3 weeks 5 days ago
அயல் அரபு நாடுகள் பலஸ்தீன அகதிகளை உள்வாங்காமல் இருக்க இது ஒரு காரணம். ஆனால், இதை விட முதன்மையான காரணம், அகதிகள் முகாம்களில் ஹமாஸ் போன்ற பலஸ்தீன அமைப்புகள் மக்களோடு மக்களாக டோரா போட்டு, ஆட்சேர்த்து, அந்த நாடுகளிலேயே இஸ்ரேல் வந்து குண்டு போடும் அளவுக்கு வைத்து விடுவார்கள் என்ற பயம். இது பல தசாப்தங்களாக நடந்து வரும் ஒரு போக்கு. அயல் நாடான ஜோர்தானில் (ஜோர்தான் நதியின்) கிழக்குக் கரை -East Bank இருக்கிறது. அங்கே இஸ்ரேல் உருவாக்கப் பட்ட போது குடிபெயர்ந்த பலஸ்தீனர்கள் இன்றும் வாழ்கிறார்கள், அவர்களோடு அரபாத்திற்கும் இடம் கொடுத்திருந்தார்கள். 70 களில் என நினைக்கிறேன், ஒரு பயணிகள் விமானத்தை அரபாத்தின் கீழிருந்த போராளிகள் கடத்திச் சென்று அம்மானில் தரையிறக்கி வைத்திருந்தார்கள். விமானத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்ட ஜோர்தான் படைகளுக்கு அடி தான் பதிலாகக் கிடைத்தது😂. ஒரு பெரும் நடவடிக்கை மூலம் அப்போதைய ஜோர்தான் மன்னர், அரபாத்தின் படைகளை வேட்டையாட ஆரம்பித்தார். அரபாத் ஒரு முஸ்லிம் பெண் போல உடையணிந்து தப்பிச் சென்று சிரியா சேர்ந்தார். சிரியாவிலும் அதே கதை, ரணகளம். அங்கிருந்து ஒரு கட்டத்தில் லெபனான் சென்றார்கள் பலஸ்தீனப் போராளிகள். ஷியா, சுனி, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட்டாட்சி செய்த லெபனானில், ஷியாக்கள் அதிக பங்கு கோரிப் போராட ஆரம்பித்த போது, அகதிகளாக வந்த பலஸ்தீனர்களும், அமைப்புகளும் ஷியாக்களை ஆதரித்தார்கள். லெபனானும் ரணகளமாகியது. இப்படி மீள மீள நடக்கும் போது, பலஸ்தீன அகதிகளை எந்த முஸ்லிம் நாடு ஏற்றுக் கொள்ளும்?