Aggregator

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொல்லை சட்ட ஆவணங்களில் சேர்க்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - விஜித்த ஹேரத்

3 weeks 6 days ago
இது மலையகத் தமிழர்களுக்கு நன்மையாகவும் முடியலாம், தீமையாகவும் முடியலாம். இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தான் பெரும்பாலான உத்தியோக பூர்வ ஆவணங்களின் மூல ஆவணமாக இருக்கிறது. பிறப்புச் சான்றிதழின் "பெற்றோரின் இனம்" என்ற அடையாளத்தில் முன்னர் "சிலோன் தமிழ்" என்றும், பின்னர் "சிறிலங்காத் தமிழ்" என்றும் வடக்கு கிழக்குத் தமிழர்களைக் குறிக்கும் வழமை இருந்தது. அந்த வேளையில் "இந்தியத் தமிழர்" என்ற அடையாளம் மலையகத் தமிழர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது என நினைக்கிறேன். "இந்தியத் தமிழர்" என்ற அடையாளம், அந்த மக்களை வேலைவாய்ப்பு உட்பட்ட பல விடயங்களில் ஒதுக்கி வைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. 2020 இல் பெற்றோரின் இனம், மதம் ஆகிய தகவல்களை நீக்கி "சிறிலங்காப் பிரஜை" என்ற ஒற்றை அடையாளத்தை பிறப்புச் சான்றிதழில் கொண்டு வர முயன்ற போது விமல் வீரவன்ச உட்பட்ட பல இனவாதிகளின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப் பட்டது. தற்போது வழமை போல சிறிலங்காத் தமிழர், சிங்களவர், மூர், என்ற அடையாளங்களோடு "மலையகத் தமிழர்" என்ற அடையாளமும் சேர்க்கப் படுகிறதென நினைக்கிறேன்.

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 weeks 6 days ago
இந்த பரிசை கொடுக்கும் நாட்டுக்கு / அரசுக்கு, நோர்வேக்கு, எதாவது தகுதி இருக்கிறதா?

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 weeks 6 days ago
கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் August 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில் 97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில் நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தமைக்காகவும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதற்காகவும் 1906 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ற்றுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக அமைந்த நாடுகள் கழகத்தை (League of Nation) அமைத்தமைக்காக 1919 ஆம் ஆண்டில் வூட்ரோ வில்சனுக்கும் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக ஒபாமாவுக்கு அவர் பதவிக்கு வந்த 2009 ஆம் ஆண்டிலேயே அந்த பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கும் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கு சமாதானத் தீர்வுகளைக் காண்பதற்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் அயராத முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக 2002 ஆம் ஆண்டில் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. பில் கிளின்டனின் இரு பதவிக்காலங்களிலும் (1993 — 2001) துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோருக்கு காலநிலை மாற்றம் குறித்து செய்த ஆய்வுகளுக்காகவும் அவை தொடர்பிலான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பியமைக்காகவும் 2007 ஆம் ஆண்டில் அந்த பரிசு கிடைத்தது. அது தவிர, ஹென்றி கீசிங்கர் உட்பட நான்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர்களும் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றனர். ஆனால், அவர்களில் எவருமே தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று நோபல் சமாதானப் பரிசைப் பெறுவதற்காக தாங்களாகவே ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதாக நாம் இதுவரையில் அறியவில்லை. உலகின் பல்வேறு பாகங்களிலும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்று அவரே கூறிவருகிறார். கடந்த ஜனவரியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வந்த பிறகு ஐந்து மாதங்களில் ஐந்து சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தியதாக கடந்த வாரம் கூறிய ட்ரம்ப் உக்ரெயினில் தொடரும் போருக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மீது குற்றம் சுமத்தினார். உலக நாடுகள் மீது அடாவடித்தனமாக வரிகளை விதித்து வருவதால் சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய ஒரு பிரபல்யத்தை பெற்றிருக்கும் ட்ரம்ப் கடந்த மாதம் நோர்வேயின் நிதியமைச்சர் ஜெனஸ் ஸ்ரொல்ரன்பேர்க்குடன் வரிவிதிப்புகள் குறித்து தொலைபேசியில் பேசியபோது நோபல் சமாதானப் பரிசை பெறுவதற்கு தான் விரும்புவதாக கூறியதாக நோர்வே பத்திரிகைகள் கடந்த வாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அமெரிக்க நிதியமைச்சர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி உட்பட வெள்ளை மாளிகையின் பல்வேறு அதிகாரிகளும் தன்னுடன் பேசியதாக ஸரொல்ரன்பேர்க் ஊடகங்களுக்கு கூறினார். இந்திய — பாகிஸ்தான், இஸ்ரேல் — ஈரான், தாய்லாந்து — கம்போடியா, ருவாண்டா — கொங்கோ ஜனநாயக குடியரசு, சேர்பியா — கொசோவா, எகிப்து — எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆறு மோதல்களை ஜனாதிபதி ட்ரம்ப் முடிவுக்கு கொண்டுவந்ததாக வெள்ளைமாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிற் சில தினங்களுக்கு முன்னர் கூறினார். மாதத்துக்கு ஒரு சமாதான உடன்படிக்கையும் போர்நிறுத்தமும் செய்யப்படுவதற்கான வெற்றிகரமான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு நோபல் சமாதானப் பரிசை வழங்குவதற்கு காலம் தாமதித்துவிட்டது என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மூண்டமோதலுக்கு முடிவைக்கட்டியதாக ட்ரம்ப் உரிமை கோருகின்ற போதிலும், இந்தியா அதை நிராகரிக்கின்றது. தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் தனது கோரிக்கையை அடுத்தே மோதலை நிறுத்தியதாக அவர் இதுவரையில் பல தடவைகள் கூறியிருக்கிறார். தனது தலையீடு இல்லாதிருந்திருந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணுவாயுதப் போராக மாறியிருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை கூட ட்ரம்ப் கூறினார். இரு நாடுகளினதும் இராணுவ உயர் மட்டங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பாடல்களை தொடர்ந்தே நான்கு நாள் மோதல்கள் நிறுத்தப்பட்டதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறுகின்ற போதிலும், பாகிஸ்தான் ட்ரம்பின் கூற்றை இதுவரையில் மறுதலிக்கவில்லை. பதிலாக, “மோதல்களின்போது தீர்க்கமான இராஜந்திர தலையீட்டைச் செய்து முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கியதற்காக” நோபல் சமாதானப் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயரை பிரேரிக்கப் போவதாக ஜூன் மாதம் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. இராணுவத் தளபதி அசீம் முனீருக்கும் ட்ரம்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கு பின்னரே அந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு நோபல் சமாதானப் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பிரேரித்து நோபல் கமிட்டிக்கு தான் அனுப்பிய கடிதத்தை அவரிடம் கையளித்தார். எல்லைத் தகராறு காரணமாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் ஜூலையில் மூண்ட ஐந்து நாள் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்த போர்நிறுத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமித்திருப்பதாக கம்போடிய பிரதமர் ஹுன் மனெற் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்தார். முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நீடித்துவந்த மோதல்ளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 8 வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஏற்பாடு செய்த “சமாதான உச்சிமகாநாட்டில்” இரு நாடுகளின் தலைவர்களும் நோபல் சமாதானப் பரிசுக்காக அவரின் பெயரை கூட்டாக நியமிப்பதாக உறுதியளித்தனர். தனது நாட்டுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்பை தவிர வேறு எந்த தலைவரினாலும் முடிந்திருக்காது என்று கூறிய ஆர்மேனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான், நோபல் சமாதானப் பரிசுக்காக பிரேரிப்பதற்கு கடிதவரைவு ஏதாவது கைவசம் இருந்தால் உடனடியாகவே அதில் கையெழுத்திடுவதாக ட்ரம்பிடம் நகைச்சுவையாக கூறியதாக ஊடகங்கள் கூறின. ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி வகித்த பாத்திரத்துக்காக அவரின் பெயரை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்யும் யோசனைக்கு அந்த இரு நாடுகளின் தலைவர்களும் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையில் ஐந்து நாடுகளின் தலைவர்கள் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சமாதானப் பரிசுக்காக செய்யப்பட்ட உண்மையான உத்தியோகபூர்வ நியமனங்கள் அந்தரங்கமாகவே வைக்கப்பட்டிருக்கும் என்பதால் நோர்வே நோபல் கமிட்டியின் காலக்கெடுவுக்கு (2025 ஜனவரி 31) முன்னதாக ட்ரம்பின் பெயர் நியமிக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வருடத்துக்கான பரிசுகள் குறித்து ஆராய்வதற்காக நோபல் கமிட்டி பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்திய முதலாவது கூட்டத்தின் போது அதன் உறுப்பினர்கள் மேலதிக பெயர்களை பட்டியலில் சேர்த்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. காலக்கெடுவுக்கு முன்னதாகவே ட்ரம்பின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக சில அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. நோபல் சமாதானப் பரிசை பெறுபவர்களின் (ஒருவர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள்) பெயர்கள் அக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும். அந்த பரிசை வழங்கும் நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும். அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்திருக்கும் நாடுகளின் குறிப்பாக ருவாண்டா, இஸ்ரேல், கபோன், அசெர்பைஜான் மற்றும் கம்போடியா ஆகியவற்றின் தலைவர்கள் எதேச்சாதிகார ஆட்சியாளர்களாக, இராணுவ ஆட்சியாளர்களாக அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய ஆதரவு நோபல் கமிட்டியின் தெரிவில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்தும் எனலாம். மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court ) பிடியாணை பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமரை வெள்ளைமாளிகை வரவேற்று விருந்தோம்புகிறது. காசாவில் தொடருகின்ற பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (Internatiinal Court of Justice ) வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்துவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திப்பதற்கான சகல வல்லமையும் இருக்கின்ற போதிலும், எதையும் செய்யாமல் நெதான்யாகுவை ட்ரம்ப் மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக அணுவாயுத எச்சரிக்கையை செய்வதற்கு ட்ரம்ப் அனுமதிப்பதை நோபல் கமிட்டி கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அவதானிகள் கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேஷாத்ரி ஷாரி நேற்றைய தினம் ‘த பிறின்ற்’ இணையத் தளத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார் ; “சிந்து நதியில் இந்தியா அணையொன்றை கட்டுவதற்கு துணிச்சல் கொள்ளுமானால், அணுவாயுத தாக்குதலை நடத்தப்போவதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் எச்சரிக்கை செய்திருக்கிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.” பாகிஸ்தான் ஒரு அணுவாயுத நாடு. நாம் அழிந்துகொண்டு போகின்றோம் என்று நினைப்போமேயானால், புதுடில்லியிடமிருந்து எமது இருப்புக்கு அச்சுறுத்தல் வருமானால் உலகின் அரைவாசியை எம்முடன் கொண்டு போவோம்” என்று முனீர் கூறியிருக்கிறார். “இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு வெளிநாட்டு இராணுவ தளபதியொருவர் அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அத்தகைய பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டபோது ட்ரம்ப் நிருவாகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. நோபல் சமாதானப் பரிசை வழங்கும் நோர்வேயின் நோபல் கமிட்டி இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் உரிமை கோருவதை முனீரின் அச்சுறுத்தலும் பொய்யாக்கியிருக்கிறது.” முதலாவது பதவிக் காலத்தில் இருந்து ட்ரம்ப் தன்னை சமாதானத்துக்கான ஒரு மனிதராக வர்ணித்து வந்திருக்கிறார். ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு எந்தவொரு அமெரிக்கப் படைவீரரையும் வெளிநாட்டு மோதலுக்கு அனுப்பிவைக்காத முதல் ஜனாதிபதி தானே என்றும் அவர் பெருமை பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் ஒருபோதும் இடம் பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார். ஆனால், கடந்த ஜனவரியில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் டென்மார்க்கிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய தீவான கிறீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை நிராகராகரிக்க முடியாது என்று ட்ரம்ப் கூறினார். அத்துடன் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாக கூறிய அவர் அயல்நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்கும் யோசனை குறித்தும் பேசினார். எல்லாவற்றுக்கும் மேலாக, இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் உல்லாசக் கடற்கரையாக்கப் போவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலமாக உக்ரெயின் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற தவறான நம்பிக்கையில் ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மிரட்டினார். அதேவேளை, ஐம்பது நாட்களில் போர் நிறுத்தத்துக்கு புட்டின் இணங்கவில்லையானால், ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். ஆனால், இறுதியில் தற்போது புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர ட்ரம்புக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. உக்ரெயினில் பிராந்தியங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ரஷ்யாவின் விருப்பத்துக்கு அவர் இணங்கிவிடுவார் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. புவிசார் அரசியல் நிலைவரம் பற்றிய சரியான தெளிவு இல்லாதவராக, உக்ரெயின் போருக்கு தனது நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவைக் காண்பதில் நாட்டம் கொண்டிருக்கும் ட்ரம்ப், செலன்ஸ்கியை தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றமுறையில் கையாளலாம் என்று நம்புகிறார். இது இவ்வாறிருக்க, உலகளாவிய ரீதியில் ட்ரம்ப் தொடுத்திருக்கும் வரிப்போர் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்தங்கிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் வேறு வழியின்றி அவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற முறையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வரிவிதிப்பை அவர் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான புவிசார் அரசியல் அதிகாரமாக பயன்படுத்துகிறார். இலங்கை மீதான வரி தொடர்பாக அமெரிக்கா எடுத்த தீர்மானம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மாத்திரமல்ல, முழுமையான இருதரப்பு உறவுகளுடனும் சம்பந்தப்பட்டது என்று அண்மையில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாக்கவுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார வல்லமை கொண்ட இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளையும் வரிவிதிப்பைக் காட்டி பயமுறுத்த அவர் முயற்சிக்கின்றார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி கடைப்பிடித்த அணுகுமுறைகள் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஈரானுடன் அணுத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த நாட்டின் அணு மையங்கள் மீது குண்டுவீச்சுக்களை நடந்துவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். ஒபாமாவுக்கு பதினாறு வருடங்களுக்கு முன்னர் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டபோது “எதற்காக அவர் அந்த பரிசைப் பெற்றார் என்று எனக்கு தெரியவில்லை” என்று ட்ரம்ப் கேலி செய்தார். எதைச் சாதித்துவிட்டதற்காக ட்ரம்ப் தனக்கு சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி இருப்பதாக நம்புகிறார் என்று முழு உலகமுமே இப்போது கேட்கிறது. தனது மத்தியஸ்த முயற்சிகளின் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ட்ரம்ப் பெருமையாக உரிமை கோரும் எந்தவொரு மோதலுமே மீண்டும் வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. முழு உலகினதும் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் காசா அவலத்துக்கு முடிவுகட்ட இஸ்ரேலை வழிக்கு கொண்டுவருவதற்கு உருப்படியாக ட்ரம்ப் எதையாவது செய்தால், அவரின் நோபல் சமாதான பரிசு ஆசையில் ஒரளவு அர்த்தம் இருக்க முடியும். பட்டினி கிடக்கும் பாலஸ்தீனர்கள் உணவைப் பெறுவதற்கு நிவாரண நிலையங்களுக்கு வருகின்றபோது குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இஸ்ரேலியப் படைகளினால் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிய சியோனிச அரசின் காவலனாக நிற்கும் ட்ரம்ப் சமாதான பரிசுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லாதவர். இப்போது மாத்திரமல்ல , ஏற்கெனவேயும் பல தடவைகள் அவர் அந்த பரிசக்கு தனக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டிருந்தார். ஆனால், அது தனக்கு கிடைக்காது என்பதும் ட்ரம்புக்கு தெரியும். தான் எதைச் செய்தாலும் தனக்கு சமாதானப் பரிசை தரமாட்டார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் அவரே ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார். வெள்ளைமாளிகையில் இஸ்ரேலிய பிரதமருடன் பெப்ரவரியில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது “சமாதானப் பரிசைப் பெறுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால், அவர்கள் எனக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்” என்று கூறினார். நோபல் பரிசுகளை தெரிவு செய்யும் ஐவர் கொண்ட கமிட்டியை நோர்வே பாராளுமன்றமே தெரிவு செய்கிறது. தனக்கு அந்த கமிட்டி பரிசைத் தராவிட்டால் ட்ரம்ப் நோர்வே மீது கடுமையான வரிகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. https://arangamnews.com/?p=12269

