Aggregator
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி
Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா
"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana
Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது.
#Carrom #CarromWorldCup
Producer: ShanmughaPriya
Shoot & Edit: Ranjith
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி
பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி
10 Dec, 2025 | 05:39 PM
![]()
(செ.சுபதர்ஷனி)
தித்வா புயலால் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளின் புரணர்நிர்மாணப் பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து விசாரிப்பதுடன், அவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்குடன் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க செவ்வாய்க்கிழமை (09) நுவரேலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அனர்த்த நிலைமை காரணமாக நுவரெலியா புதிய வைத்தியசாலையின் பிரதான கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதம், பழைய வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவு, புற்றுநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலும், அபாயம் தொடர்பிலும் கண்காணித்திருந்தார்.
அத்தோடு 4 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடத்தொகுதியில் உள்ள 8 தாதியர் விடுதிகள் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் பார்வையிட்டிருந்தார்.
ஆய்வின் பின்னர் வைத்தியசாலை நிர்வாகம், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கட்டமைப்பு பொறியியலாளர்கள், வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுடன் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது சுகாதார அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமையால் 3 பிரதான வைத்தியசாலைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. நீர் விநியோகம், போக்குவரத்து மற்றும் தொலைபேசி வசதிகள் என்பன சுமார் 4 நாட்களாக தடைப்பட்டிருந்தன. எனினும் நுவரெலியா வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளின் உயிர்களை பாதுகாத்து, இந்த அனர்த்தத்தின் போது மாற்று வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய ஊழியர்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனர்த்தத்தால் வைத்தியர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படும். அதேநேரம் விடுதிகளில் தங்கியிருந்த ஒரு சில குழுவினர் வைத்தியசாலையில் தங்கியிருந்து கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சவாலான காலகட்டத்தில் வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை புனரமைக்கும் விதம் குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்தற்கு வைத்தியசாலைகளை பலப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி சுகாதார அமைச்சு உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
வைத்தியசாலைக்குத் தேவையான அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் வைத்தியசாலைகளின் மறுசீரமைப்பு பணிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் 53 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் சுகாதார அமைச்சின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலையின் தற்போதைய நிலமை தொடர்பில் பரிசோதித்து வருகின்றனர் என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்
ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானம்
Dec 10, 2025 - 01:16 PM
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இந்த உதவியானது "திட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.
தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இதில் மேலும் குறிப்பிட்டுள்ளது.