Aggregator
உணவு செய்முறையை ரசிப்போம் !
அதிசயக்குதிரை
லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
கொஞ்சம் ரசிக்க
சிரிக்கவும் சிந்திக்கவும் .
குட்டிக் கதைகள்.
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
“வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.
மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், தளபாடங்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார்.
https://oruvan.com/100-percent-tax-on-medicines-opposition-to-trumps-order/
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்
September 26, 2025
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் .
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் நேற்றைய தினம் முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.
இந் நியமனத்தினால் குறைந்த வயதில் அரசாங்க அதிபரானவர் என்ற பெருமையை ஜே.எஸ் அருள்ராஜ் பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கிண்ணியா, சேருவில பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இருந்ததுடன், வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு விசேட சேவையை ஆற்றியிருந்தார்.
நேற்று (25) வரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரும் பணியாற்றவுள்ளார்.
பொலிஸுக்குள் நுழைந்த திருடர்கள்; கொழும்பில் சம்பவம்!
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
26 Sep, 2025 | 11:02 AM
![]()
ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.
உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் ஏற்பட்டுள்ள அசுரத்தனமான புதுமைகளை விவரித்த ஜெலென்ஸ்கி, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) வருகையால் மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி மிகவும் அழிவுகரமானது" என்று கூறினார்.
ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின், போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட, ரஷ்யாவை இப்போதே போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்றும் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்தே ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
செவ்வாயன்று டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில் உக்ரைன் இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் வெற்றிபெறும் என்றும், "நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்" என்றும் தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும், ஒரு உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கருத்துத் தெரிவித்தார்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.
நேட்டோ வான்வெளியை மீறும் ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் பேரில் ஈடுபட்டுள்ளது.
