினரின் குலதெய்வத்தை அல்லது முன்னோர் வழிபாட்டைச்சார்ந்த ஒன்றென்றே கருத முடிகிறது. இப்பரம்பரையினரிடம் பணிபுரிந்த சிறுகுடி வேளாளர் இத்தய்வத்தின் திருவருளை வியந்தோ அல்லது வேளாளரை ஒத்தவராகத் தம்மைக் கருதியோ, அன்றி விசுவாசத்தாலோ இத்தெய்வத்தை தம் குடியிருப்புப்பகுதியில் உருவாக்கியிருக்கலாம். இன்றும் கோயில் தண்டலுக்கு வேளாளரிடம் செல்லும் வழக்கம் உண்டு என்று பூசாரி கூறியமை குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு கற்களால் குறிப்பிட்ட பிரதேசத்தில் (அம்பன்) இத்தெய்வவுரு வழிபடப்படுகிறது. வீட்டுவளவில் சிறுகோயில் வழிபாடாகக் காணப்படுகின்றது. சிறுகுடி வேளாளரின் கோயில் மேனிலையாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது சாதிய நீக்கம் – தம்மைத் துறத்தல் சார்ந்த செயற்பாடாகவே பூசாரியின் உரையாடல் வழி புரிந்துகொள்ள முடிந்தது. வேளாண்மை, ஆடு வளர்ப்பு என்பவற்றில் அப்பகுதி மக்கள் ஈடுபடுவதை – அவர்கள் வேளாண்மையாளர்களாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. நேபாளத்தில் உள்ள பதிவரா மாதா கோயிலும் ஆடு வளர்ப்புடன் தொடர்புபட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தீவினைகளுக்கு எதிராகக் கோயிலமைத்து வழிபடப்படுகின்ற நேர்நிலைத் தெய்வம் இதுவாகும். பெண் தெய்வமெனினும் ஆண்வழிப் பூசாரிகளே பூசை செய்து வருகின்றனர். தாய்மையின் அடையாளமாக, தூய்மையின் சின்னமாக இத்தெய்வமிருத்தலை கிழவி ரூபம், வெள்ளை உடை எனும் சித்தரிப்புகள் புலப்படுத்துகின்றன. இந்தக் கோயில்கள் எதிலும் பலியிடலோ, மட்ச – மாமிசப் படையல்களோ இடம்பெறுவதில்லை. நிறைவுரை குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றாக அம்பன் பிரதேசத்து மாதா கோயில் அம்மன் வழிபாடு காணப்படுகிறது. இது சைவ வேளாளர் சமூகத்தின் வழிபாடாகும். மாதா எனும் சொல் அன்னையைக் குறிக்கும் எனினும், யாழ்ப்பாணத்தில் மாதா கோயில் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மேரி மாதா கோயில்களையே பொதுவில் சுட்டுகின்றன. ஆனால் இவை சைவக் கோயில்கள்; காலனிய ஆதிக்கங்களுக்குப் பயந்தோ, அன்றி எதிர்நிலை – நேர்நிலை எடுத்தோ இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மாதா என்பது அன்னையே எனப் பொருள்கொண்டு இப்பெயரைச் சூட்டி இருக்கலாம். விவசாய நிலத்தோடு இணைந்து வேளாளர் மரபின் வீட்டுவளவில் இருக்கின்ற காவல் தெய்வம் இதுவாகும். தீவினைத் துன்பத்தில் இருந்து காக்கும் தெய்வம் இது. ஆரம்பத்தில் அம்மன் தெய்வத்துக்கான கல் மட்டுமே வைத்து வழிபடப்பட்டது. காலப்போக்கில் பிள்ளையார், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் இணைத்து வழிபடப்பட்டன. பல்வகைக் கற்களால் இத்தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. வேளாளரின் வழிபாடு சிறுகுடி வேளாளரிடம் சென்றமை அக்கால சமூக அடுக்கமைவை ஆதாரப்படுத்துகிறது. உணவுப் படையல் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. குறித்த பரம்பரையினரின் வழிபடு தெய்வம் எனினும், மாதா கோயில் என்ற குறிப்பு கால, தேச, வர்த்தமானம் கடந்த அர்த்தப்பாடுகளை உணர்த்தி நிற்கிறது. https://www.ezhunaonline.com/madha-kovil-amman/

உயிரை பறிக்கும் “மாவா”!!

