Aggregator
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும்
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும்

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகி யாழ் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்று யாழ். மாவட்டச் செயலக வாயிலை மூடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு முதல் நெடுந்தீவு வரையான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் அகிலனை நேரில் சந்தித்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை
யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை
யாழ். பல்கலையில் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை
10 Dec, 2025 | 11:26 AM
![]()
(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 355 போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ் ஆளணி வெற்றிடங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவானவை ஆகும்.
நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் போதனைசாராப் பணியாளர் ஆட்சேர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், அந்தப் பல்கலைக்கழகங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைவாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
எனினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட தாபன வழிகாட்டல்களை மீறி வேலைகள் உதவியாளர் மற்றும் வேறு சில வெற்றிடங்களைத் தனியார் நிறுவனம் ஊடாக நிரப்புவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அவதானிக்கிறோம்.
இந்த நிலமை அப் பல்கலைக்கழகப் பணியாளர்களிடையே திருப்தியின்மையை ஏற்படுத்தியிருப்பதுடன், அதற்கெதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் அவர்கள் தயாராகவுள்ளனர்.
எனவே இது விடயத்தில் உடனடியாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலையிட்டு உரிய தீர்வை வழங்கத் தவறினால் நாம் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று உள்ளது. https://www.virakesari.lk/article/232951#google_vignette
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு!
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு!
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத நிகழ்வு!
10 Dec, 2025 | 10:28 AM
![]()
இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக பல்வேறு சர்வ மத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கான கிலன்பச புத்த பூஜை திங்கட்கிழமை (08) அன்று நடைபெற்றது.
மேலும் தலதா தாதுக்கான அன்னதானம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.
அதன்படி, மேற்படி மத நிகழ்ச்சிகளின் கீழ், கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவினால், மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற்ற பிறகு, திங்கட்கிழமை (08) மாலை பௌத்த சடங்குகளின்படி கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா தாதுவிக்கு கிலான்பச புத்த பூஜை வழங்கப்பட்டது.
தலதா மாளிகையின் மகா சங்கத்தினரின் 25 உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) காலை பக்தியுடன் நடைபெற்றது.
அங்கு, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த கடற்படை வீரர்களை வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் நினைவு கூர்ந்தனர்.
மேலும், அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், போர்வீரர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தீவை பாதித்த சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்து, 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர்.







ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
Vhg டிசம்பர் 09, 2025
யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர்.
விசா இல்லை வேலை இல்லை, தனிமை
விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது.
குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9.12.2025) அதிகாலை முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இளைஞனின் மரணம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2025/12/blog-post_480.html
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
10 December 2025

யுக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதற்காக, அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார்.
அத்துடன், அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப், யுக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ரஷ்யா தங்களிடம், நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் எதனையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், யுக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது என்பதால், நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு தங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
https://hirunews.lk/tm/435093/ukraine-cannot-cede-land-to-russia-presidential-plan
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்
மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்ச,முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!
மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.
ஆகவே மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரை அண்மித்த தாழநிலப்பகுதி மக்கள், மற்றும் ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது சிறந்தது.
வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது. மன்னார் மாவட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்துப் பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது.
இப்பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் இன்றும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதோடு நாளை மறு தினம் வரை இந்த மழை தொடரும். மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து படங்கள்
இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!
இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பிக்கத் தொடங்கும் கூகுள் மேப்ஸ்!
இலங்கையின் பிரதான வீதி வலையமைப்பு இப்போது கூகுள் வரைபடத்தில் நிகழ்நேர நிலை எச்சரிக்கைகளால் ஆதரிக்கப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தப் புதுப்பிப்பு 12,000 கிலோமீட்டர் பிரதான வீதிகளை உள்ளடக்கியது.
மேலும், வீதி மூடல்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட ஆறு வகையான எச்சரிக்கைகளை வழங்குகிறது.
பயணிகள் பாதைகளை மிகவும் திறமையாக திட்டமிடவும், எதிர்பாராத தாமதங்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் உதவும் என்று அமைச்சர் கூறினார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்ட அமைச்சர்.
“உங்கள் பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறினார்.
அதேநேரம், பயணிகள் பயணங்களை தொடங்குவதற்கு முன் புதுப்பிப்புகளுக்கு வரைபட செயலியைப் பார்க்குமாறு அவர் ஊக்குவித்தார்.
இந்த முன்னோடித் திட்டம் டிசம்பர் 31 வரை இயங்கும்.
அண்மைய சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் வீதி வலையமைப்புகளில் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
நவம்பர் மாத இறுதியில் டித்வா சூறாவளியால் தீவு நாடு தாக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர் ஷோபினி குணசேகரவை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் இன்று (10) அதிகாலை செய்தி வெளியிட்டது.
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் ஏற்கனவே இலங்கைக்கு புறப்பட்டு விட்டது என்று ஷோபினி குணசேகர RIA செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தினார்.
மேலும், அது இன்று இலங்கையைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர், இலங்கையின் மிக மோசமான இயற்கை பேரழிவாகக் கருதப்படும் இந்தப் புயல், இதுவரை 639 உயிர்களைப் பலி கொண்டுள்ளது.
நாட்டின் 10% மக்களைப் பாதித்தது.
இது நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அரிசி, தேயிலை போன்ற முக்கிய பயிர்களை சேதப்படுத்தியது.
மேலும், மீட்பு செலவுகள் 7 பில்லியன் டொலர்களை எட்டக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் கவலை அச்சம் வெளியிட்டுள்ளனர்.