1 month 3 weeks ago
'காதல் சொல்லத் தூண்டாதோ?' பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான் கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன் விண்ணில் வாழும் தேவதை இவளோ மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ? உதடு பிரித்து முத்துப் புன்னகை உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை உதடு சுழித்து கொல்லும் புன்னகை உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் என் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவந்து காற்று என்னைப் போர்க்காதோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்து பொங்கும் நட்பைக் காதலாய் மாற்றாதோ? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்து அவளுக்கு காதல் சொல்லத் தூண்டாதோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'காதல் சொல்லத் தூண்டாதோ?' https://www.facebook.com/groups/978753388866632/posts/32458742860440941/?
1 month 3 weeks ago
அமெரிக்காவின் தற்போதய பொருளாதார நெருக்கடியினை Stagflation என கூறுகிறார்கள், InvestopediaWhat Is Stagflation, What Causes It, and Why Is It Bad?Stagflation is the combination of slow economic growth, high unemployment, and a high rate of inflation.இது வெறும் பணவீக்கம் மட்டுமல்ல வேலை இன்மையும் இணைந்த நிலையாக கூறப்படுகிறது, அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுனர் (இவருக்கும் ட்ரம்பிற்கும் ஒவ்வாமை உள்ளது) முன்னரே ட்ரம்பின் வரி யுத்தத்தின் விளைவுகள் பற்றி குறிப்பிடும் பொழுது கூறியிருந்தார். தொழில்துறை கடந்த கால தரவுகள் கூட அமெரிக்கா ஒரு பொருளாதார சரிவு நோக்கி செல்கிறது என்பதான ஒரு காட்சியினை வலுப்படுத்தியிருந்தது ஆனால் இறுதியாக வந்த PMI முடிவு ஒரு சாதகமான நிலையினை காட்டியுள்ளது (தொழில்துறையின் செலவீடு - இந்த குறியீடு 50 மேல் இருந்தால் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலை காணப்படும்) https://tradingeconomics.com/united-states/business-confidence குறித்த இணையத்தரவில் இறுதியாக வந்த தரவு இல்லை, இறுதியாக 52% வந்துள்ளது. தற்போது அமெரிக்க அரச பணியக முடக்க நிலை உள்ளதனால் வேலை வாய்ப்பு மாற்றங்கள் பற்றிய அரசின் தரவுகள் வெளியாகவில்லை ஆனால் இந்த மாதத்திற்குரிய ADP NFP தரவுகள் கூட ஒரு சாதகமான விளைவு கொண்டதாக வந்துள்ளது. https://tradingeconomics.com/united-states/adp-employment-change இது ஒரு தனியார் ஆய்வறிக்கைதான் ஆனால் சந்தையில் முதலீட்டாளர்கள் இதனடிப்படையில் முஇவுகளை எடுக்கிறார்கள், இது வரை காலமும் இறங்கி செல்கின்ற வேலை வாய்ப்பில் தற்போது ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம் பெரிதும் எதிர்பார்க்கும் மோசமான இன்னொரு விளைவாக செயற்கை நுண்ணறிவின் மித மிஞ்சிய நீர்குமிழ் நிலை, இந்த நிலையினை டொட் கொம் நீர்குமிழுடன் ஒப்புவமையாக கூறுகிறார்கள் முதலீட்டாளர்கள், இந்த செயற்கை நுண்ணறிவு கூட சில வெள்ளை கொலர் வேலையின்மையினை தூண்டுவதாக கூறுகிறார்கள். அமெரிக்க நாணயம் 15% உண்மை விலையினை விட அதிகமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள், இதனடிப்படைகளிலேயே ஒரு பொருளாதார சுறாவளி வருவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உல்கெங்கும் இதே நிலை இருக்கின்றது அவுஸ்ரேலியாவிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது ஆனால் அமெரிக்கா போன்று stagflation இல்லை, அமெரிக்காவின் பிரச்சினைக்கு பணவீக்கம் இருந்தாலும் வட்டி விகிதத்தினை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது, ஆனால் அவ்வாறான கையறு நிலை இன்னமும் அவுஸ்ரேலிய அரசிற்கு ஏற்படவில்லை. இதனிடையே இரஸ்சிய எரிபொருள் நிலைகளின் மீது உக்கிரேனின் தாக்குதலில் உலகின் 2% எண்ணெய் உற்பத்தி தடை செய்யப்பட்டது குறித்து உலகம் சந்தோசத்தில் உள்ளது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல உலக இயக்கம் உள்ளதோ என தோன்றுகிறது.