1 month 3 weeks ago
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை. மருதகாசி அவர்கள் இந்தப் பாடலை இயற்றியபோது குட்காவும் இல்லை மாவாவும் இல்லை என்று எண்ணுகிறேன்.🤔

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்

1 month 3 weeks ago
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள். 22.11.2025 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025. "எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து,அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்." தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள். அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! தமிழீழத் தேசிய இனத்தினது அடையாளமாகவும் அதன் தொன்மையானது பேரொளி கொள்ளும் எமது தேசவிடுதலையைத் தங்களுடைய உயிரினும் மேலாகக்கொண்டு, பூமிப்பந்திலே அதன் சுதந்திர அடையாளத்தை நிறுவிட பேரவாக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவரது சிந்தனையின் வழிநின்று அதில் தம்மையும் இணைத்து, வீரமிக்க மனவுறுதியோடு களம் பல கண்டு, வீரச்சாவினை அணைத்திட்ட அற்புதமான மாவீரர்களின் வரலாற்றுப் பாதையில் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் மாவீரர்களை நெஞ்சுருகி ,நெய் விளக்கேற்றி ,மலர் தூவி வணக்கம் செலுத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நாளான 27 நவம்பர் 2025 இற்கான நிகழ்வுகள் எம்மை அண்மித்து வருவதையும், அதற்கான முன்னேற்பாடுகளோடு தாயக , தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்துவரும் அனைவரும் ஈடுபட்டுவருகின்றோம். மாவீரர்களின் பெற்றோர்களே, உரித்துடையோர்களே! ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் உன்னத விடுதலைப்போராட்டத்தில் ,உயர்ந்த ஈகமாக , தங்கள் உயிரீந்த மாவீரர்கள் விடுதலைத்தாகத்தோடு மீளாத்துயில் கொள்கின்றார்கள். தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான மாவீரர் பெற்றோர் ,உரித்துடையோர் மதிப்பளிப்பு இன்றும் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ,இவ்வாண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் அம்மதிப்பளிப்பு நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோரைக் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம். தமிழீழம் என்ற இலட்சியத் தாகத்தைச் சுமந்து ,விழிமூடி துயிலும் ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கி ,இவ்வாண்டின் மாவீரர் நாள் நிகழ்வுகளோடு தம்மை முழுமையாக ஒன்றித்து ஈடுபடத் தயாராகிவரும் உறவுகளே ,தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் இனவாத சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் சிதைத்தழிக்கப்பட்ட போதிலும் அவர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி பல உயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் தாயகத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர்தேசங்களிலும் மக்கள் தமது பிள்ளைகளிற்கும் உரித்துடையோரிற்கும் வணக்கம் செலுத்தத்தயாராகி வருகின்றார்கள். இவ்வேளையில் ,புலம்பெயர்தேசங்களிலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் உறவுகள் ,பேரெழுச்சியுடன் மாவீரர்நாளில் திரள்வதே தமது வாழ்விடநாடுகளின் கவனத்தை உணர்வோடு ஈர்க்கும். எமது வீரவிடுதலை வரலாறு ,எம் மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டுள்ளது. சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டங்களில் பெரும் மலையாக நின்று தடைகளைத் தகர்த்து , எம்மைத் தலைநிமிரவைத்து , வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் பெற்றுத்தந்தவர்கள் எமது மாவீரர்களே! இம் மாவீரர்களை நினைவேந்திடும் தேசிய மாவீரர்நாளான நவம்பர் 27இல் நெய்விளக்கேற்றி வணக்கம் செலுத்துவதோடு, தமிழீழம் விடுதலையடையும்வரை தொடர்ந்தும் போராடுவோமென உறுதிகொள்வோமாக! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/85db8301-a8f6-4c16-b1bd-65ced9188c48

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்

1 month 3 weeks ago

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 - அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

22.11.2025

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025.

"எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து,அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள். உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்."   தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! 

