Aggregator
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
கொஞ்சம் ரசிக்க
ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரனைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட
நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரிக்கவும் சிந்திக்கவும் .
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்
அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
நாமலுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இன்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்குக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்; இனத்துக்காக தமிழரசு ஒன்றுபட வேண்டும்; ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
28 JUL, 2025 | 01:20 PM
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் இடம்பெற்ற 1983 கறுப்பு ஜூலை படுகொலை வாரத்தின் நேற்று, இன்று, நாளை மக்கள் கருத்தாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் 1983 கறை படிந்த கறுப்பு ஜூலை வாரத்தை நினைவு கூருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பவர்களாக இருக்கிறோமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
தமது உயிர் பறிக்கப்படப் போகிறது எனத் தெரிந்தும் எமது இனத்தின் கொள்கைக்காக எந்தவித விட்டுக்கொடுப்புக்களையும் காட்டிக் கொடுப்புகளையும் செய்யாது தமது உயிர்களை தியாகம் செய்தவர்கள்.
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகம்.
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சுமார் 12 வருடங்களாக கிடப்பில் கிடக்கின்றது. தொடர்ந்தும் தீர்மானங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் ஐநா மனித உரிமைகள் பேரவையிலே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு நகருவதற்காக அண்மையில் தமிழ் தேசியப் பரப்பில் பயணித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததோடு சிவில் சமூகத்தையும் அழைத்தோம் துரதிஷ்ம் தமிழரசு கட்சி மட்டும் கலந்து கொள்ளவில்லை.
ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து தமிழ் மக்களுடைய விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான இரண்டு வழிகள் இருக்கிறது .
இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவது அல்லது உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட நாடுகளில் விசாரணைகளை ஆரம்பிப்பது.
இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான உதாரணமாக மியன்மாரில் இடம் ரோஹிந்திய முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிபு விவகாரத்தை கூறலாம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இலங்கை போன்று மியான்மாரும் ஏற்காத நிலையில் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அங்கத்துவ நாடு ஒன்றினால் விசாரணை கோரப்படடது.
அதேபோன்று ரோம் உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்துடாவிட்டாலும் ஆப்கானிஸ்தானில் சென்று அமெரிக்கா இராணுவம் இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் ஆப்கானிஸ்தான் ரோம் உடன்படிக்கையை ஏற்றுள்ள நிலையில் உடன்படிக்கையை ஏற்ற நாடு ஒன்றில் இன்னொரு நாடு சென்று இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது ஐநாவுக்கு வெளியில் இலங்கையில் போர் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் ஐநா உறுப்பு நாடுகளுக்கு நுழையும் போது தமது நாடுகளில் போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு பல வழிகள் இருக்கின்ற நிலையில் 2012 இல் இருந்து தமிழ் மக்களுடைய தீர்மானங்கள் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களினால் கிடப்பில் போடுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையை மாற்றி எல்லோரும் ஒரணியாக புதிய தீர்மானத்தை கொண்டு வருவதற்காக ஒன்றுபட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்தும் தமிழரசு கட்சி வரவில்லை.
அவர்கள் வரவில்லை என்றாலும் எமது புதிய தீர்மானம் அனுப்பும் வரைவை தமிழரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம் வராவிட்டாலும் திருத்தங்களை கூறினால் திருத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.
ஆகவே தமிழ் மக்களுக்காக பல உயிர் தியாகங்கள் இந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதை நினைவில் வைத்து வர இருக்கும் ஜெனிவா அமர்வுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.