Aggregator
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது.
இதற்கு தென்மாவட்டங்களில் பாண்டியராஜா - கந்தசாமி ஆகிய இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்களும், அவரது இளம் பருவத்தில் நடந்த கசப்பான அனுபவங்களும் காரணமாக இருக்கின்றன.
இந்நிலையில், கிட்டானின் உடற்கல்வி ஆசிரியர் அவனுக்குக் கைகொடுக்க, அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடக்கப் போவது என்ன என்பதைப் பேசுகிறது இந்த 'பைசன்' என்கிற 'காளமாடன்'.

Bison Review; பைசன் விமர்சனம்
தன் இலக்கெல்லாம் அந்த நடுக்கோட்டைத் தொடும் வேகம்தான் என, நடிப்பில் ஆற்றாமை, கோபம், வெறி என உணர்வுகளை நாலு கால் பாய்ச்சலாகக் கொடுத்து, 'அசல்' கபடி வீரராகச் சடுகுடு ஆடியிருக்கிறார் துருவ். வெவ்வேறு பருவங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் வித்தியாசங்கள், கன்றிலிருந்து முட்டி மோதும் காளையின் பரிணாமம்!
இப்படி ஒரே மூச்சில் விடாமல் பாடி, அனைத்து ரைடிலும் பாயிண்ட் அடித்தாலும், வட்டார வழக்கில் மட்டும் அந்த 'பாடுதல்' சற்று தடுமாறுகிறது.
நீரை இழக்காமல் இருக்க முட்களைத் தாங்கும் கள்ளி போல, தன் பிள்ளைக்காக வாழ்வை வடிவமைத்த உன்னத தந்தையாக, வறண்ட நிலத்தில் வேரூன்றி நிற்கிறார் பசுபதி.
சாமியாடி நிற்கும் இடத்தில் முற்கள் முன்னே என்றால், பிள்ளைக்காகக் கெஞ்சும் இடத்தில் அந்தக் கள்ளியில் ஒரு பூவும் பூத்துவிடுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே பழிவாங்கும் சதுரங்க யுத்தத்தை நடத்துபவர்களாக வரும் அமீரும், லாலும், கறுப்பு, வெள்ளை இல்லாத சாம்பல் நிற ராஜாக்கள்.

Bison Review; பைசன் விமர்சனம்
ஒவ்வொரு பிரேமிலும் போட்டிப்போட்டு இவர்கள் செய்யும் சைகைகள், முகபாவனைகள் சமூகப் பதற்றத்தின் பிரதிபலிப்பு. காதலின் தவிப்பை வெளிப்படுத்தும் அனுபமா பரமேஸ்வரன், தம்பியின் வெற்றியைக் காணத் துடிக்கும் ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
சாதி ஒழிப்பின் முகமாக, யதார்த்தமான உடல்மொழியும், வட்டார வழக்கில் தெளிவும் கொண்டு, நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் ‘அருவி’ மதன்.
தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச, மற்ற இடங்களில் தேர்ந்த காட்சிக் கோணங்கள், சிறப்பான ஒளியுணர்வு எனக் கேமரா கண்களில் கதை சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசுன்.கே.
குறிப்பாக, கபடி போட்டியின் பரபரப்பு வெளிவரும் இடங்களில் எல்லாம், இவரது செல்லுலாய்டு நம்மையும் அந்த நீள்சதுரமான கட்டத்துக்குள் கட்டிப்போடுகிறது. இதை எந்த அளவிலும் சிதைக்காமல் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சக்தி திரு.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில், ‘தீ கொளுத்தி’ பாடல் அனல் பறக்க, ‘சீனிக்கல்லு’ பாடல் கரையவைக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றாற்போல இருந்தாலும், இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம்.

Bison Review; பைசன் விமர்சனம்
கபடி ஆடுகளம், சுவரோவியம், பழைய டேப்ரெக்கார்டர், டிவி என 90களின் முற்பகுதியில் நடக்கும் கதையின் தேவையைப் புரிந்து, கலை இயக்குநர் குமார் கங்கப்பன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
சமநிலையற்ற சமூகத்தில், ஒரு லட்சிய நோக்கம் கொண்ட இளைஞனுக்குப் போடப்பட்ட வேலி என்ன, அதைக் கடப்பவனின் அக, புறப் பிரச்னைகள் என்னென்ன என்பதை ஆழமாகத் திரைக்களம் அமைத்து ஆட்டம் கட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பின்கதைக்கான பதிலை முன்கூட்டியே இந்திய அணியில் கிட்டான் இருப்பதாகச் சொன்னாலும், அந்தப் பயணம் எத்தகையது என்பதை யதார்த்தமான திரைமொழியில் சொல்லியிருப்பது சிறப்பு.
