அவை எல்லாவற்றையும் விட மோசமான மீன்பிடி இந்திய இழுவை படகுகளின் ரோலிங் உலகெங்கும் தடை அவர்களுக்கு எதிராக மூச்சு காட்ட மாட்டார் உள்ளுரில் சண்டித்தனம் காட்டுகிறார் .
இன்னும் சில வருடங்களில் வங்குரோத்து தவிர்க்க முடியாது அதை சாதாரண சிங்கள சனத்துக்கு சொல்லி விளக்க எந்த சிங்கள கட்சியும் தயார் இல்லை அனுர உட்பட .சிங்கள சனத்தை பப்பாவில் ஏற்ற இருக்கவே இருக்கு புத்தர் சிலை தமிழர் பகுதியெங்கும் புத்தர் சிலையை எந்த சிங்கள கட்சி வைக்குதோ அந்த கட்சிதானே அடுத்தமுறை ஆட்சி இது இலங்கையின் சாபகேடு .
இவரின் சொத்து மதிப்பை 2௦௦9 முன் பின் பார்க்கணும் எந்த ஒரு அரசியலும் தமிழ் மக்களுக்கு செய்யாமல் தனது குடும்பம் மட்டுமே வாழனும் எனும் ஈன பிறவி பார் ஸ்ரீதரன் சுமத்திரனுக்கு ஒன்றும் சளைத்தவர் இல்லை .
ரகுமான் ஒரு இசை வியாபாரி.வியாபாரிகள் விருதுகளை வாங்குவது பெரிய விடயமல்ல. கிட்டத்தட்ட டாக்டர் பட்டம் வாங்குவது போல்.... இது மேலைத்தேய நாடுகளில் சர்வ சாதாரணம். ரகுமான் எனும் இசை வியாபாரி கிந்தி தெரியாது போடா என்றால் எந்த கிந்திக்காரன் இவர் இசையை வாங்க வருவான்? தமிழ் இசை,சினிமா உலகத்தை விட கிந்திவாலாக்களின் சினி உலகம் மிக மிக பெரியது. கொடிகட்டி பறந்த காலத்தில் தமிழுக்கு நேரமில்லாதவரின் இன்றைய அலறல் எதிர்பார்த்த ஒன்றுதான்.
இரா சம்பந்தன் கூட்டிக்கொண்டு வந்த ஆளிட்ட கனக்க/நல்லதை எதிர்பார்க்கப்படாது கண்டியளோ.😀 அமிர்தலிங்கம்,சம்பந்தன் வரிசையில் வந்த இன்னொருவர்தான் இந்த சுமந்திரனார்.வழமை போல் பதவியை மோகத்தை தவிர வேறேதும் இல்லை.🤣 இவர்கள் எல்லாம் பொன்னம்பல இராமநாதன் காலத்து மூளைசாலிகள்.😂
நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என..... ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜
எதையும் வெளிப்படையாக தெரிவித்தால் பலருக்கு பல சந்தேகங்கள் வராது என நான் நினைக்கின்றேன். மொட்டையாக எழுதி விட்டு கடந்து செல்வதால் பின்னடைவுகள் தான் ஏற்படும் என நான் நினைக்கின்றேன்.
அமெரிக்கர்களின் சீட்டாட்டம் மிக நுட்பமானது.ஐரோப்பிய ஒன்றியத்தின் பலிக்கடா உக்ரேன் என்பது போகப்போக தெரிய வரும். உக்ரேனில் ரஷ்யா கையகப்படுத்திய பகுதி ரஷ்யாவுக்கே சொந்தமாகும். உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய கனவு ஊட்டியவர்களுக்கு கிரீன்லாந்து நல்லதொரு சமர்ப்பணம்.
அது என்ன இன்னொன்று என அறிய ஆவல்! தனது எதிர்காலம் சிறை அல்லது மறைவாகவே இருந்தாகணும் என்று கணித்தே வைத்துள்ளார் மஹிந்தா. இரண்டாம் துட்ட கைமுனுவுக்கு ஏன் இப்படியொரு விபரீத எண்ணம் வந்தது? சிங்களவருக்கு பயந்தே அவர் விகாரையில் இப்படி ஒரு சொகுசு வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
இன்றைய காலத்தில் சீனா எதற்கும் வன்முறையை கையில் எடுப்பதில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அந்தந்த நாட்டு திண்ணையில் உட்காந்து விடுகின்றார்கள்.சிறிது காலம் செல்லச்செல்ல எமது சேவை உங்களுக்கு தேவை என்பது போல் தமது இருப்பை நியாயம் கற்பித்து விடுகின்றார்கள்.இதை இன்றைய காலங்களில் எல்லா நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களை கண்கூட பார்க்கின்றோம். நேட்டோ ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் செய்த நற்செயல்கள் எவை? சம்பந்தமில்லாத ஏனைய நாடுகள் மீது வான்வெளி தாக்குதல்களை செய்து மக்களையும் நாட்டையும் அழித்ததை தவிர.....? நேட்டோவை கலைப்பது போல் ஐநா போன்ற உலகை பேயனாக்கும் அமைப்புகளையும் கலைக்க வேண்டும். எல்லாம் சூரிய அஸ்த்தமனம் இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்ய வம்சாவளிகள். உன் மடியில் நான் படுக்க....என் மடியில் நீ படுக்க எனும் பீலிங் வருவதை யாராலும் தடுக்க முடியாது.🤣 ஒரு காலத்தில் தாம் தம் இனம் என வாழ்ந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளை வியாபார ரீதியாக ஆக்கிரமித்து ,தம் ஆட்சி நலனுக்காக சிற்றரசுகளை அழித்து கூட்டாட்சியை உருவாக்கி...... இன்று நடுத்தெருவில் நிற்கும் தனி இனங்களின் சாபம் சும்மா விடாது. இவர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு சாகும் தூரம் அதிகமில்லை.
உறவுகளே வணக்கம், கல்லுண்டாய்வெளி மற்றும் தொண்டைமானாற்றில் பறந்த புலிகளின் வானூர்தி பற்றி நேரில் கண்டிருந்தாலோ அல்லது கேள்வியுற்றிருந்தாலோ அது தொடர்பில் தெரிந்த தகவல்களை பதிவிட்டு (அறிந்தவர்களிடம் கேட்டாவது) வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இராவணனின் புட்பக விமானம் போல வான்புலிகளின் வானூர்திக் கதைகள் இருக்கப்படாது. புலிகளைப் போன்றே அவர்தம் வரலாறுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.