3 weeks 2 days ago
தென்னாப்பிரிக்கா வென்றால் 8 புள்ளிகள் . மிகுதி இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா தோல்வியுற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். நியூசிலாந்துக்கு மிகுதி 3 போட்டிகளும் வென்றால் 9 புள்ளிகள். இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை தவிர மிகுதி 2 போட்டிகளில் வென்றால் 8 புள்ளிகள். இங்கிலாந்துக்கு ஒரு போட்டியில் மட்டுமே வென்றால் 9 புள்ளிகள் (அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி) தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் சமபுள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகித அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லமாட்டாது.
3 weeks 2 days ago
இஷாரா செவ்வந்தி ஒன்றும் நேற்று இயங்கத்தொடங்கியவரல்லர். அவரது குழு, தலைவர்கள், இயக்கியவர்கள், இயங்கியவர்களென உங்கள் குடும்ப ஆட்சியிலிருந்தே உள்நாட்டுக்குள் இயங்குகிறார்கள். ஆனால் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ, பயங்கரவாதிகளை அழித்தோம் என மார்தட்டும் உங்களால் முடியவில்லையே. காரணம் என்ன? நீங்கள் சாதித்தவைகள் இவையா? அன்றி பயங்கரவாதத்தை நாங்கள் அழித்தோம் என்று பெருமைப்படுவது இன்னொருவரின் சாதனையை உங்களது ஆக்குவதா? யாரவது நாட்டுக்கு நல்லது செய்தால், சாதித்தால் உங்களுக்கு பொறுக்காது, அதை உங்களது ஆக்குவதற்கு எது வேண்டுமானாலும் செய்து போலிப் பெருமை தேடுவீர்கள். நீங்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தீர்கள் இத்தனை ஆண்டுகளாய் ஆட்சி செய்தபோது? அதன் பயன்தான் இப்போ வெளிவருகிறதே. இதுவும் மக்களுக்கான சேவை என்பதை புரிந்து கொள்ளத்தெரியாதவருக்கு ஜனாதிபதி ஆசை வேறு. ஏன் இவர் சும்மா வாயை கொடுத்து தன்னை காட்டிக்கொடுத்து மாட்டிக்கொள்கிறார்?