Aggregator
ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார - தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு
24 Sep, 2025 | 05:24 PM
![]()
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது.
இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.






இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்
தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்
24 Sep, 2025 | 05:09 PM
![]()
தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை
கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன.
தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை.
இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம்.
குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார்.
மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார்.
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
சீனாவின் புதிய விமானந்தாங்கி கப்பல் 'புஜியான்' : கடற்படையில் புதிய புரட்சி
சீனாவின் புதிய விமானந்தாங்கி கப்பல் 'புஜியான்' : கடற்படையில் புதிய புரட்சி
24 Sep, 2025 | 09:55 AM
![]()
(இணையத்தள செய்திப் பிரிவு)
சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது.
இந்த வெற்றிகரமான பயிற்சி, சீனாவின் உள்நாட்டு மின்காந்த உந்துகணை மற்றும் விமான நிறுத்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையான விமானங்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி, 'புஜியான்' கப்பல் முழுமையாகத் தனது செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வழி வகுக்கிறது. இதன் மூலம், பல வகையான விமானங்களை இந்த கப்பலுடன் ஒருங்கிணைத்து, முழுமையான ஒரு கடற்படை அணியை உருவாக்க முடியும்.
சீன விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான் வெய், இந்த வெற்றி சீன கடற்படையின் மூலோபாய மாற்றத்திற்கு முக்கிய ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது சீன கடற்படையை, கடலோரப் பாதுகாப்பிலிருந்து ஆழ்கடல் பாதுகாப்பு நோக்கி நகர்த்தும் ஒரு முக்கிய படியாகும்.
செப்டம்பர் 3 ஆம் திகதியன்று, சீன மக்கள் எதிர்ப்புப் போரின் 80 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்,J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சீனாவின் முதல் கப்பல் அடிப்படையிலான, நிலையான இறக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப எச்சரிக்கை விமானம், கண்காணிப்பு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பின் வரம்பை கணிசமாக விரிவாக்கும்.
ஐந்தாம் தலைமுறை மறைந்து தாக்கும் விமானமான J-35, எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம் J-15T, கடல் மற்றும் நிலப்பரப்பு இலக்குகளைத் தாக்கும் வலுவான திறனைக் கொண்டுள்ளது.
மின்காந்த உந்துகணைகள் இந்த விமானங்களை முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் மிக வேகமாக ஏவவும், தரையிறக்கவும் உதவுவதால், கப்பலின் போர் திறன் வெகுவாக அதிகரிக்கும் என பேராசிரியர் ஹான் வெய் விளக்கினார்.
'புஜியான்' கப்பல், சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலாகும். இது ஜூன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் முதல் இரண்டு கப்பல்களான 'லியாவோனிங்' மற்றும் 'ஷாண்டோங்' ஆகியவற்றுக்கு மாறாக, 'புஜியான்' கப்பல் ஒரு தட்டையான விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்த எடை 80,000 தொன்களுக்கு அதிகமாகும். மே 2024 இல் தனது முதல் கடல் சோதனைகளைத் தொடங்கியதில் இருந்து, 'புஜியான்' கப்பல் திட்டமிட்டபடி பல சோதனைகளை நடத்தி வருகிறது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஒரே இரவில் நாடற்றவராக அறிவிக்கப்பட்ட தமிழர்; பிறந்தது இந்தியாவில் தான், ஆனால் குடியுரிமை இல்லை

படக்குறிப்பு, மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்)
கட்டுரை தகவல்
சாரதா வி
பிபிசி தமிழ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னையில் வசிக்கும் ஆர்.பகிசன் (34) இந்திய பாஸ்போர்ட் உட்பட இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களை கொண்டுள்ளார். சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பாஸ்போர்ட்-ல் தனது மனைவியின் பெயரை சேர்க்க விண்ணப்பித்த போது அவரது பெயரை சேர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவர். 1991-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்ட போது அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். பகிசன் தமிழ்நாட்டிலேயே பிறந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே தொடர்ந்து வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் இருவரும் இந்தியர் அல்ல (இலங்கை நாட்டவர்) என்பதால் அவர் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார், எனவே அவர் 'நாடற்றவர்' என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பகிசன், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர்
இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, 1987-ம் ஆண்டுக்கு ஜூலை 1ம் தேதி அல்லது அதன் பின் இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே, அவர் இந்திய குடியுரிமை பெறமுடியும். மேலும், பெற்றோர் இருவரும் 'சட்டவிரோத குடியேறிகளாக' இருக்கக் கூடாது.
இந்தியாவில் அகதிகள் குறித்த தேசிய அளவிலான தெளிவான சட்டமும் கொள்கையும் இல்லாததால், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தாலும் அவர்கள் 'சட்டவிரோத குடியேறிகளாகவே' கருதப்படுகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1) (b) நாடற்றவர்களையும், அகதிகளையும் 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வரையறுக்கிறது.
