Aggregator

தோற்றுப் போனது ஹர்த்தால்

3 weeks 3 days ago

தோற்றுப் போனது ஹர்த்தால்

லக்ஸ்மன்

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான  நிலைப்பாடுகள்  காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்  என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள்.

ஹர்த்தால் என்கிற கடையடைப்பு அகிம்சைப் போராட்டங்களின் இறுதி வடிவமாகவே கருதப்படுகிறது. கடுமையான பொது எதிர்ப்பாக இருக்கின்ற ஹர்த்தாலை விடவும் தமது எதிர்ப்பை வேறு எப்படிக் காண்பிப்பது என்கிற நிலையில்தான் ஹர்த்தால் கையில் எடுக்கப்படுவது வழமை.

குசராத்தியைதாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய அரசுக்கு எதிராக அதிகம் ஹர்த்தாலை பயன்படுத்தியிருக்கிறார். அதிலிருந்துதான் இந்த ஹர்த்தால் தமிழ் உள்ளிட்ட தெற்காசிய மொழிகளிலும் பரவியதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வகையான வேலைநிறுத்தம் பங்களாதேசம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வரும் போராட்ட  உத்திகளில் ஒன்று என்ற வகையில்  நமது நாட்டில் கடந்த  காலங்களில்  அடிக்கடி  நடைபெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது.

இலங்கையில் ஆயுத யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளால் இந்த ஹர்த்தால் அடிக்கடி அறிவிக்கப்படுவது வழமை. அவ்வேளைகளில், கடைப்பிடிக்கப்பட்ட ஹர்ததாலுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறையவும் வித்தியாசம் இருக்கிறது.

அன்றைய காலங்களில் கடுமையான அழுத்தம் உடைய அச்சத்துடனேயே  நடைபெற்றிருந்தது.  இருந்தாலும், மக்களால்  ஏதோ ஒருவகையில் உரிமை சார்ந்த பிரச்சனைகள் மீதான எதிர்பார்ப்பில் உணர்வு பூர்வமாகவே அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. 

ஆயுத யுத்த மௌனிப்புக்குப்  பின்பு ஹர்த்தால்  தமது தேவைகளை  நிவர்த்தி செய்து கொண்டே  பொது மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். 
ஹர்த்தால் வெறுமனே தமிழ் மக்களின் போராட்ட வடிவமாக மாத்திரம் இருக்கவில்லை. அது ஒரு பொதுவான விடயமே.

அதற்கான அழைப்பு விடுப்பவர்கள் முடிவில் வெற்றி என அறிவித்தாலும் நடைபெற்றது, அனைவரும் அறிந்த விடயம் அது இருப்பதால் யாரும் 
சீர் தூக்கிப் பார்ப்பதில்லை.

2022ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ‘அரகலய’ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு பொது அடைப்பு என்கிற ஹர்த்தாலை நடத்தின.

அரசு, அரசினுடைய இயந்திரத்தை இயக்க முயன்றிருந்தாலும் அரசின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றே சொல்லாம்.நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அந்தக் ஹர்த்தால் நடத்தப்பட்டு இருந்தது. 

‘அரகலய’ போராட்டத்தின்  பலனாக அரசாங்கம்,  ஜனாதிபதி கோட்டபாய  பதவி விலகல், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
2022இல் நடைபெற்ற ஹர்த்தாலானது 1953ஆம் ஆண்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முழு ஹர்த்தாலுக்கு பின்னர் நடைபெற்ற நாடு தழுவிய ஹர்த்தாலாக பார்க்கப்பட்டது, 

1953ஆம் ஆண்டு ஹர்த்தால் காரணமாக  அப்போதைய  பிரதமர் டட்லி  சேனநாயக்க   பதவி விலகியிருந்தார்.  இவ்வாறு பெரும்  முடிவுகளுக்கு  இலங்கையில் மாத்திரமல்ல,  உலகின் வேறு  நாடுகளிலும் ஹர்த்தால்கள்  காரணமாக இருந்திருக்கின்றன.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், யுத்த மௌனிப்புக்குப் பின்னர் 
2015, 2017, 2018  என ஹர்த்தால்கள் தமிழ்ப் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவை தமிழ் மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினை, அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கின்றன.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிழக்கில் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஏற்பாட்டில் ஒன்று நடைபெற்றது. இந்தக் ஹர்த்தாலானது ஐக்கிய  நாடுகள் சபையின்  மனித உரிமை சபையின்  கூட்டத்தொடரை  இலக்காகக் கொண்டு  சர்வதேசத்தின்  நேரடித்தலையீட்டினைக் கோரியும், பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது எனகோரியும் ஹர்த்தாலுடன், கவனயீர்ப்பு பேரணியும் நடத்தப்பட்டு இருந்தது.

அதேபோன்று, 2020ஆம் ஆண்டுச் செப்டெம்பரிலும் இந்திய இராணுவத்திற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதிமன்றத்தின் ஊடாகத் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

2023 ஒக்டோபர் மாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளோட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஒற்றுமையாக ஒரு அறிவிப்பை விடுத்திருந்தன.

அது இவ்வாறுதான் இருந்தது “நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்குடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதைக் கண்டித்தும் மயிலத்தமடு - மாதவணை மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்”.

இந்தக் ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றது என்று சொல்லாம். வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன.

அதேநேரத்தில், தமிழ் மக்கள் அரசியல் போராட்டம், அகிம்சை, ஹர்த்தால், கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்று வன்முறை சாராததாகவே தமிழ் மக்களது போராட்டங்கள் இருந்தது.

அவற்றின் பலனின்மையால் மிதவாத தலைமை இளைஞர்களிடம் கைமாறியபோது, 
ஆயுதப் போராட்டமாக மாறியது மட்டுமல்லாமல், நாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டது.

அது 2009 மே 18 முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. அதன் பின்னர்த் தமிழ் மக்களின் அரசில் வழிநடத்தல் அரசியல் தலைவர்களிடம் கைமாறியது.

ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலங்களிலும் ஹர்த்தால்கள் நடைபெற்றிருந்தாலும், முன்னர் நடந்தது போல வட கிழக்கில் 
மீண்டும் ஹர்த்தால் கடையடைப்பு, பகிஸ்கரிப்புகள் ஆரம்பித்தன. 
அவற்றினால் பலனேதுமில்லை என அரச தரப்புகள் கூறிக் கொண்டாலும், நடைபெற்றது என்னவோ உண்மையானதே.

இதற்கிடையில் தான் கடந்த 18ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவிப்பாக வெளிவந்த ஹர்த்தால் தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தக் ஹர்த்தாலானது எழுந்தமானமாக, எந்தவொரு ஆராய்வும் இன்றி, திட்டமிடப்படாத வகையில் எடுக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதலில் ஒகஸ்ட் 15ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. பின் அன்றைய தினம் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா என வெளிப்படுத்தப்பட்டதும் பின்னர் 18ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எவ்வாறாக இருந்தாலும், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் பொருத்தமற்றதாக ஆகிப்போனது.

முல்லைத்தீவில் நடைபெற்ற சம்பவமானது திடீரென நடைபெற்ற ஒன்றல்ல. வழமையான செயற்பாட்டின் எதிரொலியே. ஆனாலும், பாதுகாப்புத் தரப்பும், அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன. அது ஒருவகையில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதிகப்படியான இராணுவப் பிரசன்னம் இவ்வாறான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பது தான் யதார்த்தம்.

எது எப்படி சொல்லப்பட்டாலும், வடக்கில் கிழக்கில் ஹர்த்தால் தோற்றுப் போனது. பிசுபிசுத்து போனது, வெற்றி பெறவில்லை  என்பதே நிலைமை. 

இந்த நிலைமை எதனால்  ஏற்பட்டது. இதனை எவ்வாறு சீர் செய்வது எவ்வாறு  என்பது பற்றி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராய்ந்தாக வேண்டும் என்பது போல, தமிழ் மக்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

ஒற்றுமையாக ஒருமித்த முடிவுடன் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய விடயத்தில் எதேச்சதிகாரம் ஒன்றுக்கும் பிரயோசனம் அற்றது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இந்தத் தடவை நடைபெற்ற ஹர்த்தால் பிசுபிசுப்புடன் 
முடிந்திருந்தாலும் வெளி உலகிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு செய்தி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இது நாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல என்றெல்லாம் கருத்து வெளியிட முனையும் தமிழ் அரசியல் தரப்பினர் ஹர்த்தால் தோற்றுப் போனது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தோற்றுப்-போனது-ஹர்த்தால்/91-363604

நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது

3 weeks 3 days ago
41,000 பிராங்க் திருட்டு; கைதான அனைவருக்கும் விளக்கமறியல் உத்தரவு! வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த சுவிஸ் பிரஜையிடம் இருந்து, 41 ஆயிரம் பிராங்கை (இலங்கை மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம்) திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அல்வாய் கிழக்கு, அத்தாயைச் சுவிஸ் பிரஜையான வயோதிபர் தனது 41 ஆயிரம் சுவிஸ் பிராங் நோட்டுகளை தனது வீட்டில் வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பார்த்தபோது அவை காணாமற்போயிருந்தன. இதுதொடர் பில் நெல்லியடிப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார். அந்த வீட்டில் வேலை செய்தவர் உள்ளிட்ட 9 சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி சுவிஸ் பிராங்கை பகுதிபகுதியாகத் திருடி ஆடம்பரச் செலவு செய்தமை தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே. அனைவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். திருடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/41,000_பிராங்க்_திருட்டு;_கைதான_அனைவருக்கும்_விளக்கமறியல்_உத்தரவு!

யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

3 weeks 3 days ago
யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை பொதுநிர்வாக அமைச்சர் தெரிவிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர் போன்றவற்றுக்கான ஆளணி வெற்றிடங்கள் அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரட்ண தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச். எம்.எச்.அபயரட்ண, அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார, மேலதிகச் செயலாளர் நிஷாந்த, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள். பிரதேச செயலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே உள்ளூராட்சி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- யாழ்.மாவட்டத்தில் இயற்கை வளங்கள் உள்ளன. வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நிலவசதி பற்றாக்குறையாகவுள்ளது. ஆகையால் இருக்கின்ற நில வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும். அதன் மூலமே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டுக்குள் முழுமையாகப் பயன்படுத்துவதைச் சவாலாக ஏற்றுச் செயற்படுத்தவேண்டும். இனம், மதம், மொழி கடந்து சகோதரத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் -என்றார். கூட்டத்தில் மாவட்டச் செயலர், பிரதேசசெயலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/யாழ்._மாவட்டத்தில்_உள்ள_ஆளணி_வெற்றிடங்களை_நிரப்புவதற்கு_நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

3 weeks 3 days ago

யாழ். மாவட்டத்தில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

1048159232.JPG

பொதுநிர்வாக அமைச்சர் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர் போன்றவற்றுக்கான ஆளணி வெற்றிடங்கள் அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரட்ண தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராயும் கூட்டம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச். எம்.எச்.அபயரட்ண, அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார, மேலதிகச் செயலாளர் நிஷாந்த, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள். பிரதேச செயலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோதே உள்ளூராட்சி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
யாழ்.மாவட்டத்தில் இயற்கை வளங்கள் உள்ளன. வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நிலவசதி பற்றாக்குறையாகவுள்ளது. ஆகையால் இருக்கின்ற நில வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தவேண்டும். அதன் மூலமே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியை இந்த ஆண்டுக்குள் முழுமையாகப் பயன்படுத்துவதைச் சவாலாக ஏற்றுச் செயற்படுத்தவேண்டும். இனம், மதம், மொழி கடந்து சகோதரத்துவத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் -என்றார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலர், பிரதேசசெயலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/article/யாழ்._மாவட்டத்தில்_உள்ள_ஆளணி_வெற்றிடங்களை_நிரப்புவதற்கு_நடவடிக்கை

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

3 weeks 3 days ago
108 ஜோடிகளுக்கு திருமணம் adminAugust 28, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது இந்த 108 தம்பதியினரும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2025/219730/ https://www.facebook.com/share/v/1AS7LQ8zPH/?mibextid=wwXIfr

இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!

3 weeks 3 days ago
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! adminAugust 28, 2025 கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார். எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/219717/

இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!

3 weeks 3 days ago

இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!

adminAugust 28, 2025

கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை  அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட  அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று   நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான்  திருமதி  தெசீபா ரஜீபன் முன்னிலையில்  ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த  சந்தேக நபர் குறித்த பகுதிக்கு  கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம்  விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து  குறித்த இடத்தில்  புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி   உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர்  என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார்.

எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய  திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும்  தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான  தம்பிலுவில் மயானத்தை  அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட  அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

image_b2a9a22e66.jpg?w=1170&ssl=1image_44b67de9c6.jpg?w=1170&ssl=1image_16e06d830b.jpg?w=1170&ssl=1 

https://globaltamilnews.net/2025/219717/

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

3 weeks 3 days ago
சம்பந்தன், சிங்களத்துக்கு சேவை செய்து… எதிர்கட்சி தலைவராகவும் இருந்து சாகும் மட்டும்... அரச வீட்டில் இருந்து செத்துப் போனார். ஆனால் சுத்துமாத்து சுமந்திரனை…. பாராளுமன்றத்துக்குள் நுளைய விடாமல், சாணி அடி கொடுத்து வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சம்பந்தனுக்கு உள்ள கெட்டித்தனம் இதுக்கு இல்லை. 😂 🤣 அந்தளவுக்கு இனி சுத்துமாத்து சுமந்திரனை நிமிர விடாமல் விழுந்த மரண அடிதான், இவர் அண்மையில் தான் தோன்றித்தனமாக அறிவித்த ஹர்த்தாலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அது புரியாமல்… தான் ஒரு ஆள் என்று வாக்குப் பிச்சை எடுக்க, மக்கள் முன் பல்லைக் காட்டிக் கொண்டு திரியுது. 🤣 சுமந்திரன்.... இப்போ ஒர் அரசியல் அனாதை. தமிழ்ப் பகுதிகளில்... இவரின் சுத்துமாத்து இனி எடுபடாது. வேணுமென்றால்... கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற சிங்களவர்கள் இவருக்கு வாக்கு போடலாம். அங்கு முயற்சி செய்வது நல்லது. 🤣

வேலணையில் தீ!

3 weeks 3 days ago
எரிவுக்கு… மிளகாய்த்தூள், ஆனையிறவு உப்பு ஓகே…. ✅ அது என்ன ஆமணக்கு எண்ணையின் விசேசம்? புதுசா இருக்கு. நான் இதுவரை கேள்விப்படவில்லை. 😂

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

3 weeks 3 days ago
இந்த கறுப்பு வெள்ளை இரு துருவ தீவிர சிந்தனையாளர்களை குறிவைத்து மிகைப்படுத்தப்பட்ட விளம்பர உத்தியினை வியாபாரத்தில் கைகொள்வார்கள். அதே போல் அரசியலில் Scare campaign எனும் உத்தியினை பயன்படுத்துவார்கள். எந்த விடயமும் நல்ல மாற்றத்திற்கானதாக இருக்கவேண்டும், சிலநேரங்களில் பெட்டி வெளியே நின்று சிந்திக்கும் போது ஒரு தெளிவு உருவாகும், குதிரை போல நேரே ஒரே இலக்கில் செல்வது சில வேளைகளில் பலன் தரும் ஆனால் அதனை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், மற்றவர்களல்ல.

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

3 weeks 3 days ago
வட கொரிய அதிபர் கிம்மின் அதிரடி செயல்களைப் பார்த்து, பம்மிக் கொண்டு இருக்கும் மேற்கு உலகம்…. சீனா நடத்தும் 26 நாட்டு உலகப் பெருந்தலைவர்களின் இராணுவ அணிவகுப்பை பார்த்து தமது சாணக்கியம் எங்கே சறுக்கியது என திரும்பி பார்ப்பார்கள். 😂

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்

3 weeks 3 days ago
இந்த காட்டுமிராண்டி காலத்து முஸ்லீம் திருமண சட்டத்தை உடனடியாக திருத்தி, இலங்கையில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும். பல பெண்களை முஸ்லீம்கள் திருமணம் செய்து….. “வத வத” பிள்ளைகளைப் பெற்று இலங்கையின் சனத்தொகையையே மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கும் இவர்களின் கேவலமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

3 weeks 3 days ago
மேற்குலகின் வயித்தை கலக்குவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.😎

போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்

3 weeks 3 days ago
இந்த உலகில் ஒரு விசித்திர அரசியல்வாதி என்றால் அது நடிகர் விஜய் தான்.நான் சில நேரம் இவரை ஒன்லைன் அரசியல்வாதி என நினைப்பதுண்டு. சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து முதலமைச்சராக நினைக்கின்றார். இவர் மட்டுமல்ல அவர் சகாக்களும்.அவர் சகாக்களுக்கு தமிழே ஒழுங்காக வராது.இந்த நிலையில் அவர் சகாக்களுக்கு நடிகர் விஜய் அவர்களை முதல்வராக்கும் கனவு வேறு. பொது ஊடகங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.😎

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

3 weeks 3 days ago
இனவாத சிங்களத்திற்கு சேவகம் செய்ய வந்தவர்களுக்கு தமிழின ரோசம் ஏது?மானம் ஏது? சம்பந்தன் எப்படியோ அவரின் கண்டுபிடிப்பு சுமந்திரனும் அப்படியே.

வேலணையில் தீ!

3 weeks 3 days ago
கலப்படம் இல்லாத சிறிதளவு மிளகாய்த்தூள்,கொஞ்ச ஆனையிறவு உப்பு,ஆமணக்கு எண்ணை கலந்து பச்சை மட்டை அடித்த இடங்களில் தடவ வேண்டும். ஏழேழு ஜென்மத்திற்கும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

3 weeks 3 days ago
வெளியே சொல்லப்படாத,ஆதாரங்கள் இல்லாத உண்மை என்றால் நீங்கள் எழுதியதுதான். ஆனால் வெளியே ஆதாரத்தோடு சொல்லப்பட்ட காரணம் வேறு. சதாம் ஹுசைனும்,கடாபியும் ஈரோ நாணயத்தை கையில் எடுத்ததுதான் பெரியண்ணருக்கு எரிச்சலை ஊட்டியது. பெரியண்ணர் நேட்டோ எனும் போர்வையில் லிபியா மீது போர் தொடுத்து தன் எரிச்சலை தீர்த்து விட்டார்.அந்த நேரம் புட்டின் ஆட்சியில் இருந்திருந்தால் கடாபிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பேசிக்கொள்ளப்பட்டது.

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

3 weeks 3 days ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Manually Powered Paddle Boards - Under construction 1 Most likely not named, as they have not moved out of the construction yard - '6 different types of boards can be seen' Not much is known about this board as it's unfinished Most likely not named, as they have not moved out of the construction yard 8