Aggregator

பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் - வேற்றுக்கிரகம் பற்றிய கதைகளைத் தூண்டியது எப்படி?

1 month 3 weeks ago
பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani கட்டுரை தகவல் எலன் சாங் பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை. 3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து (interstellar object) வந்து நமது வானத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும். எனவே அதன் பெயர் "3I" எனத் தொடங்குகிறது. நமக்குத் தெரிந்த பெரும்பாலான வால் நட்சத்திரத்தைப் போலல்லாமல், இது சூரியனைச் சுற்றி வருவதில்லை. இதன் பாதை மற்றும் வேகத்திலிருந்து இது நமது விண்மீன் மண்டலத்தின் வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பதுடன் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நமது சுற்றுப்புறப் பகுதியை விட்டு வெளியேறும் ஒருமுறை பயணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இதன் சில அம்சங்கள் ஹார்வர்ட் வானியற்பியலாளரான பேராசிரியர் அவி லோப் - மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் இது செயற்கையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது. ஈலோன் மஸ்க் கூட இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியன் கூட எக்ஸ் தளத்தில்: "இருங்கள்.. 3I அட்லஸ் பற்றிய தகவல் என்ன?!!!!!!!!!?????" என்று பதிவிட்டார். ஆனால் நாசாவும் மற்றும் வானியலாளர்களின் பெரும்பான்மையினரும் இதுவரை செய்யப்பட்ட அனைத்து அவதானிப்புகளையும் இயற்கையான, வேற்றுக்கிரகவாசிகள் அல்லாத நிகழ்வுகளால் விளக்க முடியும் என்று தெளிவாக வலியுறுத்துகின்றனர். இதுவரை நமக்குத் தெரிந்தது என்ன? 3I/அட்லஸ் முதன்முதலில் ஜூலை 2025-இல் சிலியில் உள்ள நாசாவால் நிதியளிக்கப்பட்ட அட்லஸ் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் இது உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம், Atlas/University of Hawaii/Nasa படக்குறிப்பு, அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய அபாயம் உள்ள பொருட்களைக் கண்டறிய இரவு வானத்தை ஆய்வு செய்கிறது, இருப்பினும் 3I/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள். "நமக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன, அதன் பிறகு இந்தப் பொருளை நாம் மீண்டும் பார்க்க மாட்டோம்," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரான கிறிஸ் லின்டாட் கூறுகிறார். "அதனால் எங்களால் முடிந்தவரை அதிகமான தரவுகளைப் பெற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்." சிலர் இது நியூயார்க்கின் மன்ஹாட்டன் அளவு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்த அளவீடுகள் இதன் விட்டம் 5.6 கிலோமீட்டரோ அல்லது 440 மீ சிறியதாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றன. இது கண்டுபிடிக்கப்பட்டபோது விநாடிக்கு சுமார் 61 கிமீ வேகத்தில் விண்வெளியில் விரைந்து கொண்டிருந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறுகிறது. இது எங்கிருந்து வந்தது? 3I/அட்லஸ் ஒரு தொலைதூர நட்சத்திர அமைப்பின் பிறப்பின் போது உருவாகி, பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்மீன் இடையேயான வெளியில் (interstellar space) பயணித்து வந்துள்ளது என்று வானியலாளர்கள் நினைக்கிறார்கள். இது நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வால் நட்சத்திரமாக இருக்கலாம்; ஒரு ஆய்வு அதன் வயதை 7 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், இது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது சொந்தச் சூரிய குடும்பத்திற்கு முன்பே இருந்ததாகும். "இதன் பொருள் நமது விண்மீன் மண்டலத்தின் வரலாற்றின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இது நமக்குத் தெரிவிக்கிறது," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். இந்த வால் நட்சத்திரம் தனுசு விண்மீன் குழுவின் (constellation Sagittarius) திசையில் நம்மிடம் வந்தது, இது நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையம் இருக்கும் இடமாகும். பட மூலாதாரம், M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை) நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே, நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது. இது பூமியில் இருந்து பார்க்க முடியாதவாறு அக்டோபரில் சூரியனுக்குப் பின்னால் கடந்து சென்றது, இதனால் அது ஏன் "மறைந்திருந்தது" என்பது பற்றிய அவதானிப்புகளுக்கு தூண்டுகோலானது. ஆனால், பல விண்வெளி ஆய்வுச் சாதனங்கள் வால் நட்சத்திரத்தைக் கண்காணித்து வருகின்றன, இது ஏற்கெனவே தரையில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் வெப்பமடைதல் 3I/அட்லஸ் சூரியனை நோக்கிய தனது பயணத்தில் வெப்பமடைந்து, ஈர்ப்பு விசை அல்லாத முடுக்கத்தைக் (non-gravitational acceleration) காட்டியது - அதாவது ஈர்ப்பு விசையால் நகரும் வேகம் என எதிர்பார்க்கப்படுவதை விட அதிக வேகமாக நகர்ந்தது. ஒரு "தொழில்நுட்ப ராக்கெட் எஞ்சின்" இதை உந்தித் தள்ளுவதாக இருக்கலாம் என்று பேராசிரியர் லோப் ஊகித்தார், இதனால் வேற்றுக்கிரக விண்கலம் பற்றிய தலைப்புச் செய்திகள் மற்றும் மீம்கள் இணையத்தில் வெள்ளம்போல் பெருகின. பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது. ஆனால் வால் நட்சத்திரங்களை அளவிடுவதில் நிபுணத்துவம் வாய்ந்த பல விஞ்ஞானிகள், இந்த முடுக்கம் வாயு வெளியேற்றத்தின் (outgassing) வரம்புக்குள் தான் உள்ளது என்று கூறுகின்றனர் என்று பேராசிரியர் லின்டாட் விளக்குகிறார். வெப்பமடையும் வால் நட்சத்திரத்தில் உள்ள சில பொருட்கள் திடப் பனிக்கட்டியிலிருந்து வாயுவாக மாறும் போது, மேகம் மற்றும் தூசி தாரைகளை வெளியேற்றுகிறது. இந்த தாரைகள், உந்துவிசைகளைப் போலச் செயல்படுகின்றன. உண்மையில், 3I/அட்லஸ் அதி தீவிரமாகச் செயல்படுவதாகத் தோன்றியது. ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும் தூசி பொதுவாக ஒளியைப் பிரதிபலிக்கும், இது சூரியனை நெருங்கும்போது வால் நட்சத்திரத்தைப் பிரகாசமாக்குகிறது. 3I/அட்லஸ் மிக விரைவாகப் பிரகாசமானது. இது சிவப்பு நிறத்திலிருந்து நீல நிறமாக மாறியிருக்கலாம் என்ற சில தகவல்களும் உள்ளன, இதனால் ஒரு வேற்றுக்கிரக ஆற்றல் மூலத்தைப் பற்றிய கோட்பாடுகள் தூண்டப்பட்டன. வானியலாளர்கள் இது ஏன் என்று துல்லியமாகக் கண்டறிய இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஏராளமான இயற்கையான விளக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றனர். இந்த விரைவான பிரகாசமடைதல், "அங்கு நிறைய பனிக்கட்டிகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். நிற மாற்றம் உண்மையாக இருந்தாலும், மற்றும் அது அளவிடப்பட்ட விதத்தில் ஏற்பட்ட தவறாக இருந்தாலும் இது மாறும் வேதியியலைக் குறிக்கலாம். பட மூலாதாரம், Nasa/SPHEREx படக்குறிப்பு, ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யுநாசாவின் SPHEREx ஆய்வகம், வால் நட்சத்திரம் 3I/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது. "நாம் உண்மையில் செய்ய விரும்புவது வால் நட்சத்திரத்தின் உள் பகுதி எதனால் ஆனது என்பதைக் கண்டுபிடிப்பதுதான்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். மர்மமான வேதியியல் 3I/அட்லஸ்ஸின் ரசாயன அமைப்பைப் புரிந்துகொள்வது, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அது தோன்றிய தொலைதூர நட்சத்திர அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கலாம். தொலைநோக்கிகள் இதுவரை வால் நட்சத்திரத்தில் நிறைய கார்பன் டை ஆக்சைடைப் பார்த்துள்ளன. மேலும் இது நிக்கல் என்ற உலோகத் தனிமத்தில் செறிவூட்டப்பட்டதாகத் தெரிகிறது - இந்த அவதானிப்பு வேற்றுக் கிரக விண்கலம் என்ற கருத்தை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நமது சொந்த விண்கலங்களின் பல பாகங்களில் நிக்கல் உள்ளது. தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் பாட்காஸ்டில் பேசிய ஈலோன் மஸ்க், முழுவதுமாக நிக்கலால் செய்யப்பட்ட ஒரு விண்கலம் மிகவும் கனமாக இருக்கும், அது "ஒரு கண்டத்தையே அழிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டார். ஆனால், 2019-இல் கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் வால்நட்சத்திரமான 2I/போரிசோவ் உட்பட மற்ற வால்மீன்களிலும் நிக்கல் காணப்பட்டுள்ளது. மிகுதியான நிக்கல் இருப்பது 3I/அட்லஸ் உருவான சூழலை பிரதிபலிக்கலாம் அல்லது அதன் நீண்ட விண்மீன் பயணத்தில் வால் நட்சத்திரம் விண்வெளிக் கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருக்கலாம். இது அதன் மேற்பரப்பு வேதியியலை மாற்றியிருக்கலாம் என்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. வெளியேறும் வழியில் அக்டோபர் மாத பிற்பகுதியில் சூரியனைத் தாண்டிச் சென்ற 3I/அட்லஸ் விரைவில் விடைபெறும். இது டிசம்பர் 19 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில், 270 மில்லியன் கிமீ என்ற பாதுகாப்பான தூரத்திற்கு வரும். இது சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் தூரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தூரம் ஆகும். பட மூலாதாரம், Spacecraft: Esa/ATG medialab; Jupiter: Nasa/Esa/J Nichols (Uni of Leicester) படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வியாழன் பனிக்கட்டி நிலவுகள் எக்ஸ்ப்ளோரர் (Juice), வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரியனுக்கு மிக அருகில் கடந்து சென்ற பிறகு தீவிர நிலையில் இருக்கும்போது, அதை நவம்பர் மாதத்தில் உற்று நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான ஆய்வகங்கள் அதிக அளவீடுகளை எடுக்கமுடியும் என நம்புகின்றன, மேலும் பொழுதுபோக்கு வானியலாளர்கள் கூட 8-இன்ச் தொலைநோக்கி மூலம் அதைப் பார்க்க முடியும் என்கின்றனர். இதுவரை மூன்று விண்மீன் இடையேயான வால் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருப்பதால், இந்த பண்டைய பயணிகளைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. "விண்மீன் மண்டலத்தில் இவற்றைப் போல பில்லியன்கணக்கானவை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், நாம் மூன்றைதான் பார்த்திருக்கிறோம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். "இது மிகவும் ஆரம்ப நிலை என்பதால் இது அசாதாரணமானதா என்று சொல்வது கடினம்." சிலியில் உள்ள வேரா ரூபின் ஆய்வகம் போன்ற சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கிகள் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் மேலும் டஜன் கணக்கானவற்றைக் கண்டுபிடிப்போம் என்று அந்த வானியற்பியலாளர் நம்புகிறார். "அப்போது, எந்த வகையான நட்சத்திரங்கள் கோள்களை உருவாக்குகின்றன, பொதுவான கலவைகள் என்னென்ன என்பது பற்றி நம்மால் சொல்ல முடியும். மேலும் நமது சூரிய குடும்பம் இந்தப் படத்தில் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை நாம் பெறலாம்," என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9187wnky3o

பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் - வேற்றுக்கிரகம் பற்றிய கதைகளைத் தூண்டியது எப்படி?

1 month 3 weeks ago

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani

கட்டுரை தகவல்

  • எலன் சாங்

  • பிபிசி உலக சேவை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை.

3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து (interstellar object) வந்து நமது வானத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும். எனவே அதன் பெயர் "3I" எனத் தொடங்குகிறது.

நமக்குத் தெரிந்த பெரும்பாலான வால் நட்சத்திரத்தைப் போலல்லாமல், இது சூரியனைச் சுற்றி வருவதில்லை. இதன் பாதை மற்றும் வேகத்திலிருந்து இது நமது விண்மீன் மண்டலத்தின் வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பதுடன் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நமது சுற்றுப்புறப் பகுதியை விட்டு வெளியேறும் ஒருமுறை பயணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதன் சில அம்சங்கள் ஹார்வர்ட் வானியற்பியலாளரான பேராசிரியர் அவி லோப் - மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் இது செயற்கையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது.

ஈலோன் மஸ்க் கூட இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியன் கூட எக்ஸ் தளத்தில்: "இருங்கள்.. 3I அட்லஸ் பற்றிய தகவல் என்ன?!!!!!!!!!?????" என்று பதிவிட்டார்.

ஆனால் நாசாவும் மற்றும் வானியலாளர்களின் பெரும்பான்மையினரும் இதுவரை செய்யப்பட்ட அனைத்து அவதானிப்புகளையும் இயற்கையான, வேற்றுக்கிரகவாசிகள் அல்லாத நிகழ்வுகளால் விளக்க முடியும் என்று தெளிவாக வலியுறுத்துகின்றனர்.

இதுவரை நமக்குத் தெரிந்தது என்ன?

3I/அட்லஸ் முதன்முதலில் ஜூலை 2025-இல் சிலியில் உள்ள நாசாவால் நிதியளிக்கப்பட்ட அட்லஸ் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் இது உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Atlas/University of Hawaii/Nasa

படக்குறிப்பு, அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய அபாயம் உள்ள பொருட்களைக் கண்டறிய இரவு வானத்தை ஆய்வு செய்கிறது, இருப்பினும் 3I/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

"நமக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன, அதன் பிறகு இந்தப் பொருளை நாம் மீண்டும் பார்க்க மாட்டோம்," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரான கிறிஸ் லின்டாட் கூறுகிறார். "அதனால் எங்களால் முடிந்தவரை அதிகமான தரவுகளைப் பெற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்."

சிலர் இது நியூயார்க்கின் மன்ஹாட்டன் அளவு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்த அளவீடுகள் இதன் விட்டம் 5.6 கிலோமீட்டரோ அல்லது 440 மீ சிறியதாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றன.

இது கண்டுபிடிக்கப்பட்டபோது விநாடிக்கு சுமார் 61 கிமீ வேகத்தில் விண்வெளியில் விரைந்து கொண்டிருந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறுகிறது.

இது எங்கிருந்து வந்தது?

3I/அட்லஸ் ஒரு தொலைதூர நட்சத்திர அமைப்பின் பிறப்பின் போது உருவாகி, பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்மீன் இடையேயான வெளியில் (interstellar space) பயணித்து வந்துள்ளது என்று வானியலாளர்கள் நினைக்கிறார்கள்.

இது நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வால் நட்சத்திரமாக இருக்கலாம்; ஒரு ஆய்வு அதன் வயதை 7 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், இது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது சொந்தச் சூரிய குடும்பத்திற்கு முன்பே இருந்ததாகும்.

"இதன் பொருள் நமது விண்மீன் மண்டலத்தின் வரலாற்றின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இது நமக்குத் தெரிவிக்கிறது," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.

இந்த வால் நட்சத்திரம் தனுசு விண்மீன் குழுவின் (constellation Sagittarius) திசையில் நம்மிடம் வந்தது, இது நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையம் இருக்கும் இடமாகும்.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar

படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை) நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே, நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது.

இது பூமியில் இருந்து பார்க்க முடியாதவாறு அக்டோபரில் சூரியனுக்குப் பின்னால் கடந்து சென்றது, இதனால் அது ஏன் "மறைந்திருந்தது" என்பது பற்றிய அவதானிப்புகளுக்கு தூண்டுகோலானது.

ஆனால், பல விண்வெளி ஆய்வுச் சாதனங்கள் வால் நட்சத்திரத்தைக் கண்காணித்து வருகின்றன, இது ஏற்கெனவே தரையில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கு அருகில் வெப்பமடைதல்

3I/அட்லஸ் சூரியனை நோக்கிய தனது பயணத்தில் வெப்பமடைந்து, ஈர்ப்பு விசை அல்லாத முடுக்கத்தைக் (non-gravitational acceleration) காட்டியது - அதாவது ஈர்ப்பு விசையால் நகரும் வேகம் என எதிர்பார்க்கப்படுவதை விட அதிக வேகமாக நகர்ந்தது.

ஒரு "தொழில்நுட்ப ராக்கெட் எஞ்சின்" இதை உந்தித் தள்ளுவதாக இருக்கலாம் என்று பேராசிரியர் லோப் ஊகித்தார், இதனால் வேற்றுக்கிரக விண்கலம் பற்றிய தலைப்புச் செய்திகள் மற்றும் மீம்கள் இணையத்தில் வெள்ளம்போல் பெருகின.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani

படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது.

ஆனால் வால் நட்சத்திரங்களை அளவிடுவதில் நிபுணத்துவம் வாய்ந்த பல விஞ்ஞானிகள், இந்த முடுக்கம் வாயு வெளியேற்றத்தின் (outgassing) வரம்புக்குள் தான் உள்ளது என்று கூறுகின்றனர் என்று பேராசிரியர் லின்டாட் விளக்குகிறார்.

வெப்பமடையும் வால் நட்சத்திரத்தில் உள்ள சில பொருட்கள் திடப் பனிக்கட்டியிலிருந்து வாயுவாக மாறும் போது, மேகம் மற்றும் தூசி தாரைகளை வெளியேற்றுகிறது. இந்த தாரைகள், உந்துவிசைகளைப் போலச் செயல்படுகின்றன.

உண்மையில், 3I/அட்லஸ் அதி தீவிரமாகச் செயல்படுவதாகத் தோன்றியது.

ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும் தூசி பொதுவாக ஒளியைப் பிரதிபலிக்கும், இது சூரியனை நெருங்கும்போது வால் நட்சத்திரத்தைப் பிரகாசமாக்குகிறது. 3I/அட்லஸ் மிக விரைவாகப் பிரகாசமானது.

இது சிவப்பு நிறத்திலிருந்து நீல நிறமாக மாறியிருக்கலாம் என்ற சில தகவல்களும் உள்ளன, இதனால் ஒரு வேற்றுக்கிரக ஆற்றல் மூலத்தைப் பற்றிய கோட்பாடுகள் தூண்டப்பட்டன.

வானியலாளர்கள் இது ஏன் என்று துல்லியமாகக் கண்டறிய இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஏராளமான இயற்கையான விளக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றனர்.

இந்த விரைவான பிரகாசமடைதல், "அங்கு நிறைய பனிக்கட்டிகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.

நிற மாற்றம் உண்மையாக இருந்தாலும், மற்றும் அது அளவிடப்பட்ட விதத்தில் ஏற்பட்ட தவறாக இருந்தாலும் இது மாறும் வேதியியலைக் குறிக்கலாம்.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Nasa/SPHEREx

படக்குறிப்பு, ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யுநாசாவின் SPHEREx ஆய்வகம், வால் நட்சத்திரம் 3I/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது.

"நாம் உண்மையில் செய்ய விரும்புவது வால் நட்சத்திரத்தின் உள் பகுதி எதனால் ஆனது என்பதைக் கண்டுபிடிப்பதுதான்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.

மர்மமான வேதியியல்

3I/அட்லஸ்ஸின் ரசாயன அமைப்பைப் புரிந்துகொள்வது, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அது தோன்றிய தொலைதூர நட்சத்திர அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கலாம்.

தொலைநோக்கிகள் இதுவரை வால் நட்சத்திரத்தில் நிறைய கார்பன் டை ஆக்சைடைப் பார்த்துள்ளன.

மேலும் இது நிக்கல் என்ற உலோகத் தனிமத்தில் செறிவூட்டப்பட்டதாகத் தெரிகிறது - இந்த அவதானிப்பு வேற்றுக் கிரக விண்கலம் என்ற கருத்தை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நமது சொந்த விண்கலங்களின் பல பாகங்களில் நிக்கல் உள்ளது.

தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் பாட்காஸ்டில் பேசிய ஈலோன் மஸ்க், முழுவதுமாக நிக்கலால் செய்யப்பட்ட ஒரு விண்கலம் மிகவும் கனமாக இருக்கும், அது "ஒரு கண்டத்தையே அழிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டார்.

ஆனால், 2019-இல் கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் வால்நட்சத்திரமான 2I/போரிசோவ் உட்பட மற்ற வால்மீன்களிலும் நிக்கல் காணப்பட்டுள்ளது.

மிகுதியான நிக்கல் இருப்பது 3I/அட்லஸ் உருவான சூழலை பிரதிபலிக்கலாம் அல்லது அதன் நீண்ட விண்மீன் பயணத்தில் வால் நட்சத்திரம் விண்வெளிக் கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருக்கலாம். இது அதன் மேற்பரப்பு வேதியியலை மாற்றியிருக்கலாம் என்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளியேறும் வழியில்

அக்டோபர் மாத பிற்பகுதியில் சூரியனைத் தாண்டிச் சென்ற 3I/அட்லஸ் விரைவில் விடைபெறும்.

இது டிசம்பர் 19 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில், 270 மில்லியன் கிமீ என்ற பாதுகாப்பான தூரத்திற்கு வரும். இது சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் தூரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தூரம் ஆகும்.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Spacecraft: Esa/ATG medialab; Jupiter: Nasa/Esa/J Nichols (Uni of Leicester)

படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வியாழன் பனிக்கட்டி நிலவுகள் எக்ஸ்ப்ளோரர் (Juice), வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரியனுக்கு மிக அருகில் கடந்து சென்ற பிறகு தீவிர நிலையில் இருக்கும்போது, அதை நவம்பர் மாதத்தில் உற்று நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான ஆய்வகங்கள் அதிக அளவீடுகளை எடுக்கமுடியும் என நம்புகின்றன, மேலும் பொழுதுபோக்கு வானியலாளர்கள் கூட 8-இன்ச் தொலைநோக்கி மூலம் அதைப் பார்க்க முடியும் என்கின்றனர்.

இதுவரை மூன்று விண்மீன் இடையேயான வால் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருப்பதால், இந்த பண்டைய பயணிகளைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

"விண்மீன் மண்டலத்தில் இவற்றைப் போல பில்லியன்கணக்கானவை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், நாம் மூன்றைதான் பார்த்திருக்கிறோம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். "இது மிகவும் ஆரம்ப நிலை என்பதால் இது அசாதாரணமானதா என்று சொல்வது கடினம்."

சிலியில் உள்ள வேரா ரூபின் ஆய்வகம் போன்ற சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கிகள் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் மேலும் டஜன் கணக்கானவற்றைக் கண்டுபிடிப்போம் என்று அந்த வானியற்பியலாளர் நம்புகிறார்.

"அப்போது, எந்த வகையான நட்சத்திரங்கள் கோள்களை உருவாக்குகின்றன, பொதுவான கலவைகள் என்னென்ன என்பது பற்றி நம்மால் சொல்ல முடியும். மேலும் நமது சூரிய குடும்பம் இந்தப் படத்தில் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை நாம் பெறலாம்," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz9187wnky3o

இலங்கை - அமெரிக்கா கூட்டுறவில் கடல்சார் ஆழ அளவீட்டுத் திறன் மேம்பாடு!

1 month 3 weeks ago
Published By: Digital Desk 3 20 Nov, 2025 | 02:47 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கையின் கடல்சார் ஆழத்தை அளவிடும் (Hydrographic Mapping) திறன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) அமைப்பையும், கடற்படை வானிலை மற்றும் கடலியல் கட்டளையையும் (Naval Meteorology & Oceanography Command) சேர்ந்த நிபுணர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு நாட்டின் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது, அதன் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கூட்டுறவானது இலங்கைக்கு அதன் சொந்த நீர்ப்பரப்புகளை வரைபடமாக்க உதவும். இதன் மூலம் வணிகக் கப்பல் பாதைகள் மேலும் பாதுகாப்பானதாக மாறும். ஒட்டுமொத்த கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும். இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் கடலியல் ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230895

இலங்கை - அமெரிக்கா கூட்டுறவில் கடல்சார் ஆழ அளவீட்டுத் திறன் மேம்பாடு!

1 month 3 weeks ago

Published By: Digital Desk 3

20 Nov, 2025 | 02:47 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இலங்கையின் கடல்சார் ஆழத்தை அளவிடும் (Hydrographic Mapping) திறன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) அமைப்பையும், கடற்படை வானிலை மற்றும் கடலியல் கட்டளையையும் (Naval Meteorology & Oceanography Command) சேர்ந்த நிபுணர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒரு நாட்டின் கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது, அதன் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கூட்டுறவானது இலங்கைக்கு அதன் சொந்த நீர்ப்பரப்புகளை வரைபடமாக்க உதவும். இதன் மூலம் வணிகக் கப்பல் பாதைகள் மேலும் பாதுகாப்பானதாக மாறும்.

ஒட்டுமொத்த கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும். இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் கடலியல் ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/230895

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி

1 month 3 weeks ago
அவர் கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். அப்போது ஏதாவது கட்சிக்கு ஆதரவு கொடுத்து அமைச்சுப்பதவியைப்பெறலாம் என்று கனவுகண்டார். ஆனால் முடிவுகள் வேறுமாதிரி வந்தது மட்டுமல்லாமல் அவர் பாரளுமன்றத்திற்கு ஒரு எம்பியாகத்தானும் தெரிவு செய்யப்படாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.ஆனால் அவரால் அப்படிப்பதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் கனவில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அனுரவிடம் கேட்கிறார். அரசியல் னகதிகள் விடுதலை புத்தசிலை விகாரம்பற்றி பேசினாரோ தெpயவில்லை. அதுபற்றி பேசியிருந்தால் நல்லது. மகிந்த கூட மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். ஆனால் நல்லாட்சி என்று நரியாட்சி நடத்திய ரணிலுடன் தேனிலவு நடத்திய நேரத்தில் இந்த மாகாண சபைத் தேர்தல்களை ஒழுங்காக நடத்துமாறு ரணிலைக் கேட்க திராணியில்லை. பொழுது போக்குக்கு அரசியல் செய்கிறார்.

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

1 month 3 weeks ago
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் குறித்து விசாரணை Nov 20, 2025 - 12:28 PM செல்லுபடியான முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு போக்குவரத்துத் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலும், அதில் முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவதற்கான உரிய வகையின் கீழ் அனுமதி இல்லையென்றால், நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தற்காலிக முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது. அதற்கமைய, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உரிய வகையின் கீழ் முச்சக்கர வண்டிகளைச் செலுத்த விரும்பினால், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாகத் தற்காலிக முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில், அண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நியூசிலாந்துப் பெண் ஒருவருக்கு முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள சில முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாடகை அடிப்படையில் முச்சக்கர வண்டிகளை வழங்குவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், அவ்வாறு வழங்கும் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi72yssh01sno29nrjy15m8w

புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை - உதய கம்மன்பில சாடல்

1 month 3 weeks ago
இப்ப என்ன சொல்ல வருகிறார் இவர்? புத்தரை கைது செய்யவில்லை என்கிறாரா? புத்தரை கைது செய்ய முடிந்தால் இவர்கள் எதற்கு அவருக்கு இடம் பிடிக்கிறார்கள்? புத்தரை வைத்து, பலி கொடுத்து வயிறு வளக்கும் கூட்டம். ஓஓ, பிக்குகளை கைது செய்யவில்லை என பொருமுகிறாரா? அதுதான் போலீசாரை தாக்கிவிட்டு தாங்களே போய் நீட்டி நிமிர்ந்து கிடக்குதுகள்.

ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி

1 month 3 weeks ago
அப்படி இவர் என்னத்தை பெரிதாக சாதித்து விட்டார், சாத்தான் வந்து கருத்தெழுதுவதற்கு? எப்போதும் உள்ளதையே செய்திருக்கிறார்கள், மாற்றி ஒன்றும் செய்யவில்லை. இதோ பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அழைப்பு வரப்போகிறது எனக்காத்திருந்தார், வரவில்லை. சவால் விட்டுப்பார்த்தார் பயனில்லை, எச்சரிக்கை செய்தார், மசியவில்லை. நாமலோடு பேச்சுவார்த்தை நடத்தினார், எதுவும் நடைபெறவில்லை. கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து ஒருமாதிரி கதவு திறந்தாயிற்று. உள்நுழைந்தவர்கள் ஏதாவது கதிரை எதிர்பார்ப்பார்கள், ஒரு ஓரத்தில் பார்வையாளராக அனுமதித்தாலும் பரவாயில்லை என்பார்கள். மாகாண தேர்தலை நடத்த வேண்டுமாம், தான் முதலமைச்சர் கதிரையில் அமரவேண்டும். ஏன் ராஜபக்ச காலத்தில் மாகாண தேர்தல் கிரமமாக நடத்தப்பட்டதா? அப்போது இவர் தனது அதிருப்தியை வெளியிட்டாரா? ஏன் வெளியிடவில்லை? அன்று வெளியிட்டிருந்தால் பதவியில்லை, இன்று பதவி கொடுத்திருந்தால் இந்த கோரிக்கை எழுந்திருக்காது. இங்கு இரண்டுபேர் சுமந்திரனுக்காக காவடி எடுக்கிறார்கள் அதிலும் தூக்குக்காவடி! இன்றுதான் இந்தப்பிரச்சனைகள் உருவாகியதா? கடந்தகாலத்தில் இதை வலியுறுத்த மறந்ததேன்? இப்போ என்ன? அனுராவோடு கைகுலுக்கி படம் போட வேண்டும் அவ்வளவுதான். அது நடந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என அறிக்கை வரும், வந்து கொண்டே இருக்கும்.

