3 weeks 3 days ago
சந்தேகம் என்ன? இந்த மாபியாக்கள் கைது செய்யப்படும்போது, எதிர்கால கனவு ஜனாதிபதி பதறித்துடித்து, இதெல்லாம் தேவையில்லை, அபிவிருத்தி தான் நாட்டுக்கு தேவை என்று குதித்தாரே, இதிலிருந்து தெரியவில்லையா? சிலர் கொலை செய்யப்பட்டனரே, அதிலிருந்து தெரியவில்லையா முதலாளி முதலைகள் யாரென்று? இவர்களின் ஊழலை விசாரிக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு வெற்றி கிடைத்திருக்காது. இப்போ, தானாகவே சிக்கப்போகிறார்கள். அதை தவிர்ப்பதற்காக ஏழை மக்களை ஏமாற்றி, வீட்டுக்கு அழைத்து படம் காட்டி, தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்த மக்கள் தானே இவர்களை வேரோடு அரசியலில் இருந்து விரட்டியவர்கள்? இவர்களை தேர்தலில் வீட்டிற்கு அனுப்பியவர்களும் இந்த மக்கள் தானே? சிறை செல்வதென்று முடிவாகிவிட்டது, எப்படி சிறையில் சாதாரண சிறைக்கைதிகள் போல வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கொலையை மறைத்து, தப்ப முயற்சி பண்ணி இப்போ பல கொலைகள், கொள்ளைகள், ஊழல்கள் பெருகி இவர்கள் வெளியே வரமுடியாதளவுக்கு தண்டனை காலம் இவர்களது வாழுங்காலத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்ஷம் கொலைகளை, ஊழல்களை செய்தவர்களுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. பரம்பரையே உள்ளே போகப்போகிறது. குடும்பத்தில் ஒருவனாவது நல்லவன்? பெற்றவர்களைபோலவே பிள்ளைகளும் இருப்பார்கள். கசாப்புக்கடைக்காரருக்கு அரசியல் வந்தால், அரசியலும் கசாப்புக்கடையாய் மாற்றி விடுவார்கள், விட்டார்கள் முட்டாள்கள்.
3 weeks 3 days ago
கணவர் எதற்கு ?........!😂
3 weeks 3 days ago
தினமும் ஒரு வரி தத்துவம் · தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத் - நறுமட்டு சோமாஸ் - பிறைமடி பப்ஸ் - புடைச்சி பன் - மெதுவன் ரோஸ்டு - முறுவல் லட்டு - கோளினி புரூட் சாலட் - பழக்கூட்டு14:29 🌏" >68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,. 🌏">800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து. 🌏>400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன். >200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர். 🌏">உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது. 🌏" சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்..... 🌏"சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்... 🌏" >100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்... குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் .... மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!! தமிழன்டா.......... எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..! கண்டிப்பாக படித்து பகிரவும் .... தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?! அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன். 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800000 - குரல்வளைப்படி 1/575114661888000000 - வெள்ளம் 1/57511466188800000000 - நுண்மணல் 1/2323824530227200000000 - தேர்த்துகள். இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்......! 👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ். படித்து பகிர்ந்து Voir la traduction
3 weeks 3 days ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 04 பகுதி: 04 - பாசிக்குடா & அருகம் விரிகுடா (Arugam Bay) பாசிக்குடா (Pasikudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்றும் ஆகும். மேலும் அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, அதாவது, கரையிலிருந்து நெடுந்தொலைவு வரைக்கும் படிப்படியாக ஆழம் அதிகரித்துச் செல்லும் சிறப்புடன் எழில் மிக்க இயற்கை கடற்கரையாக விளங்குகிறது. முருகைக் கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற, நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” [Cabana] என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும். இந்த சிறப்புமிக்க பாசிக்குடாவிற்கு பயணம் குறுகியதாக இருந்தது, மேலும் கடற்காயல் அல்லது வாவி [lagoon] ஒரு பெரிய கண்ணாடியைப் போல நீண்டிருந்தது. குழந்தைகள் ஆழமற்ற நீரில் ஓடி, அலைகள் தங்கள் கணுக்கால்களை முத்தமிட சிரித்தனர். “தாத்தா, பார், நான் தண்ணீரில் நடக்க முடியும்!” என்று கலை முழங்கால் ஆழத்தில் நின்று கத்தினான். இசை தனது காற்சட்டை நனைந்து நீர் சொட்டும் மட்டும் கடல்நீரை அள்ளித் தெளித்து விளையாடினான். ஒரு விஞ்ஞானி போல் தீவிரமாக இருந்த ஜெயா, கடற் சிப்பிகளை சேகரித்தாள். “நான் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்குகிறேன்,” என்று அவள் தன் இரண்டு தம்பிக்கும் அறிவித்தாள். தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ஆனால் பாசிக்குடாவின் மணல் ஒரு காலத்தில் இரத்தத்தால் நனைந்திருந்தது. 1983 முதல் 2009 வரை, போர் இந்த சொர்க்கத்தை ஒரு போர்க்களமாக மாற்றியது. 2009 க்குப் பிறகு, சுற்றுலா வளர்ந்தது. ஹோட்டல்கள் காளான்களாகப் பெருகின, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தார்கள். ஆனால் உள்ளூர்வாசிகள் பலர் இன்னும் உடைந்த குடிசைகளில் வசித்து வருகின்றனர் என்பது இன்றைய நிலையாகும். “தாத்தா, ஏன் பெரிய ஹோட்டல்களில் விளக்குகள் ஏராளம் உள்ளன, ஆனால் அந்த சிறிய வீடுகள் இருட்டாக இருக்கின்றன?” என்று ஜெயா கேட்டாள். தாத்தா பெருமூச்சு விட்டார். “ஏனென்றால் சில நேரங்களில் பணம் [உறவுப்] பாலங்களுக்குப் பதிலாக, சுவர்களைக் கட்டுகிறது. [“Because sometimes money builds walls, not bridges.”]” என்றார். ஆனால் அலைகள் பழைய துயரங்களை மறைத்து, பல இன மக்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலமாகத், தங்கள் சிரிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தன. சுமார் 1600 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பிரமிக்க வைக்கும் கடற்கரையைக் கொண்டுள்ள அருகம் விரிகுடா எங்களை அலைமிதவைப் பலகையுடனும் [surfboards] சிரிப்புடனும் வரவேற்றது. இது ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அருகம் விரிகுடா குரங்குகள், யானைகள் மற்றும் முதலைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகளால் சூழப்பட்டிருப்பது இன்னும் ஒரு அதிர்ஷ்டம் ஆகும். இங்கு “சர்பிங்” [Surfing] எனப்படும் கடலில் சறுக்கு விளையாட்டு பெறும்பாலும் விளையாடப்படுகிறது. அருகம் விரிகுடாவிற்கு வருகை தருவதற்கு சிறந்த நேரமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதி அறிவிக்கபட்டுள்ளது. அருகம் பகுதியில் பல பெரிய விரிகுடாக்கள் உள்ளன அதில் ஒன்று தான் “எலிபன்ட் பாயிண்ட்” [Elephant point] ஆகும். இந்த வளைகுடாவின் முடிவிலுள்ள இந்த பாறை தமிழில் “யானைப்பாறை“ என்பார்கள். குடாவின் முழுப் பகுதியையும் இங்கு நின்று பார்க்கலாம். இரண்டு மணி நேர தடாகத்தில் சபாரி (Safari) செல்வது அருகம் விரிகுடாவில் செய்ய வேண்டிய பிரபலமான விடயங்களில் ஒன்றாகும். இங்கு யால தேசியப் பூங்கா அருகம் விரிகுடாவிற்கு மிக அருகில் இருப்பதால் சிறுத்தை போன்ற வனவிலங்குகளைக் அங்கு காணக்கூடியதாகவும் இருக்கிறது. கலை ஒரு அலைமிதவைப் பலகையை நோக்கி கைகாட்டி, “தாத்தா! அவன் கடலில் பறக்கிறான்!” என்று கத்தினான். “அது அலைச்சறுக்கு" அல்லது "கடல்சறுக்கல்", அது