சிறு ஆடு பிரச்னையைக் கூட குருதி கேட்க வைக்கும் கிராமத்துச் செந்நிலம் என்கிற காட்சியமைப்புகள் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. எப்படியாவது தன் பிள்ளையைக் காப்பாற்றிக் கரைசேர்க்க வேண்டும் என்கிற தந்தையின் நியாய உணர்வு நம்மையும் கலங்கவைக்கிறது. அதே சமயம், காதல் காட்சிகளை மேலோட்டமாகக் கடந்து செல்வதால், அவர்களின் பிரிவின் வலி ஆழமாகக் கடத்தப்படவில்லை.
‘எதற்காகக் கத்தி எடுத்தோம் என்பதையே மறந்துட்டானுங்க’ என்று அமீர் பேசும் இடம் சிந்திக்க வைக்கும் கேள்வியை எழுப்பினால், ‘சோத்ததான திங்குற’ என பி.டி. வாத்தியார் பேசுவது சாதியத்துக்கு எதிரான பிரம்படி. ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது அம்மக்கள் மட்டுமே சிந்திக்க வேண்டியது அல்ல, எதிரில் இருப்பவர் கையிலும் அது இருக்கிறது. அதை உணர்ந்து, மையநீரோட்ட அரசியல் பேசிய விதம் அட்டகாசம்.‘இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் சாதாரண போட்டிதான்’ என்ற வசனம் மூலம் தேசியவாதத்தை வைத்து நடக்கும் வெறுப்பரசியலையும் நடுக்கோட்டுக்கு அந்தப் பக்கமே வைத்திருக்கிறார் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இவை பிரசார நெடியாக இல்லாமல், கதையின் போக்கிலேயே அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. ‘உடைதலும் எழுதலும்’ என்கிற பார்முலாவை இரண்டாம் பாதியில் ஓர் எல்லைக்கு மேல் மீண்டும் மீண்டும் செய்யாமல், சற்றே குறைத்திருக்கலாம். அதனால் நீண்ட நேரத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வருகிறது.
நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் என ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கான விறுவிறுப்பைக் கொடுக்கும் இந்த 'பைசன்', கொம்பிருந்தும் யாரையும் முட்டாமல் நாலு கால் பாய்ச்சலாகச் சமத்துவ வெற்றிக் கோட்டைத் தாண்டி ஓடுகிறான்.
உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று
உலக வறுமை ஒழிப்பு தினம் இன்று
17 Oct, 2025 | 05:09 PM
![]()
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வறுமையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வையும், சமூக ஒற்றுமையையும், மனிதநேயம் மற்றும் நீதித்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வறுமை பொருளாதார குறைவு மட்டுமல்ல; அது கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மனநலம், சமூக பங்களிப்பு போன்ற அனைத்து பரிமாணங்களையும் பாதிக்கும் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் பிரச்சினையாகும்.
வறுமை சூழலில் வாழும் நபர்கள் அடிக்கடி சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக மாறி, அவர்களது மனநலமும், சமூக பங்குபற்றலும் பாதிக்கப்படும்என உலகளாவிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன, வறுமை காரணமாக மனஅழுத்தம், தனிமை, மனச்சோர்வு, எதிர்பாராத பிரச்சினைகள் அதிகரிக்கின்றன, இது அவர்களின் செயல்திறனை, குடும்ப உறவுகளை, சமூக தொடர்புகளை நேரடியாக பாதிக்கிறது. சமூக உளவியல் ஆய்வுகள், வறுமை மற்றும் குற்றச்செயல்கள், வன்முறை சம்பவங்கள், மற்றும் மனநலம் குறைவான வாழ்க்கை முறைகளுக்கு இடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன, எனவே வறுமை பொருளாதார பிரச்சினை அல்ல, அது மனித உரிமைகள், சமுதாய நலன் மற்றும் மனநல மேம்பாட்டிற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக வறுமை ஒழிப்பு தினத்தின் முக்கிய நோக்கம் சமூகத்தில் ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் நீதித்தன்மையை ஊக்குவிப்பதாகும். சமூக விழிப்புணர்வு செயற்பாடுகள், பொதுமக்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு வறுமையை எதிர்கொள்ளும் நுட்பங்களை அறிவிப்பதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்டோரின் குரலை உலகிற்கு கொண்டு வருவதற்கும் உதவுகின்றன. சமூக உளவியலின் ரீதியில், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் தனிநபர் மனநலத்தை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் பொது நலன், அன்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்கும். உதாரணமாக, சிறிய கடன் திட்டங்கள், தொழில்நுட்ப பயிற்சிகள், சமூக ஆதரவு குழுக்கள், மனநலம் மேம்படுத்தும் உளவியல் கலந்த பயிற்சிகள் ஆகியவை வறுமை சூழலில் உள்ள நபர்களை சுயாதாரமாகவும், மனநலக்கூடியவர்களாகவும் உருவாக்குகின்றன. இது அவர்களை மட்டும் அல்ல, அவர்களது குடும்பங்களை, சமூகத்தை வளமாகவும் சக்திவாய்ந்தவையாகவும் மாற்றும்.