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

1 month 3 weeks ago
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு! தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதி அளிக்காது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனிடையே, அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நியூசிலாந்து பெண் சுற்றுலாப் பயணி, இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில உள்ளூர் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு, தங்கள் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார். அத்தகைய நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். https://athavannews.com/2025/1453390

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

1 month 3 weeks ago

New-Project-160.jpg?resize=750%2C375&ssl

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்‍ (DMT) அறிவித்துள்ளது.

இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதி அளிக்காது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

இதனிடையே, அண்மையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நியூசிலாந்து பெண் சுற்றுலாப் பயணி, இலங்கையில் முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில உள்ளூர் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு, தங்கள் வாகனங்களை வாடகைக்கு விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார்.

அத்தகைய நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

https://athavannews.com/2025/1453390

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
யாயினி, பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை மக்கள் அனுப்புவது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே. ஆனால், அரச்சனா உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து செய்வது, அடுத்த தேர்தலுக்கான தமது சொந்த தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே. தான் இப்படிக் குரைப்பதால் இந்த பிரச்சனை மேலும் பற்றியெரிந்து, தமிழ்மக்களுக்கே அது பாதிப்பை உண்டாக்குமே தவிர பிரச்சனை தீரப்போவதில்லை என்பது, அர்சசனாவுக்கு நன்கு தெரியும். அப்படி பிரச்சனை மேலும் பற்றி எரிந்தால், அதை இன்னும் தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பதும் அரச்சனாவுக்கு தெரியும். அதனால் மற்றய தமிழ் பாராளுமன்ற உறுபினர்களை போல் பண்பாக உரையாற்றாமல் தான் இப்படி நாய் போல் குரைப்பது பிரச்சனையை மேலும் அதிகரித்தாலும், தனக்கு மற்றயவர்களை விட வாக்குகளை அதிகரிக்க வைக்கும், என்று அவர் நம்புகிறார். பண்பற்று பேசுபவர்களை ரசிக்கும் கூட்டம் சமூகவலைத்தளங்களில் இருப்பதை துல்லியமாக அறிந்து அரசியலுக்கு வந்தவர் அவர். வைத்தியத்துறையில் தன்னால் மிளிர முடியாது அந்தளவுக்கு அந்த துறையில் தனக்கு அறிவில்லை என்பதை உணர்ந்து அடுத்தவனை வித்தியாசமாக பேக்காட்டி வாழலாம் என்பதை துல்லியமாக கணிப்பிட்ட திறமை உடைய அர்சசனா உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். @Justin கூறியது போல் பாராளுமன்றத்துக்கு வெளியே பம்மிக்கொண்டு அடக்கி வாசித்து தனது பதவியை காப்பாற்றிகொள்ளவும் அர்சசனாவுக்கு நன்கு தெரியும். தனது அப்பா தமிழீழ காவற்துறையில் உயர் அதிகாரி என்றும், ஜேர்மனியில் இருந்து தேசியத்தலைவரின் கொள்கைகளின் பார் ஈர்ககப்பட்டு இங்கு தாயக பணி புரிய வந்ததாகவும் தமிழ் சனலில் கூறிவிட்டு, அதே மாதமே( அது போன மாசம் என்று சொல்லவேண்டிய தேவையே இருக்கவில்லை) சிங்கள சனலில் பல்டியடித்து அப்பா வேலையில்லாமல் கஷரப்பட்டதால் புலிகளின் பொலிசில் கடமையாற்ற வேண்டிய தேவை வந்ததே தவிர அவர்களது கொள்கைகளில் அப்பாவுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என பேட்டியளித்த பின்பும் தனக்கு வாக்களிக்கும் மென்டல்கள் கணிசமான அளவில் இருப்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர். இருப்பினும், 1970/80 களின் இருந்த இளம் சமுதாயம் போல் இப்படியான அரசியல் சுயநலமிகளின் பேச்சில் மயங்கி தமது வாழ்வைத் தொலைக்காமல், இவர்களின் அயோக்கியத்தனமான அரசியலை திரும்பி கூட பார்ககாமல் தாமுண்டு தமது கல்வி, தமது உழைப்பு , தமது career என்று தமது வாழ்வை அமைக்க விரும்பும் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணிசமான இளம் சந்ததி தாயகத்தில் தற்போது இருப்பது ஆறுதலான, தமிழர் வாழ்வில் நம்பிக்கையளிக்க கூடிய விடயம்.

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

1 month 3 weeks ago
இனவாத சிங்களம் தமிழர்களுக்கு எதுவுமே தராது என்பது 70வருட வரலாறு சொல்லி நிற்கும் பாடம். இருந்தாலும் சிங்களத்திற்கு தமிழர்களுக்கு வேண்டியதை கொடுக்குமாறு சர்வதேசம் பரிந்துரை செய்யுமே தவிர வற்புறுத்தாது. இது 2009க்கு பின்னர் கண்டு களித்த அனுபவங்கள். எனவே.... இன்றைய ஆட்சியாளர்களுடன் சமரச பேச்சுக்கள் பேசி ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சண்டித்தனங்கள் எக்காலத்திலும் எடுபடாது. ****

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!

