Aggregator
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
எம்.பி.கமல்ஹாசன்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள்.

கமல்ஹாசன்
இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.
இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன்.
எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன்.

ஸ்டாலின், கமல்ஹாசன்
இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி.
பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார்.
கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார்.

கமல்ஹாசன்
தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே). தமிழ் என்றும் வாழும் நலமுடன்." என்றார்.
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அதிசயக்குதிரை
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
04 Feb, 2026 | 06:13 PM
![]()
(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது.
நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார்.
78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.
அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்
04 Feb, 2026 | 04:22 PM
![]()
நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் நாங்க் “மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம்.
அவர்கள் தற்போது மீண்டும் “மிட்நைட் ஹேமர்” போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை (3) அமெரிக்காவின் “யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்” விமானம் தாங்கிக் கப்பலை, அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக நெருங்கிச் சென்ற ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனையே அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானமே அந்த ட்ரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர்.
ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ட்ரோன் மீதான தாக்குதலின்போது அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ அல்லது உபகரண சேதமோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.