"நான் எப்போதுமே என்னை இந்திய குடிமகனாகவே நினைத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் யாரும் என்னை இந்திய குடிமகன் இல்லை என்று எங்கும் கூறியதில்லை. என்னிடம் உள்ள ஆவணங்களை முறையாகவே பெற்றுள்ளேன். என் பெற்றோர் இலங்கை நாட்டவர் என்பதை எங்கும் மறைத்ததில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் காவல் நிலையத்துக்குச் சென்று நாங்கள் கையெழுத்திட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திலும் எங்கள் அடையாளத்தை மறைத்து எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
முதல் முறையாக நான் 'நாடற்றவன்' , இந்தியன் அல்ல என்று என்னிடம் கூறிய போது, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது தெரிந்தவுடன், உடனே சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்" என்று பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.பகிசன் கூறினார்.
1991-ம் ஆண்டு இந்தியா வந்த பகிசனின் குடும்பம்
பகிசனின் குடும்பத்தினர் 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவரது தாய் பகிசனை கர்ப்பத்தில் கொண்டிருந்தார். ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளாக தங்களை பதிவு செய்தனர். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள செந்தலை முகாமுக்கு மாற்றப்பட்டனர்.
"1991 மே மாதத்துக்குப் பிறகான காலத்தில் இலங்கை தமிழர்கள் மீதான கோபம் இருந்தால், சில முகாம்கள் மூடப்பட்டன. அப்போது நாங்கள் இருந்த முகாமும் மூடப்பட்டதால், 1992-ம் ஆண்டில் அங்கிருந்து பொது சமூகத்தில் வாழ அனுப்பப்பட்டோம். எனினும் தலைமை குடியேற்ற அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தோம். சென்னையில் முதலில் சிறிய காலம் வளசரவாக்கத்தில் இருந்தோம். பிறகு ராமாபுரத்துக்கு வந்த நாங்கள் அங்கேயே தான் இருந்து வருகிறோம்" என்கிறார் பகிசன்.
பகிசன் 2024-ம் ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்றுள்ளார். அவருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இலங்கையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. "என் மனைவியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நான் இலங்கை சென்றுள்ளேன். அதற்கு முன் சென்றதில்லை." என்று அவர் கூறுகிறார்.
அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது உட்பட்ட காரணங்களுக்காக பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். முதல் முறை மறுக்கப்பட்ட அவரது ஜாமீன் மனு, இரண்டாவது முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாக அரசு தரப்பில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தன்னை முகாமில் அடைத்தால் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ள முடியாது, தான் பணிக்கு செல்ல முடியாது என்று பகிசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி ஆர் ராமன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
பகிசன் தற்போது தனது இந்திய ஆவணங்களை அதிகாரிகளிடம் சரண் செய்துள்ளார்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும், இந்தியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவது சாத்தியமில்லை.
1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தப்பட்ட பிறகு, அதாவது 1987-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கக் கூடாது என்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையிலேயே பகிசன் 'நாடற்றவர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 6- ன் கீழ் 'naturalization' (இயல்புப்படுத்துதல்) அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறார். " Naturalization அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார்.
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், ஓராண்டு காலம் தொடர்ந்து இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு 14 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் சட்டம் கூறும் நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமை சட்டத்தின் படி, இலங்கை அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. அரசின் கருணையை நம்பியே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது" என்று இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் சந்தேஷ் சரவணன் கூறினார்.
குடியுரிமைக்காக காத்திருக்கும் இலங்கைத் தமிழர்கள்
தமிழ்நாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் உட்பட 58,357 இலங்கைத் தமிழர்கள் (19,300 குடும்பங்கள்) தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பு முகாம் உட்பட 105 முகாம்களில் இருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்த 13,400 குடும்பங்களில் 33,479 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர் என்று வெளிநாடு தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் தரவுகள் (2023) தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் தீர்வுகளுக்காக 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை 2023-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கான நீண்ட கால தீர்வுகள் குறித்து பேசிய அந்த குழுவின் அறிக்கை, பகிசனைப் போன்று 1987-க்கு பிறகு, பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவராக இருக்கும் குடும்பங்களில் இந்தியாவில் பிறந்த 22,058 பேர் இருப்பதாக கூறுகிறது.
இவர்களை தவிர மேலும் 848 பேர், இலங்கைத் தமிழர் பெற்றோர்களுக்கு 1987-ம் ஆண்டு பிறகு பிறந்து, ஆனால் பிறந்த இடம் குறிப்பிடாமலும் உள்ளனர். இவை தமிழ்நாட்டில் 104 முகாம்களில் உள்ள 57,391 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் பெறப்பட்டன.
"இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் நேரடி ஈடுபாட்டுடன் நடைபெற்றது. எனவே அவர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வகைப்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.
தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான கோவி லெனின், பிபிசி தமிழிடம் பேசும் போது, " இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதில் ஆவணங்கள் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்களாக இருப்பார்கள். அவர்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்காது.
இந்த ஆவணங்களைப் பெற்று தருவதில் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இந்திய குடியுரிமை கேட்டு நீதிமன்றத்தை நாடிய 13 பேருக்கு அவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 56 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதலில் இவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
திருச்சி முகாமில் இருந்த கே.நளினி இந்திய குடிமகளாக 2022-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார். இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் இந்திய குடியுரிமை பெற்ற முதல் நபர் அவர் ஆனார். அவர் 1986-ம் ஆண்டு இந்தியாவில் மண்டபம் முகாமில் பிறந்திருந்தார்.
1950-க்கும் 1987-க்கும் இடையில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள் ஆவர் என்று இந்திய குடியுரிமைச் சட்டம் கூறுவதால், அவரது குடியுரிமையை அங்கீகரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2022-ம் ஆண்டு தெரிவித்திருந்தது. நளினி போன்று 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்த 148 பேர் முகாம்களில் இருப்பதாக இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

படக்குறிப்பு, வழக்கறிஞர் ரோமியா ராய்
நளினி உட்பட பல இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை வழக்குகளை கையாண்டு வரும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரோமியோ ராய், "இந்தியாவில் அகதிகளுக்கான தனிச் சட்டம் இல்லாதது பாகுபாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. 'அகதிகள்' யார் என்ற தெளிவான வரையறை கிடையாது. திபெத்திய அகதிகளுக்கு இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கும் வசதிகள், வெளிநாடு செல்லும் அனுமதி ஆகியவை இலங்கைத் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை.
இலங்கை தமிழர்களின் நிலையை விட ரோஹிங்க்யா மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்திய குடியுரிமை வழங்குவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரத்யேக அதிகாரங்களில் ஒன்று. ஒரு துறையில் சிறந்து விளங்கும், வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கூட அரசு நினைத்தால் குடியுரிமை வழங்க முடியும். எனவே அரசு நினைத்தால் எந்த நிபந்தனைகளையும் தளர்த்தி மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
ஒரே இரவில் நாடற்றவராக அறிவிக்கப்பட்ட தமிழர்; பிறந்தது இந்தியாவில் தான், ஆனால் குடியுரிமை இல்லை
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
பிரித்தானியாவில் இராணுவத்தை விட அதிகளவில் பார்க்கிங் வார்டன்கள்: அதிகரித்த லாபம்..என்ன காரணம்?
பிரித்தானியாவில் இராணுவத்தை விட அதிகளவில் பார்க்கிங் வார்டன்கள்: அதிகரித்த லாபம்..என்ன காரணம்?
பிரித்தானியாவில் இப்போது பார்க்கிங் வார்டன்களின் எண்ணிக்கை முழுநேர வீரர்களை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு 2.3 பில்லியன்
நாடு முழுவதும் பிரித்தானியாவின் தெருக்களில் ரோந்து செல்லும் சுமார் 82,000 போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரித்தானிய பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. 
அங்கு சாரதிகள் மீதான அபாரதங்களும், கட்டணங்களும் ஆண்டுக்கு 2.3 பில்லியனை எட்டுவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இது பிரித்தானிய இராணுவத்தில் வழக்கமான வீரர்களின் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 73,490 முழுநேர வீரர்கள் இருக்கிறார்கள். நிதி வெட்டுக்கள் சமீபத்தில் பிரித்தானியாவின் இராணுவத்தை பாதித்த போதிலும், கவுன்சில்கள் தங்கள் பார்க்கிங் வார்டன்களின் படைகளில் இருந்து பெரும் லாபத்தை ஈட்டுவது தெரிகிறது. 
சாரதிகளிடமிருந்து வரும் வருவாய்
நாடு தழுவிய லாபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 961 பவுண்டு மில்லியனில் இருந்து சமீபத்திய ஆண்டில் சுமார் 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட கவுன்சில்கள் கட்டணங்களை உயர்த்துவதனால் பார்க்கிங் அனுமதிகள், டிக்கெட்டுகள் மற்றும் அபராதங்களுக்கான சாரதிகளிடமிருந்து வரும் வருவாய், இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களை தெரிவிப்பதுதான் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்கள் தெருக்களில் பார்க்கிங் கட்டணங்கள் மூலம் 1.4 பில்லியன் பவுண்டுகளையும், கவுன்சில் நடத்தும் கார் பார்க்கிங் மூலம் 876 மில்லியன் பவுண்டுகளையும் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நேர்மைச் சவால்கள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதோடு, AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவும் வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.