1 month 3 weeks ago
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு! வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 21,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் மற்றும் 6 மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாகவும் 12 மாதங்கள் வரையிலும் ஒரு வெளிநாட்டு பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான கட்டணம் 45,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, வெளிநாட்டுப் பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகவும். மேலும், சாரதி அனுமதிப் பத்திரம் தொலைவடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதன் நகலை வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகும். மேலும், இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டணம் 3,300 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு, புதிய அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவிலிருந்து 60,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453330

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!

1 month 3 weeks ago

New-Project-149.jpg?resize=750%2C375&ssl

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வெளிநாட்டு பிரஜைக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கு முன்பு 2,000 ரூபாவாக இருந்த கட்டணம் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேல் மற்றும் இரண்டு மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 21,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு மேல் மற்றும் 6 மாதங்கள் வரை சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

6 மாதங்களுக்கும் மேலாகவும் 12 மாதங்கள் வரையிலும் ஒரு வெளிநாட்டு பிரஜைக்கு சாரதி  அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான கட்டணம் 45,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, வெளிநாட்டுப் பிரஜைக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகவும்.

மேலும், சாரதி அனுமதிப் பத்திரம் தொலைவடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ அதன் நகலை வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவாகும்.

மேலும், இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான கட்டணம் 3,300 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளியே வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது அதற்கு சமமான உரிமத்தை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு, புதிய அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான கட்டணம் 15,000 ரூபாவிலிருந்து 60,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1453330

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம்.

1 month 3 weeks ago
A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம். இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது. 21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்துள்ளனர். இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை. மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. தவறு நிகழ்ந்ததால், தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், மாணவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது. இந்த விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1453370

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம்.

1 month 3 weeks ago

25-691eac8b60adb.jpg?resize=600%2C375&ss

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள்: யாழில் வரலாற்று சம்பவம்.

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில், உயிரியல் பாடத்தை எழுதிய 21 மாணவர்களின் முதலாம் பகுதிக்கான (பல்தேர்வு வினா) விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. நெல்லியடியின் பிரபல பாடசாலையொன்றில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் உயிரியல் பாடத்தின் பல்தேர்வு வினாப் பரீட்சை நடத்தப்பட்டது.

21 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி, முறைப்படி விடைத்தாள்களைக் கையளித்துள்ளனர்.

இந்த விடைத்தாள்கள் அன்றைய தினமே உரிய பாதுகாப்புகளுடன் திருத்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பரீட்சை நிலையத்தில் கடமையாற்றியவர்களின் கவனக்குறைவு காரணமாக, அவை உடனடியாக அனுப்பப்படவில்லை.

மூன்று நாட்களின் பின்னர் சென்று பார்த்தபோதே, காகிதாதிகளுடன் சேர்த்து அவை கட்டப்பட்டு, அனுப்பப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தவறு நிகழ்ந்ததால், தற்போது அந்த விடைத்தாள்களை திருத்தல் பணிகளுக்காக அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில், குறிப்பாக உயிரியல் போன்ற பாடங்களில், ஒரு சில புள்ளிகள் கூட மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலையில், தொடர்புடைய 21 மாணவர்களும் பெருமளவில் புள்ளிகளை இழக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது அவர்களின் இத்தனை ஆண்டுகால கல்வி வாழ்க்கையையும் அர்த்தமற்றதாக மாற்றியுள்ளதுடன், மாணவர்களை உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குள்ளும் தள்ளியுள்ளது.

இந்த விடயம் கல்வித் திணைக்களங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடனேயே, அந்தப் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றியவர்கள் அங்கிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கவனக்குறைவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக திணைக்கள ரீதியான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1453370

வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்!

1 month 3 weeks ago
நான் யாழ் நண்பர்களிமே முடி வெட்டுவது வழமை. நான் கட்டரில் இருந்த காலத்தில் அங்கு வந்து சொந்தமாக சலூன் போட்டு அதை இன்னும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கினறார்கள். இவர்கள் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். கொழும்பில் கூட நிறைய இடங்களில் இவர்கள்தான் முன்னனி சலூன்காரர்கள். சிங்களவர்கள் வந்து காத்திருந்து முடிவெட்டி செல்வார்கள். இராணுவம் நடத்துகின்ற சலூனுக்கு தமிழர்கள் ஏன் செல்கின்றார்கள்? இந்த செய்தியின்படி சிங்களவர்கள் தமிழர்களின் இந்த வியாபாரத்தை பிடிக்க நினக்கின்றார்களா?

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்!

1 month 3 weeks ago
சோகமான செய்தி. இனியாவது ஆனந்த சுதாகரனின் வயது வந்த பிள்ளைகளை பராமரிப்பு இன்றி தனியே விடாமல், தந்தையை விடுதலை செய்து... பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.