Aggregator
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
எனது மரணச்சடங்கு.🖤
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
எனது மரணச்சடங்கு.🖤
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
சிரிக்க மட்டும் வாங்க
குட்டிக் கதைகள்.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பும் நிபுணத்துவமும் உள்வாங்கப்படுவது அவசியம் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பும் நிபுணத்துவமும் உள்வாங்கப்படுவது அவசியம் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்
Published By: VISHNU
28 JUL, 2025 | 07:15 PM
(நா.தனுஜா)
நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும்.
அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் புதுப்பிக்கவேண்டும் எனவும் அந்த ஆணைக்குழு வேண்டுகோள்விடுத்துள்ளது.
யாழ் செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் ஞாயிற்றுக்கிழமை (27) வரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுபவை உள்ளடங்கலாக 101 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை நோக்கிய பயணத்தில் இந்த மனிதப்புதைகுழி அகழ்வு மிகமுக்கியமான முதற்கட்ட செயன்முறையாகும்.
அதேவேளை இந்த அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணை செயன்முறை என்பன சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குறிப்பாக அவை உயிரிழந்தோரினதும், அவர்களது குடும்பத்தாரினதும் உரிமைகளையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும்.
மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் ஒவ்வொரு மனித எலும்புக்கூட்டின் பின்னணியிலும் நினைத்துப்பார்க்கமுடியாத துன்பத்துக்கு முகங்கொடுத்த ஒரு குடும்பம் இருக்கிறது. எனவே இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் தனிமனித கௌரவத்துக்கான மரியாதையுடனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்புடனும் முன்னெடுக்கப்படவேண்டும்.
அதுமாத்திரமன்றி இக்குற்றங்களின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இச்செயன்முறையானது உச்சபட்ச நேர்த்தியுடனும், சட்ட நியமங்களுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச மேற்பார்வை இன்றியமையாததாகும். செம்மிண மனிதப்புதைகுழி அகழ்வானது இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கியமானதொரு தருணத்தைப் பிரதிபலிக்கின்றது.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து செம்மணி மனிதப்புதைகுழி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானம் பெற்றது.
அன்று முதல் இன்றுவரை இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்குக்கான அழுத்தமானதும், வலிமிகுந்ததுமான அடையாளமாக அது திகழ்கின்றது.
சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் செம்மணி - சித்துபாத்தியில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருப்பதானது உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அடையப்படுவதற்கு வழிவகுக்கக்கூடியவகையில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நம்பத்தகுந்த, வெளிப்படைத்தன்மை வாய்ந்த, உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியவாறான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.
உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையான தீர்க்கப்படாத வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அங்கு 60,000 - 100,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருப்பதுடன் அவற்றில் பெரும்பான்மையானவை 1983 - 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான ஆயதப்போராட்டகாலத்தில் பதிவானவையாகும்.
ஆயுதமோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் போரின் பின்னரான கரிசனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேற ஆணைக்குழுக்கள் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டன. இருப்பினும் அந்த ஆணைக்குழுக்கள் பெரும்பாலும் நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்தினவே தவிர, பொறுப்புக்கூறல் குறித்து போதுமானளவு அவதானம் செலுத்தவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான உண்மையை அறியும் உரிமை, நீதி மற்றும் செயற்திறன்மிக்க இழப்பீடு என்பன தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகின்றன.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் சர்வதேசத்தின் பங்கேற்புடனான நீதிச்செயன்முறை உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணையனுசரணை வழங்கியது. இருப்பினும் அத்தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஆரம்பத்தில் நேர்மறையானதொரு நகர்வாக நோக்கப்பட்டாலும், அரசியல்மயமாக்கல், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சுதந்திரம், மக்கள் மத்தியிலான நம்பிக்கையீனம் போன்றவற்றால் அக்கட்டமைப்பு நீண்டகாலமாக பின்னடைவை சந்தித்திருந்தது.
தற்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கண்காணித்துவரும் நிலையில், முன்னெப்போதையும் விட இப்போது அவ்வலுவலகம் தனது சுயாதீனத்துவத்தை உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அவ்வலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களை சட்ட ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்துவோருடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதுடன் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும்.
நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும்.
