Aggregator
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கருத்து படங்கள்
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!

மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இத்தகைய தெளிவின்மை காரணமாக சரியான மருந்தைக் கண்டறிவது கடினமாகி, நோயாளியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறும் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை மருத்துவ சபை மேலும் எச்சரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!
பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!
டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!
லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு
லெபனான் எல்லையை இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா குற்றச்சாட்டு
Nov 15, 2025 - 08:58 AM
ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.
நீலக் கோடு என்பது லெபனானை இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் இருந்து பிரிக்கும் ஐ.நா.வால் வரையறுக்கப்பட்ட கோடாகும்.
ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) கூறுகையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் எழுப்பப்பட்ட கொன்கிரீட் 'T-சுவர்' சுமார் 4,000 சதுர மீட்டரால் லெபனான் நிலப்பரப்பை உள்ளூர் மக்கள் அணுக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யருன் பகுதிக்கு தென்கிழக்கே, நீலக் கோட்டைக் கடந்து செல்லும் மேலதிக சுவர் ஒன்றின் ஒரு பகுதியும் எழுப்பப்பட்டு வருவதாக ஐ.நா அமைதிகாக்கும் படையினரை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.
இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திற்கு UNIFIL தகவல் அளித்து, அந்தச் சுவரை அகற்றக் கோரியதாகவும் டுஜாரிக் தெரிவித்தார்.
"லெபனான் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1701 மற்றும் லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீறல்கள் ஆகும்" என்று UNIFIL அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தச் சுவர் நீலக் கோட்டைக் கடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
"இந்தச் சுவர் 2022-இல் தொடங்கப்பட்ட பரந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
போர் தொடங்கியதிலிருந்தும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் ஒரு பகுதியாகவும், வடக்கு எல்லையில் உள்ள பௌதீகத் தடையை வலுப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை IDF மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!
15 Nov, 2025 | 09:41 AM
![]()
(இணையத்தள செய்திப் பிரிவு)
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை அட்டவணையை வெளியிட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நேர அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10ம் திகதி முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.
2027 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை 2026 அக்டோபர் 24ம் திகதி நடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 டிசம்பர் 8ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடைபெறும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா - தென் ஆபிரிக்கா டெஸ்ட் தொடர்
பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்
மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025]
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இந்தியா - தென் ஆபிரிக்கா டெஸ்ட் தொடர்
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா
Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM
![]()
(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது.
கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது.

2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது. அந்த தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி மழையினால் கழுவப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கால டெஸ்ட் அணியைக் கட்டி எழுப்பும் குறிக்கோளுடன் இளம் வீரர்களை இந்தியா களம் இறக்கி அதில் வெற்றியும் கண்டது.
தொடர்ந்து 2019இல் உப கண்டத்துக்கு பயணித்த தென் ஆபிரிக்கா, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் 0 - 3 என தோல்வி அடைந்தது.
எவ்வாறாயினும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா, இம்முறை அனுப வசாலிகளுடன இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தியா இந்த வருடம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டங்கள் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்தியா, நாளை ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும்.
இந்தத் தொடர் இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியதை மறந்துவிடலாகாது.
தென் ஆபிரிக்கா இந்த வருடம் விளையாடிய 6 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 5இல் வெற்றிபெற்றிருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்திருந்தது,
தென் ஆபிரிக்கா 1989ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக 1992இலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
அதற்கு முன்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் மாத்திரம் தென் ஆபிரிக்கா விளையாடி இருந்தது. இன ஒடுக்கல் காரணமாக 1970இலிருந்து 1991வரை தென் ஆபிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
1991இல் தடை நீக்கப்பட்ட பின்னரே மற்றைய நாடுகளுடன் டெஸ்ட் விளையாட்டில் தென் ஆபிரிக்கா ஈடுபட ஆரம்பித்தது.
இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா 18 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 10 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
அணிகள்
இந்தியா: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உப தலைவர்), ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், தேவ்டத் படிக்கல், அக்சார் படிக்கல், கே. எல். ராகுல், சாய் சுதர்ஷன், வொஷிங்டன் சுந்தர்.
தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரவிஸ், டோனி டி ஸோர்ஸி, சைமன் ஹாமர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கெகிசோ ரபடா, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கய்ல் வெரின், ஸுபய்ர் ஹம்ஸா.