1 month 3 weeks ago
எந்தக் கொரியா ? இரண்டும் குடியரசுதான். படத்தில் உள்ள கொடிக்குச் சொந்தக்கார கொரியா பரவாயில்லை. மற்றக் கொரியாவை நம்பினால் ரஸ்யாவில் 'வேலை' செய்ய வேண்டி வரலாம் 😀.
1 month 3 weeks ago
வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது! வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார். நேற்றைய தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வேல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440191
1 month 3 weeks ago
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 8 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் நேற்யை தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் 8 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 80 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440171
1 month 3 weeks ago
யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·
1 month 3 weeks ago
இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு! கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் கடந்த 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440153
1 month 3 weeks ago

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு!
கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் கடந்த 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் பிராந்தியத்தில் விவசாயக் கிராமங்களில் பணியாற்றி வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும், எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1440153
1 month 3 weeks ago
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல் Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM தென்காசாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலா நகரத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இந்த நகரத்திலேயே உள்ளனர் என ஊகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கடும் ஆட்டிலறி மற்றும் வான்தாக்குதலின் மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் இந்த நகரத்தை நோக்கி செல்வதாக உள்ளுர் ஊடகவியலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். டெய்ர் அல் பலா நகரின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள முதலாவது தரை நடவடிக்கை இது. கடந்த 21 மாதங்களாக இந்த நகரத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தரைநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதமை குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். மேலும் காசாவின் ஏனைய பகுதிகளை விட இந்த நகரத்தில் கட்டிடங்களிற்கு குறைவான சேதங்களே ஏற்பட்டுள்ளன.. இந்த நகரில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஒருவருடத்திற்கு முன்னர் காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னர் ஐநாவினது அலுவலங்களும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் அலுவலகங்களும் டெய்ர் அல் பலா நகரத்திலேயே இயங்குகின்றன. https://www.virakesari.lk/article/220550
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு 22 JUL, 2025 | 10:24 AM கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. "2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள்.இதை கோயில் நிர்வாகத்திடம் கேட்டப்போது, என்னை மிரட்டி, அடித்தனர். அதனால், நான் கோமாவிற்கு சென்றேன்.இந்தப் பயத்தில் தான், இவ்வளவு காலம் இது குறித்து வெளியே சொல்லவில்லை'. இப்படி கடந்த 15-ம் தேதி, தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். என்ன நடந்தது? கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் வந்து செல்லும் கோயில் இது. கடந்த ஜூலை 11-ம் தேதி, இந்தக் கோயிலின் முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள். இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்" என்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவர் ஜூன் மாதமே இது குறித்து புகார் அளித்துள்ளார். கோரிக்கைஅந்த இடத்தை தோண்டி பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். மேலும், இவர் எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் சமர்பித்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் போதும் கூட, சில எலும்புகளை கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர், அந்த உடல்கள் தற்கொலை செய்துகொண்டவர்களுடையது என்று நினைத்துள்ளார். அதன் பின் தான், தர்மஸ்தலாவை சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க கொலை செய்யப்பட்ட உடல்கள் என்று அறிந்திருக்கிறார். இதே நிலை, அவர் சொந்தகாரர்களுக்கே நடந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தப் பணியில் இருந்து நின்றிருக்கிறார். இவர் இந்த வாக்குமூலத்தைக் கொடுக்கவே, மேலே கூறிய பெண்மணி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழு இதனையடுத்து, கர்நாடகா பெண்கள் அமைப்பு, கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சர், 'இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தும்' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தட்சின கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண், "புகார் அளித்த மஞ்சுநாதர் கோயிலின் முன்னாள் ஊழியர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் சொல்லும் இடத்தில் குழி தோண்டி உடல்களை எடுப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு சில சட்ட நடைமுறைகள் தேவை. அதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/220598
1 month 3 weeks ago
22 JUL, 2025 | 12:32 PM கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது. வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது. 1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது. 1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன. காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது. இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும். நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை யோசனை முன்வைக்கிறது. இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை அமையும். https://www.virakesari.lk/article/220610
1 month 3 weeks ago
22 JUL, 2025 | 12:32 PM

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது.
வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.
ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது.
1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது.
1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன.
காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது.
இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும்.
நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை யோசனை முன்வைக்கிறது.
இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை அமையும்.
https://www.virakesari.lk/article/220610
1 month 3 weeks ago
நான்கு இந்திய மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 22 JUL, 2025 | 11:41 AM இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே மீன்பிடிப்படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த படகையும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை இராமேஸ்வரத்தை சேர்ந்த 25 மீன்பிடிப்படகுகளும் 185 மீனவர்களும் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220605
1 month 3 weeks ago
திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியிருந்த பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்பட்டது - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் கீதா பாண்டே, அஷ்ரஃப் படன்னா பிபிசி செய்திகள் திருவனந்தபுரம், கேரளா 21 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது. அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். செவ்வாய்க் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ள அந்த விமானத்திற்கு, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன. "கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர். மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 11:10 AM செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது இலங்கை தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளதாவது. இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் இது குறித்த கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நேற்று பேரணியொன்றை முன்னெடுத்தனர். இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை, அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள். அவுஸ்திரேலியாவிற்கான ஐநா தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமான பேரணி ஐநா அலுவலகங்களை நோக்கியும் பல தூதரங்களை நோக்கியும் சென்றது. ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மகஜர்களை கையளித்தனர். இந்த பேரணியில் இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும். அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்று அவுஸ்திரேலியாவும் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகளை விதிக்கவேண்டும். இனப்படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளிற்கு பாதுகாப்பு மற்றும் புகலிடத்தை வழங்கவேண்டும். இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒடுக்குமுறை சட்டங்களை நீக்குவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும். தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளானார்கள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவேண்டும் போன்ற வேண்டுகோள்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்துள்ளனர். செம்மணி மனித புதைகுழிகள் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் மாத்திரமல்ல உலகிற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள தமிழ ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் ஒவ்வொரு புதைகுழியும் நீங்கள் நீதிக்காக குரல்கொடுப்பீர்களா அல்லது பாராமுகமாகயிருப்பீர்களா என்ற கேள்வி எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220600
1 month 3 weeks ago
துப்பாக்கி, தோட்டாக்கள், போதைப்பொருளுடன் இளைஞன் கைது! 22 JUL, 2025 | 12:45 PM பேலியகொடை பிரதேசத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பேலியகொடை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரான இளைஞனிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 5 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/220608
1 month 3 weeks ago
பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பை குறிவைத்து வருகிறார். 21 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிக்ஸ் நாடுகளின் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்தக் குழு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முயற்சித்ததாகக் குற்றம்சாட்டிய டிரம்ப் கடினமான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் எந்த நாட்டின் பெயரையும் டிரம்ப் குறிப்பிடவில்லை. பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையே முத்தரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில் டிரம்ப்பிடமிருந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. சமீபத்திய பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் மீது வரிகள் அதிகரிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு இந்த மூன்று நாடுகளின் நலன்களை மட்டுமல்ல, இந்தப் பிராந்தியம் மற்றும் உலகத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பராமரிக்க உதவுகிறது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ரஷ்யா மற்றும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாகவும் லின் தெரிவித்துள்ளார். ரஷ்யா-இந்தியா-சீனா (ஆர்ஐசி) அமைப்பை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா உடன் ரஷ்யா பேச்சுவார்த்தையில் உள்ளது என அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரெய் ருடென்கோ முன்னர் தெரிவித்திருந்தார். இதே கருத்து தொடர்பாக தான் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியானும் பேசியிருந்தார். டாலர் மற்றும் பிரிக்ஸ் பற்றி டிரம்ப் என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசியுள்ளார் டிரம்ப் கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் மசோதாவை ஒன்றைப் பற்றி பேசிய டிரம்ப் அதனை புகழ்ந்ததோடு, இந்த மசோதா அமெரிக்கா டாலரை வலுப்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். அப்போது பிரிக்ஸ் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், "பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிற சிறிய குழு ஒன்று உள்ளது, அது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அது அமெரிக்க டாலர், அதன் ஆதிக்கம் மற்றும் தரங்களைக் கைப்பற்ற முயற்சித்தது. பிரிக்ஸ் தற்போதும் இதைத்தான் விரும்புகிறது." என்றார். "பிரிக்ஸ் குழுவில் உள்ள அனைத்து நாடுகள் மீது 10 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக நான் கூறினேன். அதற்கு அடுத்த நாள் அவர்கள் சந்திப்பு நடைபெற இருந்தது, ஆனால் ஒருவருமே வரவில்லை." என டிரம்ப் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். டாலரை வலுப்படுத்துவது பற்றியும் அதனை உலகளாவிய நாணயமாக வைத்திருப்பது பற்றியும் பேசிய டிரம்ப், "நாங்கள் டாலரை வீழ்ச்சியடைய விடமாட்டோம். டாலர் உலகளாவிய நாணயம் என்கிற நிலையை நாம் இழந்தால். அது ஒரு உலகப் போரை இழப்பதற்குச் சமம்" எனக் கூறினார். மேலும் அவர், "நான் இந்த பிரிக்ஸ் நாடுகள் குழுவைப் பற்றி கேள்விப்பட்டபோது அவர்கள் மீது கடினமான நிலைப்பாட்டை எடுத்தேன். இந்த நாடுகள் எப்போதாவது ஒன்றாக வந்தால், இந்தக் குழு முடிந்துவிடும்," எனத் தெரிவித்தார். 'டாலருக்குப் பதிலாக புதிய நாணயம்': பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் டிரம்ப் - இந்தியாவை பாதிக்குமா? '100% வரி விதிப்போம்' - இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - ஏன்? இந்தியா - சீனா உறவை மேம்படுத்தும் மோதியின் எண்ணம் ஈடேறுமா? அமெரிக்கா என்ன செய்கிறது? 17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு டிரம்ப் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். "பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் எந்த நாடுகளின் மீதும் 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும். இந்த கொள்கையில் எந்த விதிவிலக்கும் இருக்காது" என ஜூலை 7ஆம் தேதியிட்ட சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் வியாழன் அன்று (ஜூலை 17) வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆற்றிய உரையிலும் இந்த அச்சுறுத்தலைக் குறிப்பிட்டிருந்தார். பிரிக்ஸின் நிகழ்ச்சி நிரலில் என்ன இருந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரிக்ஸ் ரியோ பிரகடனத்தில் உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச நிலைத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் இருந்தன. இதோடு ஒருதலைபட்சமான வரிகளும் விவாதிக்கப்பட்டன. எனினும் அறிக்கையில் அமெரிக்கா பற்றிய குறிப்பு இல்லை. வர்த்தகப் போக்கை சிதைத்த உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளை மீறும் ஒருதலைபட்சமான வரி மற்றும் வரியில்லா நடவடிக்கைகளின் அதிகரித்த பயன்பாடு பற்றி பிரிக்ஸ் நாடுகள் கவலை கொள்வதாக ரியோ பிரகடனம் தெரிவிக்கிறது. இவை போக, ஒருதலைபட்சமான அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் திணிப்பது சர்வதேச சட்ட மீறல் மற்றும் ஒருதலைபட்சமான பொருளாதார தடைகள் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளின் படி வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புகள் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப்பின் அச்சுறுத்தலும் ஆர்ஐசியை வலுப்படுத்தும் முயற்சிகளும் பட மூலாதாரம்,X/DR S JAISHANKAR 2020ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்தது. அதன்பிறகு ஆர்ஐசி தொடர்பாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 17 ஆம் தேதியன்று ஆர்ஐசி அமைப்பை மீண்டும் தொடங்குவது பற்றி வெளியுறவு அமைச்சகம் பரிசீலிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இது தொடர்பாக எந்த முடிவும் "பரஸ்பரம் சவுகரியமான முறையில்" மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள டியான்ஜினுக்குச் சென்றபோது ஆர்ஐசி பற்றி விவாதிக்கப்பட்டது. "ஒருதலைபட்சவாதம், பாதுகாப்புவாதம் மற்றும் அதிகார அரசியல் மற்றும் அச்சுறுத்தும் போக்கு உலகிற்கு தீவிரமான சவால்களாக உள்ளன" என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த ஜூலை 14 அன்று அமைச்சர் ஜெய்சங்கர் உடனான கூட்டத்தில் தெரிவித்தார். எனவே இரு நாடுகளும் "நல்லிணக்கத்துடன் வாழ்ந்து இருவரும் வெற்றி பெற உதவுவதற்கு" வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா உறவில் சீனாவின் கருத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது, சீனாவும் அதற்கு நேர்மறையாக பதிலளித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று. இந்த இரு நாடுகளும் டிரம்ப்பின் 100 சதவிகித கூடுதல் வரி அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவை ஒரு ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க அழுத்தம் கொடுத்து யுக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நினைக்கிறது. டிரம்ப்பின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்ட கசப்புத்தன்மை பற்றி சீன வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூலை 13 அன்று சீன செய்தி ஊடகமான குவான்சாவில் எழுதியுள்ள கட்டுரையில் ஃபுடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜீ சாவோ தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா, இந்தியாவைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானைப் பயன்படுத்தும் உத்தியை எடுத்து இரு நாடுகளுக்கும் இடையே "வற்புறுத்தப்பட்ட இணக்கத்தை" ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். சீனாவின் முன்னணி விமர்சகரான பேராசிரியர் ஜின் கன்ரோங் இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார். "இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகள் சமீபத்தில் மேம்பட்டுள்ளன" என்றார். ஜூன் மாதம் கனடாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டபோது பிரதமர் நரேந்திர மோதி டிரம்பை சந்திக்க