பறப்பதற்கு அல்ல, அங்கு சமநிலை வேண்டும் சறுக்குவதற்கு ” என்று சரிசெய்தாள் ஜெயா. இசை, “நானும் கடல்சறுக்கல் செய்கிறேன்!” என்று அறிவித்து, நீரினால் கழுவப்பட்ட ஒரு பலகையில் அமர்ந்தது இருந்தான். பேரப்பிள்ளைகளுக்கு இது வெறும் கடற்கரை மட்டுமல்ல. இது ஒரு சாகச விளையாட்டு மைதானம் ஆகும். எனவே அவர்கள் தாத்தாவின் உதவியுடன், பயிற்றுனர்கள் ஊடாக சிறிய சர்ஃப்போர்டுகளை [surfboards] பெற்றுக் கொண்டனர். “சரி, சிறிய சர்ஃப்பர்களே [surfers], பலகையில் படுத்துக் கொள்ளுங்கள், உங்கள் கைகளால் துடுப்பு போடுங்கள், பின்னர் அலை வரும் போது எழுந்து நிற்கவும்,” என்று பயிற்றுவிப்பாளர் விளக்கினார். ஜெயா தீவிரமாக தலையசைத்தார். கலை, “அலைகள் கடிக்குமா?” என்று கேட்டான். கடற்கரை முழுவதும் சிரிப்பில் மூழ்கியது. ஜெயா முதலில் சென்றாள். அவள் மூன்று வினாடிகள் எழுந்து நின்று, ஒரு பெரிய நீர் தெறிப்புடன் [splash] தண்ணீரில் விழுந்தாள். “தாத்தா, பார்த்தீர்களா? மூன்று வினாடிகள்!” என்று பெருமையுடன் கத்தினாள். கலை அவளைப் பின்பற்றினான், ஆனால் நிற்காமல், அவன் படுத்துக் கொண்டே ஒரு சூப்பர் ஹீரோ போஸ் [superhero pose] கொடுத்தான். “பாருங்க, நான் சர்ஃபிங் சூப்பர்மேன் [Surfing Superman!]” என்று கத்திவிட்டு, நேராக ஆழமற்ற நீரில் சறுக்கி விழுந்தான். குட்டி இசை ஒரு சிறிய லைஃப் ஜாக்கெட்டை [life jacket] அணிந்து கொண்டு, பலகையில் ஏறினான் - ஆனால் சர்ஃபிங்கிற்குப் [surfing] பதிலாக, அவர் ஒரு குழந்தை புத்தரைப் போல கால்களை மடித்து உட்கார்ந்து, அலை அவனை உலுக்கும் ஒவ்வொரு முறையும் கைதட்டினான். இதை பார்த்து சிரிப்புடன், கரையில் இருந்த கூட்டத்தினர் ரசித்தனர். பிறகு, குழந்தைகள் சிரித்துக் கொண்டே கத்தினார்கள்: “தாத்தா, இனி உங்கள் முறை!” ஆனால், தாத்தா மறுப்பு தெரிவித்தார், “ஐயோ, என் சர்ஃபிங் [surfing] நாட்கள் என்றோ முடிந்துவிட்டன.” ஆனால் பயிற்றுவிப்பாளர் எப்படியோ அவருக்கு ஒரு பெரிய பலகையைக் கொடுத்தார். அவர் படுத்து, துடுப்பு போட முயன்றார், நிற்க முயற்சித்த போது - கடலில், தண்ணீரைச் சிதறி விழுந்தார்! ஜெயா சிரித்தார். கலை கைகளைத் தட்டி, “தாத்தா இலங்கையின் வேகமான டைவர் [diver]!” என்று கத்தினான். இசையும் மகிழ்ச்சியுடன் கத்தினான், ஒவ்வொரு முறை விழும்போதும் “தாத்தா பூம்! [boom] தாத்தா பூம்! [boom]” என்று திரும்பத் திரும்பச் சொன்னான். அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! அருகம் விரிகுடா உலகப் புகழ் பெற்றது, ஆனால் அதன் அடியில் வடுக்கள் உள்ளன. ஒரு காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அருகருகே அங்கு நெருங்கி வாழ்ந்தன. போர் பலரைத் தள்ளிவிட்டன, அரசியல் அவர்களுக்கு இடையில் எல்லைகளை வரைந்தது. இன்று சுற்றுலா திரும்பியது என்றாலும், அங்கு அனைவரும் மீண்டும் வரவேற்கப்படவில்லை என்பது கவலைக்கு உரியது. அன்று இரவு, கடற்கரை நெருப்பின் அருகே அமர்ந்திருந்த தாத்தா அவர்களிடம் மெதுவாகச், “குழந்தைகளே, இங்குள்ள அலைகள் இனிய இசையையும் அல்லது சங்கீதத்தையும் (music), அதே நேரம் துப்பாக்கிச் சூட்டையும் அன்று கேட்டுள்ளன. ஆனால் இன்று, அவை தாலாட்டுப் பாடல்களாக மட்டுமே ஒலிக்கின்றன. அது இப்படியே இருக்கட்டும், தொடரட்டும்.” என்றார். அவர்கள் மிகவும் களைப்பில் இருந்ததால், தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டார்கள், கடல் அவர்களை கனவுகளில் ஆழ்த்தியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/31848062914842275/?
3 weeks 3 days ago
இன்று அவுஸ்ரேலியா எதிர் வங்கிளாதேஸ் விளையாட்டை பார்ப்பதிலும் விட போத்தி மூடிட்டு படுக்கலாம் அவுஸ்ரேலியா சிம்பிலா வெல்லும்.....................
3 weeks 3 days ago
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு படம் ரத்ததிலகம்
3 weeks 3 days ago
இந்த பாதாள உலக ஆட்கள் எல்லாம் ஏன் சினிமா ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள்? 🤔 இலங்கையின் Most wanted Criminals. ஆனா விஷயம் தெரியாதவர்களிடம் இந்த போட்டோக்களைக் காட்டினால் நம்பவே மாட்டார்கள். மக்களே தெரிந்துகொள்ளுங்கள் - வாழ்க்கையில் திருப்தியாக, நிம்மதியாக வாழ “அழகு” மட்டும் இருந்தால் போதாது. Rajeevan Ramalingam
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
அமுலுக்கு வந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்! தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி மோதல்கள் பதற்றங்களை அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் புதன்கிழமை (15) தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன்படி, எல்லைப் பதற்றங்களைத் தணிக்க ஆப்கானிஸ்தான் தரப்பு வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இஸ்லாமபாத் வெளிவிவகார அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அதே நாளில் சமூக ஊடகங்களில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார். பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோள், வற்புறுத்தலின் பேரில் இரு நாடுகளுக்கும் இடையே புதன்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று முஜாஹித் கூறினார். அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் எந்த தாக்குதலையும் நடத்தாத வரை, போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதன் அனைத்துப் படைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல நாட்கள் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சண்டை மற்றும் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இரு இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான மிக மோசமான மோதல் இதுவாகும். பாகிஸ்தானில் தாக்குதல்களை அதிகரித்த போராளிகளைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் கோரியதைத் தொடர்ந்து, முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான அண்மைய மோதல் வெடித்தது. போராளிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தாலிபான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தான் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், எல்லைப் பதற்றங்களைத் தூண்டுவதாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் கூறியுள்ளது. எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலின் விளைவாக பொது மக்கள் பலர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450482
3 weeks 3 days ago
செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா தக்ஷி? October 16, 2025 குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய், துபாய்க்கு அடிக்கடி வருபவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஒரு ஆவணமற்ற குற்றவாளி என்றும், குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சர்வதேச மாஃபியா கும்பல்களுடன் அவருக்கு பல தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே இதற்காக ஜே.கே. பாய்க்கு ரூ. 10 மில்லியன் வழங்கியுள்ளார். இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மேலும் விசாரணை தேவை என்று சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து இஷாரா செவ்வந்தி மற்றும் ஜே.கே. பாயிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். விசாரணைகளில் இருந்து இதுவரை தெரியவந்துள்ளபடி, ஜே.கே. பாய் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துபாய்க்கு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக சட்டப்பூர்வமாக திரும்பியதாக எந்த தகவலும் இல்லை என்றும் சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இஷாரா செவ்வந்தியை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை ஜே.கே. பாயின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பதை சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்த பிறகு, அவரைப் பிடிக்கும் ரகசிய நடவடிக்கை இலங்கை காவல்துறை அதிகாரிகளின் மிகக் குறைந்த குழுவை மட்டுமே உள்ளடக்கியது. அண்டை நாட்டின் பொது புலனாய்வுப் பிரிவும் இதற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஹோட்டல் முன்பதிவு இஷாரா சேவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெளிவாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இன்டர்போலின் உதவியுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை மூத்த துணை காவல் ஆய்வாளர் அசங்க கரவிட்ட உள்ளிட்ட சிஐடி அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையில் 6 வாரங்களுக்குத் திட்டமிட்டனர். இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கைக்கான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் இந்த நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு அனுப்பப்பட தேர்வு செய்யப்பட்டனர். இலங்கை ஹோட்டல் முன்பதிவு அதன்படி, இந்த இரண்டு அதிகாரிகளும் இஷாராவைக் கைது செய்யும் நடவடிக்கைக்காக 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்கள். கடந்த சில நாட்களாக ரோஹன் ஒலுகல உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி வந்தார். அவர் பல நாட்களாக தனது கடமை நிலையத்திற்கு கூட வரவில்லை. 