Aggregator
கோணேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் - சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை
கோணேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் - சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை
கோனேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் - சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை
26 Jan, 2026 | 03:59 PM
![]()
கோனேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் இந்த காண்டாமணி விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டால் நிச்சயமாக ஜனாதிபதிக்கு பக்கபலமாக இந்து மக்கள் இருப்பார்கள்.
இந்து மக்களால் இலங்கை சிவ பூமி என்று போற்றப்படுகின்றது. அதை வேளை பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட பெருமைமிக்க புண்ணியமான சிவபூமி இலங்கை நாடாகும்.
கிழக்கு மாகாணத்தின் திருகோண மலையில் பஞ்ச ஈஸ்வர தலங்களில் ஒன்றான திரு கோனேஸ்வர ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. தேவார பதிகம் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளின் பண உதவி மூலம் 1000 கிலோ கிராம் நிறையுடைய காண்டாமணி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஆலயத்தில் அமைப்பதற்கான தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கேட்கப்பட்டபோது அவர்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனை ஆலய நிர்வாகத்தினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்க அவர்களுக்கும் இது பற்றி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எந்தவிதமான தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து மதங்களும் சமமாக பேணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்த வகையில் தொல்லியல் திணைக்களத்துக்கு இது பற்றி அறிவுறுத்தல் கொடுத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் அந்தக் கோனேஸ்வர மலையில் அமைந்திருக்கும் அந்த கோணேஸ்வர ஆலயத்தின் காண்டாமணி அமைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நல்ல நடவடிக்கையை எடுத்து இந்து மக்களுக்கு கௌரவம் அளிப்பதாக இச்செயற்பாடு அமையும் என்றார்.
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
26 Jan, 2026 | 03:31 PM
![]()
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் , அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை
'டித்வா' புயல் அனர்த்தம்: 173 பேர் மாயம்; 649 பேர் பலி!
'டித்வா' புயல் அனர்த்தம்: 173 பேர் மாயம்; 649 பேர் பலி!
'டித்வா' புயல் அனர்த்தம்: 173 பேர் மாயம்; 649 பேர் பலி!
Jan 26, 2026 - 06:01 PM
'டித்வா' (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 69 பேரும், கேகாலை மாவட்டத்தில் 38 பேரும் காணாமல் போயுள்ளனர்.
ஜனவரி 25 ஆம் திகதிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ள அந்த நிலையம், நுவரெலியா மாவட்டத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அனர்த்த நிலைமை காரணமாக 649 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 243 எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தில் 89 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தொடர்ந்தும் 85 பாதுகாப்பு நிலையங்களில் 6,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
Jan 26, 2026 - 03:32 PM
இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார்.
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற 'மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கமைய முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ் மேலும் தெரிவித்தார்.
சில வேளைகளில் வயது முதிர்வின் போது ஏற்படும் சில மனநோய் அறிகுறிகள் குறித்து மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க சமூகம் தூண்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு சாதாரண நிலைமையாகக் காண்பித்து வருவதாகவும் குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ், மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற நோய் அறிகுறிகளைப் புறக்கணிக்க முதியவர்கள் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறாக முதியோர் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக உடல் ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய மனநல காப்பகத்தில் 1999 ஆம் ஆண்டு முதியவர்களுக்கென விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளதாகவும், அண்மையில் 'தீகாயு' எனும் பெயரில் பகல்நேர சிகிச்சை நிலையம் ஒன்று உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை!
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம்
நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம்
26 Jan, 2026 | 06:11 PM
![]()
நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகர சபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
“Pick Me” நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.
நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சுற்றுலாப்பயணிகளும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம்.
மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர்.
அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.








நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk