Aggregator
இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதமடித்தார் 14 வயது சூரியவன்ஷி
'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி
Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM
![]()
(நெவில் அன்தனி)
எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார்.
கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார்.
அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்தியா சார்பாக ரி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்தைக் குவித்த ரிஷாப் பான்டின் சாதனையை சமப்படுத்தினார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் முஷ்தாக் அலி கிண்ணத்துக்கான ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் குஜராத் அணிக்காக உர்வில் பட்டேலும் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் ஷர்மாவும் 28 பந்துகளில் சதங்களைப் பூர்த்தி செய்து இந்தியாவுக்கான அதிவேக சதங்களைப் பெற்ற சம சாதனையாளர்களாக இருக்கின்றனர்.
ரிஷாப் பான்ட் 2018இல் டெல்ஹி அணிக்காக 32 பந்துகளில் ரி20 சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சார்பாக சூரியவன்ஷி 42 பந்துகளில் 11 பவுண்டறிகள், 15 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்து 13ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் 14 வயது 232 நாட்களில் இந்திய தேசிய பிரதிநிதித்துவ அணிக்காக சதம் குவித்த மிகவும் இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்து சூரியவன்ஷி பெருமை பெற்றார்.
இதற்கு முன்னர் மிக இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற சாதனையை 2005இல் ஸிம்பாப்வே ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி வீரர் முஷ்பிக்குர் ரஹிம் (ஆட்டம் இழக்காமல் 111) நிலைநாட்டி இருந்தார். அப்போது அவருக்கு 16 வயது 171 நாட்கள் ஆகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் சூரியவன்ஷி முதலாவது பந்தில் கொடுத்த பிடி தவறவிடப்பட்டது. அதனை சாதகமாக்கிக்கொண்ட சூரியவன்ஷி அதன் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 342.85 ஆக இருந்தது. ரி20 போட்டிகளில் சதம் அடித்தவர்களில் நான்காவது அதி கூடிய ஸ்ட்ரைக் ரேட் இதுவாகும்.
இந்த வருடம் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக 35 பந்துகளில் சதம் குவித்து மிக இளைய வயதில் (14 வயது, 32 நாட்கள்) ரி20 சதம் குவித்தவர் என்ற சாதனைக்கு சூரியவன்ஷி சொந்தக்காரரானார்.
இது ஐபிஎல் இல் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். பூனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக றோயால் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக கிறிஸ் கேல் 2013இல் 30 பந்துகளில் குவித்த சதமே ஐபிஎல் இல் பதிவான அதிவேக சதமாகும்.

'இது எனது இயல்பான துடுப்பாட்ட பாணியாகும். இது ரி20 வடிவ கிரிக்கெட் ஆகும். எனவே எனது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். முதலாவது பந்தில் எனது பிடி தவறவிடப்பட்டது. ஆனால், எனது எண்ணத்தை நான் மாற்ற விரும்பவில்லை. இந்த மைதானத்தில் எங்களுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கை தேவைப்பட்டது. ஆடுகளம் துடுப்பாட்டத்திற் கு சிறப்பாக இருந்தது. அத்துடன் பவுண்டறி எல்லைகள் குறைந்த தூரங்களைக் கொண்டிருந்தது. எனவே நான் விளாசி அடித்தேன்' என போட்டியின் பின்னர் வைபவ் சூரியவன்ஷி கூறினார்.
அப் போட்டியில் இந்திய ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

'எனது இந்த ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லா புகழும் எனது தந்தைக்கே உரித்தாகும்' என அவர் மேலும் கூறினார்.
'சிறு பராயத்திலிருந்தே எனது தந்தை என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார். அப்போதெல்லாம் அவர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார் என நான் சிந்திப்பேன். ஆனால், அதன் பலாபலன்களை மைதானத்தில் இப்போது நான் உணர்கிறேன். எனது கவனத்தை சிதறடிக்கவிடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைத்தார். அத்துடன் நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். எனவே எனக்கு கிடைக்கும் எல்லா விடயங்களுக்கும் எனது தந்தைக்கே நன்றி கூறுவேன். ஏனேனில் அவர் இல்லாமல் நான் இந்தளவு உயர்ந்திருக்க மாட்டேன்' என்றார் சூரியவன்ஷி.
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
அடுத்த மாதம் முதல் இலவச பொலித்தீன் பைகள் இல்லை
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!
டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
Nov 15, 2025 - 01:25 PM
இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்
யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்
15 Nov, 2025 | 03:14 PM
![]()
யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது.