3 weeks 6 days ago
அண்ணை, நீங்க கண்ட 2 கறுத்தக்கொழும்பானும் கண்ணால பார்த்து மகிழ்ந்தது மட்டுமே! சாப்பிடவில்லை. இந்த வருடம் கொஞ்சம் கூட காயத்தது, பழமாக முதலே கிளி, அணில், வௌவால் சாப்பிட்டுவிடுவார்கள். அதிஸ்டவசமாக மாம்பழ வியாபாரி தம்பிமார் இருவர் வந்து 100 பழங்களாவது பிஞ்சும் முத்தலும் பெரிதும் சிறிதுமாக பிடுங்கி எமக்கு 20 பழங்கள் தந்தவர். யாரிடமோ முற்பணம் கொடுத்து ஏமாந்த கதையைச் சொல்ல மிகுதிக் காய்களை அம்மா காசு வாங்காது கொடுத்துவிட்டார். 5 - 6 மாங்காய் அழுக, 10 பழத்திற்கு மேல் சாப்பிட்டேன்! ஆனால் முதலிரு நாட்களில் இருந்த சுவை பிந்திப் பழுத்த பழங்களில் இல்லை. நன்றாப் பழுக்காத பழம் தான் எனக்குப் பிடிப்பது. அண்ணை, உடலுழைப்பின்மை தான் பிரதான காரணமாக எனக்குத் தோன்றுகிறது. நன்றி அண்ணை.
3 weeks 6 days ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·optonrdsSe4h61lc3cgt9633103ch5a10 g0a371ih4107940mlal749mhm5 · தான் சொல்லும் கருத்தை ஒருவர் நம்பி ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பேசும் செயலை, 'குல்லா போடுதல்' என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட நபர்களை அந்நாட்களில், 'இவன், ஆளாளுக்கு ஒரு ஜம்பங் குடையை வைத்திருக்கிறான்...!' என்று கிண்டலாக சொல்வார்கள். அக்காலத்தில் ரெயின் கோட் இல்லாத நிலையில், தமிழர்கள் இந்த ஜம்பங் குடையைத் தான் மழைக்கு பாதுகாப்பாக மூடிக்கொண்டு செல்வார்கள். 155 ஆண்டுக்கு முன், 1870'ல் ஆங்கிலேயர் ஒருவர் எடுத்த படம் இது..........!
3 weeks 6 days ago
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 22 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 22 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'துட்ட காமினி ஒரு பௌத்தரை விட ஒரு இந்துவாக இருந்தாரா?' சர் பொன்னம்பலம் அருணாசலம் எழுதிய முருக வழிபாடு [Worship of Muruka’ by Sir Ponnampalam Arunachalam] என்ற கட்டுரையை 'Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909.'' என்ற குறிப்பில் குறிப்பிடுவது சுவாரஸ்யமானது. இதழின் 243 ஆம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பு; 'பெரும்பாலான இலங்கை மன்னர்களைப் போலவே, துட்ட காமினியும், ஒரு பௌத்தரை விட ஒரு இந்துவாக இருந்தார். ரிதி விகாரை (சிங்களம்: රිදී විහාරය) என்பது, இலங்கையின் ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ள, கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேரவாத புத்த கோயில் ஆகும். ரிதி என்பது சிங்களத்தில் வெள்ளியைக் குறிப்பதால் ரிதி விகாரையை தமிழில் வெள்ளிக் கோயில் என்றும் அழைக்கலாம். இந்த விகாரையை துட்ட காமினி கட்டியெழுப்பி, அதன் பிரதிஷ்டையின் போது [தெய்வத்தைப் புதுக்கோயிலில் உரிய பீடத்தில் மரியாதையுடன் அமர்த்தும் விழாவின் போது] அவருடன் 500 பிக்குகள் (பௌத்த துறவிகள்) மற்றும் வேதங்களில் தேர்ச்சி பெற்ற 1,500 பிராமணர்கள் அங்கு சென்றதாகக் கூறுகிறது, இதை மெய்ப்பிக்கிறது. (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara / MSS is the abbreviation for "manuscripts", which is the plural form of the word "manuscript"). புத்த பிக்குகளின் தொகையை விட இந்து பிராமணர்களின் தொகை மூன்று மடங்காக இருப்பதைக் காண்கிறோம் உதாரணமாக, விஜயனும் அவரது சீடர்களும் இலங்கைத் தீவில் இறங்க, பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி, புத்தர், தேவ லோகத்தில் இருந்து, சக்காவை (Sakka / இந்திரனை) அழைக்கிறார். அவர் உதவிக்காக உபுல்வனை (Upulvan / விஷ்ணுவை) அழைக்கிறார் என மகாவம்சத்தில் இந்து கடவுளையும் தேவ லோகத்தையும் கூறியிருப்தைக் கவனிக்க. அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 431 பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 347 கல்வெட்டுகள் ஆங்கிலேயர் காலத்திலும், 84 கல்வெட்டுகள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம் மற்றும் இந்துத் தெய்வங்கள் தொடர்பான 116 கல்வெட்டுகள் அனுராதபுரத்திலேயே காணப்படுகின்றன. இவற்றில் நாகர் பற்றி 31 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. துட்ட காமினி (மு.