இம்மனிதப்புதைகுழி அகழ்வு வெறுமனே தடயவியல் நடவடிக்கையாக மாத்திரம் அமையக்கூடாது. மாறாக இது வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணல், குற்றவாளிகளைத் தண்டித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரியவாறான நிவாரணங்களை வழங்கல் என்பன தொடர்பில் உரிய சர்வதேச சட்டக்கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றியிருக்கிறது என்பதற்கான முன்னுதாரணமாக இவ்விடயம் அமையவேண்டும்.
மேலும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிபுணத்துவம் என்பன உள்வாங்கப்படவேண்டும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும். அடையாளம் காணப்படும் மனித எச்சங்கள் உள்ளிட்ட சான்றாதாரங்கள் உரியமுறையில் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.
இரசித்த.... புகைப்படங்கள்.
அதிசயக்குதிரை
மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்
மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்
28 JUL, 2025 | 06:00 PM
கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் தூவல்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கடலில் மூழ்கியதையடுத்து, அந்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது.
இந்நிலையில் கரை ஒதுங்கி தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் திங்கட்கிழமை (28) மன்னார் சௌத்பார், கீரி, தாழ்வுப்பாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி, அவர்களுக்கு குறிப்பிட்ட நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடல் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமானது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்கள பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு மாட்டுப் பாலில் தயாராவதாக கூறப்படும் ஏ2 நெய் கூடுதல் நன்மை தரும் என்பது உண்மையா?
நாட்டு மாட்டுப் பாலில் தயாராவதாக கூறப்படும் ஏ2 நெய் கூடுதல் நன்மை தரும் என்பது உண்மையா?
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது
கட்டுரை தகவல்
தீபக் மண்டல்
பிபிசி செய்தியாளர்
28 ஜூலை 2025, 03:22 GMT
இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது.
வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.
சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன.
இதில், இயற்கையாக கிடைக்கும் A2 பீட்டா-கேசின் புரதம் உள்ளதாகவும், இந்த புரதம் சாதாரண பாலில் காணப்படும் A1 புரதத்தை விட எளிதில் செரிக்கக் கூடியது என்றும், உடலில் உள்ள அழற்சியைக் குறைப்பதாகவும் அந்நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (CLA), மற்றும் A, D, E, K வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ2 நெய் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், தோல் நிறத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இது இதய நோய்களுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. இந்த நெய்யை உட்கொள்வது காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்றும் பால் நிறுவனங்கள் கூறுகின்றன.
பால் பொருள் நிறுவனங்கள் இதை ஒரு புதிய சூப்பர்ஃபுட் ஆக விற்பனை செய்கின்றன.
ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரில் பால்பொருட்களை விற்பனை செய்வது சரியா?
பட மூலாதாரம், FOOD SAFETY AND STANDARDS
படக்குறிப்பு, ஏ1, ஏ2 பால் பொருட்கள் குறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளியிட்ட சுற்றறிக்கை
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) இத்தகைய ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் பால், நெய், வெண்ணெய் விற்பதை தடை செய்திருந்தது. ஏ2 என்ற பெயரில் நெய் விற்பது தவறான தகவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியது.
கடந்த ஆண்டு, ஏ1 அல்லது A2 என்ற பெயரிடலுடன் பால் அல்லது பால் பொருட்களை விற்பது தவறான தகவலை அளிப்பது மட்டுமல்லாமல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தையும், அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிகளையும் மீறுவதாக உள்ளது என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் உள்ள தயாரிப்புகளை 6 மாதங்களுக்குள் நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவிட்டது.
ஆனால், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு வாரத்துக்குள் தனது அறிவுறுத்தலை திரும்பப் பெற்றது.
ஏ1 மற்றும் ஏ2 என பெயரிடப்பட்ட பால் பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மை தருகிறதா என்பதுதான் கேள்வி.
ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட உடலுக்கு அதிக பயனளிக்குமா மற்றும் இதற்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளனவா?
ஏ1 மற்றும் ஏ2 பால் அல்லது நெய் என்றால் என்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக இந்த வேறுபாடு பசுவின் இனத்தை சார்ந்து இருக்கிறது.
பாலில் காணப்படும் புரதங்களில் பீட்டா-கேசின் ஒரு முக்கியமான புரதம் என தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
பசுவின் பாலில் உள்ள மொத்த புரதத்தில் 95% கேசின் மற்றும் வேய் (whey) புரதங்களால் ஆனது. பீட்டா-கேசின் அமினோ அமிலங்களின் சமநிலையை கொண்டுள்ளது.
இரண்டு வகையான பீட்டா-கேசின்கள் உள்ளன. ஐரோப்பிய இன பசுக்களின் பாலில் அதிகம் காணப்படும் ஏ1 பீட்டா-கேசின் மற்றும் இந்திய உள்நாட்டு பசுக்களின் பாலில் இயற்கையாக காணப்படும் ஏ2 பீட்டா கேசின்.
ஏ1 மற்றும் ஏ2 பீட்டா-கேசின் புரதங்கள் அமினோ அமில அளவில் வேறுபடுகின்றன. இது புரதத்தின் செரிமான செயல்முறையை பாதிக்கிறது.
சில ஆய்வுகள் ஏ2 பால் செரிக்க எளிதாக இருக்கலாம் மற்றும் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றன, ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை. போதுமான ஆய்வுகள் இல்லாததால், இது கூடுதல் நன்மைகளை தருகிறது என்று நிரூபிக்கப்படவில்லை.
ஏ2 நெய் குறித்து பால் பொருள் நிபுணர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஏ2 நெய் தொடர்பாக கூறப்படுபவை பற்றி நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்
ஏ2 நெய் உண்மையில் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்குமா அல்லது இதுகுறித்து மிகைப்படுத்தப்பட்ட கூறப்படுகிறதா என்பதை அறிய பிபிசி இந்தி, சில பால் பொருள் நிபுணர்களிடம் கேட்டது.
எங்கள் கேள்விக்கு பதிலளித்த அமுலின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தற்போது இந்திய பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவருமான ஆர்.எஸ். சோதி, "இந்த விளம்பரத்தை அதிலும் குறிப்பாக ஆன்லைன் சந்தையில் பார்த்து வருகிறேன். அங்கு பிரபலமான கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சிறந்த நெய்யை ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்கின்றன.
அதே நேரத்தில், அதே நெய்யை ஏ2 என்று பெயரிட்டு கிலோ இரண்டு முதல் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். இது வெவ்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. சிலர் இதை பிலோனா நெய் என்றும், சிலர் உள்நாட்டு பசு இனங்களின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான நெய் என்றும் விற்கின்றனர்," என்று தெரிவித்தார்.
"ஏ1 மற்றும் ஏ2 என்பது ஒரு கொழுப்பு அமில சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகை புரதம் என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். இப்போது எது சிறந்தது என்று விவாதம் நடந்து வருகிறது, ஆனால் எது சிறந்தது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
இது விவாதத்திற்கு உரிய விஷயமே இல்லை. ஆனால் ஏ2 சிறந்தது என்று கூறப்படுகிறது, இது தவறு. இவை இரண்டு வகையான பீட்டா-கேசின் புரதங்கள், இந்த புரத சங்கிலியின் 67-வது அமினோ அமிலத்தின் மாற்றத்தால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
ஏ2 நெய்யின் ஊட்டச்சத்து பலன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் உள்ளன என்று ஆர்.எஸ். சோதி கூறுகிறார்.
"நெய்யில் 99.5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. வேறு சிலவும் உள்ளன. எனவே எனது நெய்யில் ஏ2 புரதம் உள்ளது, இது உடலுக்கு மிகவும் பயனளிக்கும் என்று எப்படி கூற முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
அவரது கருத்துப்படி, இது மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. இது சந்தைப்படுத்தல் மூலம் மக்களை ஏமாற்றுவதாகும்.
ஆனால், A2 நெய் விற்கும் பல பிராண்டுகள் வந்து போய்விட்டன என்றும், அவை சந்தையில் நிலைத்திருப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில், இந்த நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு அதிகம் செலவு செய்கின்றன, பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை சந்தையில் இருந்து வெளியேறுகின்றன.
சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்
ஏ2 நெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலன் தரக்கூடியது என சொல்லப்படுவது குறித்து சுகாதார வல்லுநர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் இணை அறிவியல் நிறுவனத்தில் மூத்த உணவியல் நிபுணரான மருத்துவர் விபூதி ரஸ்தோகி, "ஏ2 நெய் என்ற பெயரில் விற்கப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்கும் என்று கூறப்படுவது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படும் வரை, இந்த நெய் சிறந்தது என்று எப்படி கூற முடியும்?" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
"இரண்டாவது, இந்த வகையான நெய் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்கப்படவில்லை என நீங்கள் கூறினால், ஏ2 புரதம் பாலிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்கிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்வரை அது ஒரு விற்பனை தந்திரம் என்றே அழைக்கப்படும் என்பதுதான் உண்மை. ஏ2 புரதம் சிறந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை."
நெய் புரதத்திற்காக உண்ணப்படுவதில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ரஸ்தோகி. ஆனால் ஏ2 நெய் புரதத்தின் பெயரால் விற்பனை செய்யப்படுகிறது. நெய்யில் பெயரளவுக்கே புரதம் இருக்கிறது.
ஆயுர்வேதத்தின் படி ஏ2 கூடுதல் நலன்ளுடையது என்று நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் ஏ2 நெய் என சொல்லப்படுவதை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம் எந்த கூற்றையும் முன்வைக்கவில்லை என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
செம்மணிப் புதைகுழிகள் தந்துள்ள அரியவாய்ப்பை எமது தலைவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - ஐங்கரநேசன்
செம்மணிப் புதைகுழிகள் தந்துள்ள அரியவாய்ப்பை எமது தலைவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - ஐங்கரநேசன்
எலும்புக்கூடுகள் கழுத்தை இறுக்கப்போகின்றதென அஞ்சும் பேரினவாதம் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - ஐங்கரநேசன்
28 JUL, 2025 | 05:40 PM
வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுஎனதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்
கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஆற்றியஉரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும்தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது.
மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என்று பெருமை பொங்கப் பாடியவர்கள் தமிழர்கள். சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திங்கு வாழ்வதுந்தன் பெருமையம்மா என்று சகோதரத்துவம் பாடியவர்கள் தமிழர்கள். இலங்கை என்பது எம் தாய்த்திருநாடு என்று இறுமாந்து பாடியவர்கள் தமிழர்கள்.
ஆனால் தமிழர்கள் தங்களை இலங்கையர்கள் என்று எவ்வளவுதான் உரத்துச் சொன்னாலும் இல்லை நீ தமிழன் என்றே பேரினவாதம் சொன்னது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே காலத்துக்குக் காலம் தமிழர்களுக்கெதிரான கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன.
முள்ளிவாய்க்கால் வரை இதுவே நீண்டது. இப்போது ஆடிக்கலவர நாளில் சகோதர தினத்தை முன்னெடுத்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் விரைவில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆனால் இந்தத் தினங்களைக் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது
நினைவேந்தல்கள் வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. வரலாறு ஒருவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றதோ அங்கிருந்துதான் அவர் தனது அடுத்த பயணத்தைத் தொடரமுடியும். நதிகளைப் போன்றே வரலாறும் பின்னோக்கிப் பாய்வதில்லை. இதுவே வரலாற்றின் நியதி. வரலாறு தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து நிறுத்தியது. ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இடத்தில் இருந்துதான் அஞ்சலோட்டம் போன்று அடுத்த போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் முன்னெடுத்திருக்கவேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரழிவு சர்வதேச நாடுகளை எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான சாத்தியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் அதைச் செய்யத் தவறிய எமது தலைவர்கள் மாறாக இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பிணை எடுத்துக்கொடுத்தார்கள்.
வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. போரின் சாட்சிகளாக இன அழிப்பின் சாட்சிகளாக எம்முன்னால் பலர் இன்றும் உள்ளார்கள். இவர்களால் உயிர்ப்பயம் காரணமாக உண்மைகளை அதிகம் வெளிப்படுத்த முடியாது.
உயிருள்ள சாட்சியங்களைவிட வலுவான சாட்சியங்களாக இன்று எம்முன்னே செம்மணி மனிதப் புதைகுழிகளும் அவற்றில் இருந்து வெளிப்படும் எமது உறவுகளின் எலும்புக்கூடுகளும் உள்ளன. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செம்மணிப் புதைகுழிகள் தந்துள்ள அரியவாய்ப்பை எமது தலைவர்கள் சரியாகப் பயன்படுத்தி நீதிக்கான விடுதலைக்கான எமது பயணத்தை வேகமாகத் தொடர முன்வரவேண்டும் .