ஆராய்ச்சிகள் காட்டும் விதமாக, வறுமை மற்றும் மனஅழுத்தம் இடையிலான தொடர்பு அதிகம் உள்ளது. வறுமை காரணமாக சமூக தனிமை, கல்வி குறைவு, தொழில் வாய்ப்பு இழப்பு போன்ற காரணிகள் தனிப்பட்ட வாழ்க்கையின் மட்டத்திலும், சமூகத்திற்கும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சில ஆய்வுகள் காட்டுகின்றன, வறுமைச் சூழலில் வளர்ந்த குழந்தைகள் பள்ளியில் குறைவான சிகிச்சை மற்றும் கல்வி ஆதரவு காரணமாக நுண்ணறிவு, சமூக கலை மற்றும் மனநல மேம்பாட்டில் பின்தங்குகின்றனர். இதேபோல், பெரும்பாலான சமூகங்கள் வறுமை காரணமாக குற்றச்செயல்கள், குடும்ப வன்முறை மற்றும் சமூக குழப்பங்களை எதிர்கொள்கின்றன. இதனால், வறுமை ஒழிப்பில் அரசாங்கம், சமூக அமைப்புகள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் அவசியம்.
உலகளாவிய அளவில், வறுமை குறைபாடு மற்றும் மனநலம் இடையிலான தொடர்பு மிகவும் வலுவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 9.2% மக்கள் ஆட்கள் தினசரி $2.15 ( டாலருக்கும்) க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்தனர், இது வறுமையின் அடிப்படை அளவாகக் கருதப்படுகிறது. இலங்கையில், வறுமை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் மாறுபட்டுள்ளது; குறிப்பாக வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் வறுமை விகிதம் 15-20% வரை உள்ளது, இது குறிப்பிட்ட இடங்களில் கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக ஆதரவின் குறைவு காரணமாக அதிகரித்துள்ளது. இதனால், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் பொருளாதார உதவிகளால் மட்டுமல்ல, கல்வி, உளவியல் ஆதரவு, தொழிற்பயிற்சி மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றை இணைத்து வடிவமைக்கப்பட வேண்டும்.
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மனிதநேயம், சமுதாய நலன், மனநல மேம்பாடு ஆகியவற்றையும் முன்னிறுத்த வேண்டும். மனஅழுத்தம் குறைக்கப்படும் விதமாக, சமூக ஆதரவு, உளவியல் ஆலோசனை, சமூக-உளவியல் பயிற்சிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்பட வேண்டும். சில சமூக உதாரணங்களை எடுத்துக்கொண்டால், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள சில பெண்கள் கூட்டமைப்புகள், வறுமை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சி, நுண்ணறிவு வளர்ப்பு பயிற்சி மற்றும் குறைந்த வட்டி கடன் வழங்குவதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழும் திறனைக் கண்டுள்ளார்கள். இதுபோல, உலகின் பல்வேறு இடங்களில் நடந்த சமூக முன்னேற்றங்கள் காட்டுகின்றன, சமூக ஆதரவு மற்றும் சுயமுன்னேற்ற திட்டங்கள் வறுமையை குறைக்கும் மட்டுமல்ல, மனநலத்தை மேம்படுத்தி சமூக ஒற்றுமையை உறுதி செய்கின்றன.
உலக வறுமை ஒழிப்பு தினம் நினைவுநாள் அல்ல; அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கடமையான நாளாகும். உலக வங்கி, ஐ.நா., ஐ.டி.ஓ. போன்ற அமைப்புகள் வறுமை குறைப்பில் நிதியுதவி, கல்வி, மருத்துவ சேவை மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன. அதேபோல், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வறுமை பாதிக்கப்பட்ட சமூகங்களில் தொழிற்சாலை, தொழில்நுட்ப பயிற்சி, கல்வி வாய்ப்புகளை உருவாக்குகின்றன. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் உளவியல் ஆதரவு மிக முக்கியமானது; மனஅழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையையும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்க உதவுகிறது. இதன்மூலம் நபர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகமும் வளமாகும்.
மேலும், புதுமையான முறைகள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் சமூக சுயவிவரங்களை இணைத்துப் பயன்படுத்துதல் அவசியம். சமூக வலைத்தளங்கள், மின்னணு கல்வி, ஆன்லைன் தொழிற்பயிற்சி வாய்ப்புகள், சமூக ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் வறுமை பாதிக்கப்பட்ட நபர்களின் குரல் உலகிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இவை அவர்களுக்கு கல்வி, உளவியல் ஆதரவு மற்றும் சமூக பங்களிப்பு வாய்ப்புகளை வழங்கும். இதனால், வறுமை குறையும் மட்டுமல்ல, சமூகத்தில் நம்பிக்கை, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை வளர்ந்து சமூகத்தை முழுமையாக வளப்படுத்தும்.
ஆகையால், உலக வறுமை ஒழிப்பு தினத்தில் நாம் விழிப்புணர்வு காட்டுவதில் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடமையை ஏற்க வேண்டும். சமூக ஒற்றுமை, மனிதநேயம், நம்பிக்கை, கல்வி, உளவியல் ஆதரவு மற்றும் தொழிற்திறன் வளர்ச்சி ஆகியவற்றின் இணைப்பு மூலம் மட்டுமே வறுமை முழுமையாக குறைக்கப்படலாம், மனநலம் மேம்படும், மற்றும் சமூக ஒற்றுமை உறுதியாகும். எனவே, வறுமை ஒழிப்பு பொருளாதார நடவடிக்கை அல்ல, அது மனிதநேயம், சமூக நலன், கல்வி, மனநலம் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறையாக இருக்க வேண்டும்.
உலக வறுமை ஒழிப்பு தினம் ஐப்பசி- 17) - கவிதை
வறுமை எங்கு படலமாய் பயணிக்கும்,
மனங்களில் அசைவு, கண்களில் நீர் விட்டு வரும்.
பசிக்கிடந்த குழந்தைகள், கைகோர்த்த முதியோர்,
உதவி வேண்டிய ஒரு உலகம் நமதே!
ஒரு கையேடுப்போம், சின்ன உதவி செய்தோம்,
மனங்கள் நிம்மதியால் பரிமாறும் மகிழ்ச்சி.
உளவியல் சிந்தனை, நம் மனதை மாற்றும்,
பொதுமனித நேயம் காற்றில் பரப்பும் ஒளி.
சமூக ஒற்றுமை – வறுமையை எதிர்க்கும் கருவி,
கல்வி, வேலை வாய்ப்பு, வாய்ப்பு சமநிலை.
நாம் செய்யும் சிறிய முயற்சிகள்,
ஒரு பெரிய உலக மாற்றத்தை ஆரம்பிக்கும்.
மனநலம் உயர்ந்து, மன அழுத்தம் குறையும்,
உதவி பெற்றவன் கூட மன உறுதி பெறும்.
பகிர்வோம் உணவு, அறிவு, வாடிகையற்ற அன்பு,
அதை நம்முள் வாழும் சமூகத்தோடு இணைக்கும்.
நிகழ்காலம் மட்டும் அல்ல, எதிர்காலம் நினைத்து,
நாம் செய்யும் முயற்சி, மற்றவருக்கு வாழ்க்கை தரும்.
பொதுமக்கள் சேர்ந்து, சிறு முயற்சிகளை தொடங்கினால்,
வறுமை என்ற அலைகள் நின்று விடும் உலகம்.
அன்பும் பகிர்வும், உண்மை மனித நேயம்,
உளவியல் அறிவு சேர்ந்து ஒரு சூரியன் போல வீசும்.
முடிவில் நம் சமூகமும் நம் மனமும்,
சாந்தி, சுகம், வளம் பெற்ற உலகத்தை நோக்கும்.
வறுமை ஒழிப்பு தினம் – ஒரு நினைவூட்டல்,
ஒவ்வொருவரும் சமூக மாற்றத்தின் அங்கமாகிடு!
நடராசா கோபிராம்
உளவியல் சிறப்புக்கலை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன், தனது ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் முத்திரை பதித்தார். தொடர்ந்து ஜென் ஸீ தலைமுறையினரின் வரவேற்பை பெற்று வரும் பிரதீப், ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்தாரா என்பதை பார்ப்போம்.
பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன் (பிரதீப் ரங்கநாதன்). அவரை ப்ரொபோஸ் செய்யும் அவரது மாமா மகள் குறளரசியின் காதலை (மமிதா பைஜு) நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார்.
இந்த இடைவெளியில் மீண்டும் குறளரசி மீது காதல் கொள்ளும் அகன், இதை தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் (சரத்குமார்) சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள். திருமணம் நின்றதா? அதன் பிறகு என்ன ஆனது என்பதே ‘டியூட்’ படத்தின் திரைக்கதை.
முன்பே சொன்னது போல ஜென் ஸீ தலைமுறையினரின் பல்ஸை சரியாக பிடித்து, அதை அவர்களுக்கானதாக மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் தொடர்ந்து கொடுத்து வருகிறார் பிரதீப். அது அவர் இயக்கும் படமாக இருந்தாலும் சரி, நடிக்கும் படமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த ‘டியூட்’ படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட் என்றுதான் சொல்லவேண்டும்.
படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. தனது முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகளும் அதனூடே டைட்டிலை அறிமுகம் செய்த விதமும் பக்கா தியேட்டர் மெட்டீரியல். அதிலும் மாப்பிள்ளையிடம் பிரதீப், “தாலியை டைட்டா கட்டியிருக்கக் கூடாதா ப்ரோ?” என்று கேட்கும் இடமெல்லாம் அரங்கம் அதிர்கிறது.
இதுபோல படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் ஸீ தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
குறிப்பாக இடைவேளைக்கு முன்னால் சரத்குமாரிடம் மமிதா பைஜு பேசும் இடம் தொடங்கி இடைவேளை வரை வரும் காட்சிகள் எழுதப்பட்ட விதம் சிறப்பு. பல இடங்களில் நகைச்சுவை நன்றாக கைகொடுத்திருக்கிறது. படத்தின் பெரும் பலமும் அதுதான்.

பிரதீப் ரங்கநாதனின் மேனரிசத்துக்கே தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது. மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்.
படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார். பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஏற்கெனவே ஹிட். அது படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ ‘ரொம்ப நல்லவர்’ என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஹீரோயினும், அவரது காதலரும் பிரதீப் குறித்து பேசுவதாக வரும் காட்சியும், அதை திராவிட் செல்வம் செல்வம் கேட்பதும் 90-களின் டெக்னிக்.
ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்.
இந்த வெகு சில குறைகளைத் தாண்டி தீபாவளி விடுமுறையில் கலகலப்பான, கொண்டாட்ட மனநிலையுடன் இரண்டரை மணி நேரத்தை செலவிட விரும்புவோர் தாராளமாக சென்று பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது இந்த ‘டியூட்’.
‘டியூட்’ விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்? | Dude Movie Review - hindutamil.in
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் தவெகவினரின் அஜாக்கிரதையாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும் கரூரில் நெரிசல் சம்பவம் ஏற்பட்டு, உயிர்பலி நேர்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் பெயரை சேர்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்; அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும்; இந்த விதிகளை மீறிய தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் தவெகவினர் மீது சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்; உயிரிழந்தவர்களுக்கு குறைந்தது தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தவெக தலைவர் விஜய்-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாகவும், சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாலும், உச்ச நீதின்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் | TVK is not a recognized party Election Commission informs High Court - hindutamil.in
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் !
இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் !
17 Oct, 2025 | 03:22 PM
![]()
( இணையத்தள செய்திப் பிரிவு )
இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடத்திற்கு "ஹரினி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்" (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமர் ஹரிணி, தான் கல்வி கற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.
அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், "கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார்.






இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் ! | Virakesari.lk
அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!
அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!
17 Oct, 2025 | 05:02 PM
![]()
தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.
குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்! | Virakesari.lk
தலைமறைவாக இருந்த “தொட்டலங்க கன்னா” கைது!
தலைமறைவாக இருந்த “தொட்டலங்க கன்னா” கைது!
17 Oct, 2025 | 03:34 PM
![]()
பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
“தொட்டலங்க கன்னா” என்பவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் “தொட்டலங்க கன்னா” என்பவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டிருந்தது.
அத்துடன் தலைமறைவாக உள்ள “தொட்டலங்க கன்னா” என்பவரை தேடி கண்டுபிடித்து கைதுசெய்து தண்டனைக்குட்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்
சோழன் உலக சாதனை படைத்த 2 வயது பதுளைக் குழந்தை
பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார்.
சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.
ஊவா மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திரு.நடராஜ் வெங்கடேஸ்வரன், ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டார்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.