11 ஆம் திகதி காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இலங்கை விமானத்தில் நேபாளம் சென்றபோது, அவரது உடல்நிலை சீராக இருந்தது. அவர்கள் நேபாளத்தில் தரையிறங்கியபோது, அவர்களை வரவேற்க நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களுடன் தூதரகத்திற்கு வந்த ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, முதலில் அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளைச் சந்தித்தனர். இன்டர்போலின் நேபாள கிளையின் அதிகாரிகளுடனும் அவர்கள் கலந்துரையாடினர். இலங்கை ஹோட்டல் முன்பதிவு இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கையில் துபாயில் உள்ள மற்றொரு குழு ஏற்கனவே ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இஷாராவை நேபாளத்திற்கு அழைத்து வந்து தங்குமிடம் அளித்த ஜே.கே. பாய் பற்றி அவர்தான் அறிந்திருந்தார். அந்த நேரத்தில் ஜே.கே. பாய் ஏற்கனவே நேபாளத்தில் இருந்தார். இஷாரா செவ்வந்தியைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு நேபாளத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையின் ஒரு குழு ஏற்கனவே தயாராக இருந்தது. ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா அந்தக் குழுவுடன் சென்று முதலில் ஜே.கே. பாய்யைக் கைது செய்தனர். அந்த நேரத்தில் அவர் காத்மாண்டு அருகே தங்கியிருந்தார். சோதனையின் போது, அவரது சரியான இடம் குறித்து எந்த அதிகாரிக்கும் தெரியாது. எனவே, ஜே.கே. பாயை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை துபாயில் இருந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிறகு விசாரணையின் போது, ஜே.கே. பாய் தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார், ஆனால் இந்த நாட்டிலிருந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியின் மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்த பிறகு அவரது வாய் திறந்தது. அந்த அழைப்பு ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்தது. அந்த அதிகாரி வீடியோ அழைப்பு மூலம் ஜே.கே. பாயை அழைத்தார். “பாய், எங்களுக்கு உதவுங்கள். இஷாரா எங்கே என்று சொல்லுங்கள்,” என்று அவர் உரையாடலைத் தொடங்கினார். “இஷாரா யார், எனக்கு எதுவும் தெரியாது,” என்று ஜே.கே. பாய் கூறினார். ஜே.கே. பாய்க்கு சிங்களம் நன்றாகப் பேசத் தெரியாது. அவருக்கு சிங்களம் நன்றாகப் புரிந்தாலும், சில வார்த்தைகளில் மட்டுமே சிங்களத்தில் பேசத் தெரியும். “நீ உன் மனைவியையும் குழந்தைகளையும் நேசிக்கிறாய், இல்லையா? தற்போது சிஐடி அவர்கள் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளது. இந்த விஷயத்தில் நீ எங்களுக்கு உதவவில்லை என்றால், நாங்கள் அனைவரையும் கைது செய்வோம். நீ கஷ்டப்பட வேண்டியிருக்கும், பாய்.” ஜே.கே. பாய் காவல்துறைத் தலைவரின் வலையில் சிக்கினார். “ஐயா, அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவளை ஒரு முகவரிடம் ஒப்படைத்தேன்.” சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோசித்த பிறகுதான் பாய் வாய் திறந்தார். ஜே.கே. பாய் நேபாளத்தில் உள்ள ஒரு தரகரைப் பற்றி ஏதோ சொல்லவிருந்தார். ஜே.கே. பாய் அளித்த தகவலின் அடிப்படையில் நேபாள போலீசார் அந்த தரகரைக் கைது செய்தனர். விசாரணையின் போது, தரகர் இரண்டு வாரங்களுக்கு முன்பு செவ்வந்தி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். அது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். ஏனென்றால் அவர் வேறொரு தரகருக்கு வேலையை ஒதுக்கியிருந்தார். தரகரைத் தொடர்பு கொண்டபோது, இஷாரா நாட்டில் பயன்படுத்தும் ஒரு மொபைல் போன் எண்ணைத் தவிர, அவரது சரியான இருப்பிடம் குறித்து வேறு எதையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து, இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கை அவரது மொபைல் போன் எண் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மொபைல் போன் பக்தபூர் மாவட்டத்தில் இயங்கி வருவது தெரியவந்தது. இந்தப் பகுதி இலங்கையில் உள்ள நுவரா எலியாவைப் போன்றது. நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கின் கிழக்கு முனையில், தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் நகரம், நேபாளத்தின் மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இலங்கை ஹோட்டல் முன்பதிவு நேபாள போலீஸ் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவிலிருந்து பக்தபூருக்கு ஒலுகல மற்றும் கிஹான் சில்வாவை அழைத்துச் சென்றது. தொலைபேசி சிக்னல்கள் வெளியிடப்படும் இடம்தான் காவல் குழுவின் இலக்காக இருந்தது. சிக்னல்கள் சுமார் 800 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருந்ததால், அது அவர்கள் நினைத்த அளவுக்கு எளிதானது அல்ல என்று காவல் குழு கண்டறிந்தது. அந்தப் பகுதி மக்கள் தொகை அதிகமாகவும், சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருந்ததால், வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து இஷாராவைத் தேடுவது எளிதான காரியமல்ல. நேபாளத்தில் உள்ள சட்டப்பூர்வ சூழ்நிலையைப் பொறுத்தவரை, வீடு வீடாகவும், கட்டிடத்திலிருந்து கட்டிடமாகவும் செல்வது சிக்கலாக உள்ளது. மத்திய காவல்துறையின் அறிவிப்பின் பேரில் உள்ளூர் காவல்துறையினர் குழு ஏற்கனவே அங்கு வந்திருந்தது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் வீடுகளை ஒவ்வொன்றாகச் சோதனை செய்யச் சென்றால், இருட்டுவதற்குள் வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து முடிக்க முடியாது. நேபாள காவல்துறையினர் இரவில் செயல்படுவதில்லை. ஒரு சிறப்பு விஷயத்தின் காரணமாக இரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், மேலிடத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இது சாத்தியமற்றது என்பதால், ரோஹன் ஒலுகல உள்ளிட்ட குழு, இஷாராவை அவரது இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று கைது செய்வது பொருத்தமானது என்று முடிவு செய்தது. ஜே.கே. பாய் இதற்கு பயன்படுத்தப்பட்டார். ஒரு திட்டத்தின்படி ஜே.