Aggregator
தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு
தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு
செவ்வாய், 27 ஜனவரி 2026 09:10 AM

தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.!
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.!
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.!
Vhg ஜனவரி 26, 2026
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழாவானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (25.01.2026) ஆம் திகதி திகதி நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம் ( ஜெயம்) பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான சந்திரமோகன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த ஆவணம் கையொப்பமிடத் தயாராக உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு
27 Jan, 2026 | 12:47 PM
![]()
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் பல இடங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் இந்த மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன.
நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்ரோல் விலை மாற்றம் ஆகியவையே தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் ஈரானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல பகுதிகளில் இணைய சேவையையும் துண்டித்துள்ளது.
இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இதுவரை 6,126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனம் செலுத்தி வருகின்றன.
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி!
27 Jan, 2026 | 02:49 PM
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் இந்திய குடியரசு தினம்!
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு - இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு
27 January 2026

காசாவில், 843 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், 251 பணயக் கைதிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இறுதியாக, இஸ்ரேலிய இராணுவ வீரர் ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், காசாவில் இருந்த 251 பணயக் கைதிகளும், உயிருடனும் உடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச அமைதிகாக்கும் படை காசாவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ட்ரம்பின் சர்வதேச அமைதி திட்டத்தின் மேற்பார்வையில் காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று (26) யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார்.
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கட்டிய இந்தக் கோட்டை, பின்னர் டச்சு மற்றும் பிரித்தானியர் காலனிய ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. பல போர்களும், நீண்டகால அலட்சியமும் காரணமாக கோட்டை பெருமளவில் சேதமடைந்துள்ளது.
கோட்டையின் உள்ளே அமைந்துள்ள Our Lady of Miracles (அற்புத மாதா) ஆலயம் காலப்போக்கில் ஏற்பட்ட சேதத்திலிருந்து இதுவரை சரியான முறையில் புதுப்பிக்கப்படவில்லை. ஆலயத்தின் சிதிலமடைந்த பகுதிகள் இன்றும் தெளிவாகக் காணப்படும் நிலையில் உள்ளது.
புத்தசாசன அமைச்சின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை, கோட்டையின் உண்மையான எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முற்றவெளி விளையாட்டு மைதானம், முனீஸ்வரன் ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், உள்ளூராட்சி அல்லது பொதுமக்களுடன் ஆலோசனை செய்யாது எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
கோட்டையை வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க அரசு, முன்னாள் காலனிய நாடுகள், யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோட்டை வடக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட வேண்டும் சுமந்திரன் அவர்களிடம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செலஸ்டின் அவர்கள் வலியுறுத்தினார். கடந்த சில வாரங்களில் கோட்டையின் வரலாற்றுச் சுவர்களிலிருந்து தூரமாக அமைக்கப்பட்டிருந்த Concrete தூண்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல மத மற்றும் பல பண்பாட்டு மரபுகள் இணைந்துள்ள வரலாற்றுத் தளங்களை புத்தசாசன அமைச்சின் கீழ் உள்ள தொல்லியல் துறை நிர்வகிக்கக் கூடாது; சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இக்கருத்துகளை சுமந்திரன் அவர்கள் பொறுமையாகக் கேட்டு, கோட்டையின் பராமரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தால் பதற்றம்
தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்ததுடன், அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர்.
அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.
7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.
எவ்வாறாயினும், அதற்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால் போராட்டக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன.
அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்றும், கிராமப்புற வறுமையை ஒழிக்கவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசாங்கம் தற்போது அதிக பணிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவை அனைத்திற்கும் மத்தியில் சிறந்த மனித உறவுகளைக் கொண்ட ஒரு சமூகம் தேவை என்றும், அரச அதிகாரிக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகின்ற மக்களுக்கும் இடையிலான உறவு, மகா சங்கத்தினருக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உட்பட இந்த அனைத்து உறவுகளும் இன்று வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டன என்றும், நாட்டை சமூக ரீதியாகக் கட்டியெழுப்ப, இந்த உறவுகள் அனைத்தும் மீண்டும் சிறந்த முறையில் பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியதுடன், மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்களுக்கு இந்த விடயத்தில் பெரும் பங்கு உண்டு என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.