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப் — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 weeks 6 days ago

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப்

August 23, 2025

கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்படும் டொனால்ட் ட்ரம்ப்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

 1900 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட நோபல் பவுண்டேசன் அதற்கு  அடுத்த ஆண்டில் இருந்து நோபல் சமாதானப் பரிசை  வழங்கி வருகிறது. 124 வருட வரலாற்றில் அந்த பரிசு இதுவரையில்  97 பேருக்கும் 20 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களில் அமெரிக்க ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவர். 

தியோடர் ரூஸ்வெல்ற் ( 1901 — 1909), வூட்ரோ வில்சன் (1913 — 1921) மற்றும் பராக் ஒபாமா (2009 — 2017) ஆகியோரே பதவியில் இருந்த வேளையில்  நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதிகளாவர். 

ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தமைக்காகவும்  பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டியதற்காகவும் 1906 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ற்றுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னோடியாக அமைந்த நாடுகள் கழகத்தை (League of  Nation) அமைத்தமைக்காக 1919 ஆம் ஆண்டில் வூட்ரோ வில்சனுக்கும் சமாதானப் பரிசு  வழங்கப்பட்டது. சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக ஒபாமாவுக்கு அவர் பதவிக்கு வந்த 2009 ஆம் ஆண்டிலேயே அந்த பரிசு வழங்கப்பட்டது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கும்  சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. 

1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த ஜிம்மி கார்ட்டருக்கு சர்வதேச நெருக்கடிகளுக்கு சமாதானத் தீர்வுகளைக் காண்பதற்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் அயராத முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக 2002 ஆம் ஆண்டில் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. பில் கிளின்டனின் இரு பதவிக்காலங்களிலும் (1993 — 2001)  துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோருக்கு காலநிலை மாற்றம் குறித்து செய்த ஆய்வுகளுக்காகவும் அவை தொடர்பிலான  தகவல்களை மக்கள் மத்தியில்  பரப்பியமைக்காகவும்  2007 ஆம் ஆண்டில் அந்த பரிசு கிடைத்தது. அது தவிர, ஹென்றி கீசிங்கர் உட்பட நான்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர்களும் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றனர். 

ஆனால், அவர்களில் எவருமே தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று நோபல் சமாதானப் பரிசைப் பெறுவதற்காக தாங்களாகவே ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டதாக நாம் இதுவரையில் அறியவில்லை. உலகின் பல்வேறு பாகங்களிலும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி தனக்கு இருக்கிறது என்று அவரே கூறிவருகிறார். கடந்த 

ஜனவரியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வந்த பிறகு ஐந்து மாதங்களில் ஐந்து சர்வதேச போர்களை தடுத்து நிறுத்தியதாக கடந்த வாரம் கூறிய ட்ரம்ப் உக்ரெயினில் தொடரும் போருக்கு  முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மீது குற்றம் சுமத்தினார்.

உலக நாடுகள் மீது அடாவடித்தனமாக வரிகளை விதித்து வருவதால் சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குரிய ஒரு பிரபல்யத்தை பெற்றிருக்கும் ட்ரம்ப் கடந்த மாதம் நோர்வேயின் நிதியமைச்சர் ஜெனஸ் ஸ்ரொல்ரன்பேர்க்குடன் வரிவிதிப்புகள் குறித்து தொலைபேசியில் பேசியபோது நோபல் சமாதானப் பரிசை பெறுவதற்கு தான் விரும்புவதாக கூறியதாக நோர்வே பத்திரிகைகள் கடந்த வாரம் செய்திகளை வெளியிட்டிருந்தன. அமெரிக்க நிதியமைச்சர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி  உட்பட வெள்ளை மாளிகையின் பல்வேறு அதிகாரிகளும் தன்னுடன் பேசியதாக ஸரொல்ரன்பேர்க் ஊடகங்களுக்கு கூறினார். 