தவறினார். அதன் பிறகு டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்ததால் இந்தியா மேலும் ஏமாற்றமடைந்தது. பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றைத் தேடுகின்றவா? பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா மற்றும் ரஷ்யா உடனான அமெரிக்காவின் உறவுகள் பதற்றமாக உள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருநாடுகளும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலக ஒழுங்கை நிராகரிப்பது பற்றியும் பல்முனை உலகை உருவாக்குவது பற்றியும் பேசுகின்றன உலகில் நீண்ட காலமாக அமெரிக்காவின் நாணயமான டாலரின் ஆதிக்கத்திற்கு சவால்விட இருநாடுகளும் முயற்சி செய்வதற்கு இது தான் காரணம் 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் தான் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடன் டாலருக்குப் பதிலாக சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார். சீனா ஏற்கெனவே ரஷ்யாவுடன் யுவானில் தான் வர்த்தகம் செய்து வருகிறது. ரஷ்யாவும் அதே தான் செய்து வருகிறது, ஏனென்றால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அதன் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கியமான சர்வதேச பேமெண்ட் அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து விலக்கியுள்ளன. பிபிசியின் 2024ஆம் ஆண்டின் பிபிசி இந்தியின் செய்தியின்படி வெளிநாட்டு விவகார வல்லுநர் மற்றும் தி இமேஜ் இந்தியா இன்ஸ்டிட்யூடின் தலைவருமான ரபிந்திர சச்தேவ் கூறுகையில், "பிரிக்ஸ் நாடுகள் இதைச் செய்ய முயற்சித்து வருகின்றன. அவர்களால் மாற்று நாணயத்தை உருவாக்க முடியவில்லையென்றாலும் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன" "ஸ்விஃப்ட் பேங்கின் இண்டர்நேஷனல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. எந்த நாட்டின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் அவை இந்த அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படும்" என்றார். "ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைப் பார்க்கையில், தங்களுடைய வங்கிகளும் எதிர்காலத்தில் முடக்கப்படலாம் என பிரிக்ஸ் நாடுகள் அச்சம் கொள்கின்றன. இதனால் அவை ஒரு நிதி வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன" எனத் தெரிவித்தார். நிஜமாகவே டாலரின் மாற்றுக்கான தேடல் உள்ளதா? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரபிந்திர சச்தேவ், "பிரிக்ஸ் நாடுகள் அத்தகைய ஒன்றை திட்டமிட்டு வருகின்றன, ஆனால் அது கூடிய விரைவில் நடக்கப்போவதில்லை. எனினும் சில முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்லன. பிரேசில் உடன் யுவானில் வர்த்தகம் செய்கிறது சீனா. சவுதி அரேபியா உடன் நாணயம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது சீனா, இந்தியா ரஷ்யாவுடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தொடங்கிவிட்டன" எனத் தெரிவித்தார். ஆனால் டாலருக்கு எதிராக வேறு நாணயத்தை நிறுத்துவது என்பது அசாத்தியமானது என ரபிந்திர சச்தேவ் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86gkzrlv6o
1 month 3 weeks ago
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? - போராட்டத்தில் குதித்த மக்கள்! 22 JUL, 2025 | 03:36 PM வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோரி, இன்றைய தினம் (22) மூளாய் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எமது பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்துக்கு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டனர். பின்னர் காயமடைந்த எமது பகுதியைச் சேர்ந்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்தபோது பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றபோது பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. ஆனால், தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்தனர். தாக்குதல் நடாத்திய மற்றவர்களையும் அழைத்து, எமது தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரினோம். ஆனால் பொலிஸ் அதனை செய்யவில்லை. எங்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர். பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர் மீது கொடூர தாக்குதல் நடாத்தினர். பின்னர் நாங்கள் சம்பவம் அறிந்து சென்றபோது அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை பொலிஸார் தகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கிப் போடுவோம் எனக் கூறினர். பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். பொலிஸார் மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முன்வரவில்லை. இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து எமது ஊருக்குள் தாக்குதல் நடாத்துவதற்கு வரும்போதே எமது ஊர் மக்கள் இணைந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். பொன்னாலை பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் மாணவர் ஒருவர் தனது உழைப்பில் தனது வீட்டில் குழாய் கிணறு அமைக்கும்போது அங்கு சென்ற பொலிஸார் அது தவறான விடயம் என கூறி இலஞ்சம் பெற்றுச் சென்றனர். பொன்னாலை பகுதியில் இருந்து சந்தேக நபர் ஒருவரை கிராம சேவகர், பிரதேச செயலர் ஆகியோர் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் சில தினங்களுக்கு பின்னர் பொன்னாலையில் புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த பொறுப்பதிகாரி எமக்குத் தேவையில்லை. ஒரு திறமையான பொறுப்பதிகாரியை எமது பொலிஸ் நிலையத்திற்கு வழங்குங்கள். இந்த பொலிஸ் பொறுப்பதிகாரியால் எமது மக்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாது என்றனர். மக்களையும் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், உதவி பொலிஸ் அத்தியட்சகரையும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/220637
1 month 3 weeks ago
1 month 3 weeks ago