1 month 2 weeks ago
Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 03:41 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச இணையவழி மோசடி கும்பலின் வலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தபால் திணைக்களத்தை சேர்த்தவர்களை போன்று நடித்து பொதி ஒன்றுக்கு இணையம் வழியாக பணத்தை செலுத்துமாறு கோரி நீதிபதியின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி சுமார் 400,000 ரூபாவை மோசடி செய்துள்ளனர். அதாவது, இந்த இணையவழி மோசடி கும்பல் தபால் திணைக்களத்திற்கு ஒரு பொதி வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள சிறிய கட்டணத்தை (பொதுவாக ரூ. 100 க்கும் குறைவானது) செலுத்துமாறு இணைய கட்டண இணைப்பு ஒன்றின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதனை நம்பி மக்கள் தங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டதும், மோசடி கும்பல் கணக்கிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, திருடப்பட்ட பணத்தை வெளிநாட்டு நாணயமாக மாற்றுகின்றனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஒருவர் மருதானை தபால் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்களின் அடையாளம் தெரியவில்லை எனவும் விழிப்புடன் இருக்குமாறும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவின் துணை பணிப்பாளர், இந்த மோசடி வேகமாக விரிவடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க டொலர்கள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், சுவிஸ் பிராங்குகள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகள் போன்ற அதிக மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களில் இழப்புகள் ஏற்பட்டதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. மோசடி கும்பல் உத்தியோகபூர்வ தபால் திணைக்களத்தின் பக்கத்தைப் போன்ற போலி வலைத்தளங்களையும் உருவாக்கி, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஓடிபி (OTP) குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றத் தடுப்பு பிரிவு ஆகிய அனைத்திற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் அல்லது டெபிட் வங்கி அட்டை மூலம் எந்தவொரு ஒன்லைன் கொடுப்பனவுகளையும் தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தபால் சேவைகளுடன் இணைக்கப்பட்டதாகக் கூறி இதுபோன்ற எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். இந்த மோசடி ஒரு தனி நபரால் நடத்தப்படுகிறதா அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குழுவால் நடத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகளால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை என மீண்டும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231291
1 month 2 weeks ago
இந்த மச்சை தானத்திலும், உடல் உறுப்பு தானத்திலும் எம்மவர்கள் அக்கறையாக ஈடு பட வேண்டும் என, சில ஆண்டுகள் முன்னர் ஒரு யாழ் கள உறவின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பின் காலத்தில் எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதி முறைகள் இருக்கலாம். அமெரிக்காவில், மச்சை தானத்திற்காக பதிவு செய்ய 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 45 வயதிற்கு மேற்பட்டோரும் பதிவு செய்யலாம், ஆனால் பரிசோதனைக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். வயது ஒரு காரணமாக இருப்பதற்குக் காரணம், வயது அதிகரிக்கும் போது தானம் செய்பவரின் மச்சைக் கலங்கள் பெறுபவரின் உடலினுள் பெருக்கமடைவது குறைவாக இருக்கும் என்பதே.
1 month 2 weeks ago
தென் ஆபிரிக்காவிடம் சொந்த மண்ணில் பரிதவிக்கிறது இந்தியா Published By: Vishnu 24 Nov, 2025 | 06:56 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவினால் முதலாவது டெஸ்ட் போட்டியில் துவம்சம் செய்யப்பட்ட இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பரிதாப நிலையில் இருக்கிறது. கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய போட்டியில் மேலும் இரண்டு நாட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களையும் வைத்துக்கொண்டு 314 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. குவாஹாட்டி பரஸ்பரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இப் போட்டியில் மார்க்கோ ஜென்சன் சகலதுறைகளிலும் பிரகாசித்து தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 489 ஓட்டங்களைக் குவித்தது. தென் ஆபிரிக்க அணியில் ஒருவரைத் தவிர ஏனைய 10 வீரர்களும் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் இந்திய வம்சாவழியான சேனுரன் முத்துசாமி 109 ஓட்டங்களையும் 9ஆம் இலக்க வீரர் மார்க்கோ ஜென்சென் 93 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 115 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 201 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மார்ககோ ஜென்சன் 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19.5 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 489 (செனுரன் முத்துசாமி 109, மார்க்கோ ஜென்சன் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 93, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 49, கய்ல் வெரின் 45, டெம்பா பவுமா 41, ஏய்டன் மார்க்ராம் 38, ரெயால் ரிக்ல்டன் 35, குல்தீப் 115 - 4 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 75 - 2 விக்., ரவிந்த்ர ஜடேஜா 94 - 2 விக்., மொஹம்மத் சிராஜ் 106 - 2 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 201 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 58, வொஷிங்டன் சுந்தர் 48, கே. எல். ராகுல் 22, மார்க்கோ ஜென்சன் 48 - 6 விக், சைமன் ஹாமர் 64 - 3 விக்.) தென் ஆபிரிக்கா 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்: 26 - 0 https://www.virakesari.lk/article/231327
1 month 2 weeks ago
அநுரவுக்கு அலகு குத்தி நீங்கள் தூக்கிய காவடியை இறக்கி வைப்பதா அல்லது புத்தர் சிலை விவகாரம் ஆரம்பித்த பின்னர் வந்து கருத்துச் சொன்ன ஏனையோரைக் காட்டி அனுர அரசுக்கு முரட்டு முட்டுக் கொடுப்பதா என்ற தெரிவுகளில் இரண்டாவதைத் தேர்ந்திருக்கிறீர்கள்😂! நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, முள்ளிவாய்க்காலுக்குக் காரணமான மகிந்தவை பதவியில் அமர்த்த உதவிய புலிகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன😎? இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைப் பத்தியாக மாற்ற நிலாந்தன் எந்த ஹோட்டலில் றூம் போட்டு யோசிக்கிறார் என்று அறிய வேண்டும்! அநுர பதவியில் இருப்பதால் , எந்த தமிழ் கட்சியாக இருந்தாலும் அனுரவோடு தான் பேச வேண்டும். இதை விட்டு விட்டு "நாம் 14 மாதங்கள் முன்பு ஆதரித்த சஜித் பதவிக்கு வரும் வரை பேச்சு வார்த்தையில் இறங்கோம்!" என்று நிற்க தமிழர்கள் என்ன நிலமும், இராணுவமும் வைத்துக் கொண்டு காலங் கடத்தும் வகையில் வசதியாக இருக்கிறார்களா என்ன?
1 month 2 weeks ago
பங்களாதேஷை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ஆசிய கிண்ண உதயத் தாரகைகள் சம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் சூடியது Published By: Vishnu 24 Nov, 2025 | 06:09 PM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகைள் (Rising Stars) இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை சுப்பர் ஓவரில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் பங்களாதேஷ் 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றது. சுப்பர் ஓவரில் 2 விக்கெட்களையும் போட்டியின்போது 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அஹமத் தானியல் ஆட்டநாயகனானார். பதிலளித்து பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. இந்தியா ஏ அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாத் மசூத் 38 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 25 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 26 ஓட்டங்களையும் ரக்கிபுல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அராபத் மின்ஹாஸ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹமத் தானியல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231321