இந்திய —  பாகிஸ்தான், இஸ்ரேல் — ஈரான், தாய்லாந்து — கம்போடியா, ருவாண்டா — கொங்கோ ஜனநாயக குடியரசு, சேர்பியா — கொசோவா, எகிப்து —  எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஆறு மோதல்களை ஜனாதிபதி ட்ரம்ப் முடிவுக்கு கொண்டுவந்ததாக வெள்ளைமாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிற் சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.  மாதத்துக்கு ஒரு சமாதான உடன்படிக்கையும் போர்நிறுத்தமும் செய்யப்படுவதற்கான வெற்றிகரமான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு  நோபல் சமாதானப் பரிசை வழங்குவதற்கு காலம் தாமதித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மூண்டமோதலுக்கு முடிவைக்கட்டியதாக ட்ரம்ப் உரிமை கோருகின்ற போதிலும், இந்தியா அதை நிராகரிக்கின்றது. தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் தனது கோரிக்கையை அடுத்தே மோதலை நிறுத்தியதாக அவர் இதுவரையில் பல தடவைகள் கூறியிருக்கிறார். தனது தலையீடு இல்லாதிருந்திருந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணுவாயுதப் போராக மாறியிருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை கூட ட்ரம்ப் கூறினார். 

இரு நாடுகளினதும் இராணுவ உயர் மட்டங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்பாடல்களை தொடர்ந்தே நான்கு நாள் மோதல்கள் நிறுத்தப்பட்டதாக இந்தியா திரும்பத் திரும்பக் கூறுகின்ற போதிலும்,  பாகிஸ்தான் ட்ரம்பின் கூற்றை இதுவரையில் மறுதலிக்கவில்லை. பதிலாக,  “மோதல்களின்போது தீர்க்கமான இராஜந்திர தலையீட்டைச் செய்து முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கியதற்காக” நோபல் சமாதானப் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியின்  பெயரை பிரேரிக்கப் போவதாக  ஜூன்  மாதம் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. இராணுவத் தளபதி அசீம் முனீருக்கும் ட்ரம்புக்கும் இடையில் நடந்த சந்திப்புக்கு பின்னரே அந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக, ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு நோபல் சமாதானப் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பிரேரித்து நோபல் கமிட்டிக்கு தான்  அனுப்பிய கடிதத்தை அவரிடம் கையளித்தார். எல்லைத் தகராறு காரணமாக தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் ஜூலையில் மூண்ட ஐந்து நாள் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்த போர்நிறுத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமித்திருப்பதாக கம்போடிய பிரதமர் ஹுன் மனெற் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்தார். 

முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் மூன்று  தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக  நீடித்துவந்த  மோதல்ளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 8  வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஏற்பாடு செய்த “சமாதான உச்சிமகாநாட்டில்” இரு நாடுகளின் தலைவர்களும் நோபல் சமாதானப் பரிசுக்காக அவரின் பெயரை கூட்டாக நியமிப்பதாக உறுதியளித்தனர். தனது நாட்டுக்கும் அசெர்பைஜானுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த ட்ரம்பை தவிர வேறு எந்த தலைவரினாலும் முடிந்திருக்காது என்று கூறிய ஆர்மேனிய பிரதமர்  நிக்கோல் பாஷின்யான், நோபல் சமாதானப் பரிசுக்காக பிரேரிப்பதற்கு கடிதவரைவு ஏதாவது கைவசம் இருந்தால் உடனடியாகவே அதில்  கையெழுத்திடுவதாக ட்ரம்பிடம் நகைச்சுவையாக கூறியதாக ஊடகங்கள் கூறின.

ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களை  முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி வகித்த பாத்திரத்துக்காக அவரின் பெயரை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்யும் யோசனைக்கு அந்த இரு நாடுகளின் தலைவர்களும் ஆதரவைத்  தெரிவித்திருக்கிறார்கள்.  இதுவரையில் ஐந்து நாடுகளின் தலைவர்கள் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

சமாதானப் பரிசுக்காக செய்யப்பட்ட உண்மையான உத்தியோகபூர்வ நியமனங்கள் அந்தரங்கமாகவே வைக்கப்பட்டிருக்கும் என்பதால்  நோர்வே நோபல் கமிட்டியின் காலக்கெடுவுக்கு (2025 ஜனவரி 31)  முன்னதாக ட்ரம்பின் பெயர் நியமிக்கப்பட்டதா  என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த வருடத்துக்கான பரிசுகள் குறித்து ஆராய்வதற்காக நோபல் கமிட்டி  பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்திய முதலாவது கூட்டத்தின் போது அதன் உறுப்பினர்கள் மேலதிக பெயர்களை பட்டியலில் சேர்த்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

காலக்கெடுவுக்கு முன்னதாகவே ட்ரம்பின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக சில அமெரிக்க ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியிருந்தன. நோபல் சமாதானப் பரிசை பெறுபவர்களின் (ஒருவர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள்) பெயர்கள் அக்டோபர் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும். அந்த பரிசை வழங்கும் நிகழ்வு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும். 

அமெரிக்க ஜனாதிபதியை சமாதானப் பரிசுக்கு நியமனம் செய்திருக்கும் நாடுகளின் குறிப்பாக ருவாண்டா, இஸ்ரேல், கபோன், அசெர்பைஜான் மற்றும் கம்போடியா ஆகியவற்றின் தலைவர்கள் எதேச்சாதிகார ஆட்சியாளர்களாக, இராணுவ ஆட்சியாளர்களாக அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய ஆதரவு நோபல் கமிட்டியின் தெரிவில் எதிர்மறையான தாக்கத்தைச் செலுத்தும் எனலாம்.

மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ( International Criminal Court ) பிடியாணை பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமரை வெள்ளைமாளிகை வரவேற்று விருந்தோம்புகிறது. காசாவில் தொடருகின்ற பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் (Internatiinal Court of Justice ) வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கிறது.  பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்துவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திப்பதற்கான சகல வல்லமையும் இருக்கின்ற போதிலும், எதையும் செய்யாமல்  நெதான்யாகுவை ட்ரம்ப் மேலும்  உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக அணுவாயுத எச்சரிக்கையை செய்வதற்கு ட்ரம்ப் அனுமதிப்பதை நோபல் கமிட்டி கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அவதானிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்தியாவின் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேஷாத்ரி  ஷாரி நேற்றைய தினம் ‘த பிறின்ற்’ இணையத் தளத்தில் பின்வருமாறு எழுதியிருக்கிறார் ; 

“சிந்து நதியில் இந்தியா அணையொன்றை கட்டுவதற்கு துணிச்சல் கொள்ளுமானால், அணுவாயுத தாக்குதலை நடத்தப்போவதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் எச்சரிக்கை செய்திருக்கிறார். ட்ரம்ப் நிருவாகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.” பாகிஸ்தான் ஒரு அணுவாயுத நாடு. நாம் அழிந்துகொண்டு போகின்றோம் என்று நினைப்போமேயானால், புதுடில்லியிடமிருந்து எமது இருப்புக்கு அச்சுறுத்தல்  வருமானால் உலகின் அரைவாசியை எம்முடன் கொண்டு போவோம்”  என்று முனீர் கூறியிருக்கிறார்.

“இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு வெளிநாட்டு இராணுவ தளபதியொருவர்  அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அத்தகைய பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டபோது ட்ரம்ப் நிருவாகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. நோபல் சமாதானப் பரிசை வழங்கும்  நோர்வேயின் நோபல் கமிட்டி இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் உரிமை கோருவதை முனீரின் அச்சுறுத்தலும் பொய்யாக்கியிருக்கிறது.” 

முதலாவது பதவிக் காலத்தில் இருந்து ட்ரம்ப் தன்னை சமாதானத்துக்கான ஒரு மனிதராக வர்ணித்து வந்திருக்கிறார். ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு எந்தவொரு அமெரிக்கப் படைவீரரையும் வெளிநாட்டு மோதலுக்கு அனுப்பிவைக்காத முதல் ஜனாதிபதி தானே என்றும் அவர் பெருமை பேசுகிறார். அமெரிக்க ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால் இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7  ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் ஒருபோதும் இடம் பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார்.

ஆனால், கடந்த ஜனவரியில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன்  டென்மார்க்கிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய தீவான கிறீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை நிராகராகரிக்க முடியாது என்று ட்ரம்ப் கூறினார். அத்துடன் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப்  போவதாக கூறிய அவர் அயல்நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்கும் யோசனை குறித்தும் பேசினார். 

எல்லாவற்றுக்கும் மேலாக, இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனர்களை காசாவில் இருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அந்த பள்ளத்தாக்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் உல்லாசக் கடற்கரையாக்கப் போவதாகவும் அவர் கூறினார். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலமாக உக்ரெயின் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற தவறான நம்பிக்கையில் ட்ரம்ப் உக்ரெயின் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மிரட்டினார். அதேவேளை, ஐம்பது நாட்களில் போர் நிறுத்தத்துக்கு புட்டின் இணங்கவில்லையானால்,  ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரியை விதிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். 

ஆனால்,  இறுதியில் தற்போது புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர ட்ரம்புக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை. உக்ரெயினில் பிராந்தியங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ரஷ்யாவின் விருப்பத்துக்கு அவர் இணங்கிவிடுவார் என்று ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. புவிசார் அரசியல் நிலைவரம் பற்றிய சரியான தெளிவு இல்லாதவராக,  உக்ரெயின் போருக்கு தனது நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவைக் காண்பதில் நாட்டம் கொண்டிருக்கும் ட்ரம்ப்,  செலன்ஸ்கியை தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றமுறையில் கையாளலாம் என்று நம்புகிறார். 

இது இவ்வாறிருக்க,  உலகளாவிய ரீதியில் ட்ரம்ப் தொடுத்திருக்கும் வரிப்போர் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்தங்கிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் வேறு வழியின்றி அவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற முறையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வரிவிதிப்பை அவர் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான புவிசார் அரசியல் அதிகாரமாக பயன்படுத்துகிறார். 

இலங்கை மீதான வரி தொடர்பாக அமெரிக்கா எடுத்த தீர்மானம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துடன் மாத்திரமல்ல, முழுமையான இருதரப்பு உறவுகளுடனும் சம்பந்தப்பட்டது என்று  அண்மையில்  ஜனாதிபதி அநுரா குமார திசாநாக்கவுக்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார வல்லமை கொண்ட  இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளையும் வரிவிதிப்பைக் காட்டி பயமுறுத்த அவர் முயற்சிக்கின்றார். 

தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி கடைப்பிடித்த அணுகுமுறைகள் சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. ஈரானுடன் அணுத்திட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த நாட்டின் அணு மையங்கள் மீது குண்டுவீச்சுக்களை நடந்துவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். 

ஒபாமாவுக்கு பதினாறு வருடங்களுக்கு முன்னர் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டபோது “எதற்காக அவர் அந்த பரிசைப் பெற்றார் என்று எனக்கு தெரியவில்லை” என்று ட்ரம்ப் கேலி செய்தார். எதைச் சாதித்துவிட்டதற்காக ட்ரம்ப் தனக்கு சமாதானப் பரிசைப் பெறுவதற்கான தகுதி  இருப்பதாக நம்புகிறார்  என்று முழு உலகமுமே  இப்போது கேட்கிறது.

 தனது மத்தியஸ்த முயற்சிகளின் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ட்ரம்ப் பெருமையாக உரிமை கோரும் எந்தவொரு மோதலுமே மீண்டும் வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. முழு உலகினதும் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கும் காசா அவலத்துக்கு முடிவுகட்ட    இஸ்ரேலை வழிக்கு கொண்டுவருவதற்கு உருப்படியாக ட்ரம்ப்  எதையாவது செய்தால், அவரின் நோபல் சமாதான பரிசு ஆசையில் ஒரளவு  அர்த்தம்  இருக்க முடியும். 

பட்டினி கிடக்கும் பாலஸ்தீனர்கள் உணவைப் பெறுவதற்கு  நிவாரண நிலையங்களுக்கு வருகின்றபோது குழந்தைகள், பெண்கள், வயோதிபர்  என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இஸ்ரேலியப் படைகளினால் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலிய சியோனிச அரசின் காவலனாக நிற்கும் ட்ரம்ப் சமாதான பரிசுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லாதவர். இப்போது மாத்திரமல்ல , ஏற்கெனவேயும் பல தடவைகள் அவர் அந்த பரிசக்கு தனக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டிருந்தார். ஆனால், அது தனக்கு கிடைக்காது என்பதும் ட்ரம்புக்கு தெரியும். தான் எதைச் செய்தாலும் தனக்கு சமாதானப் பரிசை தரமாட்டார்கள் என்று தனது சமூக ஊடகத்தில் அவரே ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார்.

வெள்ளைமாளிகையில் இஸ்ரேலிய பிரதமருடன் பெப்ரவரியில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது “சமாதானப் பரிசைப் பெறுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறது. ஆனால், அவர்கள் எனக்கு ஒருபோதும் தரமாட்டார்கள்”  என்று கூறினார். 

நோபல் பரிசுகளை தெரிவு செய்யும் ஐவர் கொண்ட கமிட்டியை நோர்வே பாராளுமன்றமே தெரிவு செய்கிறது. தனக்கு அந்த கமிட்டி பரிசைத் தராவிட்டால் ட்ரம்ப் நோர்வே மீது கடுமையான வரிகளை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

https://arangamnews.com/?p=12269

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

3 weeks 6 days ago
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி August 25, 2025 3:06 pm தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/15-killed-including-journalists-in-israeli-attack-on-gaza/

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

3 weeks 6 days ago

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

August 25, 2025 3:06 pm

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

https://oruvan.com/15-killed-including-journalists-in-israeli-attack-on-gaza/

யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

3 weeks 6 days ago
யாழில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி போராட்டம் August 25, 2025 3:28 pm யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்றைய தினம் காலை போராட்டமொன்று இடம்பெற்றது. பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை எட்டு மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட்டது. வர்த்தகர்கள், பொதுமக்களை ஒன்றிணைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். பருத்தித்துறை துறைமுகப் பகுதி மற்றும் வெளிச்ச வீட்டடியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பொது அமைப்புகளை ஒன்றிணைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் தபால் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடம் என்பவற்றை ஆக்கிரமித்து பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் பெரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தபால் நிலையம் பிறிதொரு கட்டடத்தில் இயங்கி வருவதுடன் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தை பருத்தித்துறை நகருக்கு வெளியே இடம்மாற்றுவதற்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், பருத்தித்துறை நகரின் முக்கிய அடையாளங்களான நீதிமன்றம், தபால் நிலையம், வெளிச்சவீடு ஆகியவற்றை அந்த அந்த இடங்களிலேயே உறுதிப்படுத்தும் வகையிலும், குறித்த பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ, கடற்படை முகாம்களை அகற்றுமாறு கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://oruvan.com/protest-demanding-the-removal-of-military-camps-in-jaffna/

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

3 weeks 6 days ago
பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது August 25, 2025 4:49 pm மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்ளான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிஐடியினர் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினரால் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளது அவர் தெரிவித்தார். இதேவேளை பிள்ளையான் கைதை தொடர்ந்து அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவில் வைத்து அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் சிஐடியினர் கைது செய்தனர் அதனை தொடர்ந்து இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செந்தூரனை கடந்த ஜூலை ஏழாம் திகதி தனியார் போக்குவரத்து பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் யூலை (27) இனியபாரதியின் மற்றும் ஒரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டதுடன் பிள்ளையான் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித் என்பவரை கடந்த 13ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன். கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாம் பொறுப்பாக இருந்த கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/another-associate-of-pillaiyan-arrested-in-batticaloa/

