Aggregator
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சிரிக்க மட்டும் வாங்க
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
இரசித்த.... புகைப்படங்கள்.
அறிமுகம்
இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
26 Aug, 2025 | 04:47 PM
வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம்.
வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர்.
வடமாகாண சபை இயங்கிய கால பகுதியில் கூட அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவை எதனையும் சாத்தியமாக்க தெற்கில் உள்ள எவரும் விரும்பவில்லை.
எங்கள் மண்ணின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்காக சர்வதேச விளையாட்டு மைதானம் , சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட அக்கடமி தேவை.
அதற்காக இலங்கை துடுப்பாட்ட சங்கத்துடன் பல்வேறு தடவைகள் பேச்சுக்கள் நடாத்தி கோரிக்கைகளையும் முன் வைத்தும் அது ஏதேனும் சாத்தியமாகவில்லை.
தற்போது சர்வதேச மைதானத்தின் ஆரம்ப பணிகள் நடைபெறவுள்ளதாக அறிகிறோம். அது வரவேற்க தக்கது. சர்வதேச தரத்திலான மைதானம் வரும் போதே, எமது வீரர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும்.
அது மாத்திரமின்றி பொருளாதார அபிவிருத்தியை நோக்கியும் நாம் முன்னேற முடியும். சர்வதேச மைதானம் அமையப்பெற்று , சர்வதேச போட்டிகள் நடைபெறுமாக இருந்தால், சர்வதேச வீரர்கள், ரசிகர்கள் என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அதனூடாக எமது சுற்றுலா துறை முன்னேற்றம் அடையும். தற்போது எந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அதனை எதிர்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருவது கவலைக்குரிய விடயம்.
சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாம் வரவேற்க வேண்டும். மண்டைதீவில் மைதானம் அமைக்கப்படுவதால், சுற்று சூழலுக்கு பெரும் பாதகம் ஏற்பாடு என்பது எனது நிலைப்பாடு ,அவ்வாறு பாதகம் இருந்தால், அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன் | Virakesari.lk
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு
26 Aug, 2025 | 04:41 PM
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேளைகள் பால் தர கூடிய மாடே படுகொலை செய்யப்பட்டுள்ளது.
மாடு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சட்டவிரோத கும்பல் பசுமாட்டை தடம் வைத்து பிடிக்க முற்பட்ட வேளையே மாடு உயிரிழந்த நிலையில், மாட்டின் உடலத்தை சம்பவ இடத்தில் இருந்து அகற்ற முடியாத நிலையில் மாட்டினை கைவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தீவகம் பகுதிகளில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களினால் தொடர்ந்து களவாடப்பட்டு அவை இறைச்சியாக்கி விற்பனை செய்யப்படுகின்றது. அதனால் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதால், அவற்றை கட்டுப்பட்டுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு | Virakesari.lk
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி'
மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி'
26 Aug, 2025 | 08:45 PM
நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான இன்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.
அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரனிதா கூறுகிறார்.
செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும்.
செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
18 நாட்களின் பின்னர் அகழ்வாய்வுகள் நேற்று (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பமாகியபோது ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன.
மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி' | Virakesari.lk