கே. பாய் மூலம் இஷாராவின் மொபைல் போனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் குழுவும் இதற்குப் பின்னால் இருந்தது. அந்த அழைப்பின் மூலம், இஷாராவை ஏமாற்றி, பக்தபூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தனது செலவுகளுக்குத் தேவையான பணத்தை பெற வருமாறு அழைப்பதே திட்டம். காவல்துறையின் திட்டத்தின்படி, ஜே.கே. பாய், செவ்வந்திக்கு போன் செய்து, அங்கு வர வேண்டிய நேரத்தையும் சொன்னார். அது மறுநாள் காலை. அன்று, நேபாள காவல்துறை ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்தது. ஜே.கே. பாயும் ஏற்கனவே அவர்கள் காவலில் இருந்தார். இஷாரா செவ்வந்தியைக் கைது செய்ய, நேபாள காவல்துறை குழு, ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வாவுடன் ஆகியோர் ஜே.கே. பாய் முந்தைய நாள் செவ்வந்தியை வரச் சொன்ன இடத்திற்குச் சென்றது. நேபாள உள்ளூர் காவல்துறையினர் இஷாராவை அவள் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யும் நம்பிக்கையை கைவிடவில்லை. இரவு முழுவதும் அந்தப் பகுதியில் தங்கியிருந்த அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரித்து வந்தனர். அதன்படி, திங்கட்கிழமை காலை, அவள் வீட்டை விட்டு வெளியே வரவிருந்தபோது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் அவள் கைது செய்யப்பட்டாள். அந்த நேரத்தில், ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஏற்கனவே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் வேறொரு இடத்தில் இருந்தனர். உள்ளூர் போலீசார் இஷாரா கைது செய்யப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவித்ததும், ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, நேபாள போலீஸ் குழுவுடன் சேர்ந்து, அந்த இடத்திற்குச் சென்று, முந்தைய நாள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகிலேயே செவ்வந்தி தங்கியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். வாரக்கணக்கில் நீடித்த சிறப்பு நடவடிக்கையின் விளைவாக இஷாராவைக் கைது செய்த பிறகு, ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா வெற்றியைக் கொண்டாடவும், அவளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு மற்றொரு நடவடிக்கை ஒதுக்கப்பட்டது. ஜே.கே. பாயால் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதன்படி கைது செய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும் நேபாளத்தின் மற்றொரு பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அந்தப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முதல் பார்வையில் அவர் இஷாராவைப் போலவே இருந்தார். இதேபோல். அதிகாரிகள் அவரை இஷாராவின் போலி என்று அழைத்தனர். அவர் பெயர் தக்ஷி. அவருடன் சுரேஷ் என்ற நபரும் இருந்தார். சுரேஷும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கொலை உட்பட பல குற்றங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தக்ஷியுடன் நேபாளத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு வந்திருந்தனர். ஜூலை 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் இந்தியாவுக்குச் சென்றதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தக்ஷி நேபாளத்திற்கு வந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் செல்லத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவர் பாபி மற்றும் பாபா. பாபி நுகேகொடவைச் சேர்ந்தவர். பாபா கம்பஹாவைச் சேர்ந்தவர். பாபி மற்றும் பாபா பாதாள உலக குற்றவாளிகள். அவர்கள் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டவர்கள். 2019 ஆம் ஆண்டு நுகேகொடவின் ஜம்புகஸ்முல்லவில் ஒரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க துபாய்க்கு தப்பிச் சென்றார். அவருடன் கைது செய்யப்பட்ட நபர் கெஹல்பத்தர பத்மேவின் சீடர். கம்பஹா பகுதியில் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இஷாராவை கைது செய்யச் சென்ற ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் நேற்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வந்தனர். இந்தக் குழுவை அழைத்து வருவதற்காக நேற்று காலை இலங்கையில் இருந்து காத்மாண்டுவுக்குப் புறப்பட்ட விமானத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் மேலும் இரண்டு அதிகாரிகள் இருந்தனர். இந்த காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு கூடுதலாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் காவலர்களின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு பெண் விமானப் பாதுகாப்பு அதிகாரியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 மாதங்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியின் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும். இலங்கை ஹோட்டல் முன்பதிவு இந்த நடவடிக்கையில், இஷாராவை விட ஜே.கே. பாய் காவல்துறைக்கு மிகவும் முக்கியமானவர். அந்த பாதாள உலகக் குற்றவாளிகளில் பலரை நாட்டிலிருந்து நாடு கடத்தி வெளிநாட்டில் தங்குமிடம் வழங்க சர்வதேச மாஃபியா குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர் அவர்தான். ஜே.கே. பாயை விசாரிப்பதன் மூலம், இந்த வலையமைப்பு அம்பலப்படுத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது. https://pagetamil.com/2025/10/16/செவ்வந்தியை-விட-முக்கியம/
3 weeks 3 days ago
ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்! பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன்படி பணயக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மொத்தம் 28 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது. அண்மையில், பணயக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது. இதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2025/1450477
3 weeks 3 days ago

ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்!
பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன்படி பணயக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர்.
மொத்தம் 28 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது.
பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது.
அண்மையில், பணயக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
https://athavannews.com/2025/1450477
3 weeks 3 days ago
அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்! கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி புதன்கிழமை (15) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு, பகுதி அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் பணி நீக்கங்கள் சட்டவிரோதமானது என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை அவர் பரிசீலித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த விசாரணையின் போது, வழக்கு தொடரும் வரை 30க்கும் மேற்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிநீக்கங்களைத் தடுக்க இரண்டு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன் ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு விரைவில் மேல்முறையீடு செய்யப்படலாம். ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தினால் தங்கள் பதவிகளைக் குறைக்க சுமார் ஒரு வருட காலமாக அழுத்தம் கொடுத்து வரும் கூட்டாட்சி ஊழியர்களுக்கு இது ஒரு நிவாரணத்தை வழங்குகிறது. அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது அதன் 15 ஆவது நாளில், அமெரிக்க அரசாங்கம் முழுவதும் கணிசமான பணிநீக்கங்களைத் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் கூறியது. புதன்கிழமை ஒரு உத்தரவில், புதிய கூட்டாட்சி ஊழியர்களை பணியமர்த்துவதில் ஏற்கனவே இருந்த முடக்கத்தை ட்ரம்ப் நீட்டித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450478
3 weeks 3 days ago

அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்!
கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி புதன்கிழமை (15) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு, பகுதி அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் பணி நீக்கங்கள் சட்டவிரோதமானது என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை அவர் பரிசீலித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடந்த விசாரணையின் போது, வழக்கு தொடரும் வரை 30க்கும் மேற்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிநீக்கங்களைத் தடுக்க இரண்டு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன் ஏற்றுக்கொண்டார்.
இந்த முடிவு விரைவில் மேல்முறையீடு செய்யப்படலாம்.
ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தினால் தங்கள் பதவிகளைக் குறைக்க சுமார் ஒரு வருட காலமாக அழுத்தம் கொடுத்து வரும் கூட்டாட்சி ஊழியர்களுக்கு இது ஒரு நிவாரணத்தை வழங்குகிறது.
அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது அதன் 15 ஆவது நாளில், அமெரிக்க அரசாங்கம் முழுவதும் கணிசமான பணிநீக்கங்களைத் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் கூறியது.
புதன்கிழமை ஒரு உத்தரவில், புதிய கூட்டாட்சி ஊழியர்களை பணியமர்த்துவதில் ஏற்கனவே இருந்த முடக்கத்தை ட்ரம்ப் நீட்டித்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1450478
3 weeks 3 days ago
சமாதானத்துக்கான நோபல் பரிசு sudumanal 2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார். இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது. யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார். பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர். அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர். சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர் இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர். அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு. கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya) நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார். மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை. எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார். இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது! ravindran.pa https://sudumanal.com/2025/10/11/சமாதானத்துக்கான-நோபல்-பர/
3 weeks 3 days ago
சமாதானத்துக்கான நோபல் பரிசு
sudumanal

2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார்.
இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது.
யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார்.
பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர்.
அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர்.
சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர்

இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர்.
அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு.
கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya)
நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார்.
மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை.
எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார்.
வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார்.
இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது!