தமிழீழத் தேசிய இனத்தினது அடையாளமாகவும் அதன் தொன்மையானது பேரொளி கொள்ளும் எமது தேசவிடுதலையைத் தங்களுடைய உயிரினும் மேலாகக்கொண்டு, பூமிப்பந்திலே அதன் சுதந்திர அடையாளத்தை நிறுவிட பேரவாக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவரது சிந்தனையின் வழிநின்று அதில் தம்மையும் இணைத்து, வீரமிக்க மனவுறுதியோடு  களம் பல கண்டு, வீரச்சாவினை அணைத்திட்ட அற்புதமான மாவீரர்களின் வரலாற்றுப் பாதையில் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் மாவீரர்களை நெஞ்சுருகி ,நெய் விளக்கேற்றி  ,மலர் தூவி வணக்கம் செலுத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நாளான 27 நவம்பர் 2025 இற்கான நிகழ்வுகள் எம்மை அண்மித்து வருவதையும், அதற்கான   முன்னேற்பாடுகளோடு தாயக , தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்துவரும்  அனைவரும் ஈடுபட்டுவருகின்றோம். 

மாவீரர்களின் பெற்றோர்களே,  உரித்துடையோர்களே!

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ மண்ணை மீட்டெடுக்கும் உன்னத  விடுதலைப்போராட்டத்தில் ,உயர்ந்த ஈகமாக  , தங்கள் உயிரீந்த  மாவீரர்கள் விடுதலைத்தாகத்தோடு மீளாத்துயில் கொள்கின்றார்கள். தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவான மாவீரர் பெற்றோர்  ,உரித்துடையோர் மதிப்பளிப்பு இன்றும் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்  ,இவ்வாண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் அம்மதிப்பளிப்பு நிகழ்வுகளில் மாவீரர்களின் பெற்றோர்  , உரித்துடையோரைக் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.

தமிழீழம் என்ற இலட்சியத் தாகத்தைச் சுமந்து  ,விழிமூடி துயிலும் ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கி  ,இவ்வாண்டின் மாவீரர் நாள் நிகழ்வுகளோடு தம்மை முழுமையாக ஒன்றித்து ஈடுபடத் தயாராகிவரும் உறவுகளே  ,தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் இனவாத சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால்  சிதைத்தழிக்கப்பட்ட போதிலும் அவர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி பல உயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் தாயகத்திலும் மற்றும் தமிழ்நாட்டிலும்  புலம்பெயர்தேசங்களிலும் மக்கள் தமது பிள்ளைகளிற்கும் உரித்துடையோரிற்கும்  வணக்கம் செலுத்தத்தயாராகி வருகின்றார்கள். இவ்வேளையில் ,புலம்பெயர்தேசங்களிலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் உறவுகள்  ,பேரெழுச்சியுடன் மாவீரர்நாளில் திரள்வதே தமது வாழ்விடநாடுகளின் கவனத்தை உணர்வோடு ஈர்க்கும்.

எமது வீரவிடுதலை வரலாறு ,எம் மாவீரர்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர்த்தியாகத்தாலும் பொறிக்கப்பட்டுள்ளது. சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டங்களில் பெரும் மலையாக நின்று தடைகளைத் தகர்த்து  ,  எம்மைத் தலைநிமிரவைத்து  ,  வையகத்தில் எம்மினத்திற்கான முகவரியைப் பெற்றுத்தந்தவர்கள் எமது மாவீரர்களே! இம் மாவீரர்களை நினைவேந்திடும் தேசிய மாவீரர்நாளான நவம்பர் 27இல் நெய்விளக்கேற்றி வணக்கம் செலுத்துவதோடு,  தமிழீழம் விடுதலையடையும்வரை தொடர்ந்தும் போராடுவோமென உறுதிகொள்வோமாக!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

மாவீரர் பணிமனை, 

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள். 

89wcyjw7xfUagUpwJdY9.jpg

https://www.thaarakam.com/news/85db8301-a8f6-4c16-b1bd-65ced9188c48

சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர்

1 month 3 weeks ago
சென்னைக்கு மாற்று அவயங்களை பொருத்த சென்றவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினர் சனி, 22 நவம்பர் 2025 11:32 AM நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், கனடா வாழ் மக்களின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த இரண்டாவது தொகுதியினர் மாற்று அவயவங்கள் பொருத்திக் கொள்வதற்காக சென்னை சென்றிருந்தது. கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக வடக்கு கிழக்கை சேர்ந்த 32 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். அவர்களே மாற்று அவயங்களை பொருத்திக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர் https://jaffnazone.com/news/52508