கி. 161–137) பௌத்த அரசராக வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறார். ஆனால் அவர் மேற்கொண்ட வேத சடங்குகள், முருகன் வழிபாடு, மற்றும் தெய்வாலயங்கள் கட்டியமைத்தல் போன்றவை, அவர் இந்துமத மரபுகளையும் பின்பற்றியதைச் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக கதிர்காமம் முருகன் கோயிலைக் கட்டியதாகவும், பௌத்தராக இருந்தாலும், வேத யாகங்கள் மற்றும் தேவாலய பூஜைகள் செய்தார் என்றும் மற்றும் பைரவர், விஷ்ணு, பத்தினி போன்ற இந்து தெய்வங்களுக்கு அவர் கோயில்கள் கட்டினார் எனவும் கூறப்படுகிறது. இவன் முதன்மையாக, பக்திபூர்வ பௌத்த அரசன் என்றாலும், இந்துமத மரபுகளையும் ஏற்று ஒழுகியவர். அத்துடன், பௌத்தம் மற்றும் சைவ-வைணவ மரபுகள் இரண்டையும் இணைத்து ஆட்சி செய்தார் என்றும் அறிய முடிகிறது. பொ.ஆ.மு 59 – 50 காலப்பகுதியில் இலங்கை மன்னனாகவிருந்த லஜ்ஜிதிஸ்ஸ எனும் மன்னன் கந்தக்க தூபிக்கு பூஜைகள் நடத்தியது பற்றிய குறிப்புகள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளன. மிகுந்தலையில் உள்ள மிகப் பழமை வாய்ந்த தூபிகளில் ஒன்றே கந்தக்க தூபியாகும். இங்குள்ள ஒரு வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மூன்றரை அடி உயரமான ஐந்து தலை நாகத்தின் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு செதுக்கப்பட்டுள்ளன. எனவே இவனது காலத்திலோ அல்லது இதற்கு சற்று முந்திய காலத்திலோ கந்தக்க தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன்படி மிகுந்தலையில் கந்தக்க தூபி அமைக்கப்பட்ட காலத்தில் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இங்கு நாக வழிபாடு செல்வாக்குடன் விளங்கியிருக்கும் என நம்பக்கூடியதாக உள்ளது. இத் தூபியில் வாகல்கட என்றழைக்கப்படும் வாயிலில் பிள்ளையாரின் வடிவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பமும் காணப்படுகிறது. இது இப் பகுதியில் நிலவிய சிவ வழிபாட்டின் அடையாளமாகும். இலங்கை வரலாறு முழுவதிலும் நீதிமன்ற மதம், இந்து மதம் மற்றும் அதன் சடங்கு மற்றும் வழிபாடு ஆகியவையின் ஒரு கலவையாகவும் இருந்தன என்பது இலகுவாக அறிய முடிகிறது. துட்ட காமினிக்குப் பிறகு, அவரது சகோதரர் சத்தாதிஸ்ஸ [சத்தா திச்சன் / Saddhatissa] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். அதனாலதான் அவரின் தம்பி ஆட்சி பொறுப்பை ஏற்றாராம். சத்தாதிஸ்ஸனின் மகன் துலதனன் [துலத்தன் / Thulathana] ஒரு மாதம் பத்து நாட்கள் ஆட்சி செய்தான். சத்தாதிஸ்ஸனின் மற்றொரு மகன் லஜ்ஜிதிஸ்ஸ [Lajjitissa] தீபவம்சத்தின்படி ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தான். லஜ்ஜிதிஸ்ஸா என்பது மகாவம்சத்தில் உள்ள லஞ்சதிஸ்ஸ [லன்ஜ திச்சன் / Lanjatissa] ஆகும், இவர் மகாவம்சத்தின் படி, ஒன்பது ஆண்டுகள் ஒன்றரை மாதங்கள் ஆட்சி செய்தார். லஜ்ஜிதிஸ்ஸாவின் இளைய சகோதரரான கல்லாட நாகன் [Khallatanaga], லஜ்ஜிதிஸ்ஸவுக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தளபதி [சேனாதிபதி] மகாரத்தக்க [The commander Maharattaka] மன்னன் கல்லாட நாகனை வென்று ஒரு நாள் ஆட்சி செய்தான். மகாரத்தக்க என்பது மகாவம்சத்தில் கம்மகாரத்தக்க [Kammaharattaka] ஆகும். என்றாலும் கல்லாட நாகனின் தம்பியான வட்டகாமினி [வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் / Vattagamani] அவனை உடனடியாகக் கொன்று ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தான். Part: 22 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Dutugemunu was more of a Hindu than a Buddhist?' It is interesting to refer the article, Worship of Muruka’ by Sir Ponnampalam Arunachalam in the Reference 'Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909.' The Footnote on the page 243 of the journal says; Quote ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’. Unquote After Dutthagamani, his brother Saddhatissa ruled for eighteen years. Thulathana, son of Saddhatissa, ruled for one month and ten days. Another son of Saddhatissa, Lajjitissa, ruled for nine years and six months as per the Dipavamsa. Lajjitissa is the Lanjatissa in the Mahavamsa, and ruled for nine years and one half month. Khallatanaga, the younger brother of Lajjitissa, ruled for six years after Lajjitissa. The commander Maharattaka overpowered the king Khallatanaga and ruled for one day. Maharattaka is Kammaharattaka in the Mahavamsa, and Vattagamani, the younger brother of Khallatanaga, promptly killed him and he ruled for five months. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 23 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/14PeVBDy4tG/?mibextid=wwXIfr
3 weeks 6 days ago
இந்த ஆய்வு, ஏற்கனவே நிறுவப் பட்ட சில விடயங்களை மீளவும் நிறுவியிருக்கிறது என்றே கருதுகிறேன். நன்கு பழுத்த மாம்பழத்தின் Glycemic Index (GI) 50 முதல் 60 வரை இருக்கும் என்பது பல ஆய்வுகளில் கணிக்கப் பட்டிருக்கிறது. இதை, ஏனைய உணவுகளோடு ஒப்பிடும் போது எப்படிப் புரிந்து கொள்வது? வெள்ளை மாவினால் செய்த பாண், ரொட்டி என்பவற்றின் GI 70 முதல் 100. இதனால் இவை மிக விரைவாக இரத்தக் குழுக்கோசை உயர்த்தும் உணவுகள்.இதனால் நீரிழிவு, முன்நீரிழிவு (Prediabetes) இருப்போர் தவிர்க்க வேண்ண்டிய உணவுகள் இவை. நன்கு கனிந்த வாழைப்பழம், மாம்பழம், பியர்ஸ் (Pears) ஆகியவற்றின் GI 50 முதல் 60 வரை இருக்கும். இதனால் இவை மத்திம வேகத்தில் இரத்த குழூக்கோசை உயர்த்தும் உணவுகள். நீரிழிவு அல்லது முன் நீரிழிவு எனும் நிலைகளில் இருப்போர் இவற்றை அளவாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு கனிந்த பெரிப் பழங்களின் (berries: strawberry, blueberry,raspberry) GI உச்சமாக 40. இதனால் இவை மெதுவாகத் தான் இரத்த குழூகோசை உயர்த்தும். கட்டுப் பாடுகள் அனேகமாக அவசியமில்லை. இரத்த குழூக்கோசை மெதுவாக உயர்த்தும் உணவுகள் எல்லாம் இரு ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன: 1. அதிகரித்த நார்த்தன்மை. 2. அதிகமான ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) எனப்படும் பதார்த்தங்கள். பெரிப் பழங்கள், இந்த இரு இயல்புகளாலும் நீரிழிவு உடையோருக்கு சிறந்த பழங்களாக விளங்குகின்றன.
3 weeks 6 days ago
நொச்சி, என் பிறப்புச் சான்றிதழில் இலங்கைத் தமிழர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்து வடக்கு கிழக்கில் பிறந்த தமிழர்களை இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையகத் தமிழர்கள் என இந்திய வம்சாவளித் தமிழர்களை குறிப்பிடும் விடயத்தில் எனக்கு மகிழ்ச்சியே. அவர்கள் சக தமிழ் மொழி பேசினாலும், தனித்த பல கலாச்சார, வழிபாடு மற்றும் பண்பாட்டு முறைகளைக் கொண்டவர்கள். ஹட்டன், நுவரேலியா, புசலாவ பகுதிகளிற்கு சென்று வாழ்ந்து பார்த்தவர்களுக்கு இது புரியும், அத்துடன் இவர்களை வடக்கு தமிழர்கள், முக்கியமாக யாழ்ப்பாணத் தமிழர்களில் பலர் சக தமிழர்களாக பார்ப்பது கிடையாது என்பது நேர்மையுள்ள சக யாழ்பாணிகளும் ஏற்றுக் கொள்வர்.