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

3 weeks 6 days ago

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

August 25, 2025 4:49 pm

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்ளான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சிஐடியினர் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கிவந்த ரி.எம்.வி.பியின் முகாமின் பொறுப்பாளராக இருந்து வந்துள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து வந்த சிஜடி யினரால் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளது அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிள்ளையான் கைதை தொடர்ந்து அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவில் வைத்து அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் சிஐடியினர் கைது செய்தனர்

அதனை தொடர்ந்து இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செந்தூரனை கடந்த ஜூலை ஏழாம் திகதி தனியார் போக்குவரத்து பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் யூலை (27) இனியபாரதியின் மற்றும் ஒரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டதுடன் பிள்ளையான் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடத்திய பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித் என்பவரை கடந்த 13ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன்.

கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாம் பொறுப்பாக இருந்த கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/another-associate-of-pillaiyan-arrested-in-batticaloa/

ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை

3 weeks 6 days ago
ஏன் இந்த எலி, நரிக்காக அம்மனமாக ஓடுது. இந்த எலி இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக ஐநாவில் இருந்து பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

3 weeks 6 days ago
வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு 2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்திரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்ததுடன், வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் வரை சென்றதாக சுட்டிக்காட்டினார். எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு, குறுகியகால திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். அதற்கமைய, பிரதிவாதிகளின் மேன்முறையீடு தொடர்பான மனுவை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். 2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmeqvvwij0001qpfibjgjfyxv

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

3 weeks 6 days ago

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு - விசாரணை திகதி அறிவிப்பு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

குறித்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (25) அறிவித்துள்ளது. 

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்திரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்ததுடன், வழக்கின் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகள் வரை சென்றதாக சுட்டிக்காட்டினார். 

எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு, குறுகியகால திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார். 

அதற்கமைய, பிரதிவாதிகளின் மேன்முறையீடு தொடர்பான மனுவை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர். 

2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmeqvvwij0001qpfibjgjfyxv

அம்மாவாகும் ரோபோக்கள்

3 weeks 6 days ago
அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

3 weeks 6 days ago
வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்! adminAugust 25, 2025 மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது. குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது. குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாவிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும். எமது மரவுரிரைச் சின்னங்களினை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறை தலைமுறை தலைமுறையாக கடந்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் 2021 ஆம் ஆண்டு அப்போதையை யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை அமையமானது, நல்லூர் இராஜதானியின் தோரண வாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ட்சி, போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள்உருவாக்கப் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் 3ஆவது செயற்றிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219590/

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

3 weeks 6 days ago

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

adminAugust 25, 2025

0-4-2.jpg?fit=1170%2C881&ssl=1

மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது.

குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாவிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும்.

எமது மரவுரிரைச் சின்னங்களினை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறை தலைமுறை தலைமுறையாக கடந்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் 2021 ஆம் ஆண்டு அப்போதையை யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை அமையமானது,

நல்லூர் இராஜதானியின் தோரண வாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ட்சி, போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள்உருவாக்கப் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் 3ஆவது செயற்றிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/219590/

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

3 weeks 6 days ago
இந்தாள் ஏன் குறுக்கால ஓடுது என்று பார்த்தால்… செய்தி: நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹைம் UNEP-க்கான நிர்வாக இயக்குநராக இருந்தபோது அரசுப் பணத்தை பயணச் செலவாக மிக அதிகமாக, அதுவும் அனுகூலமற்ற வகையில் செலவிட்டார் என்று உட்புற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவர் 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை விலக்கிவிட்டார். Inuvaijur Mayuran

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

3 weeks 6 days ago
ரணிலுக்கு நன்றாகத் தெரியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடிக்கதைப்பதும் கொந்தளிப்பதும் குதிப்பதும் ரணில்மீது கொண்ட அன்பால் அல்ல "ரணிலுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்னவாகும் என்ற பயத்தால்" என்று... யாழ்ப்பாணம்.com

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

3 weeks 6 days ago
விஜய் தனது தொகுதிகளில் வெல்வாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் விஜய் சொன்ன சொல் தவறாமல் தேர்தலில் நிற்பாராக இருந்தால் வழமையான வாக்கு வீதங்கள் சிதறடிக்கப்பட வாய்ப்புளது. சென்னை மாநாட்டில் விஜய் தனது ஆதரவாளார்கள் ம்லுன்னிலையில் தனது கட்சியின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்று முழங்கியது ஆறுதலான செய்தி. இனிமேல் விஜய் பாஜக வுடன் கூட்டுச் சேர மாட்டார் என்பது உறுதியாகிறது. திமுக தமிழகத்தில் ஆலமரம் போல் வேரூன்றியுள்ளது. அதனைத் தாங்கி நிற்பவர்கள் அரசியல், கல்வி, நிதி, நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு போன்ற பல துறைகளிலும் அனுபவமுடைய பல தலைவர்கள். விஜய் அதிமுக விலிருந்து தலைவர்களைத் தனது கட்சிக்கு வரவைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.