Aggregator
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிரிக்கவும் சிந்திக்கவும் .
கொஞ்சம் ரசிக்க
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சிரிக்க மட்டும் வாங்க
சிரிக்கலாம் வாங்க
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
களைத்த மனசு களிப்புற ......!
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!
குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!

குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் இன்று 22ஆம் திகதி காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்!
பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்!
பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்!
பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மீதும், மருத்துவமனை பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனைக்குள் வந்த நபர் ஒருவர், மேற்படி இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்ப்பதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அம்புலன்ஸ் சாரதி, வழிகாட்ட மறுத்துள்ளார். இதையடுத்தே, அம்புலன்ஸ் சாரதியை அந்த நபர் தாக்கியுள்ளார்.
விடயத்தை அறிந்து அவரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் சென்ற போது, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பருத்தித்துறைப் பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி சந்தேகநபர் கத்தியொன்றை உடமையில் மறைத்து எடுத்து வந்தமை தெரியவந்துள்ளது. இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் இளைஞர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர் வந்திருக்கலாம்எனவும் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
தற்போது மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் நபர்களால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றனமையும் குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதி, பொலிஸார் மீது தாக்குதல்!
"கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு!
"கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு!

"கார்த்திகை மலரே" இசைப்பாடல் வெளியீடு!
நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள 'கார்த்திகை வாசம்' மலர்க் கண்காட்சியில் நேற்றய தினம் 'கார்த்திகை மலரே!' என்ற இசைப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இசைப்பாடலை வெளியீடு செய்ய சிரேஷ்ட இசையமைப்பாளர் க.சத்தியன் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய "கார்த்திகை மலரே! மலர்வாயா? எங்கள் காத்திருப்பை நீ அறிவாயா?, கல்லறை சேர்ந்த ஈகியர்கள் கண்ட கனவினைக் கண்ணில் தருவாயா?" என்று தொடங்கும் பாடலை ஈழத்தின் பாடகி ஜெயபாரதி பாடியுள்ளார். பூவன் மதீசன் இசையில் உருவான இப்பாடலின் ஒலிப்பதிவை மதி மனு மேற்கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தயாரிப்பான கார்த்திகை மலரே! என்ற இசைப்பாடலை இசை பாட பாடல் வரிகளில் எவ்வித எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல் எவரும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
24 Nov, 2025 | 02:53 AM
![]()
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு
அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது
இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.
விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




























விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு | Virakesari.lk
யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு
24 Nov, 2025 | 03:40 AM
![]()
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார்.

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஞாயிற்றுக்கிழமை (23) கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை (23) குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார்.

குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார்.
பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார்.
பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார்.
இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு | Virakesari.lk