3 weeks 3 days ago
செவ்வந்தி… கள்ளத் தோணியில் இந்தியா போய், நேபாளத்தில் இருந்து விமானத்தின் மூலம், தாய் நாட்டிற்கு வரும் போது… கொடுப்புக்குள் சிரிப்பு வரத்தான் செய்யும். 😁 😂 🤣
3 weeks 3 days ago
பாதிக்கப்பட்டால் மேன் முறையீடு செய்யலாம் - வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக அதிகாரிகளுக்கு கூறிய வடக்கு ஆளுநர் வியாழன், 16 அக்டோபர் 2025 05:51 AM வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் எனவும், மேன்முறையீடு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவால் ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீடுக் குழுவால் உரிய நிவாரணம் தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனக் கருதுவும் எந்தவொரு ஆசிரியரும் முறையே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு, ஆளுநருக்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார். அதேவேளை ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/51330
3 weeks 3 days ago
நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் October 16, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில் 2022ஆம் ஆண்டு உருவான தீவிர பொருளாதார நெருக்கடியில் நாட்டின் வரிக்கொள்கை மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததுடன் கல்வி மற்றும் ஏனைய பொதுச்சேவைகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை பல தசாப்தகாலமாக வருமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய பொருளாதாரக்கொள்கைகளின் பணயக்கைதியாக இருந்துவந்திருக்கிறது. அதனையடுத்து கல்வித்துறைக்கான செலவினங்களில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி, உலகளாவிய அரங்கில் இலங்கையின் கல்வி நிலைவரத்தைப் பின்னடையச்செய்தது. இதுகுறித்து ஆராய்வதற்காக இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அரச கல்விக் கட்டமைப்பின் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக 70க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. அத்தோடு இலங்கையின் வரிக்கொள்கைகள் மற்றும் கல்வித்துறைக்கான செலவினங்கள் தொடர்பில் தரவு அடிப்படையிலான பரந்துபட்ட ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொள்கைசார் தோல்விகள் சிறுவர்களின் கல்விக்கான உரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகளில் கல்வித்துறையில் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான இரு தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5 சதவீதமாகக் காணப்பட்ட கல்வித்துறைக்கான செலவினங்கள், கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதற்கு குறைந்தளவு வரி வருமானமும் மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து வேலை இழப்பு மற்றும் வருமான வீழ்ச்சி என்பன தீவிரமடைந்ததுடன் மனித உரிமைகளில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்தது. மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மாத்திரம் போதுமானதன்று என்பதை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்நிலையில் செயற்திறன்மிக்க வரிக்கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதுடன் அவ்வருமானத்தை சகல இலங்கையர்களும் பயனடையக்கூடியவகையில் கல்வி மற்றும் ஏனைய அரசசேவை வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. www.ilakku.orgநியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் - மனித...ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு
3 weeks 3 days ago
நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்
October 16, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையில் 2022ஆம் ஆண்டு உருவான தீவிர பொருளாதார நெருக்கடியில் நாட்டின் வரிக்கொள்கை மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததுடன் கல்வி மற்றும் ஏனைய பொதுச்சேவைகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை பல தசாப்தகாலமாக வருமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய பொருளாதாரக்கொள்கைகளின் பணயக்கைதியாக இருந்துவந்திருக்கிறது. அதனையடுத்து கல்வித்துறைக்கான செலவினங்களில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி, உலகளாவிய அரங்கில் இலங்கையின் கல்வி நிலைவரத்தைப் பின்னடையச்செய்தது.
இதுகுறித்து ஆராய்வதற்காக இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அரச கல்விக் கட்டமைப்பின் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக 70க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. அத்தோடு இலங்கையின் வரிக்கொள்கைகள் மற்றும் கல்வித்துறைக்கான செலவினங்கள் தொடர்பில் தரவு அடிப்படையிலான பரந்துபட்ட ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொள்கைசார் தோல்விகள் சிறுவர்களின் கல்விக்கான உரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகளில் கல்வித்துறையில் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான இரு தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5 சதவீதமாகக் காணப்பட்ட கல்வித்துறைக்கான செலவினங்கள், கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதற்கு குறைந்தளவு வரி வருமானமும் மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து வேலை இழப்பு மற்றும் வருமான வீழ்ச்சி என்பன தீவிரமடைந்ததுடன் மனித உரிமைகளில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்தது.
மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மாத்திரம் போதுமானதன்று என்பதை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்நிலையில் செயற்திறன்மிக்க வரிக்கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதுடன் அவ்வருமானத்தை சகல இலங்கையர்களும் பயனடையக்கூடியவகையில் கல்வி மற்றும் ஏனைய அரசசேவை வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

www.ilakku.org

நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் - மனித...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு